Tuesday, May 10, 2011

Black Swan (2010) - நுட்பம் நுண்ணுணர்வு கலை


Direction : Darren Aronofsky
IMDB Rating : 8.4/10
Rotten Tomatoes : 88% Fresh
.

இயக்குனர் Darren Aronofsky தற்போதைய முக்கியமான ஹாலிவுட் இயக்குனர்களில் ஒருவர். இவர் இதுவரை இயக்கியிருக்கும் திரைப்படங்கள் ஐந்து. ஐந்துமே சிறந்தத் திரைப்படங்கள். Pi (1998), Requiem for a Dream (2000), The Fountain (2006), The Wrestler (2008) மற்றும் Black Swan (2010). ஐந்தே படங்கள்தாம். எனவே மொத்தமாய் வாங்கியோ அல்லது தரவிறக்கியோ பார்த்துவிடுங்கள். :)
.

டிஸ்கி: Perfection என்பதற்கு சரியான தமிழ் வார்த்தை எதுவும் தெரியவில்லை என்பதால் நுட்பம் என்ற வார்த்தையை இப்பதிவு முழுதும் பயன்படுத்தப் போகிறேன். கச்சிதம், நுணுக்கம் என்பதை விட நுட்பம் சரியாக இருக்குமென்று தோன்றியது. வேறு நல்ல வார்த்தை இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லவும். பதிவில் மாற்றிவிடுகிறேன்.
.
ஆடல், பாடல், இசை, ஓவியம், இலக்கியம், தற்காப்பு, சினிமா என எத்தனையோ கலைகள் இருக்கின்றன. அதீத நுட்பமான (perfection) ஒன்று கலையாகிவிடுமா? அல்லது நுண்ணுணர்வால் படைக்கப்படும் ஒன்றுதான் கலையாகுமா? அல்லது நுட்பமும் நுண்ணுணர்வும் சரியான சேர்க்கையில் அமைந்தால்தான் கலை சிறப்படையுமா? அல்லது ஒவ்வொரு கலைக்கும் இது மாறுபடுமா? உதாரணத்திற்கு இலக்கியத்தை எடுத்துக்கொள்வோம். நகுலனின் எழுத்துக்கள் நுட்பமானவையா (perfection) அல்லது நுண்ணுணர்வால் ஆனவையா? அதி நுட்பமான சொற்களை கொண்டு ஒரு கவிதையை படைத்திடமுடியுமா? சரி நடனக்கலை, ஓவியக்கலைக்கு வருவோம். நுண்ணுணர்வையும் தாண்டி, நுட்பத்தை (perfection) மட்டும் கைக்கொண்டு ஒரு நல்ல நடனத்தை அல்லது நல்ல ஓவியத்தை படைக்கவே முடியாதா?
.
Obsessive-Compulsive Disorder (OCD). OCD என்பது ஒரு மாதிரியான உளவியல் அவஸ்தை. OCD-யை சில உதாரணங்கள் மூலம் விளக்கலாம். அழுக்காய் இருக்கிறது என்று தொடர்ச்சியாய் சுத்தம் செய்துக்கொண்டேயிருப்பது. கைகளை சுத்தம் செய்துக்கொண்டேயிருப்பது. (OCD - Cleaning). ஒழுங்காக பூட்டவில்லை என்பது மாதிரி ஒழுங்காக செய்யவில்லை என்று நினைத்துக்கொண்டேயிருப்பது. நிக்கோலஸ் கேஜ் நடிப்பில் வந்த Matchstick Men (2003) படத்தில், நிக்கோலஸ் கேஜ் கதாப்பாத்திரம் OCD - Cleaning-ஆல் பாதிக்கப்பட்ட கதாப்பாத்திரம். திரும்ப திரும்ப அழுக்குப்போக துடைத்துக்கொண்டேயிருப்பார். OCD போல் இன்னொன்று இருக்கிறது.
Obsessive Compulsive Personality Disorder. OCPD. இதுவும் உளவியல் அவஸ்தைதான் + Personality Disorder. Perfection சார்ந்தது. திரும்பத் திரும்ப Perfection-க்காக செய்துகொண்டேயிருப்பது. அதுதான் நம் Black Swan நாயகிக்கும் இருக்கிறது.
.

