எது தர்மம்
எது தேவையோ அதுவே தர்மம்.
.
வெகுகாலமாய் நான் மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருந்த இத்திரைப்படம் இப்போது ஒருவழியாய் வெளிவந்துவிட்டது. கடந்த வருடம், நியூயார்க்கில் நடந்த South Asian International Film Festival (SAIFF)-ல் Grand Jury பரிசை தட்டிய திரைப்படம். இதுவரை வேறு எந்த தமிழ் திரைப்படமும் உலக அரங்கில், உலக திரைப்பட விழாக்களில் Grand Jury பரிசையெல்லாம் தட்டியதாக தெரியவில்லை. இப்படத்தின் இயக்குனர் தியாகராஜா குமாரராஜா. ஓரம்போ (ஆட்டோ) திரைப்படத்தின் வசனம் இவருடையதுதான். இவர் இயக்கத்தில் வரும் முதல் திரைப்படமிது.
.
மிகவும் யதார்த்தமாய் நிழல் உலகத்தை படமாக்கியது செல்வராகவனின் புதுப்பேட்டை படம்தான். அது யதார்த்தமான படம். ஆனால் இன்னும் பற்பல விதமாய் நிழல் உலகை திரையில் காட்ட உலகமெங்குமிருக்கும் இயக்குனர்களுக்கு ஆவல் உண்டு. Martin Scorsese, Quentin Tarantino, Guy Ritchie, Takeshi Kitano, என நிறைய இயக்குனர்களை உதாரணமாய் சொல்லலாம்.
.
இயக்குனர் Guy Ritchie பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். அவரின் படங்களை பார்த்திருப்பீர்கள். நிழல் உலக கதையை வித்தியாசமாய் தருபவர். A comical approach of portraying gangsters, gangster worlds; with some comedy/cruel comedy; அதான் அவரின் ஸ்டைல். ஒரு குறிப்பிட்ட பொருளுக்காக நாலைந்து குழுக்கள் மோதிக்கொள்ளும். அப்பொருள் நழுவியபடியே இருக்கும். அதேப்போல் ஒரு கதை, அதே மாதிரியான ஸ்டைலில் இப்போது தமிழில் வந்திருக்கிறது.
.
படத்தில் இரண்டு நிழல் உலக குழுக்கள். ஜாக்கி ஷெராப் தலைமையில் ஒன்று. அக்குழுவில் இருக்கிறவன் சம்பத். அக்குழுவில் சப்பையாக இருக்கும் ரவி கிருஷ்ணா, சுப்பு எனும் இளம்பெண் (ஜாக்கி இவளை வலுகட்டாயமாக அப்பெண்ணை வைத்திருக்கிறான்), இவரின் அடியாட்கள்; எதிர் குழு, அதன் தலைவன், அவன் தம்பி, இக்குழுவின் அடியாட்கள்; ஒரு முன்னாள் ஜாமீன், தற்போதய அன்றாடங்காட்சி, அவரின் சிறு மகன். சம்பத்தின் ஒரே ஒரு திட்டம் மற்றும் சம்பத்தின் ஒரே ஒரு வார்த்தையினால், இவர்கள் அனைவரின் வாழ்க்கையெல்லாம் ஒரே நாளில் மொத்தமாய் மாறிவிடுகிறது. ஒருவரையொருவர் கொல்ல திட்டமிடும் ஒரு நாள் கதை இந்த ஆரண்ய காண்டம்.
.
இயக்குனர் Guy Ritchie தமிழிற்கு வந்து படமெடுத்தால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது இத்திரைப்படம். (Guy Ritchie படங்கள் அளவுக்கு இல்லையென்றாலும் அதில் ஒரு ஐம்பது சதவீதம் அளவுக்கு தியாகராஜா குமாரராஜா படமெடுத்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்). நிழல் உலக குழுக்கள், மெல்லிய நகைச்சுவை, குரூரமான நகைச்சுவை, ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தன்மை என பார்த்து பார்த்து செய்திருக்கிறார் இயக்குனர். அவரின் கதைக்கும் திரைக்கதைக்கும் ஒளிப்பதிவும், யுவனின் பின்னணி இசையும் பலம் சேர்த்திருக்கின்றன. அதிலும் ஒளிப்பதிவு அட்டகாசம். பின்னணி இசையில் கூட பகடி இருக்கிறது. ஓரம்போ திரைப்படம் மாதிரியே வசனங்கள் செம. நறுக்கு தெரித்தாற்போல், நகைச்சுவையாய் வசனங்கள் செம.
