Monday, April 18, 2011

Mr. Nobody (2009) - முடிவிலாக் கனவு


Director: Jaco Van Dormael
IMDB Rating : 7.7/10
Rotten Tomatoes Rating : 77% (Audience Rating)
.

தென் கொரிய இயக்குனர் பற்றி Kim Ki-Duk அறிந்திருப்பீர்கள். அவரின் Spring Summer Winter Fall and Spring (2003) படம் பற்றியும் அறிந்திருப்பீர்கள். ஒருவன் பிறந்து வளர்ந்து வாழ்ந்து புத்த குருவாய் இறக்கும் வரையிலான ஐந்து பருவக் கதை. ஒரு Biography. ஒரு ஆணாதிக்க சிந்தனை நிரம்பிய திரைப்படம். ஏனென்றால் நம்முடைய ஆன்மீக சிந்தனைகள் ஆணாதிக்கமானது. பெண் என்பவள் காமம், மாயை, அவளை கடந்தால் மட்டுமே ஒரு ஆண், முக்தியை அடையமுடியும் என்பது மாதிரியான ஆன்மீக சிந்தனைகள் நிறைய மதங்களில் இருக்கிறது போலும்.
.

சரி புத்த குருவை விட்டுவிடுவோம். நிறைய Biography கதைகள் படமாய் வந்திருக்கிறது. புகழ்பெற்ற மனிதர்களை பற்றி படங்கள் வந்திருக்கின்றன. காந்தி, சே படங்கள் உதாரணம். நிஜ வாழ்க்கையை தவிர்த்தும் நிறைய புனைவு Biography கதைகள் இருக்கின்றன. இந்த தளத்தில் Big Fish (2003), Benjamin Button (2008) படங்களை பற்றி பார்த்திருக்கிறோம். சாதாரண மனிதர்கள் அவர்கள். ஆனால் அவையும் ஆண்கள் பற்றியதே. ஒரு பெண் பிறந்து வளர்ந்து இறக்கும் வரையிலான Biography கதைகள் படமாய் வந்திருக்கின்றனவா என்று யோசித்து பார்த்தால் எதுவும் ஞாபகம் வரவில்லை. Amelie திரைப்படம் கூட, Amelie பிறந்ததில் இருந்து அப்பெண் தன் வாழக்கையை நிலைநிறுத்திக் கொள்ளும் இடத்தில், காதலை அடையும் இடத்தில் முடிந்துவிடுகிறது. பெண்ணாதிக்கமாய் படங்கள் வந்திருக்கின்றனவா என்று யோசித்து பார்த்தால் அப்படியும் எதுவும் ஞாபகம் வரவில்லை.

My Sassy Girl கொஞ்சம் பெண்ணாதிக்கமானது. அந்த பெண் அவனை அடித்துக்கொண்டே இருக்கிறாள் என்பதற்காக இதை சொல்கிறேன் என்று நீங்கள் நினைக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். தன் பழைய காதலனாய் இவனை உருமாற்ற முயற்சிக்கும் ஆதிக்கமான அன்பு அல்லது இவனின் சுயத்தை அழித்து தன் பழைய காதலனின் சுயத்தை இவன் முதுகில் ஏற்ற முயற்சிக்கிறாள் என்பதால் மட்டும், My Sassy Girl கொஞ்சம் பெண்ணாதிக்கமானது என்று தோன்றியது. அந்த ஒரு இடத்தில் மட்டும். மற்றபடி மிக மிக மிக அழகான காதல் திரைப்படம். அப்படத்தில் அவள் கடைசியாக சொல்லும் வரி இன்னும் ஞாபகம் இருக்கிறது.

"I think I have met a man from the future.. From your future.."

இந்த இடத்தில் நரனின் உப்புநீர் முதலை அல்லது தேவதேவனின் உலகத்தின் முதல் நாளுக்கும் கடைசிநாளுக்குமிடையில் சேலை காயப்போடும் பெண் மற்றும் இன்னபிற காலத்தோடு விளையாடும் சில கவிதைகள் உங்களுக்கு ஞாபகம் வரலாம். இந்தக் கவிதைகள் இப்பதிவில் நாம் பாக்கப்போகும் திரைப்படத்திற்கும் பொருந்தும்.
.

