Monday, October 24, 2011

Paul (2011) - ஏலியன் படங்களை பகடி செய்யும் திரைப்படம்


Director: Greg Mottola
Writers: Nick Frost, Simon Pegg
IMDB Rating : 7.1/10
Rotten Tomatoes : 72% Fresh
.

சில மாதங்களாகவே இப்படத்தை பற்றி எழுத நினைத்துக்கொண்டேயிருந்தேன். உங்களுக்கு நடிகர்கள் Simon Pegg மற்றும் Nick Frost பிடிக்குமா? அதாவது இந்த இணையை? நீங்கள் இயக்குனர் Edgar Wright இயக்கத்தில் வந்த Shaun of the Dead மற்றும் Hot Fuzz படங்களை பார்த்திருந்தால் இவ்விரு நடிகர்களையும் மிகவும் பிடிக்கும். இவர்கள் இருவரின் chemistry செமையா இருக்கும். இவ்விருவரும் இணைந்து எழுதிய கதையிது. சில வருடங்கள் கழித்து இருவரும் சேர்ந்து நடித்து வந்திருக்கும் படமிது. என்பதனால் இத்திரைப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு கொண்டிருந்தேன்.
.

கிட்டத்தட்ட 2003-லிலேயே தயாராகியிருக்கவேண்டிய படமிது. இப்போதெல்லாம் வருடத்திற்கு நான்கு ஏலியன் படங்கள் வருகின்றன. Cowboys and Aliens என்றொரு திரைப்படம் இவ்வருடத்தில் வந்தது. நான் பார்த்ததிலேயே ஆகச்சிறந்த மொக்கை படமது. இந்த மாதிரி ஹாலிவுட், ஏலியன்களை வைத்து படமாய் எடுத்து தள்ளுகிறார்கள். இதையெல்லாம் கலாய்த்து தள்ளுகிறார்கள் இப்படத்தில்.
.


1945. ஒரு பறக்கும் தட்டு, வழக்கம் போல் அமெரிக்காவில் வந்து மோதுகிறது. 2011. இரண்டு காமிக் புத்தக எழுத்தாளர்கள் பிரிட்டனிலிருந்து அமெரிக்காவிற்கு ஒரு காமிக் விழாவிற்க்காய் வருகிறார்கள். அங்கிருந்து அப்படியே ஒரு Road Trip திட்டமிடுகிறார்கள். வழியில் ஒரு சிறுவிபத்து. ஒரு காரை கவிழ்த்துவிடுகிறார்கள். காருக்குள் எட்டிப்பார்க்கிறார்கள். அதிலிருப்பது ஒரு ஏலியன். கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கும் மேலாக அமெரிக்கா மறைத்துவைத்திருக்கிறது இந்த Paul என்று பெயரிடப்பட்ட வேற்றுகிரகவாசியை. கஞ்சா அடிக்கும், குடிக்கும், கெட்ட வார்த்தைகள் சரளமாய் பேசும், ஆங்கிலம் பேசும் Paul. தப்பிவிட்ட இந்த வேற்றுகிரகவாசியை கைப்பற்ற முயலும் அரசாங்கம். இந்த வேற்றுகிரகவாசியை காப்பாற்றி ஒரு குறிப்பிட்ட இடத்தில் கொண்டுசேர்க்க முயலும் இவ்விரு எழுத்தாளர்கள். அந்த இடத்திற்கு சென்று சேர்ந்துவிட்டால், அங்கிருந்து தன் சொந்த கிரகத்திற்கு சென்றுவிட திட்டம்.
.

இந்த Chasing தான் படம். Paul கதாப்பாத்திரம் மூலம் மொத்த ஹாலிவுட் மற்றும் ஏலியன் கதைகளை எவ்வளவு தூரம் பகடி செய்யமுடியுமோ அவ்வளவும் செய்திருக்கிறார்கள். புகழ்பெற்ற அனைத்து ஏலியன் படங்களை வெளுத்துவிட்டார்கள் என்றே நினைக்கிறேன். ஒரு நினைவுகூறும் காட்சியில் இயக்குனர் ஸ்பீல்பெர்க், ரகசியமாக அடைத்துவைக்கப்பட்டிருக்கும் Paul-க்கு தொலைபேசி, ET திரைப்படம் எடுக்கப்போவது பற்றியும் ஏலியன்களை பற்றியும் பேசி, Paul மூலமாகத்தான் அவரால் ET எடுக்கமுடிந்ததாக ஒரு காட்சி இருக்கிறது. இப்பயணத்தில் நடுவில் வந்து சேர்கிறாள் ஒரு பெண். தீவிர கிறித்துவ பெண். உலகம் கூட ஏழாவது நாளில் தேவனால் படைக்கப்பட்டதாய் நம்பும், பரிணாமத்தை மறுக்கும் தீவிர மதம் சார்ந்த பெண். அந்த பெண் கதாப்பாத்திரம் மூலம் தீவிர கிறித்துவத்தை அடி பின்னுகிறான் Paul. அந்த பெண்ணுக்கு பரிணாமத்தை புரியவைக்கிறான் Paul.
.
Paul கதாப்பாத்திரத்துக்கு குரல் கொடுத்திருப்பது நடிகர் Seth Rogen. இப்படத்திற்கு பின் இக்கதாப்பாத்திரத்தை உங்களுக்கு மிகவும் பிடித்து போகும். அசால்ட்டு.

இப்படத்தின் இயக்குனர் Greg Mottola. இவரின் Superbad, Adventureland படங்களை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பு அதிகம். இந்த திரைப்படமும் எனக்கு பிடித்திருந்தது. குறிப்பாக படத்தின் ஒவ்வொரு கதாப்பாத்திரத்திடமும் கைமாறும் அந்த காமிக் புத்தகத்தை பார்த்ததும் வெளிப்படும் அந்த டயலாக். செம. படம் முழுதும் அந்த புத்தகம் நகர்ந்து கொண்டேயிருந்தது.
.
Paul (2011) - Road Trip with an Alien. And its quite fun.
.

Paul (2011) - TRAILER


ட்ரைலரை பாருங்க. நிச்சயம் படம் பார்ப்பீங்க.. I bet :)



24.10.2011

4 comments:

உலக சினிமா ரசிகன் said...

வழக்கமான ஏலியன் படம் என்றே நினைத்திருந்தேன்.
தங்கள் பதிவு தெளிவாக்கி உள்ளது.
நன்றி.

Arun J Prakash said...

நல்ல விமர்சனம். இந்த படத்தை பார்த்து ரசித்துள்ளேன், ஆனால் நீங்கள் கூறிய பிறகுதான் தெரியும் இதில் அணைத்து ஹெலியன் திரைப்படங்களையும் கிண்டல் செய்திருப்பார்கள் என்று. இன்னொரு முறை பார்க்கவேண்டியது தான்..

MSK / Saravana said...

@உலக சினிமா ரசிகன் : பாருங்க தல :) நன்றி.


@Arun J Prakash : நன்றி :)

சி.பி.செந்தில்குமார் said...

குட், பார்த்துட வேண்டியதுதான்

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..