.
காட்சிகளும் அப்படியே. சம்பத், எதிர்குழு தலையின் பராகிரமங்களை சொல்லிமுடிக்கவும், வந்து டீ வைக்கும் விரல் இல்லாத கை; சுப்புவை மோதுவது போல் உரசிசெல்லும் ஓரம் போ படத்தின் ஆர்யா மற்றும் சன் ஆஃப் கன்'னின் ஆட்டோக்கள். அப்பறம் படம் முழுக்க கெட்ட வார்த்தைகளும், கொஞ்சம் வன்முறையும், ரத்தமும். குறிப்பிட்டு சொல்ல வேண்டியது படத்தின் சிறப்பான கதாப்பாத்திர தேர்வு பற்றி. அதிலும் அந்த வாழ்ந்து கெட்ட ஜமீன், அவரின் பையன் இருவரும் அசத்துகிறார்கள்.
.
மேலும் படத்தில் சில மாற்றங்கள் (compromises) செய்திருக்கிறார்கள் போல. சுப்பு இறப்பது போல் ஒரு காட்சி ட்ரைலரில் வரும். படத்தில் அப்படியல்ல. படத்தில் சில குறைகள் இருக்கு. சம்பத், ஓடிக்கொண்டிருக்கும் போது, சம்பத் கதை சொல்லி போலிருப்பது, சில கிளிஷேக்கள், கடைசியில் "சுபம்" மாதிரியான சில முடிவுகள் (kind of hero wins), என சில குறைகள் இருக்கு. ஆனால் தியாகராஜா குமாரராஜாவின் முதல் படம்தானே. பின்னாளில் இவரிடம் சில நல்ல படங்களை எதிர்பார்த்து, இப்படத்தின் சில குறைகளை கொஞ்சம் கண்டுகொள்ளாமல் விடலாம். :)
படக்குழுவினற்க்கும், தயாரிப்பாளர் S.P.சரணுக்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
.
ஆரண்ய காண்டம் - ஆரண்ய காண்டமேதான்.
.
ஆரண்ய காண்டம் - ட்ரைலர்
11.06.2011





13 comments:
//மிகவும் யதார்த்தமாய் நிழல் உலகத்தை படமாக்கியது செல்வராகவனின் புதுப்பேட்டை படம்தான். அது யதார்த்தமான படம்.//
செல்வாவின் படங்களிலேயே அதுதான் டாப் என்பது என் எண்ணம்.
கிங் விஸ்வா
எக்ஸ் மென் - ஃபர்ஸ்ட் கிளாஸ் 2011 - விமர்சனம்
படக்குழுவினற்க்கும், தயாரிப்பாளர் S.P.சரணுக்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
@King Viswa : செல்வாவின் எல்லா படங்களுமே எனக்கு மிகவும் பிடித்தமானவை.. எல்லாமே டாப் என்பது என் எண்ணம்.. :)
நன்றி தல..
பின்னணி இசையில் உள்ள பகடி என்ன...
நான்னறிந்து பின்னணி இசை நல்ல கட்டுடைப்பு...
ஆ. காண்டம், அத்தனை பேசும் பாராட்டி புட்டாங்க. . நான் இத்தையும் பார்க்கல. இந்த வீக்கெண்டு இதுதான் வேலை. பார்த்துபுட்டு வாரேன். ஆனால், ரெண்டு வருஷம் முன்னால, இத்தோட போஸ்டரை எப்ப பார்த்தேனோ, அப்பவே இந்தப் படத்தைப் பார்க்கனும்னு முடிவு பண்ணிட்டேன் :-)
@ரதியழகன் : வன்முறை காட்சியில் ரொமாண்டிக் இசை பிண்ணனியிசை என்பதைதான் நான் பகடி குறிப்பிட்டிருக்கிறேன்.
