Saturday, July 23, 2011

முனி 2 : காஞ்சனா - திரைவிமர்சனம்


கிட்டத்தட்ட ஒரு மாதங்களுக்கும் மேலாய் இணைய இணைப்பு இல்லாமல் போனதில், இந்த பக்கமே வரமுடியவில்லை. Now, Am back :)
.
முனி முதல் பாகம் நீங்கள் பார்த்திருக்கக்கூடும். அதன் தொடர்ச்சியாக அதே மாதிரி, ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வந்திருக்கும் மற்றொரு படமிது. உச்சாப் போக கூட தன் அம்மாவை துணைக்குக் கூப்பிடும் பேய் பயம் மிக்க லாரன்ஸ். வீட்டிற்க்குள் வந்து விடும் ஒரு பேய். பேயின் பிளாஷ்பேக். அதன் தீர்க்கவேண்டிய வஞ்சம். லாரன்ஸின் உடம்பில் புகுந்து வஞ்சத்தை தீர்த்துக்கொள்ளும் பேய். அதே முனி கதைதான். இம்முறை வேறொரு பேய்(கள்). வேறொரு பிளாஷ்பேக். அவ்ளோதான் வித்தியாசம்.
.

நாயகனின் அறிமுகம், சண்டை, குத்துப்பாடல், அவரின் குடும்பம், பேய் பயம், நாயகி, பின்பு பேய் உள்ளே வர, கலாட்டாக்கள். அதுவும் அது என்னவென்றே தெரியாத போது, அதை ஆணாத்திக்கத்தனமாய் லாரன்சும், அவரின் அண்ணன் ஸ்ரீமானும் சமாளிக்காமல், அவ்வீட்டின் பெண்களான நாயகனின் அம்மா கோவை சரளாவும், அண்ணி பிரியதர்ஷினியும், இவர்களிடத்து எதையும் சொல்லாமல் தனியாய் சமாளிக்கிறார்கள். லாரன்ஸின் உதவும் மனப்பான்மையை கொண்டே கதை செய்திருக்கிறார். ஊனமுற்றோர், திருநங்கை இவர்களிடத்து அன்பும் அரவணைப்பும் கொள்ளவேண்டுமேன்பதையே கதையாக்கி இருக்கிறார். லாரன்ஸின் நல்ல மனதிற்கும், சமூக எண்ணங்களுக்காகவும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
.
இப்படம் ஒரு சாதாரண தமிழ்ப்படம்தான். ஹீரோ இன்ட்ரோ, ஒப்பனிங் ஃபைட், ஒப்பனிங் சாங், நாயகி, நாயகியோடு டூயட் மற்றும் குத்துப் பாடல் இவை எல்லாம் அடங்கிய ஒரு பேய் படம் :). நமது தமிழ் சினிமாவை பொறுத்தவரை பேய் படங்களுக்கென்று ஒரு தனி மவுசு இருக்கிறது. பேய் படங்களின் பகீர் நொடிகளை மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள். ஆனால் யாரும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதை இப்படம் நன்றாகவே உணர்த்தியது. இப்படத்தின் இடைவேளை காட்சியில், எனக்கு பின்னால் அமர்ந்திருந்த பெண்கள் ரொம்பவே பயந்துவிட்டார்கள், But they enjoyed that thrilling moment. வருடத்திற்கு ஐந்து அல்லது பத்து நல்ல பேய் படங்கள் வந்தால் நன்றாக இருக்கும். ஈரம் திரைப்படம் மாதிரி ரொம்பவே நேர்த்தியான ஸ்டைலிஷான படமில்லை இது. ஒரு சாதாரண படம்தான் இது. ஆனால் இப்படமும் சில பகீர் நொடிகளை வைத்திருக்கிறது. (நிறைய ஆங்கில/கொரியன் பேய் படங்களை பார்த்திருக்கிறவர்களுக்கு ரொம்ப பகீர் என்றெல்லாம் இருக்காது.) பேய் கலாட்டாக்களை வைத்திருக்கிறது.
.
முனி மாதிரியே இப்படத்திலும் பேய் கதாப்பாத்திரத்தில் ஒரு சிறப்பு நடிகர் நடித்திருக்கிறார். அவரின் நடிப்புக்கும் வாழ்த்துக்கள். கோவை சரளா, பிரியதர்ஷினி, ஸ்ரீமான் நடிப்பும் அசத்தல். இம்மூவருக்கும் ஒவ்வொரு குணம். பேயை பார்த்த மறு நொடி, காலை ஐந்து மணி விமானம் பிடித்து பெங்களூரு செல்லும் ஸ்ரீமான், எப்போதுமே பதுங்கியபடியே இருப்பதற்கெல்லாம், நிறைய கமெண்ட்ஸ் அடித்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தோம். கோவை சரளாவும் பிரியதர்ஷினியும் எல்லாவற்றையும் சமாளிப்பதற்குள் ஐயோ பாவம்.
.
ஆரம்ப நாயக கலாட்டாக்களுக்குப் பின் வரும் இடைவேளை வரையிலான முதல் பாதி நன்றாக இருக்கு. இரண்டாம் பாதி பிளாஷ்பேக் தவிர்த்து, பழிவாங்கும் படலம் எல்லாம், ரொம்பபபபபபபப் பழசு. முடியல. அதுவும் கிளைமாக்ஸ் ராமநாராயணன் படம். இந்து மதத்தில் துர்க்கை, அம்மன் போன்ற சாமிகள் எல்லாம் இல்லையென்றால், தமிழ் சினிமா பேய் படங்களுக்கு கிளைமாக்சே இருக்காது. :) அதுவும் இந்த பேய்கள் எல்லாம் கிராபிக்ஸ், ஸ்பெஷல் எபெக்ட்ஸ், சவுண்ட் எபெக்ட்ஸ் விரும்பும் பேய்கள் போல. மேலும் படத்தில அநியாயத்துக்கு சத்தம் அதிகம். காதுகள் செவிடாகிடும் போல. இல்லை தியேட்டரில் அதிக சத்தம் வைத்துவிட்டார்களா என்றும் தெரியவில்லை.
.
முன்னரே சொன்னமாதிரி ஒரு சராசரி தமிழ் பேய் படம். ஒரு சாதாரண சராசரி படத்தில குறைகள் எல்லாம் சொல்ல விரும்பல. குறிப்பா வீட்டில் எல்லாரும் பேசிக்கொள்ளும் மொழி. ஆனால் நமது இளைய தளபதி விஜய் நடித்திருந்தால், விஜயும் பேயும் நடன இயக்குனரும் ஒரு பாடலுக்கு முட்டியை மடக்கி மடக்கி ஒரு குத்தாட்டம் போட்டிருப்பார்கள். அந்த அளவுக்கு விபரீதம் நடக்கவில்லை. வீட்டில சும்மா இருந்தால் ஒரு எட்டு போய் இந்த முனி 2: காஞ்சனாவை பாருங்கள். ஆனால் காதில் கொஞ்சம் பஞ்சோடு செல்லுங்கள். :) முனி 3 வருமென்று கடைசியில் சொல்கிறார்கள்.
.
முனி 2 : காஞ்சனா - சில பகீர் நொடிகளை கொண்ட, ஒரு சிரிப்பு பேய் படம்.
.

