Director: Steven Spielberg
IMDB Rating : 7.8/10
Rotten Tomatoes : 85% Fresh
.
டின்டின் காமிக்ஸை திரைப்படமாக்கும் உரிமையை வெகுகாலமாக தன்வசம் வைத்திருந்த இயக்குனர் ஸ்பீல்பெர்க் இப்போதுதான் படமாக எடுத்திருக்கிறார். முழுநீள திரைப்படமாக, லைவ் ஆக்சன் அனிமேஷன் திரைப்படமாக, நிறைய எண்ணங்களுக்கு பிறகு Motion-Performance-Capture-Animation படமாக எடுத்திருக்கிறார். இயக்குனரும் இப்படத்தின் executive தயாரிப்பாளருமான பீட்டர் ஜாக்சனின் பங்களிப்பு இதில் முக்கியமானது. நான் இதுவரை டின்டின் காமிக்ஸை வாசித்ததோ அல்லது டின்டின் கார்டூன் படங்களை பார்த்ததோ இல்லை. ஆனாலும் டின்டின் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படம் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பும் கொண்டிருந்தேன்.
.
இந்த வரிசையில் இது முதற்படம். இன்னும் இரண்டு படங்கள் வெளிவர வாய்ப்பிருக்கிறது. இப்படம் ஒரு புதையலை தேடும் கதை. படத்தின் முதல் காட்சிலேயே கதை சொல்லத்துவங்கிவிட்டார்கள். முதல் காட்சிலேயே டின்டின் ஒரு மாதிரி கப்பலை வாங்குகிறார். அதை கைப்பற்ற சிலர் முயல, அதன் ரகசியத்தை டின்டின் அறிய முயல, ஒரு புதையலை தேடும் படலம் உருவாகுகிறது. அதனால் வரும் அபாயங்கள், அதிலிருந்து தப்பிப்பது, விவேகமாக செயல்படுவது என்று படம் பட்டையைக் கிளப்புகிறது.
.
3D அனிமேஷன் (3D) படங்களின் வளர்ச்சி பிரமிக்கவைக்கிறது. அல்லது Motion-Performance-Capture டெக்னாலஜி அனிமேஷன் படங்களின் எல்லைகளை இன்னும் விரிவுபடுத்துகிறது. பல இடங்களில் வியப்படைய செய்தது திரைப்படம். அவ்வளவு நுணுக்கம். அவ்வளவு இயல்பு. டின்டின், அவரது நாய்க்குட்டி snowy, கேப்டன் ஹடாக், காவல்துறை அதிகாரிகள் தாம்ப்சன் - தாம்சன் அனைவரின் உருவாக்கமும் அனிமேஷன் உடல்மொழியும் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது.
.
படத்தின் கதை பெரியதாக ஒன்றுமில்லை. ஆனால் அந்த அட்வென்சர்களை மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இரண்டு மூன்று சேஸ்கள். மிகச்சிறப்பாய் வந்திருக்கிறது. காவல்துறை அதிகாரிகள் தாம்ப்சன் - தாம்சன் கதாப்பாத்திரங்களுக்கு உயிர்க்கொடுத்திருப்பது நடிகர்கள் Simon Pegg - Nick Frost. மிகசிறப்பான தேர்வு.
.
டின்டின், அவரது நாய்க்குட்டி snowy, கேப்டன் ஹடாக், காவல்துறை அதிகாரிகள் தாம்ப்சன் - தாம்சன் கதாப்பாத்திரங்களை திரையில் மிகச்சிறப்பாக உயிர்ப்பித்திருக்கிறார்கள். அதுவே இதன் முழுமுதற் சிறப்பு. படம் முழுவதுமான நகைச்சுவை தாராளமாய் சிரிக்கவைக்கிறது. ஹடாக்/ஸ்னோயி கதாப்பாத்திரங்கள் நகைச்சுவையில் பட்டையை கிளப்புகிறது. உண்மையில் நல்ல பொழுதுப்போக்கு திரைப்படம். திரையரங்குகளில் 3Dயில் (மட்டுமே) காணுங்கள். மிகவும் மகிழ்விக்கும்.
.
The Adventures of Tintin (2011) - Enjoy the ride of Adventure.
.
The Adventures of Tintin (2011) - TRAILER
12.11.2011





3 comments:
நண்பர் கருந்தேளின் சமீபத்திய பதிவு..
http://www.karundhel.com/2011/11/adventures-of-tintin.html
நண்பர் கருந்தேளின் திரைப்படம் பற்றிய பகிர்வு ..
http://www.karundhel.com/2011/11/adventures-of-tintin-secret-of-unicorn.html
சிறந்த விமர்சனம்..படம் பார்க்க நேரம் கிடைக்கவில்லை..கண்டிப்பாக பார்க்க வேண்டும்..நன்றி.
Post a Comment