எனக்கு மிகவும் பிடித்தமான இயக்குனர் செல்வராகவனின் 'மயக்கம் என்ன' திரைப்படம் நேற்று வெளியாகியிருக்கிறது. ஆயிரத்தில் ஒருவனுக்கு பிறகு, விக்ரமை வைத்து துவக்கிய படத்தை கைவிட்டு, கமலோடு விஸ்வரூபத்தை துவங்கி கைவிட்டு, தனுஷ் - ஆண்டிரியாவை வைத்து இரண்டாம் உலகம் துவங்கி கைவிட்டு, பின் மிக குறுகிய காலத்தில் இயக்கி முடித்த படம் மயக்கம் என்ன. வழக்கம் போல் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. வருடத்திற்கு ஒரு படமாவது செல்வா தரலாம்.
.
சரி, திரைப்படத்திக்கு வருவோம். இத்திரைப்படம் typical செல்வராகவன் திரைப்படம். காதல் கொண்டேன், 7G, மயக்கம் என்ன மூன்றையும் Trilogy என்று சொல்லும் அளவிற்கு மயக்கம் என்ன வந்திருக்கிறது. இந்த திரைப்படத்திலும் திவ்யா, அனிதாவை போல் ஒரு யாமினி இருக்கிறாள். இந்த திரைப்படத்தை நான் எப்படி எடுத்துக்கொண்டேன் என்றால்,
நான் வெகு ஆழத்தில் கிடந்தேன். முதல் முறை நீங்கள் என்னை காப்பாற்றிட வந்தீர்கள். காப்பாற்றிட முடியவில்லை. நீங்கள் எனக்காக வந்தீர்களே என்கிற மகிழ்வில் பெருமிதத்தில் நான் மரித்து போனேன். இரண்டாம் முறை நீங்கள் என்னை காப்பாற்றிட வந்தீர்கள். என்னை கரை சேர்ப்பதற்குள் நீங்களே மரித்து போனீர்கள். மூன்றாம் முறையும் நீங்கள் எனக்காக வந்தீர்கள். இம்முறை என்னை முழுமையாய் காப்பாற்றி ரட்சித்தீர்கள். உங்களுக்கு உங்களது அன்புக்கு என்றென்றைக்குமான எனது நன்றிகள்.
ஆம். திவ்யாவாகவும் அனிதாவாகவும் வந்தவள், இம்முறை யாமினி என்கிற இரும்பு மனிஷியாக வந்து அவனை காப்பாற்றி ரட்சித்துவிட்டாள். இரும்பு மனிஷிகளின் கதை.
.
கார்த்திக், ஒரு professional photographer-ஆக துடிக்கிறவன். நல்ல திறமைகள் இருந்தும் இன்னும் ப்ரகாசிக்க முடியாமல் தவிக்கிறவன். நண்பர்களோடு நண்பர்களால் வாழ்கிறவன். இதற்கிடையில் நண்பனின் நண்பியாய் ஒருத்தி வருகிறாள். நட்பு, காதல், திறமை, தோல்வி, துரோகம், பிறழ்வு, இன்ன பிற. Typical செல்வராகவன் படம். ஆனால் செல்வாவிடம் சில மாற்றங்கள் வந்திருக்கின்றன. சில காட்சிகள் யூகிக்க கூடியதாகவும் கிளிஷேவாகவும் அமைந்திருக்கிறது. தவிர்த்திருக்கலாம்.
.
தனுஷ், செல்வாவின் நாயகன். நடிப்பில் அசத்துகிறார். நமது தமிழ் சினிமாவிலும் டெம்ப்ளேட் நடிகர்கள் மத்தியிலும் ஒரு நல்ல நடிகர் இருப்பதில் பெருமகிழ்ச்சி. தனுஷ், கையிற்றை பிடித்து இழுத்து வெளிச்சத்தை கட்டுபடுத்தி என்பதாக ஒரு காட்சி வரும். அந்தகாட்சியில் தனுஷ் அட்டகாசம். நாயகியாய் ரிச்சா. செல்வராகவனின் நாயகிகள் போலவே தைரியமான வலிமையான தீர்க்கமான கதாப்பாத்திரம். இரண்டாம் பாதியில் தனுஷோடு போட்டி போட்டிகிறார் நடிப்பில்.
.
ராம்ஜியின் ஒளிப்பதிவுக்காகவே இன்னொரு முறை படம் பார்க்கவேண்டும். GV பிரகாஷின் பின்னணிஇசை பல இடங்களில் அசத்தியிருக்கிறது. பாடல்கள் ஏற்கனவே ஹிட். படத்திலும் சிறப்பாகவே வந்திருக்கிறது.வழக்கமான செல்வராகவன் படம். செல்வராகன் படங்கள் பிடிக்கிறவர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும்.
