தமிழ் சினிமா கொஞ்சகாலம் மறந்து போயிருந்த முழுநீள நகைச்சுவைத் திரைப்படங்களுக்கு மீண்டும் உயிரூட்டியவர் இயக்குனர் ராஜேஷ். இவரின் முந்தைய சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் காட்சிகள் தினம் தினம் நகைச்சுவை தொலைக்காட்சிகளில் சிரிக்கவைத்துக்கொண்டிருக்கும் நிலையில் இவரின் மூன்றாவது படமாய் வந்திருப்பது இந்த ஒரு கல் ஒரு கண்ணாடி. ஹாட்ரிக் அதித்திருக்கிறாரா என்றால் ஆம் ஹாட்ரிக்தான். ரகளையான மூன்றாவது படம்.
இவரின் முந்தைய இரண்டு படங்களை போலவே இந்தப்படமும். கிட்டத்தட்ட அதே கதை, அதே பார்முலாதான். ஆனால் ரசிகர்களின் பல்ஸ் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார். சிறப்பான டைமிங்ஸ் கைவைந்த கலையாக இருக்கிறது.
ஹீரோவாய் உதயநிதி ஸ்டாலின். அதற்காகவே கொஞ்சம் மெனக்கெட்டு எல்லாரும் வேலை பார்த்திருக்கிறார்கள் போல. உதயநிதி கூட முதல் படம் போலல்லாது நன்றாக செய்திருக்கிறார். அவருக்கு இயல்பாய் பொருந்துகிற ஒரு கதாப்பாத்திரம். தோள் கொடுக்கும் நண்பனாய் சந்தானம். காதலியாய் ஹன்சிகா. பெரிய பூசணிக்காய் மாதிரி இருந்தாலும் இந்த படத்தில் கொஞ்சம் பரவாயில்லை ரகத்தில் நடித்திருக்கிறார். இவர்கள் காதல் வெற்றி பெற்றதா, நண்பன் சந்தானம் எவ்வைகையில் உதவினார் என்பதே கதை.
வெற்றிப்படம் ஆக்கியே தீரனும் என்கிற வேகத்தில் சில விஷயங்களை இப்படத்திலும் தொடர்ந்திருக்கிறார் ராஜேஷ். 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' போன்று ஒரு பாடல், அப்பாடக்கர் மாதிரி ஒரு காமெடி, சினிமா நட்சித்திரங்கள் தோன்றும் ஒரு ட்விஸ்ட் என்று இப்படத்திலும் தொடர்ந்தாலும் அதிலிருக்கும் நகைச்சுவைகள் இதையெல்லாம் பெரிய விஷயங்களாக கருத விடவில்லை. சந்தானம் அட்டகாசம் செய்கிறார். இனி இப்படத்தின் காட்சிகளும் இன்னும் சில வருடங்களுக்கு நகைச்சுவை தொலைகாட்சிகளில் திரும்ப திரும்ப வரும் என்பதில் சந்தேகமே இல்லை.
இதெல்லாம் பேசாமலிருக்க ஒரு காரணமா என்கிற வகையில் உதயநிதி அப்பா - அம்மா (அழகம் பெருமாள் - சரண்யா) கதையிருந்தாலும், அவர்கள் மீண்டும் சேரும் அந்த காட்சி நல்லா இருந்தது. அந்த காட்சியில், அப்பாவிடம் சண்டை போடும் காட்சியில் உதயநிதி நன்றாகவே பண்ணியிருந்தார்.
'கரு கரு விழிகளால்', 'ஹசிலி பிசிலி', 'கோவில்' என தனது முந்தைய பாடல்களை ரீமேக் செய்து போட்டிருந்தாலும் ஹாரிஸின் பாடல்கள் செம ஹிட்தான். படத்தில் இன்னும் சிறப்பாக படமாக்கியிருக்கிறார்கள். ’காதல் ஒரு பட்டர்ஃப்ளை’ பாடல் செம. 'வேணாம் மச்சான் வேணாம்' பாடலுக்கு தியேட்டரே ஆடுகிறது.
படம் கொஞ்சம் பெரிய படம் என்றாலும் போரடிக்காமல் சிரிக்கவைத்தது. இந்த சம்மரின் சூப்பர் ஹிட் இதுதான். நண்பர்களோடு, குடும்பத்தோடு, குழந்தைகளோடு மகிழ்ச்சியாய் பார்த்து விட்டு சிரித்துவிட்டு வர ஒரு நல்ல படம். நாளையும் மீண்டும் இன்னொரு முறை பார்க்கப்போகிறேன்.
ஹாட்ரிக்குக்கு வாழ்த்துக்கள் ராஜேஷ். உங்களின் அடுத்த படமான 'ஆல் இன் ஆல் அழகுராஜா'வுக்கு இப்போதிருந்தே காத்திருக்கிறேன்.
ஒரு கல் ஒரு கண்ணாடி - டபுள் ஓகே :))
13.04.2012





8 comments:
ரொம்ப நாளா காணாம இருந்த பதிவர்கள் இன்னிக்கு ரீ என்ட்ரீ கொடுக்கிறாங்க. விமர்சனம் நல்லாயிருக்கு பாஸ்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
என்ஜாய் செய்து பார்க்க வேண்டிய படமென்பது நீங்கள் இரண்டாம் முறை செல்வதில் இருந்தே தெரிகிறது.
நான் திங்கள் அன்றுதான் பார்க்கப்போகிறேன்.
லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் பற்றி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் சிறப்பு பேட்டி
புது வருடம் தொடங்கட்டும்னு இவ்வளவு நாளா காத்திருந்தீங்களோ..
WELCOME BACK!
இன்னிக்கு நான் படம் பார்க்கப் போறேன்.. அதுல உங்க விமர்சனம் படிக்கும்போதே ஆர்வம் இன்னும் அதிகரித்து விட்டது.
நன்றி!
* இனிமேல் வழக்கமான வேகத்தில் பதிவுகள் வர வேண்டுகிறேன்!!
சகோ, வந்துட்டீங்களா ?/ வாங்க..வணக்கம்,
விமர்சனம் கலக்கட்டுது..செம்மையாக உள்ளது.நன்றி.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்/
வெல்கம் பேக். :)
படம் எனக்கு ரொம்ப பிடிக்கல. சந்தானம் காமெடி மட்டும் அருமை :)
இன்று வலைச்சரத்தில் உங்கள் பதிவைக் குறிப்பிட்டுள்ளேன். சமயமிருப்பின் பார்த்துக் கருத்திட வேண்டுகிறேன்.
http://blogintamil.blogspot.in/2012/05/blog-post_02.html
nice blog and review about oru kal oru kannadi.. i loved the role played by Partha( santhanam)
dont miss this movie fa meg pa for faen
http://www.bonjourtristesse.net/2011/12/turn-me-on-goddammit-2011.html
Post a Comment