Wednesday, August 31, 2011

மங்காத்தா - திரைவிமர்சனம்


தல அஜித்தின் ஐம்பதாவது திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியிருக்கிறது. கூடவே குறித்த நேரத்தில் வெளியாகுமா, எந்த பேனரில் வெளியாகும் மாதிரி அரசல்/புரசல்.
படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்திருக்கிறதா என்றால், ஒரு மாஸ் ஹீரோவின் ஐம்பதாவது/நூறாவது திரைப்படம் எப்படியிருக்கவேண்டுமோ அப்படி கச்சிதமாய் அமைந்து எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.
.

20-20 பைனல்ஸ் ஒட்டி, வெளிவரப்போகும் ஐநூறு கோடி ரூபாய் பணத்தை ஒரு குழு (வைபவ், பிரேம்ஜி மற்றும் இரண்டு பேர்) கொள்ளையடிக்க திட்டமிடுகிறது. நாடெங்கிளுமான கிரிக்கெட் சூதாட்டங்களை கட்டுப்படுத்த ஒரு தனிப்பிரிவு மத்திய அரசால் நியமிக்கப்படுகிறது. அதன் முதன்மை அதிகாரி அர்ஜுன். இந்த நேரத்தில் கொள்ளையடிக்கும் குழுவில் அஜித் வந்து சேர்ந்து, ஒரு திட்டம் மூலம் ஐநூறு கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். இதன் பின் கொள்ளையடித்த குழுவில் இருப்பவர்களின் பேராசை, அர்ஜுனின் துரத்தல்கள், கடைசியில் பணம் என்னவானது என்பது திரைப்படம்.
.
அஜித்தின் இதுவரையிலான கதாப்பாத்திரங்களை விட வேறுபட்ட கதாப்பாத்திரம் இது. வெள்ளை முடி தலை, திரிஷாவின் அப்பா வயதை கேட்கும்போது, "இந்த மே வந்தால் நாற்பது" என்கிற பதில், ரொம்ப பேராசைக்காரன்/கெட்டவன் கதாப்பாத்திரம் அஜித்தினுடையது. கொள்ளையடிப்பது சார்ந்து ஹாலிவுட்டில் நிறைய திரைப்படங்கள் ஏற்கனவே வெளியாகியிருக்கிறது. எனவே தமிழில் படம் அப்படியொரு படம் செய்வது கடினமல்ல. நிறைய ரெபரென்ஸ் இருக்கு. ஆனால் இந்த விளையாட்டை அஜித் அட்டகாசமாக மாற்றுகிறார். அஜித்தின் கதாப்பாத்திரம் இரண்டாம் பாதியில் show stealer. அப்படியே தூக்கி நிறுத்துகிறார்.


.
யுவனின் இசையில் மங்காத்தா தீம் இசை செம. ஆனால் வெங்கட் பிரபு - யுவன் கூட்டணியின் வழக்கமான அந்த பாடல்கள், மங்காத்தாவில் இல்லை.வெங்கட் பிரபு அஜீத்துக்காக படம் செய்திருக்கிறார் என்று புரிகிறது.
.
நிறைய தோல்விகள் தந்தாலும் அஜித்தின் ஒப்பனிங் எப்போதும் போல செம. வீட்டு பக்கம் இருக்கும் ஒரு காம்ப்ளெக்ஸ் தியேட்டரின் இன்றைய இருபத்தியெட்டு ஷோக்களும் ஹவுஸ்புல், புக்கிங் தொடங்கிய சில மணிகளில். காலை ஐந்து மணிக்கு அப்படியொரு கூட்டம் அப்படியொரு ஆரவாரம். அஜித்தின் ஒப்பனிங் காட்சிகளில் அப்படியொரு ஆர்ப்பாட்டம். அதே மாதிரி அஜித் ரசிகர்களுக்கான காட்சிகள் நிறைய. அதுவும் படம் முடிந்தபின் பெயர்கள் ஓடும் போது வரும் காட்சிகளை தவறவிட்டுவிடாதீர்கள். அஜித்தின் ஆட்டம் செம அட்டகாசம்.
.
படத்தின் குறைகள் இருக்கு. கொஞ்சம் நீளமான முதல் பாதி, லாஜிக், ஆங்காங்கே வரும் தொய்வுகள். ஆனாலும் படம் எண்டடெயினர். சாதாரண ரசிகர்களுக்கு எண்டடெயினர். அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டாமான தல தீபாவளி.
.
மங்காத்தா - மங்கத்தா டா




31.08.2011

10 comments:

MSK / Saravana said...

ரொம்ப நாள் கழிச்சி ஒரு திரைப்படம் முடிந்து எல்லாரும் வெளியே வரும்போது ஆரவாரத்தோடு விசில் சத்தங்களோடு ரசிகர்கள் வெளிவருவது மங்காத்தாவில் தான்..

MSK / Saravana said...

அஞ்சலி கொள்ளையழகு என்பதை சொல்ல மறந்துட்டேன்.. இப்ப சொல்லிக்கறேன்.. :)

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Thala always rocks

gopinath said...

watchable once... didn't meet expectations.. Ajith did his part well

vivek kayamozhi said...

தல நீ ஜெயிச்சிட்ட...!!தல நீ ஜெயிச்சிட்ட...!!! படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.... மறுபடியும் கியூ வில் நிற்கிறார்கள்.... மன்றங்களை களைத்தாலும் ரசிகர்கள் உன்னுடன்தான்....
ஓபனிங் பற்றி எழுதிய உங்களுக்கு நன்றி.... அஜித் ஓபனிங் கிங் என்பது மறுபடியும் prove ஆகியுள்ளது....

N.H.பிரசாத் said...

Ajith Rocks. Thala pola Varuma?

guru said...

மங்காத்தா டா..
படம் முடித்து வரும்போது எல்லோர் முகத்திலும் ஒரு திருப்தி தெரிந்தது...
ajithkumar always rocks...

ரதியழகன் said...

தல ஆட்டத்த பத்தி எதுவுமே சொல்லலையே?

நீங்களும் ரொம்ப நாள் கழிச்சி எழுதிறிங்க... என்ன ஆச்சு?

billa said...

anbulla thala nr real hero ur flim mangatha super all the best thala mangatha da........

Kumaran said...

படம் பார்த்துவிட்டேன்.நல்லா இருக்கு.

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..