நினா (Natalie Portman). ஒரு பாலே நடனப் பள்ளியில் நடனம் பயில்கிறவள். மிகுந்த அக்கறையோடு பாலே நடனம் பயில்கிறவள். எல்லாமே பாலே நடனம்தான் என்பது போல அவ்வளவு பற்று அதன் மீது. மிகுந்த நுட்பமாய் (perfection) பாலே நடனம் ஆடக்கூடியவள். ஆனால் இதுவரை மேடையேறும் வாய்ப்பு அவளுக்கு கிடைக்கவேயில்லை. விரக்தியில் இருக்கிறாள்.

அவளின் தாய், ஒரு முன்னாள் பாலே நடனம் பயின்றவள். ஆனால் பாலே நடனத்தில் பிரகாசிக்க முடியாமல் குடும்ப வாழ்க்கைக்குள் தொலைந்து போனவள். என்பதனால் தன் மகள் நினாவை, கட்டுக்கோப்பாய், கண்டிப்புடன் அதே சமயத்தில் அந்நடனத்தின் எதிர்ப்பார்ப்புகளை புரிந்துகொண்டு ஆறுதலாய் தன் மகளை வளர்த்துவருகிறாள். அந்நடனப்பள்ளியின் நாடக இயக்குனர், Swan Queen என்றொரு புகழ்பெற்ற பாலே நாடகத்தை மேடையில் கொண்டு வர எண்ணி, நினாவை அக்கதாப்பாத்திரத்துக்கு தேர்ந்தெடுக்கிறார்.
.
அந்நாடகத்தில் இரண்டு கதாப்பாத்திரங்கள். ஒன்று White Swan மற்றொன்று Black Swan. இரண்டு கதாப்பாதிரங்களையும் ஒரே பெண் செய்வதாய் அந்நாடகத்தை அமைக்கிறார் அந்த இயக்குனர். White Swan கதாப்பாத்திரத்தை செய்வதற்கு நுட்பம் (perfection) மட்டும் போதும். அதை மிக எளிதாய் நினா செய்துவிடுவாள். ஆனால் Black Swan கதாப்பாத்திரம் அப்படியல்ல. நுட்பங்களை தாண்டி நுண்ணுணர்வு அதீதமாய் தேவைப்படும் கதாப்பாத்திரம். அதை லில்லி (Mila Kunis) என்கிற மற்றொரு பெண் அனாயாசமாக ஆடக்கூடியவள். ஆனால் நினாவுக்கே அந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால் நினாவால் Black Swan கதாப்பாத்திர நடனத்தை சரிவர செய்ய முடிவதில்லை. இவளிடம் நுண்ணுண்ர்வுயும் தாண்டி நுட்பமே மேலெழுகிறது. அக்கதாப்பாதிரம் அவள் முதுகில் சுமையாய் தொற்றிக்கொள்கிறது. உடல் மனம் இரண்டும் Black Swan-ஆல் ஆட்கொள்ளப்படுகிறது. மனச்சிதைவுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் ஆளாகிறாள். OCPD, Multiple Personality Disorder, Hallucinations மற்றும் எங்கே இந்த வாய்ப்பு லில்லிக்கு போய்விடுமோ என்கிற அதீத பயத்தினாலும் பாதிக்கப்பட்டாலும், அந்த Black Swan கதாப்பாத்திரம் எதிர்ப்பார்க்கும் அந்த Evil Spirit அவளிடம் வந்து சேர்கிறது. அவள் ஒரு Black Swan-ஆக பரிணாம வளர்ச்சியடைகிறாள் உள்ளுக்குள். நினா, மேடை ஏறினாளா அந்த வாய்ப்பு லில்லிக்கு போய்விட்டதா அல்லது இவள் அக்கதாப்பாதிர சுமை தாளாமல் என்னவானால் என்பதெல்லாம் திரையில் நீங்கள் பார்க்கவேண்டியது.
.
நினா வாய்ப்பு கேட்டு வரும் போது, அந்நாடக இயக்குனர், அவளை கட்டாயமாய் முத்தமிடும் போது, கடித்துவிட்டு ஓடிவிடுகிறாள். இருந்தாலும் அவர் அந்த வாய்ப்பை கொடுக்கிறார். Black Swan கதாப்பாத்திரத்தின் நுண்ணுனர்வுக்காக அவரின் சில அத்து மீறல்கள் சரியா தவறா என்பது யோசிக்கவேண்டியதாய் இருக்கிறது. ஒரு பெண் முன்னேற சில விட்டுகொடுத்தல்கள் அவசியம் என்றெல்லாம் ஒதுக்கிட முடியாது அந்த நாடக இயக்குனரின் செயல்களை. நடிக, நடிகையர்களை அடித்து வேலைவாங்கும் சில பெரிய இயக்குனர்களை செயல் போன்றது என்றே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனென்றால் பின் எப்போதும் நினாவை எதற்காகவும் அவர் வற்புறுத்துவதில்லை. அதே சமயம் அவள் Black Swan நடனத்தை சிறப்பாக செய்துவிட்டு, இயக்குனரை கட்டிப்பிடித்து வன்முத்தம் தருகிறாள். அது அப்படைப்பின் அந்நுண்னுணர்வின் தேவை அல்லது வெளிப்பாடு என்றே கருதிக்கொண்டேன்.
.
இயக்குனர் Darren Aronofsky-யின் ஐந்து படங்களும் ஐந்து முத்துக்கள். மனதின் நுண்ணுணர்வை அற்புதமாய் திரையில் கொண்டுவரக்கூடியவர். அவரின் படங்களில் முதுகு சில்லிட நேரும் தருணங்கள் அனேகம். உண்மையாகவே முதுகு சில்லிடும். Black Swan-ல் நிறைய இடங்களில். இத்திரைப்படத்தை ஆரம்பம் முதல் ஒருவிதமான அவஸ்த்தையோடுதான் நம்மாலும் பார்க்கமுடியும். நினாவின் பதற்றம் நம்மிடம் அப்படியே தொற்றிக்கொள்ளும். நாம் பதற்றமாகவே இருப்போம் கடைசிவரை.