இதை இப்போது தெரிந்தே செய்கிறார்கள். Kick Ass (2010) என்றொரு படம், அதன் ரத்தம் தெறிக்கும் உச்சக்கட்ட வன்முறை காட்சியில் பிண்னணியிசையில் “ஹல்லேலூயா”.. இன்னுமொரு படத்தில் படுக்கையறை காட்சியில் இதே போல் மதம் சார்ந்த பாடலொன்றை பிண்னணியிசையாக வைந்திருந்தார்கள். இதை தெரிந்தேதான் செய்கிறார்கள்..
for your reference:
http://www.thacinema.com/2010/07/kick-ass-2010.html
@கருந்தேள் கண்ணாயிரம் : தல, ஆரண்யகாண்டம் உலகத்தரமான படம்ன்னு சொல்லமாட்டேன்.. ஆனா நல்ல படம்.. சில உடைப்புகளை நிகழ்த்தியிருக்கு (”உங்களால முடியலன்னா என்னை ஏன் அடிக்கறீங்க” மாதிரி) + ஸ்டைல்.. அதற்க்காக எனது ஆதரவு.. பின்னாளில் இவரிடம் இருந்து நல்ல படங்கள் வரக்கூடுமே..
உங்கள் எதிர்பார்ப்பை கொஞ்சம் குறைத்துக் கொண்டு செல்லுங்கள்.. :)
Kick Ass பார்த்துள்ள்ளேன்...
“இன்னுமொரு படத்தில் படுக்கையறை காட்சியில் இதே போல் மதம் சார்ந்த பாடலொன்றை பிண்னணியிசையாக வைந்திருந்தார்கள்.” அது இது தானே...
http://www.hindunet.org/anti_defamation/eyes/
அய்யா வட கடச்சிருச்சே...
http://www.backgroundscore.com/2011/06/aaranya-kaandam-background-score.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+BackgroundScore+%28Background+Score%29
@ரதியழகன் : Antichrist திரைப்படம்ன்னு நெனக்கறேன்.. சரியா ஞாபகமில்லை..
பின்னணியிசை சுட்டிக்கு மிக்க நன்றி.. :)
ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம இந்தப் படத்துக்குப் போனேன். ஆனா, சத்தியமா, என்னை ஒரு ஆட்டு ஆட்டிருச்சி இந்தப்படம். அருமையான படமாக்கம். இசை, டாப்பு. வசனங்கள எப்புடி பாராட்டுரதுன்னு தெரியல. ஹேட்ஸ் ஆஃப் ! இதை உலகத்தரமான படம்னு சொல்லமாட்டீங்களா? பிச்சிப்புடுவேன் .. . இது கட்டாயம் ஒரு உலகப்படம் தான். இதுல வர்ற நுண்ணிய அனாலிசிஸ் - லைஃப் பத்தி - அது மட்டுமே போதும் இது உலகப்படம்னு சொல்ல. ஆனா இதுக்கு வெறும் 45 மார்க் குடுத்துருக்கு விகடன். அதுக்கு காரசாரமா ஒரு கமென்ட் போட்ருக்கேன். அதை பப்ளிஷ் பண்ணமாட்டாங்கன்னு நினைக்கிறேன் :-)
@கருந்தேள்: நெஜமாத்தான் சொல்றீங்களா?? :)
a trick for google reader
சில பிளாகுகளை கூகிள் ரீடரில் add செய்தால் அதில் உள்ள அத்தனை தலைப்புகளையும்(post or essays) கூகிள் ரீடரில் பார்க்க முடியாமல் இருக்கும். 25யில் இருந்து 50 போச்ட் வரை மட்டுமே பார்க்க முடியும். என்ன காரணம் என்று தெரியவில்லை. இதை தவிர்க்க என்னிடம் ஒரு trick உள்ளது. அது இது.
http://www.thacinema.com/
there are totally 126 items in this movie blog...i counted it in its archive..when i diretly add this url it gave me only 50 posts instead of giving total 126 items...
there are two tricks to get more items in google reader from a blog...
after adding a blog in google reader click show details near the blog title appearing in your google reader(left side)...feed url of that blog will appear...for example i clicked show details after adding the above blog in google reader...
feed url appeared is this
http://www.thacinema.com/feeds/posts/deafult
in this feed URL i added ?max-results=500 at the end like this
http://www.thacinema.com/feeds/posts/default?max-results=500
after I added this url newly in add a subscription buttonat left side top once again...in this time i got 86 items instead of total 126 items of that blog in google reader...
My intention is to see all of the post titles(total 126 items) in google reader...so once again i made a change...i changed the word default into summary like this
http://www.thacinema.com/feeds/posts/summary?max-results=500
in this time I got all of the total 126 items of that blog in my google reader...
butt only one problem...as i put the word summary I can see only a small portion of essay only..i cannot see the essay fully in google reader...to read the full portion of the essay i should visit that blog.....
forward this to your friends...d
Post a Comment