Sunday, June 12, 2011

X-Men: First Class (2011) - X-Men திரைப்படங்களுள் உச்சம்


Director : Matthew Vaughn
IMDB Rating : 8.2/10
Rotten Tomatoes : 87% Fresh
.

இந்த 2011 வருடத்தின் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களுள் ஒன்றான X-Men : First Class கடந்தவாரமே வெளியாகிவிட்ட நிலையில் இந்த வாரம்தான் இந்தியாவில் வெளியாகியிருக்கிறது. அதிலும் Kick Ass (2010) திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் Matthew Vaughn இயக்கத்தில் இப்படம் வருவதாய் தெரிந்தவுடன் எனது எதிர்பார்ப்பு இரண்டு மடங்கனாது. ஆனால் X-Men நாயகர்களை நவீன வடிவத்தில் சித்தரிப்பார் (தனது கடந்த படமான Kick Ass (2010) மாதிரி, Nolan-ன் Batman மாதிரி மற்றும் Zack Zynder-ன் Watchmen (2009) மாதிரி) என்று நினைத்திருந்தேன், ட்ரைலர்கள் பார்த்தபோதே அப்படியில்லை என்பது தெரிந்துவிட்டது. ஆனால் அந்த இருமடங்கு எதிர்ப்பார்ப்பையும் அனாசயமாக பூர்த்தி செய்திருக்கிறது இத்திரைப்படம். படம் பட்டாசு.
.

எனக்கு X-Men திரைப்படங்களின் Mutation Concept மிகவும் பிடிக்கும். மட்டுமல்லாது இப்போதுமே கைவிரல்களை மடக்கி, வோல்வோரின் போல அலுமான்டியம் கத்திகள் விரலிடிக்கில் வருவதாய் கற்பனை செய்வது, ஒரு பழக்கமாகவே இருக்கிறது எனக்கு. X-Men வரிசை திரைப்படங்களுள் இது ஐந்தாவது படம். ஆனால் இது அவற்றின் sequel அல்ல prequel. அதிலும் குறிப்பாக Prof.X மற்றும் Magneto வின் ஆரம்ப கால வாழ்க்கையை விவரிக்கிறது இத்திரைப்படம்.
.
போலந்தில் நாஜிக்களின் பிடியில் தன் குடும்பத்தை தொலைக்கும், காந்த சக்தியிருக்கும் சிறுவன், Erik (பின்னாளில் Magneto). மற்றவர்கள் மனதை படிக்கும் கட்டுபடுத்தும் சக்தியிருக்கும் Charles Xavier (பின்னாளில் Prof.X) எனும் சிறுவனின் வீட்டில் வந்து அடைக்கலமாகும் உருமாறும் Raven எனும் சிறுமி (பின்னாளில் Mystique). இப்படியாக சிறுவர்/சிறுமியறாய் இருக்கும் காலத்தில் படம் துவங்குகிறது. அவர்கள் தங்களது சக்தியை எவ்வாறு புரிந்து கொண்டார்கள், எப்படி பயன்படுத்தினார்கள், எவ்வாறு ஒன்று சேர்ந்தார்கள், Charles Xavier(Prof.X)-ம் Erik(Magneto)-ம் எவ்வாறு நண்பர்கள் ஆனார்கள் பின் எவ்வாறு எதிரிகளானார்கள் என்பதையெல்லாம் விறுவிறுப்பாக சொல்கிறது இத்திரைப்படம்.
.
Erik (Magneto) தாயை கொன்றவன்தான் படத்தின் வில்லன் (ஷா). அறுபதுகளில் அமெரிக்காவிற்கும் சோவியத் ரஷ்யாவிற்கும் இடையிலான பனிப்போரை கிளறிவிட்டு மூன்றாம் உலகப்போரை துவக்கி உலகத்தின் சாதாரண மக்களை கொன்றுவிட்டு, Mutant-களின் புது உலகம் படைக்கும் திட்டம் அவனுடையது. (ஹாலிவுட்டில் விறுவிறுப்பான கதையொன்றை தயார் செய்ய ரஷ்யா, வியட்நாம், கியூபா, ஆப்கன் ஆகிய நாடுகளை ஆங்காங்கே தூவிவிட்டால் கதை தயார்:)). இதை தடுத்து நிறுத்தி மக்களுக்கு நம்மை பற்றி புரியவைக்க வேண்டும் என்பது Charles Xavier (Prof.X) விருப்பம். அருகிலிருக்கும் Mutant-களையெல்லாம் தேடிபிடித்து குழு அமைக்கிறார். Erik (Magneto), வில்லனை, தனது தாயின் மரணத்திற்காக பழிவாங்க துடிக்க, இவர்கள் குழுவில் வந்து சேர்கிறான். ஒவ்வொருவரின் திட்டமும் என்ன ஆனது என்பது திரைப்படம்.
.
இதுவரை வந்த X-Men வரிசை திரைப்படங்களுள் இதுதான் உச்சம் என்று தாராளமாய் சொல்லலாம். ஒவ்வொருவரின் அறிமுகம் (வோல்வோரின் கூட ஒரு காட்சியில் வருகிறார்), ஒவ்வொருவரின் சக்தி, ஒவ்வொருக்கும் பின்னாளில் நிலைத்த பெயர் எப்படி வந்தது, X-Men என்ற பெயர் எப்போது வந்தது எல்லாம் படத்தில் வருகிறது. ஒவ்வொன்றும் செம இன்ட்ரெஸ்டிங். மேலும் சண்டைகளின் போது ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கும் செம பதிலடி கொடுக்கும் வகையில் ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு அதீத சக்தியிருக்கிறது. அதுவும் அந்த கிளைமாக்ஸ், STUNNING. கிளைமாக்ஸ் காட்சி எஃபெக்ட்ஸ்களில் புகுந்து விளையாடியிருக்கிறார்கள். நடிகர்களை பொறுத்தவரையில் மூன்று பேர் படத்தை தாங்கியிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு அப்படியொரு ஈடு. Prof.X-ஆக நடித்திருக்கும் James McAvoy, Magneto-ஆக நடித்திருக்கும் Michael Fassbender, ஷா-ஆக நடித்திருக்கும் Kevin Bacon. மூவரும் stealing the show. அதிலும் Magneto-ஆக நடித்திருக்கும் Michael Fassbender செம. படமே அவரில் துவங்கி அவரில்தான் முடிகிறது.
.
இது prequel என்பதனால் இதுவரை வந்த X-Men திரைப்படங்களை கூட நீங்கள் பார்த்திருக்கவேண்டாம். அவ்வளவு ஏன், இத்திரைப்படத்தை பார்ப்பதற்கு நீங்கள் X-Men ரசிகராக இருக்கவேண்டிய அவசியம் கூட இல்லை. ஒரு விறுவிறுப்பான அதிரடியான எஃபெக்ஸ் நிறைந்த ஹாலிவுட் திரைப்படம் பார்க்கும் ஆர்வமிருந்தாலே போதும். இந்த படம் உங்களுக்காகவே. A Must Watch.
.
X-Men: First Class (2011)- இப்படம் First Class With Distinction :)

