Tuesday, October 25, 2011

Once (2006) - நல்லிசையும் மென்காதலும்


Director: John Carney
IMDB Rating : 8.0/10
Rotten Tomatoes : 97% Fresh
.

இது ஒரு ஐரிஷ் Independent திரைப்படம். இசையும் காதலும் நிரம்பியத் திரைப்படம். Musical Drama Romance. 130,000 யூரோவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகமெங்கும் நல்ல விமர்சனங்களையும், நல்ல வசூலையும், சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதையும், அந்த பாடலுக்காக கிராமி விருதின் பரிந்துரையும் பெற்றத் திரைப்படம்.
.

அயர்லாந்தின் தலைநகரான டப்ளின் நகரத்தில் வசிக்கும் இரண்டு எளிய மனிதர்களின் ஒரு வாரக் கதையிது. அவன், நடைபாதையில் கிட்டார் இசைப்பவன். சொந்தமாய் பாடல் எழுதி, பாடி, கிட்டார் இசைக்கும் இசைக் கலைஞன். சில வருடங்களுக்கு முன்பான காதலில் தோல்வியுற்றவன். அவள், செக் நாட்டிலிருந்து இங்கு வந்து, மலர்களை விற்பவள். பியானோ வாசிக்கத் தெரிந்த இசைக் கலைஞி. இவளுக்கும் ஒரு காதல் கதை இருக்கிறது. இவனின் இசை பிடித்துப்போய் அவனிடம் பேசத்துவங்க ஒரு நட்பு பிறக்கிறது. கடன் வாங்கி ஸ்டுடியோவில் இவன் தனது பாடல்களை பதிவு செய்கிறான். தனது தோழி மற்றும் சில நண்பர்களோடு உதவியோடு. இவர்களிருவரும் தங்கள் காதல் கதைகளையும் இசையயும் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த ஒரு வாரக்கதைதான் இத்திரைப்படம்.
.
ஒரு புரிந்துணர்வுக்காக இதை சொல்கிறேன். இந்த திரைப்படம் மட்டும் இன்னும் கொஞ்சம் மெலோடிராமாவாக இருந்திருந்தால் இப்படம் இயக்குனர் கீஸ்லா(வ்)ஸ்கியின் திரைப்படம் என்றே நம்பியிருப்பேன். இசையாலும் உணர்வுகளாலும் நுண்ணுணர்வுகளாலும் காதலாலும் இழைக்கப்பட்டிருக்கும் படமிது. குறிப்பாக காதல்/காமம்-நட்பு/காதல் இரண்டிற்குமான மிக மெல்லிய இழை நுட்பமாய் செதுக்கப்பட்டிருக்கிறது.
.
படம் முழுக்க இசைதான் இருக்கிறது. இந்த படத்தின் அவன் - அவள் இருவருமே உண்மையாகவே இசைக் கலைஞர்கள். அவன் Glen Hansard. அவள் Markéta Irglová. இரண்டு இசைக்கலைஞர்களை நடிக்கவைத்திருக்கிறார் இயக்குனர். இந்த திரைப்படத்தின் இசையும் பாடல்களும் இவர்களிருவரின் படைப்புதான். இவர்கள் இணைந்து உருவாக்கிய பாடல்களுள் ஒன்றான Falling Slowly பாடலுக்கு சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. கிராமி விருதுக்கான பரிந்துரையிலும் இடம் பெற்றது.
.
பார்க்கிறத் திரைப்படங்களுள் 90% திரைப்படங்களை மீண்டும் பார்க்க விரும்புவதில்லை. இந்த திரைப்படம் அந்த வகையில் சேராது. இன்னும் இரண்டு முறையாவது பார்க்க விரும்புகிறேன். இந்த திரைப்படமும் இத்திரைப்படத்தின் இசையும் ஒரு நல்ல வெள்ளி அல்லது சனி மாலையை உள்ளார்ந்து மகிழ்விக்கக்கூடியது.
.
Once (2006) - நல்லிசையும் மென்காதலும்
.

ONCE (2006) - TRAILER


25.10.2011

4 comments:

சித்தார்த். வெ said...

நல்ல பதிவு சரவணன். செம படம் இது. திரும்ப பழைய ஞாபகங்கள கிளத்தி விட்டதுக்கு நன்றி. :)

உலக சினிமா ரசிகன் said...

தங்களுக்கும்...
தங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
நீங்கள் அறிமுகம் செய்த இப்படம் எனக்கு ஆகச்சிறந்த தீபாவளி பரிசு.

சி.பி.செந்தில்குமார் said...

குட் ஒன், பார்த்துடலாம்!!

இரா.தீபக் / R.Deepak said...

நல்ல அறிமுகம்.படம் பார்க்கணும். பொதுவாக பிரிட்டன் மக்களுக்கு இசை மேல் காதல் அதிகம்.

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..