Saturday, November 26, 2011

மயக்கம் என்ன - திரைவிமர்சனம்


எனக்கு மிகவும் பிடித்தமான இயக்குனர் செல்வராகவனின் 'மயக்கம் என்ன' திரைப்படம் நேற்று வெளியாகியிருக்கிறது. ஆயிரத்தில் ஒருவனுக்கு பிறகு, விக்ரமை வைத்து துவக்கிய படத்தை கைவிட்டு, கமலோடு விஸ்வரூபத்தை துவங்கி கைவிட்டு, தனுஷ் - ஆண்டிரியாவை வைத்து இரண்டாம் உலகம் துவங்கி கைவிட்டு, பின் மிக குறுகிய காலத்தில் இயக்கி முடித்த படம் மயக்கம் என்ன. வழக்கம் போல் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. வருடத்திற்கு ஒரு படமாவது செல்வா தரலாம்.
.
சரி, திரைப்படத்திக்கு வருவோம். இத்திரைப்படம் typical செல்வராகவன் திரைப்படம். காதல் கொண்டேன், 7G, மயக்கம் என்ன மூன்றையும் Trilogy என்று சொல்லும் அளவிற்கு மயக்கம் என்ன வந்திருக்கிறது. இந்த திரைப்படத்திலும் திவ்யா, அனிதாவை போல் ஒரு யாமினி இருக்கிறாள். இந்த திரைப்படத்தை நான் எப்படி எடுத்துக்கொண்டேன் என்றால்,

நான் வெகு ஆழத்தில் கிடந்தேன். முதல் முறை நீங்கள் என்னை காப்பாற்றிட வந்தீர்கள். காப்பாற்றிட முடியவில்லை. நீங்கள் எனக்காக வந்தீர்களே என்கிற மகிழ்வில் பெருமிதத்தில் நான் மரித்து போனேன். இரண்டாம் முறை நீங்கள் என்னை காப்பாற்றிட வந்தீர்கள். என்னை கரை சேர்ப்பதற்குள் நீங்களே மரித்து போனீர்கள். மூன்றாம் முறையும் நீங்கள் எனக்காக வந்தீர்கள். இம்முறை என்னை முழுமையாய் காப்பாற்றி ரட்சித்தீர்கள். உங்களுக்கு உங்களது அன்புக்கு என்றென்றைக்குமான எனது நன்றிகள்.

ஆம். திவ்யாவாகவும் அனிதாவாகவும் வந்தவள், இம்முறை யாமினி என்கிற இரும்பு மனிஷியாக வந்து அவனை காப்பாற்றி ரட்சித்துவிட்டாள். இரும்பு மனிஷிகளின் கதை.
.
கார்த்திக், ஒரு professional photographer-ஆக துடிக்கிறவன். நல்ல திறமைகள் இருந்தும் இன்னும் ப்ரகாசிக்க முடியாமல் தவிக்கிறவன். நண்பர்களோடு நண்பர்களால் வாழ்கிறவன். இதற்கிடையில் நண்பனின் நண்பியாய் ஒருத்தி வருகிறாள். நட்பு, காதல், திறமை, தோல்வி, துரோகம், பிறழ்வு, இன்ன பிற. Typical செல்வராகவன் படம். ஆனால் செல்வாவிடம் சில மாற்றங்கள் வந்திருக்கின்றன. சில காட்சிகள் யூகிக்க கூடியதாகவும் கிளிஷேவாகவும் அமைந்திருக்கிறது. தவிர்த்திருக்கலாம்.
.
தனுஷ், செல்வாவின் நாயகன். நடிப்பில் அசத்துகிறார். நமது தமிழ் சினிமாவிலும் டெம்ப்ளேட் நடிகர்கள் மத்தியிலும் ஒரு நல்ல நடிகர் இருப்பதில் பெருமகிழ்ச்சி. தனுஷ், கையிற்றை பிடித்து இழுத்து வெளிச்சத்தை கட்டுபடுத்தி என்பதாக ஒரு காட்சி வரும். அந்தகாட்சியில் தனுஷ் அட்டகாசம். நாயகியாய் ரிச்சா. செல்வராகவனின் நாயகிகள் போலவே தைரியமான வலிமையான தீர்க்கமான கதாப்பாத்திரம். இரண்டாம் பாதியில் தனுஷோடு போட்டி போட்டிகிறார் நடிப்பில்.
.
ராம்ஜியின் ஒளிப்பதிவுக்காகவே இன்னொரு முறை படம் பார்க்கவேண்டும். GV பிரகாஷின் பின்னணிஇசை பல இடங்களில் அசத்தியிருக்கிறது. பாடல்கள் ஏற்கனவே ஹிட். படத்திலும் சிறப்பாகவே வந்திருக்கிறது.வழக்கமான செல்வராகவன் படம். செல்வராகன் படங்கள் பிடிக்கிறவர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும்.
.
மயக்கம் என்ன - இரும்பு மனுஷிகளின் கதை
.

மயக்கம் என்ன - ட்ரைலர்



26.11.2011

Thursday, November 17, 2011

Midnight in Paris (2011) - கலை இலக்கிய ஃபேன்டஸி


Director: Woody Allen
IMDB Rating : 8.0/10
Rotten Tomatoes : 93% Fresh
.

இயக்குனர் Woody Allen-இன் சமீபத்தியத் திரைப்படமிது. இலக்கியம் இசை ஓவியம் தத்துவம் காதல் சார்ந்த படங்கள் எடுப்பதில் இவருக்கு அலாதி ஆர்வமுண்டு . இத்திரைப்படமும் கலை சார்ந்த ஒரு ஃபேன்டஸி திரைப்படம்.
.

Saturday, November 12, 2011

The Adventures of Tintin (2011) - டின்டின் கதாப்பாத்திரங்களை உயிர்ப்பித்தல்


Director: Steven Spielberg
IMDB Rating : 7.8/10
Rotten Tomatoes : 85% Fresh
.

டின்டின் காமிக்ஸை திரைப்படமாக்கும் உரிமையை வெகுகாலமாக தன்வசம் வைத்திருந்த இயக்குனர் ஸ்பீல்பெர்க் இப்போதுதான் படமாக எடுத்திருக்கிறார். முழுநீள திரைப்படமாக, லைவ் ஆக்சன் அனிமேஷன் திரைப்படமாக, நிறைய எண்ணங்களுக்கு பிறகு Motion-Performance-Capture-Animation படமாக எடுத்திருக்கிறார். இயக்குனரும் இப்படத்தின் executive தயாரிப்பாளருமான பீட்டர் ஜாக்சனின் பங்களிப்பு இதில் முக்கியமானது. நான் இதுவரை டின்டின் காமிக்ஸை வாசித்ததோ அல்லது டின்டின் கார்டூன் படங்களை பார்த்ததோ இல்லை. ஆனாலும் டின்டின் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படம் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பும் கொண்டிருந்தேன்.
.

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..