Monday, October 17, 2011

Slacker (1991) - தொடர்பற்ற பல காட்சிகளினாலான சினிமா


Director : Richard Linklater
IMDB Rating : 7.0/10
Rotten Tomatoes : 84% Fresh
.

இயக்குனர் Richard Linklater பற்றி நீங்கள் அறிந்திருக்கக்கூடும். அல்லது அவரை அறியாமல் கூட அவரின் சில படங்களை நீங்கள் பார்த்திருக்கூடும். Before Sunrise, Before Sunset, School of Rock, Dazed and Confused, Waking Life ஏதாவது ஒரு படத்தை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். இவரின் இரண்டாவது படமிது. அல்லது கிட்டத்தட்ட இவரின் முதல் படமிது. 23000 டாலர்களில் எடுக்கப்பட்ட Independent படமிது.
.

இந்தத் திரைப்படத்தில் அப்படி என்ன சிறப்பு. இந்தப் படத்தில் கதையே கிடையாது. இதிலென்ன அதிசயம். நம்மூரில் கதையேயில்லாமல் எவ்வளவோ படம் வருகிறது. இதில் வியக்க என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். சர்வ நிச்சயமாய் இப்படத்தில் கதையே கிடையாது. கொஞ்சம் புரிகிற மாதிரி சொல்ல வேண்டுமானால், ஆட்கள் அதிகமில்லா சாலையில், நீங்கள் ஒரு கேமராவோடு நிற்கிறீர்கள். அப்போது இரண்டு பேர் நடைசாலையில் எதையோ பேசிக்கொண்டே வருகிறார்கள். இப்போது நீங்கள் கேமெராவோடு அவர்கள் பின்தொடர்ந்து பதிவு செய்கிறீர்கள். அப்போது அந்த நடைசாலையில் நான்கு நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் கொஞ்சநேரம் அங்கு நின்று அதை பதிவு செய்கிறீர்கள். அவர்களில் ஒருவர் விடைபெற்று அவர் வீட்டுக்கு செல்கிறார். நீங்களும் அவர் வீட்டிற்குள் நுழைந்து அங்கு கொஞ்ச நேரம் பதிவு செய்கிறீர்கள். இப்படியே சாலை, பூங்கா, வீடு, கடை, பேருந்து நிறுத்தம், ரயில்வே ஸ்டேஷன், பார், கிளப் என ஒரு நாள் முழுக்க நீங்கள் விதவிதமான மனிதர்களை பதிவு செய்கிறீர்கள். பின் எடிட் செய்து ஒன்றரை மணி நேர படமாக்கி வெளியிட்டால் அதுதான் Slacker.
.
குவென்டினின் Reservoir Dogs படத்தின் டிப் பற்றி பேசும் காட்சியை நினைத்துக்கொள்ளுங்கள். அதே மாதிரி இந்த படத்தில் வருபவர்களும் எதைஎதையோ பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். காரணம் நீங்கள் யார்யாரையோ அவர்கள் யாரிடமோ எதையோ பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் சென்று நீங்கள் பதியத்துவங்குகிறீர்கள். அதனால் அப்படித்தானிருக்கும். ஆனால் திரைப்படம் மிக சுவாரஸ்யம். ஒரு திரைப்படம், திரைக்கதை இப்படிதானிருக்கவேண்டும் என்பதையெல்லாம் பற்றி கொஞ்சமும் கவலைகொள்ளாது வெறும் சில பல காட்சிகளினால் மட்டுமே திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். இப்படத்தில் வரும் கதாப்பாத்திரங்களுக்கு பெயர் கிடையாது. படத்தின் இறுதியில் நடிகர்களின் கதாப்பாத்திரங்களின் பெயர்கள் - நடிகர்களின் பெயர்கள் வருமிடத்தை கவனிக்கவும். அல்லது இப்போதே கூட IMDB-யில் சென்று பார்க்கலாம்.
.
இப்பத்தில் வரும் நிறைய கதாப்பாத்திரங்கள் ஒவ்வொருவிதமான அரசியல் சார்போடு இருக்கிறார்கள். ஒவ்வொருவிதமான உரையாடல்கள் இருக்கின்றன. ஒருவர் அறிவியலை பேசுகிறார். ஒருவர் கனவுகளைப் பற்றி பேசுகிறார். ஒருவர் டால்ஸ்டாய் பற்றி பேசுகிறார். ஒருவர் மக்களிடமிருந்து அரசாங்கம் மறைக்கும் Conspiracy விஷயங்களை பேசுகிறார். ஒரு சுவாரஸ்யமான Cult திரைப்படமிது. இப்படத்தில் மற்றொரு மிக சுவாரஸ்யமான இன்னொரு விஷயம், இப்படம் மிகவும் துணுக்குற வேண்டிய விஷயத்தை மிகவும் சாதரணமாக பேசிப்போகிறது. ஒரு கார் விபத்தை மக்கள் சாதாரணமாய் கடந்து போகிறார்கள். ஒருவர் துப்பாக்கியால் மக்களை நோக்கி சடசடவென சுட்டதை ஒரு கதாப்பாத்திரம் சுவாரஸ்யமாய் பேசுகிறது.
.
இந்தப்படத்தை பற்றி நிறையவே பேசலாம். ஆனால் அதைவிட பார்த்தல் சிறப்பு. எனவே பாருங்கள்.

