Director : Matthew Vaughn
IMDB Rating : 8.2/10
Rotten Tomatoes : 87% Fresh
.
இந்த 2011 வருடத்தின் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களுள் ஒன்றான X-Men : First Class கடந்தவாரமே வெளியாகிவிட்ட நிலையில் இந்த வாரம்தான் இந்தியாவில் வெளியாகியிருக்கிறது. அதிலும்
Kick Ass (2010) திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் Matthew Vaughn இயக்கத்தில் இப்படம் வருவதாய் தெரிந்தவுடன் எனது எதிர்பார்ப்பு இரண்டு மடங்கனாது. ஆனால் X-Men நாயகர்களை நவீன வடிவத்தில் சித்தரிப்பார் (தனது கடந்த படமான
Kick Ass (2010) மாதிரி, Nolan-ன் Batman மாதிரி மற்றும் Zack Zynder-ன்
Watchmen (2009) மாதிரி) என்று நினைத்திருந்தேன், ட்ரைலர்கள் பார்த்தபோதே அப்படியில்லை என்பது தெரிந்துவிட்டது. ஆனால் அந்த இருமடங்கு எதிர்ப்பார்ப்பையும் அனாசயமாக பூர்த்தி செய்திருக்கிறது இத்திரைப்படம். படம் பட்டாசு.
.
.
எது தர்மம்
எது தேவையோ அதுவே தர்மம்.
.
வெகுகாலமாய் நான் மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருந்த இத்திரைப்படம் இப்போது ஒருவழியாய் வெளிவந்துவிட்டது. கடந்த வருடம், நியூயார்க்கில் நடந்த South Asian International Film Festival (SAIFF)-ல் Grand Jury பரிசை தட்டிய திரைப்படம். இதுவரை வேறு எந்த தமிழ் திரைப்படமும் உலக அரங்கில், உலக திரைப்பட விழாக்களில் Grand Jury பரிசையெல்லாம் தட்டியதாக தெரியவில்லை. இப்படத்தின் இயக்குனர் தியாகராஜா குமாரராஜா. ஓரம்போ (ஆட்டோ) திரைப்படத்தின் வசனம் இவருடையதுதான். இவர் இயக்கத்தில் வரும் முதல் திரைப்படமிது.
.