Butterfly Surya பதிவின் மூலம்தான், ஜப்பானிய இயக்குனர் Takeshi Kitano-ன் இயக்கத்தில் வெளிவந்த Kikujirô no natsu (1999) படத்தை அறிந்துகொண்டேன் என்று நினைக்கிறேன். ஒரு வருடத்திற்கும் மேலாக கையில் இருந்தும் இன்னும் ஏன் பார்க்காமல் வைத்திருக்கிறேன் என்றே தெரியவில்லை. இப்படத்தை தழுவியே "நந்தலாலா" எடுக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்ட பின்பும், Kikujirô no natsu (1999)-வை பார்க்க விரும்பியும், முடியாமல் தள்ளித்தள்ளி போகிறது . இதற்காகவே விரைவில் Kikujirô no natsu (1999) பார்க்கப் போகிறேன். இப்படத்தை பார்த்த பின்புதான் "நந்தலாலா" பற்றி எழுதியிருக்கவேண்டும். மிக அதிக வேலைப்பளு காரணமாக அது சாத்தியப்படவில்லை. நிச்சயம் அடுத்தவாரத்தில் இவ்விரண்டு படங்களின் ஒற்றுமை, வேற்றுமைகளை எழுதுகிறேன்.
.
வெகுகாலமாய் பெட்டிக்குள் கிடந்த படம் இதோ வெளியாயிருக்கிறது. தாய்பாசம் கிடைக்காமல் தன் பாட்டியுடன் வாழும் சிறுவன் அகி (அஸ்வத்), தனது அம்மா வேலை பார்க்கும் ஊருக்கு செல்ல முடிவெடுக்கிறான், சுற்றுலாவுக்கு போகாமல். மனநலக் காப்பகத்தில் தன்னை அடைத்துவைக்க காரணமான தனது அம்மாவை போய் திட்டவேண்டும் என்று நினைத்து, தனது சொந்த ஊருக்கு செல்ல, அங்கிருந்து தப்பிக்கிறான் பாஸ்கர் மணி (மிஷ்கின்). இருவரும் கிட்டத்தட்ட அருகருகே இருக்கும் ஊருக்கு செல்ல முற்படுகையில் ஒன்றாய் இணைகிறார்கள். இவர்கள் செல்லும் வழியில் சந்திக்கும் மனிதர்களும், இருவரும் தனதுத் தாயை கண்டடைந்தார்களா என்பதே மீதிக்கதை.
.
முழுக்க முழுக்க மிஷ்கினின் narration style. மிகப் பொறுமையாக நின்றுகொண்டேயிருக்கும் காட்சிகள். அலைவுறும் கால்களை துரத்தும் கேமரா என நிறைய. படம் முழுக்க வரும் கதாபாத்திரங்கள் மூன்றே மூன்று தான். மிஷ்கின், சிறுவன், இளையராஜாவின் இசை. மற்றவர்களெல்லாம் வந்து போகிறார்கள். பன்னிரண்டு நொடிகளில் வந்து போகிறார் நாசர். மனநலக் காப்பகத்தில் இருக்கும் இளைஞனின் பெற்றோர்கள் துவங்கி, சாலையோர பாலியல் தொழிலாளி ஸ்னிக்தா வரை நிறைய கதாப்பாத்திரங்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம். நல்லவர்கள், கெட்டவர்கள், சூழ்நிலையால் நல்லவர்கள், சூழ்நிலையால் கெட்டவர்கள் என நிறைய பேர். ஒவ்வொரு கதாப்பாத்திரமும் மனதில் நிறைவாக தங்குகிறது, எவ்வித உறுத்தல்களுமின்றி. இயல்பான/வலிந்த நகைச்சுவைகளும் கூடவே வருகிறது. மிஷ்கினின் கொஞ்சம் நாடகத்தன்மையான காட்சிகள் இருந்தாலும் அவரது ஸ்டைல் இது என்று உள்வாங்கிக்கொள்ளமுடிகிறது.
.