கடைசியாய் கூட நினா சொல்வது "I felt perfect. I was perfect.". ஆனால் பின் திரையில் பெயரால் ஓடும் போது நினா மற்றும் Swan Queen கதாப்பாத்திரத்தில் Natalie Portman-னும், லில்லி மற்றும் Black Swan கதாப்பாத்திரத்தில் Mila Kunis-னும் நடித்திருக்கிறார்கள் என்றே வருகிறது.
.
Black Swan (2010) - தற்போது வழங்கப்பட்டிருக்கும் இம்மிகப்பெரிய வாய்ப்பை தவறவிடக்கூடாதென்றும், அதை இன்னொருவர் தட்டிப்பறித்திடக்கூடாதென்றும், அம்மிகப்பெரிய வாய்ப்பின் சுமை தாளாமலும், அம்மிகப்பெரிய வாய்ப்பை கச்சிதமாக, நுட்பமாக செய்து முடித்திட வேண்டுமென்றும் அதீத பதற்றம் கொள்ளும் பெண்ணின் கதை..
.
Black Swan (2010) - Trailer



10.05.2011

4 comments:

JZ said...

மிக வித்தியாசமானதொரு விமர்சனம்!! டரன் அரொனொவ்ஸ்கியின் இந்தப் படம் மட்டுமே பார்த்திருக்கிறேன்.
வலிமையான தாக்கத்தை மனதில் ஏற்படுத்திய படம் இது!
ஏனையவற்றை விரைவில் பார்ப்பேன்..

MSK / Saravana said...

@JZ : அவரின் மற்றய படங்களையும் பார்த்துடுங்க. நன்றி..

சண்முககுமார் said...

தங்கள் பதிவை இணைக்க புதிய தளம்
இணையவாசிகள் தங்கள் பதிவை இணைத்து பயன் பெறுங்கள்

http://tamilthirati.corank.com

moji said...

Perfect article!!

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..