.
மயக்கம் என்ன - இரும்பு மனுஷிகளின் கதை
.
மயக்கம் என்ன - ட்ரைலர்
26.11.2011





15 comments:
ரொம்ப எளிமையான விமர்சனம்...
நீங்க தீவிர செல்வா ரசிகர் மாதிரி தெரியுது
@ராஜ் : செல்வாவின் தீவிர ரசிகன்தான் :) நன்றி..
ஆமாப்பா.. அப்படியே ஒரே சாங்கில் இண்டர்நேஷனல் லெவலுக்கு போட்டோ எடுத்து, பெரியாளாகி, அவார்டு வாங்கி, டிவியில் வந்து, எல்லாமே என் ஜூலிதான்னு சொல்லி.. விக்ரமன் எஃபெக்ட்ல லாலாலாலாலா பாடினதையும் சொல்லியிருக்கலாமே.!
Enakku music antha alavu pudikkala boss expect two or three tracks... Script work innam konjam pannirukkalam...
I'm also fan of selva... Romba kondattamaana padam...
Vegujana cinemaava itha paakka mudiyathu...
The Mullai Periyar DAM Problem Hidden Truths & Solutions
http://vimeo.com/18283950
உங்கள் பதிவை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்தில் இணையுங்கள் . ஓட்டளிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் இப்போது தரமான பதிவுகள் அனைத்தும் முன்பை விட விரைவிலேயே பிரபலமான பக்கங்களுக்கு வந்து விடும் .தளத்தை இணைக்க இங்கே செல்லவும்
http://www.tamil10.com/
ஒட்டுப்பட்டை பெற
நன்றி
‘நான் அடுத்து இயக்குப்போகும் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை எனது தந்தையே தயாரிக்கிறார்’. – செல்வராகவன் பேட்டி.
”மயக்கம் என்ன” நாலு நாள் கூட போகாதுன்னு தெரிஞ்சுதான் படம் வர்றதுக்கு முன்னரே செல்வராகவன் மற்ற தயாரிப்பாளர்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்று ரெண்டு கையையும் தூக்கிட்டாரா?. ஆயிரத்தில் ஒருவன் முதல் பாகத்தை சோழர்கள் கதை, ஆண்ட்ரியா-ரீமாசென் கதை என்று குழப்பினார். இரண்டாம் பாகத்தில் யாரை குழப்ப போகிறாரோ?
ஏங்க செல்வா சார் உங்களுக்கு நல்ல கதையம்சத்துடன் உள்ள படமே எடுக்க தெரியாதா? உதிரிபூக்கள், முதல்மரியாதை போன்ற படங்களை தயவு செய்து 100 முறைக்கு மேல் பார்க்கவும்.
Beautiful Mind படத்தில் Russell Crowe-க்கு மனப்பிறழ்வு ஏற்பட்டு, சாதித்து, கடைசிக்காட்சியில் நோபல் பரிசு வாங்கி, எல்லாம் என் மனைவியாலன்னு சொன்னா பார்ப்பீங்க.. செல்வராகவன், மயக்கம் என்ன படத்துல அதேயே செஞ்சா விக்ரமன் படம்ன்னு சொல்லுவீங்களோ.. ஏன் செல்வா படத்துல happy ending இருக்கக்கூடாதா #செல்வராகவனுக்கு வக்காலத்து.. :))
கொஞ்சம் Colors Trilogy பத்தி சொல்லுங்கன்னே...
@ரதியழகன்: very sorry.. i really forgot to answer..
போலிஷ் இயக்குனர் Krzysztof Kieślowski-ன் மூன்று திரைப்படங்கள் Color Trilogy என்ற பெயரில் அறியப்படுகிறது.
http://en.wikipedia.org/wiki/Krzysztof_Kie%C5%9Blowski
http://en.wikipedia.org/wiki/The_Three_Colors_Trilogy
அந்த மூன்று திரைப்படங்களும் இவை..
Blue (1993)
White (1994)
Red (1994)
nice review.... thanks for sharing... please read my tamil kavithaigal in www.rishvan.com
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.
என்ன பாஸ் ரொம்ப நாள் ஆச்சு ஆளையே காணோம்!
தனுஷ், கையிற்றை பிடித்து இழுத்து வெளிச்சத்தை கட்டுபடுத்தி என்பதாக ஒரு காட்சி வரும். அந்தகாட்சியில் தனுஷ் அட்டகாசம்.- I too like this scene so much....
But the last scene la Dhanush as about to leave the stage and then he again came back to stage and show Yamini foto - This is typical tamil cinema and this may be avoided...
songs are nice.. esp "Pirai thedum" and theme music.. Good Vimarsanam...
Post a Comment