மிஷ்கின் நடிப்பு மிக சிறப்பான ஒன்று. விரலைல் சுவற்றி உரசிக்கொண்டே போவதும், பேன்ட்டை பிடித்துக்கொண்டே நடப்பதும், அடிவாங்குவதும், முரட்டுத்தனமாய் அடிக்க முயல்வதும், கூழாங்கல்லை கையில் அள்ளித்திணிப்பதும், வெறித்தப்பார்வையும், மெண்டல் என்றவுடன் மொத்தமாய் நிலைகுலைவதும் என்று அசத்துகிறார். நல்ல நடிகன். மேலும் மிக கச்சிதமான கதாப்பாதிரங்களை வடிவமைத்திருப்பதுவும் தேர்ந்த இயக்குனராய் காட்டுகிறது.
.
படம் முழுக்க நிறைய வெறுமைகளும், மௌனங்களுமே இருக்கிறது. கதாப்பாத்திரங்கள் வந்து போகிறார்கள், அவ்வளவே. எப்போதும் அன்பு மட்டுமே தேங்கி நிற்கிறது. சிலர் அதை கவனிக்கிறார்கள். சிலர் அதை கவனிக்காமல் செல்கிறார்கள். சிலர் கண்டுகொள்ளாமல் செல்கிறார்கள். சிலர் புறக்கணிக்கிறார்கள். மேலும் பல இடங்களில் தகவல்களை தராமல் கதாப்பாத்திரங்கள் வந்து போகிறார்கள். குறிப்பாக சிறுவனின் அம்மா, மிஷ்கினிடம் கதறும் காட்சியில் இசை மட்டுமே. எவ்வித வசனங்களும் எவ்வித தகவல்களும் இல்லை.
.
இளையராஜாவின் இசைதான் அத்தனை காட்சிகளையும் நிரப்பிக்கொண்டேயிருக்கிறது எங்கும் விரவிக் கிடக்கும் காற்று போல. சில இடங்களில் அதுவும் கொஞ்சம் செயற்கைத்தனமாய் இருந்தாலும் மனதை உடைக்கும் உளியாய் ஏற்றுக்கொள்ள முடிகிறது. வெறும் காட்சி மட்டும் கொடுத்துவிடாத நெகிழ்ச்சியை, ராஜா வலிந்து கொடுக்கிறார். உடையத் துவங்குகிறோம் நாம். குறிப்பாக மிஷ்கின் தனது தாயை பல ஆண்டுகளுக்கு பின்புக் காணும்போது, அப்பாடலின் முதல் வரியை, ராஜாப் பாடத் துவங்குகிறார். உள்ளுக்குள் அனைத்தும் அப்படியே ஒரேகணத்தில் உடைந்து நொறுங்குகிறது. அதலபாதாளத்தில் வீழ்கிறோம். ராஜாவை இதற்காக பாராட்டவேண்டுமா அல்லது வேண்டாமா என்பதில் குழப்பம் மிஞ்சுகிறது.
.
மிஷ்கின், மகேஷ் முத்துசுவாமி, ட்ராஸ்கி மருது மற்றும் மொத்த படக்குழுவினரையும் பாராட்டவேண்டும்.
.
நந்தலாலா - தாயை முத்தமிடும் அன்பிது.
.
26.11.2010





23 comments:
கண்டிப்பாக படத்தோடு இந்தப்படத்தை ஒப்பிட முடியாது. நேற்று கூட வேர்ல்ட் மூவீஸில் கட்டினார்கள் .
தழுவல் சரி. அதற்காக படத்தில் வரும் கேமரா கோணங்களையும் மா காப்பி பண்ணவேண்டும் ?
மந்திரவாதியின் தொடுதலுக்காக காத்திருந்த சபிக்கப்பட்ட தவளை போல பலரும் மிஸ்கின் பாத்திரத்தின் மூலம் தங்களின் விமோசனத்தை எதிர் நோக்கியிருந்தனர்.
வெடிகுண்டு வெங்கட் விமர்சனம்: நந்தலாலா - தமிழ் சினிமாவின் முதல் படம்
super review. I love the film.
நல்ல விமர்சனம்.
படம் மாதிரியே இருக்கு உங்க விமர்சனமும் :)
@BALAKUMAR : அடுத்தவாரம் இதற்கு பதில் சொல்கிறேன்.. :) நன்றி.