இத்திரைப்படத்தை முதல் படமாகக் கொண்டு இன்னும் இரண்டு படங்கள் வரப்போகிறதாம். ஒரு புது X-Men TRILOGY.
.
TRAILER




12.06.2011

15 comments:

Baby ஆனந்தன் said...

கைல சுத்தமா காசு இல்ல. சரி படத்த அடுத்த மாசம் டவுண்லோட் பண்ணி பாத்துக்கலாம்னு அமைதியா இருந்தா ஆளாளுக்கு டெம்ப்ட் பண்ணிவிடுறீங்க... ம்ம்ம்... நைட்டுக்கு புக் பண்ணிட்டேன் :-)

MSK / Saravana said...

@Baby ஆனந்தன் : பார்க்க வேண்டிய படம்தான் தல. செம ஆக்சன். செம படம். :)

sharf said...

x- men trilogy is always superb இதற்கு x- men the begining என்று வைத்திருக்கலாம்

சி.பி.செந்தில்குமார் said...

நீங்களும் ஸ்பீடு தான்

அனாமிகா துவாரகன் said...

/வோல்வோரின் போல அலுமான்டியம் கத்திகள் விரலிடிக்கில் வருவதாய் கற்பனை செய்வது, ஒரு பழக்கமாகவே இருக்கிறது //

ஹா ஹா. அதுவும் ரொம்பவே எரிச்சல் படுத்தும் பதிவுகளை எழுதும் பதிவர்கள் பக்கத்தில் இருந்தால் ஒரு குத்து குத்தலாமே என்றும் தோன்ற வேணுமே?

கடைசியாக வந்த வொல்வரினில் ஜக்மென் கத்தியதைப் பார்த்த டென்சனில் படம் பாக்கவே மாட்டேன் என்று இருந்தேன், அப்புறம் இந்தவாட்டி கத்த மாட்டாருன்னு நினைச்சு - ஸ்ரெஸ்ரிலீஃப்னு இதைப் பார்க்கப் போனா ஜக்மென் வந்தது நாலே நாலு செக்கன். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

MSK / Saravana said...

@sharf : நன்றி :)

@சி.பி.செந்தில்குமார்: நன்றி :)

@அனாமிகா துவாரகன்: யாரையும் குத்தனும்ன்னு இதுவரை ஐடியா இல்லை.. உங்கள யாராச்சும் எரிச்சல் படுத்தற மாதிரி எழுதறாங்களா? :))
நன்றி :)

கொழந்த said...

