Director: Woody Allen
IMDB Rating : 8.0/10
Rotten Tomatoes : 93% Fresh
.
இயக்குனர் Woody Allen-இன் சமீபத்தியத் திரைப்படமிது. இலக்கியம் இசை ஓவியம் தத்துவம் காதல் சார்ந்த படங்கள் எடுப்பதில் இவருக்கு அலாதி ஆர்வமுண்டு . இத்திரைப்படமும் கலை சார்ந்த ஒரு ஃபேன்டஸி திரைப்படம்.
.
எல்லாருக்குமே ஒரு பொன்னான காலக்கட்டமென்று (Golden Age) ஒன்று இருக்கும், அதாவது இறந்த காலத்தில். தாங்கள் இளைஞனாக/இளைஞியாக அல்லது குழந்தைப்பருவத்தில் இருந்த காலம். 2010 இருப்பவர்களுக்கு 1980-இளையராஜா-ரஜினி-கமல் என்று. 1980 இல் இருந்தவர்களுக்கு 1960. ரஹ்மான்-இளையராஜா-எம்.எஸ்.வி. இப்படி போய்க்கொண்டேயிருக்குமல்லவா. அதேபோல் கலைஞர்களுக்கும் அப்படியொரு காலமிருக்கும். தங்கள் ஆதர்சங்கள் வாழ்ந்த காலம் அவர்களுக்கு பொன்னான காலமாக இருக்கலாம். ஒரு காலப்பயணத்தில் அவர்களை அந்த ஆதர்சங்கள் வாழ்ந்த காலத்திற்கு சென்று அங்கிருக்கும் அவர்களோடு பழக/உரையாட ஒரு வாய்ப்பு கிடைத்தால் எப்படியிருக்கும்? நமது அய்யனாரை, கோபியின் காலத்திற்கு அனுப்பி அவரோடு உரையாடச்செய்தால். நேசனை, பாரதி காலத்திற்கு அனுப்பி அவரோடு பழகச்செய்தால். சித்து - காயத்ரி இருவரையும் குறுந்தொகை தலைவன் - தலைவி சங்ககாலத்திற்கு பேக்கப் செய்து அனுப்பிவைத்தால். அதைத்தான் இத்திரைப்படம் முன்வைக்கிறது. :)
.
நாயகன் (Owen Wilson) ஒரு எழுத்தாளன். தனது வருங்கால மனைவி மற்றும் வருங்கால மனைவியின் பெற்றோரோடு, பாரிஸ் நகருக்கு செல்கிறான். வருங்கால மனைவி மற்றும் அவரது பெற்றோர், materialistic life எண்ணம் கொண்டவர்கள். இவன் படைப்பாளி. இவனுக்கு பாரிஸ் நகர் மீது கொள்ளைக்காதல். அதிலும் 1920-ன் பாரிஸ் நகர். பிரெஞ்சு வீதிகளின் காபி கடைகளிலும் பார்களிலும் இலக்கியம் கவிதையும் ஓவியமும் தத்துவமும் பரவிக்கிடந்த காலம். இவனுக்கு பிடித்தமான, கடந்த நூற்றாண்டின் முக்கியமான படைப்பாளிகள் வாழ்ந்த காலம், நாயகனின் பொற்காலம்.
ஒரு இரவு, தனித்துவிடப்பட்ட நிலையில், ஒரு 1920 மாடல் இவனுக்கு அருகில் வந்து, அதிலிருப்பவர்கள் இவனையழைக்கிறார்கள். இவன் அவர்களோடு செல்கிறான். அவர்களோடு அறிமுகம் செய்துக்கொள்ளும் போது இவனுக்கு அதிர்ச்சி. அடுத்தடுத்த இரவுகளில் இவன் சந்திக்கும் நபர்கள் F. Scott Fitzgerald, Zelda Fitzgerald, Ernest Hemingway, Cole Porter, Pablo Picasso, Gertrude Stein, Luis Buñuel, Salvador Dalí, Man Ray. அங்கு இவன் ஒரு அழகிய பெண்ணொருத்தியை சந்திக்கிறான். அவளுக்கு 1890-ன் பாரிஸ் மீது காதல். 1890-ல் இவர்கள் சந்திக்கிறவர்கள் Henri de Toulouse-Lautrec, Paul Gauguin, Edgar Degas. இப்படியே நீள்கிறது இந்த அழகான feel good fantansy romance.
.
தென்கொரிய திரைப்படமான Il Mare-ல் ஒரு தபால் பெட்டி காலப்பயண எந்திரமாக இருப்பதை போல், இத்திரைப்படத்தில் அந்த பழைய மாடல் கார் மற்றும் சாரட் வண்டி. பொதுவாகவே பாரிஸ் அழகான நகர். இத்திரைப்படத்தில் அது இன்னும் அழகாக காட்டப்படுகிறது. அழகான இசை, அக்காலத்திய படைப்பாளிகள், அவர்களின் குணாதியசங்கள். அங்கிருக்கும் ஓவியம் மாதிரியான பெண், ஒரு அழகான திரைப்படமிது. Feel-good-Fantansy-Romance. வெள்ளி அல்லது சனி மாலை/இரவில் பார்க்ககூடிய திரைப்படமிது.
.
Midnight in Paris (2011) - கலை இலக்கிய ஃபேன்டஸி
.
Midnight In Paris (2011) - Youtube Trailer
17.11.2011





2 comments:
Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !
http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html
ஹாஹ்ஹா :-) . . பாருய்யா.. நான் நாளைக்கிப் பார்க்க இருந்த படம். எப்புடியும் நாளைக்கி பார்த்துருவேன் :-)
Post a Comment