23.07.2011

5 comments:

sedu said...

தரமான விமர்சனம்..
வாழ்த்துக்கள்..

sedu said...

தரமான விமர்சனம்..
வாழ்த்துக்கள்..

MSK / Saravana said...

நேற்று சில நண்பர்களுக்காக இரண்டாம் முறையாக இத்திரைப்படத்திற்கு சென்றிருந்தேன். முன்தினம் பார்த்த தியேட்டரில் நேற்று ஹவுஸ்புல். வேறொரு தியேட்டருக்கு சென்றால் அங்கும் ஹவுஸ்புல். ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி பார்க்கவேண்டியதாயிற்று.

இரண்டாம் முறை பார்த்ததில் சொல்கிறேன். முக்கால்வாசி திரைப்படம் complete entertainer. (தியேட்டரில் பார்த்தால் மட்டும்). ஒரு பேய்ப் படத்தை இவ்வளவு தூரம் சிரித்துக்கொண்டே பார்ப்பதும் நன்றாகத்தான் இருக்கிறது. கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் அடிக்கும் கூத்துக்கள் வெடிசிரிப்பு.

MSK / Saravana said...

இத்திரைப்படத்திற்கான மிகச்சரியான விமர்சனம் படிக்க..

http://www.tamilcinema.com/CINENEWS/REVIEW/2011/kanchana.asp

அசோக்ப்ரியன் said...

Climax Romba boew boss......

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..