பாஸ்...எப்டி இருக்கீங்க..

எனக்கு முதல் பாகம் மட்டும் கொஞ்சமே கொஞ்சம் பிடிச்சது...அப்பறம் வரவர காமெடி படம் மாதிரி ஆகிப்போச்சு.....இந்த படத்துக்கு ஆளாளுக்கு நல்லாயிருக்குன்னு சொல்றீங்க.....ம்..

MSK / Saravana said...

@கொழந்த : நான் நல்லா இருக்கேன் பாஸ்.. நீங்கதான் நம்ம கடை பக்கம் வரமாட்டறீங்க.. :)

இதுவரை வந்த நான்கு X-Men வரிசை திரைப்படங்களில் ஒன்றுகூட எனக்கு பிடித்தமான படம் கிடையாது. அந்த mutation concept, ஒவ்வொருக்கும் ஒவ்வொரு சக்தி என்கிற கற்பனை மட்டும் பிடிக்கும்..

ஆனால் எனக்கு இந்த படம் பிடித்திருந்தது. உங்களுக்கு ஒரு பக்கா action/adventure/fantasy ஹாலிவுட் படம் பார்க்கும் விருப்பமிருந்தால் இந்த படம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.. :)

நன்றி..

அனாமிகா துவாரகன் said...

//உங்கள யாராச்சும் எரிச்சல் படுத்தற மாதிரி எழுதறாங்களா? :))//
Too many there! (You aren't one by the way)

கொழந்த said...

// நான் நல்லா இருக்கேன் பாஸ்.. நீங்கதான் நம்ம கடை பக்கம் வரமாட்டறீங்க //

எப்பிடியோ விட்டுப்போச்சு....ஆரண்ய காண்டம் விமர்சனம் பாத்தா பிறகுதான்....சட்டுன்னு வந்திச்சு...செம விமர்சனம்....படம் என்னும் பாக்கல...Guy Ritchie பேர கெடுக்காம இருந்தா சரி..

கருந்தேள் கண்ணாயிரம் said...

ஆக்சுவலா, இந்தப் படம் இன்னும் இங்கன ஓடிக்கினு கீது. கட்டாயம் பார்த்துப்புடுவேன். எனக்கு மொதோ ரெண்டு பாகம் ரொம்பப் புடிக்குமாக்கும். அப்புறம், அது என்னாது வாட்ச்மென் படத்தை இங்க சொல்லிக்கினு? அத்தை( அதை என்று பொருள் கொள்க) சத்யம்ல நைட்டு பார்த்துபுட்டு, வந்த வெறில, பைன்ட் பைன்ட்ஆ பீரு குடிச்சப்புறம் தான் சரியாச்சுவே . . .இன்னிக்கும் அதை ஆராவது புடிக்கும்னு சொல்லிபுட்டா, அருவாளை எடுத்துப்புடுவேன் நானு. . அக்காங் . .

MSK / Saravana said...

@அனாமிகா துவாரகன் : நான் இல்லைன்னு சொன்னதுக்கு ரொம்ப நன்றி :)


@கொழந்த : Guy Ritchie படம் அளவுக்கு இருக்காது.. அதில் ஒரு 25% இருக்கும்.. பதிவில் 50% சொல்லிட்டேன்.. கொஞ்சம் யோசிச்சி பார்த்ததில 25% குறைச்சிட்டேன்.. :))


@கருந்தேள் கண்ணாயிரம் : இந்த படம் உங்களுக்கு பிடிக்கும். அது நிச்சயம்..
அப்பறம் வாட்ச்மென் எனக்கு பிடிச்சிருந்தது.. ஆனா நிறைய பேருக்கு அது பிடிக்கலன்னும் தெரியும்.. :))

d said...

common format of getting posts just only from a particular category is

http://blogname.blogspot.com/feeds/posts/default/-/labelname?max-results=500

for example i add the following in my google reader...

http://thiruttusavi.blogspot.com/feeds/posts/default/-/நீட்ஷே?max-results=500

http://thiruttusavi.blogspot.com/feeds/posts/default/-/தத்துவம்?max-results=500

if the label name appearing in address bar(after clicking label name on side bar) has only one word use it in the above common format as it is...if the label name appearing in adres bar has more than one word replace space between words by %20

for example if one of your label is philosophers i like with spaces between them(in address bar after clicking it in side bar)
then common format is

http://thiruttusavi.blogspot.com/feeds/posts/default/-/philosophers%20i%20like?max-results=500

rajan said...

ரொம்ப நல்லா இருக்கு

jimmy said...

Perfect piece of work you have done, this internet site is really cool with great information.
San Diego Home Security

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..