.
Slacker (1991) - தொடர்பற்ற பல காட்சிகளினாலான சினிமா.
.

SLACKER TRAILER


17.10.2011

7 comments:

Advocate P.R.Jayarajan said...

//நம்மூரில் கதையேயில்லாமல் எவ்வளவோ படம் வருகிறது.//

அண்மையில் 'அன்புள்ள கமல்' என்று ஒரு படம் வெளியானது. சரி.. கமல் நடித்த படமாயிற்றே, நன்றாக இருக்கும் என்று நினைத்து படத்திற்கு போனால் அது ஒரு மலையாள டப்பிங் படம். கமல் வருவர்.. கமல் வருவர்.. என்று நினைத்தால் முன் பாதி வரை கமல் வரவேயில்லை. கதையும் ஏதோ நாடக பாணியில் அழுது வடிந்துக் கொண்டிருந்தது. சரி வீட்டிற்கு கிளம்பி விடலாம் என்று நினைத்து மெல்ல எழுதபோது, நல்லவேளையாக, இடைவேளை கார்டு போடும்போது கமலின் முகத்தை காண்பிக்கிறார்கள். ஓ.. இடைவெளிக்கு பிறகுதான் படம் சூடு பிடிக்கிறது என்று நினைத்து ஒரு காபி சாப்பிட்டு விட்டு வந்து மீண்டும் அமர்ந்தால், கமல் ஒரு பிரேம் இரண்டு அங்கிளில் வந்து மூன்று ஸ்க்ரிப்ட் வசனம் பேசுகிறார். அதுவும் டப்பிங் குரலில். பின் படம் முடியும் வரை வரவேயில்லை.

சம்பந்தாசம்பந்தம் இல்லாத காட்சிகளுடன் படம் வந்தால் ஓரளவு முடியை பீய்துக் கொள்ளலாம். அனால் அன்புள்ள கமல் என்று பெயர் வைத்து ரசிகர்களை திரைக்கு வரவழைத்து கமல் சுமார் 5 நிமிடம் மட்டுமே வந்தால் எவ்வளவு மன உளைச்சல் ஏற்படும்? இருக்கும் முடி தானாகவே கொட்டி விட்டது.. எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் பாருங்கள்.. !

MSK / Saravana said...

@Advocate P.R.Jayarajan : நல்லவேளை இந்த படத்துக்கு நான் போகல :)

Cpede News said...

தமிழில் சிறந்த வலைப்பதிவர்களுக்கான சிறந்த தளம் இணைந்திருங்கள் http://cpedelive.blogspot.com/

கருந்தேள் கண்ணாயிரம் said...

லிங்க்லேட்டரின் படங்கள் முக்காலே மூணு வீசம் பார்த்தாச்சு. ஆனா இத்தை கேள்வியே பட்டதில்லை. ஒருவேளை 'a scanner darkly' ல பேசுவானுங்களே
. அப்புடி இருக்கும் போல. இருந்தாலும் பரவால்ல. இப்ப மீ இன் ஹாரர் மூட். ஸோ, இத்த நோட் பண்ணினுகீறேன் நைனா. அப்பாலிக்கா பார்க்குறேன். அப்பால, என்னமோ கொஞ்ச நாளாவே எதுவும் போடலியாம்ல? ஏன் ராசா? அப்பால உங்களுக்கும் ஒரு வட்டம் ஆரம்பிச்சிருவோம் தெரியும்ல. . அக்காங் நைனா

கருந்தேள் கண்ணாயிரம் said...

@ அட்வகேட் ஜெயராஜன் - என்ன ஒரு துன்பியல் சம்பவம். . கமல் பேரைப் பார்த்த உடனே உங்களை யாரு போயி படம் பார்க்க சொன்னது? அதான் கேபிள், ஜாக்கி போன்ற பிரபல பதிவர்கள் அதுக்கு விமர்சனம் போடுவாங்கல்ல :-) . . அத்த பார்த்துட்டு போக வேண்டியதுதானே நைனா. அய்யம்டீப்பீலயே இவங்க மாதிரி எழுத முடியாதுன்னிக்கினு, இவங்களோட பதிவுகளை ஆங்கிலத்துல இட்ட்ரான்சுலேட்டு பன்னுராங்களாம்ல . . ஒருவேளை இத்த கேபிளோ ஜாக்கியோ படிச்சா, என்னிய மன்னிச்சி உட்ருவாங்கன்னு நேனிச்சிகினுகீறேன் . ஏன்னா, நானு அவங்க நன்பேன்யா . . ஹிக் . .

Cpede News said...

தமிழில் சிறந்த வலைப்பதிவர்களுக்கான சிறந்த தளம் இணைந்திருங்கள் http://cpedelive.blogspot.com/

MSK / Saravana said...

@Cpede News : நன்றி.


@கருந்தேள் : இதையும் பார்த்திருங்க. இனிமேல் தொடர்ச்சியா எழுதுவேன்னு நெனக்கிறேன். வட்டம் சதுரம் வேண்டாம்.. நன்றி. :))

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..