சரி நாம் இப்படத்திற்கு வருவோம். இது ஒரு Biography திரைப்படம். Nemo Nobody அல்லது Mr.Nobody என்பவனை பற்றியது. ஏற்கனவே நாம் பார்த்திருக்கும் படங்களுக்கும் இப்படத்திற்கும் என்ன வித்தியாசம். Big Fish (2003), Benjamin Button (2008) மாதிரி இப்படத்திற்கு இதுதான் கதை என்று எதையும் சொல்வது கடினம். ஒரு Non-Linear திரைப்படம். நிறைய நிறைய கிளைக்கதைகள். அறிவியல் மூலம் இவ்வாழ்க்கையை புரிந்து கொள்ள முயலுதல் (Philosophy). நிறைய Butterfly Effect. நிறைய Fantasy. கொஞ்சம் Sci Fi. கலவையாய் Mr.Nobody.

படத்தின் கடைசியில் Nobody என்றொருவன் இருந்தானா என்பதிலேயே சந்தேகம் வரும். அவர்களின் பெற்றோர் சந்திக்காமலேயே இருந்திருக்கக்கூடும். இந்த படத்தில் எல்லாமே "இருந்திருக்கக்கூடும்", "இருந்திருக்கலாம்", "..லாம்", "..லாம்" தான்.
.
சரி கொஞ்சமாச்சும் கிட்டத்தட்ட கதை மாதிரி சொல்றேன். ஆண்டு 2092. ஒரு 112 வயது, முதியவர், தனக்கு வயது 39 என்றும் நம்பும் பெரியவர், எதுவுமே ஞாபகம் இல்லாத அல்லது நிறைய விஷயங்களை மறந்துவிட்ட, உலகத்தின் கடைசி சாகப்போகும் பெரியவர், (2092-ல் உலகத்தில் மனிதர்களுக்கு சாவே கிடையாது. செல்களை தொடர்ச்சியாக Telomere அறிவியல் உத்தி மூலம் புதுப்பித்துகொள்வதால் மனிதர்களுக்கு சாவே கிடையாது), தன் கதையை ஒரு பத்திரிக்கைக்காரனுக்கு சொல்கிறார். அவர் சொல்லும் எதுவேமே தொடர்ச்சியாகவோ அல்லது சரியாக இருப்பதாக தெரியவில்லை. எல்லாவற்றிலும் குறைந்தது இரண்டு மூன்று கதைகள். அதாவது 12B திரைப்படம் ஞாபகம் இருக்கிறதா? ஷாம் பேருந்தை பிடிப்பதால் ஒரு கதை, பேருந்தை பிடிக்க முடியாமல் போனதால் இன்னொரு கதை. அந்த மாதிரி. நிறைய கிளைக்கதைகள் உற்பத்தியாகிக்கொண்டேயிருக்கின்றன. மேலும் பெரும்பாலான காட்சிகள் அந்தக் காட்சியின் முடிவில் மொத்தமாய் கலைக்கப்பட்டுவிடுகின்றன. எனவே இது நடந்ததா என்றெல்லாம் கேள்வி கேட்கவே முடியாது. நடந்திருக்கலாம். அவ்வளவுதான்.
.
மனிதன் தொடர்ச்சியாய் நிறைய கேள்விகளை வைத்திருக்கிறான். இந்த பிறப்பின் ரகசியம் என்ன? இந்த இருத்தலின் அவசியம் என்ன? இதெல்லாம் எங்கு துவங்கியது? ஏன் துவங்கியது? அறிவியல், ஆன்மீகம் என்று இரு வழிகளின் மூலம் இந்த மாதிரியான கேள்விகளுக்கு விடைதேடிக்கொண்டேயிருக்கிறான். அறிவியல் எனும் வளர்ந்துக்கொண்டேயிருக்கும் அளவுகோலை வைத்து எல்லாவற்றையும் அளந்து பார்க்க விரும்புகிறான். Pigeon superstition, Big Bang theory, Superstring theory, Many-worlds interpretation, Concepts of telomeres, Parallel universes ஆகிய அறிவியல் கருத்துக்களை கொண்டே கதை, திரைக்கதை சுழல்கிறது. அறிவியலை கொண்டொரு புனைவு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் எனக்கு Donnie Darko (2001) திரைப்படம் ஞாபகம் வருகிறது. Tangent Universe. :)
.
திரைப்படத்தின் ஒளிப்பதிவு, பின்னணியிசை, மற்றும் திரைக்கதை உருவாக்கம் மிகசிறப்பு. ரொம்பவே ஆனால் தேவையான ரொமான்டிசைஸ் செய்யப்பட ஒளிப்பதிவு. பியானோவின் பின்னணியிசை. class.. :)

இத்திரைப்படத்தை பற்றி இன்னும் சிறப்பாக எழுதினால் நன்றாக இருக்கும். என் மொழியை வைத்து ