Saturday, May 21, 2011

Pirates of the Caribbean: On Stranger Tides (2011) - இளமையின் நீரூற்று

.
IMDB Rating : 7.5/10

நான்கு வருடங்களுக்கு பிறகு, Pirates of the Caribbean நான்காவது பாகம் (On Stranger Tides), இதோ வந்துவிட்டது. POC திரைப்படங்களை அனைவரும் விரும்பக் காரணம், அது ஒரு ஜாலியான சாகசக் கடல் பயணம். Road Trip மாதிரி Sea Trip. POC Series திரைப்படங்கள் சீரியசாக இல்லாமல் ஜாலியான Adventure ஆக இருந்தால்தான் எல்லாருக்கும் பிடிக்கும். இந்த நான்காவது பாகம் அதை சரியாக செய்கிறது. கூடவே real 3D. :))
.

மூன்றாவது பாகம் முடியும் போது, பார்போசாவிடம் தனது Black Pearl கப்பலை இழந்தாலும், ஒரு சிறு படகில், இளமை நீரூற்றை (Fountain of Youth) அடையும் வரைபடத்தோடு, ஜாக் ஸ்பாரோ செல்வதாக முடிந்திருக்கும். இந்த பாகம், இளமை நீரூற்றை அடைய நினைக்கும் இரு குழுக்களும் கூடவே அதை அழிக்க நினைக்கும் ஓர் குழுவுக்குமான போராட்டம் இந்த பாகம்.
.
இந்த படத்தில் பழைய கதாபாத்திரங்கள் மொத்தம் மூன்றுதான். ஜாக் ஸ்பாரோ, பார்போசா, கிப்ஸ் (ஜாக் ஸ்பாரோவின் துணைக் கேப்டன்). எனவே கிட்டத்தட்ட ஒரு புது அத்தியாயத்தை துவக்கியிருக்கிறார்கள். Black Beard (கருந்தாடி) எனும் ஒரு கடற்கொளையன் தனக்கு இறப்பு வரப்போவதை தெரிந்துக்கொண்டு, இளமை நீரூற்றின் நீரை அருந்தி, தனது மரணத்தை வெல்ல நினைக்கிறான். அவனது மகள் Penolope Cruz (ஜாக் ஸ்பாரோ வின் முன்னாள் காதலி). இவர்களுக்கு வழிகாட்டவேண்டிய கட்டாயத்தில் மாட்டிக்கொள்ளும் ஜாக் ஸ்பாரோ. இங்கிலாந்து மன்னரும் அந்த இளமை நீரூற்றை கைப்பற்ற நினைக்கிறார். அவர்கள் படையை தலைமை ஏந்தி நடத்தும் பார்போசா. மற்றும் இளமை நீரூற்றை அழிக்க நினைக்கும் ஸ்பானிய அரசு படை. இந்த மூன்று குழுவின் சாகசப் பயணம் இந்த திரைப்படம்.
.
Johnny Depp-க்கு ஜாக் ஸ்பாரோ கதாப்பாத்திரம் அல்வா. பின்னி பெடலெடுக்கிறார். செம எகத்தாளம். அதே சுறுசுறுப்பு. முதல் காட்சியிலிருந்து, கடைசி காட்சி வரை விளையாடுகிறார். கிட்டத்தட்ட முதல் பாகத்தில் பார்த்த அதே ஜாக் ஸ்பாரோ. இந்த பாகத்தில் நாயகியாய் வந்திருக்கும் Penolope Cruz-யிடம் அந்த இளமை மிஸ்ஸிங். வயதான தோற்ற்றம் வந்திருக்கிறது. ஐந்து வருடங்களுக்கு முன்பு POC-யில் நடித்திருந்தால் செமையா இருந்திருக்கும். இந்த பாகத்தில் கடற்கன்னியர்கள் வேறு வருகிறார்கள். ஆனால் கடற்கன்னியர் அழகானவர்கள், இனிமையானவர்கள், அழகான குரலில் பாடுவார்கள் என்று நான் எண்ணிக்கொண்டிருந்த வேளையில், கூடவே அவர்கள் மனிதர்களை வேட்டையாடுவார்கள், மனிதர்களை தின்றுவிடுவார்கள் என்றெல்லாம் கதை சொல்லியிருக்கிறார்கள். :( ஆனால் கடற்கன்னியர்கள் மிகமிக அழகு. :)))
.
இந்த பாகத்தில் குறிப்பிடத் தகுந்த முக்கியமான நுண்ணரசியல். ஸ்பானிய அரசு படைகளைப்பற்றி. அவர்கள் கிருத்துவர்கள். அக்கடவுளை மட்டுமே தீர்க்கமாக நம்பும் அவர்கள், மற்றவர்களை, மற்ற இனமக்களை மதம் மாற்ற தீவிர முன்னெடுப்பும், மற்றவர்களின் நம்பிக்கைகளை அழிக்கவும் செய்கிறார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது. ஸ்பானியர்கள் தங்கள் கடல் பயணத்தின் போது வந்தடைந்த எல்லா பகுதிகளிலும் இன அழிப்பையும், அவவின மக்களின் கடவுள் மற்றும் மற்ற நம்பிக்கைகளையும் அழித்தனர், எஞ்சிய அம்மக்களை மதம் மாற்றினர் என்பதையும் சொல்லிவிட்டே போகிறது.
.
கூடவே 3D தொழில்நுட்பம் மிக அருமையாக வளர்ந்திருக்கிறது என்பதை இப்படம் உணர்த்துகிறது. எல்லா பொருட்களும் முகத்தின் முன் வருவது என்பததெல்லாம் மலையேறி, உயிர்ப்பா இருக்கிறதுதான் 3D என்பதாக வளர்ந்திருக்கிறது. Being Lively is Real 3D. படத்தின் ஒளிப்பதிவின் தரம் சிறப்பாய் வந்திருக்கிறது. படமாக்கப்பட்ட இடங்கள் ஹவாய் தீவு மற்றும் இன்ன பிற இடங்கள். மிகப்பெரும் காடு நம் கண் முன்னே விரியும் போது ஆச்சர்யப்படுகிறோம். எவ்வளவு அழகானது இவ்வியற்கையென.
.
Pirates of the Caribbean: On Stranger Tides (2011) : ஜாக் ஸ்பாரோவின் அட்டகாசங்களோடு சிறப்பாக வந்திருக்கிறது இந்த ரோலர் கோஸ்டர் கடற்பயணம். நிச்சயம் அடுத்தடுத்த பாகங்கள் வரத்தான் போகின்றன என்பதையும் படம் முடிவில் சொல்கிறது.
.
On Stranger Tides : Youtube Trailer




...
இந்த வருடத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுள் ஒன்று, ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வரும் The Adventures of Tintin அனிமேஷன் திரைப்படம். அதன் ட்ரைலர்.




...
அடுத்தவாரம் (May 26, 2011) வெளியாகப்போகும் Kung Fu Panda 2 ட்ரைலர். திரும்ப திரும்ப பார்க்கத்தூண்டும் செம செம ட்ரைலர். நிச்சயம் படம் பட்டய கிளப்பும். பார்க்கத் தவறாதீர் :))



21.05.2011

11 comments:

King Viswa said...

நண்பரே,
படத்தை ரசித்தீர்கள் என்பது பதிவின் நீளத்திலேயே தெரிகிறது. கிட்ட தட்ட அனைவருக்குமே படம் பிடிக்கும். இன்று மதியம் மூன்றரை மணியில் இருந்தே பைலட் தியேட்டர் அருகில் செம கூட்டம். நான்கு மணி ஷோவுக்கு தான் மக்கள் வெயிட்டிங்.

பை தி வே, அடுத்த மாதம் எக்ஸ் மென் 1st கிளாஸ் வேறு ரிலீஸ் ஆகிறது.

கிங் விஸ்வா

தமிழ் சினிமா உலகம் - ப்ரீஸ்ட் - கல்லறை உலகம் விமர்சனம்

MSK / Saravana said...

@King Viswa : எனக்கு பிடிச்சிருந்தது தல. ஏன்னா POC இரண்டும், POC மூன்றும் கொஞ்சம் ஜாலியான அட்வென்சர் என்ற இடத்தில் இருந்து நகர்ந்து கொஞ்சம் சீரியசான அட்வென்சர் என்ற இடத்துக்கு போயிட்ட மாதிரி ஒரு ஃபீலிங்..

ஆனா இந்த படம் திரும்ப அந்த ஜாலியான அட்வென்சர் என்ற இடத்துக்கு வந்த மாதிரி ஒரு ஃபீலிங். :))

இந்த வருடம் நிறைய sequels/prequels தல. எல்லாத்தையும் பார்த்தாகனும் :)))

நன்றி :)

JZ said...

உங்கள் பதிவே படம் பார்க்கத் தூண்டுகிறது

MSK / Saravana said...

@JZ : படம் பாருங்க.. நன்றி..

Lucky Limat லக்கி லிமட் said...

நான் ஆவலோடு எதிர்பார்க்கும் படம் டிண்டின் ... ட்ரைலர் வந்து விட்டதா நன்றி

பேநா மூடி said...
This comment has been removed by the author.
கருந்தேள் கண்ணாயிரம் said...

மீ ஆல்சோ வெயிட்டிங் பார் பாண்டா கரடி :-) . . அண்ட் டின்டின் :-) . . அண்ட் தி அதர் மூவீஸ் ;-)

MSK / Saravana said...

@Lucky Limat லக்கி லிமட் : இந்த வருடத்தின் மிக எதிர்பார்ப்பு இருக்கிற திரைப்படம் டின்டின் :)


@கருந்தேள் கண்ணாயிரம் : இந்த வருடம் எவ்ளோ படம்.. எல்லாத்தையும் பார்க்கனும் :)

நன்றி..

Softy said...

Do Visit

http://www.verysadhu.blogspot.com/

Softy said...

Do Visit

http://www.verysadhu.blogspot.com/

Softy said...

http://verysadhu.blogspot.com/

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..