@வெடிகுண்டு வெங்கட் : நன்றி.
@MANO : நன்றி..
@Cable Sankar : நன்றி தலைவரே..
@எம்.எம்.அப்துல்லா : அது என்ன "உங்க".. இதெல்லாம் ஓவர் அண்ணா.. நன்றி..
//வெறும் காட்சிமட்டும் கொடுத்துவிடாத நெகிழ்ச்சியை, ராஜா வலிந்து கொடுக்கிறார். உடையத் துவங்குகிறோம் நாம்//
விமர்சனம் நன்று :-)
நல்ல விமர்சனம்!
நல்ல விமர்சனம்.
அருமையான விமர்சனம் நண்பா! படத்தினால் நீங்கள் எந்த அளவு ஈர்கப்பட்டீர்கள் என தங்களது கவித்துமான நடையிலேயே தெரிகிறது. :)
நன்றி லேகா.. :)
நன்றி எஸ்.கே..
நன்றி மரா..
நன்றி ILLUMINATI.. :)
"குறிப்பாக சிறுவனின் அம்மா, மிஷ்கினிடம் கதறும் காட்சியில் இசை மட்டுமே. எவ்வித வசனங்களும் எவ்வித தகவல்களும் இல்லை"
இதற்கான தகவலை கடைசி காட்சியில் உணரத்திவிடுகிறார் என்றே நினைக்கிறன்.
நண்பா கொஞ்ச நாட்களுக்கு முன் உங்கள் பதிவின் கடைசியில்(இப்போது
DISNEYS - MARS NEEDS MOMS (2011), ILLUMINATION ENTERTAINMENT - HOP (2011) உள்ளதே அந்த இடத்தில்)ஒரு ANIMATION MOVIE ஒன்றை பார்த்தேன். அதன் பெயரை குறிப்பிடவும், மறந்துவிட்டேன்.
@Pareethi : நன்றி.. அந்த படம் Cars 2 (2011).. இந்த இடத்தில் இருந்து எடுத்துவிட்டால், மேலே முகப்பில் இருக்கும் Upcomings சுட்டியை கிளிக்கவும். அங்கிருக்கும்.. அங்கும் தொடர்ச்சியாக update செய்து கொண்டேயிருப்பேன்..
இதையெல்லாம் யாருமே கவனிப்பதில்லை என்று நினைத்துகொண்டிருந்தேன்.. நீங்கள் கவனித்திருப்பதில் மகிழ்ச்சி.. :)
cars 2 இல்லை... அது ஒரு காதல் கதை போன்று இருந்தது... இரு மீன்களை பற்றியது...
@Pareethi : அதுவா!!
Oktapodi (2007)
http://www.youtube.com/watch?v=badHUNl2HXU&feature=player_embedded
Yes that's one... Thank you very much... இது போன்ற short films இன் intro அடிகடி கொடுங்கள்... நன்றி...
@Pareethi : Sure.. :)
If you are open to having a guest blog poster please reply and let me know. I will provide you with unique content for your blog, thanks.
Спасибо понравилось ! Thanks !
நண்பரே உங்கள் பதிவுகளை படித்தேன் , மிகவும் அருமை. இனிமேல் வரும் பதிவுகளை படிக்க மிக ஆவலாக உள்ளேன்.
நல்ல பகிர்வு MSK.! கிகுஜிரோ பார்த்துவிட்டு எழுதவும்.
ஓகே. நந்தலாலா இப்ப எழுதிட்டீங்க.. ஆனா கிகுவைப் பார்த்து, அதுல இருந்து பல காட்சிகள் அப்படியப்படியே நந்தலாலால இருக்குறதைக் கவனிச்சிட்டு, என்ன எழுதுவீங்க? :-) .. சீக்கிரமே அதைப் பாருங்க பாஸ்
தமிழ் படத்தை உலகளவில் எடுத்து செல்ல படங்களை காப்பி பண்ணிகொண்டிருந்தால் முடியாது . முதலில் ஒரிஜினல் படத்தை பாருங்கள்.
இப்படி காப்பி பண்ணி பணம் சம்பாரிப்பவர்களை உற்சாக படுத்தாதீர்கள் .
Post a Comment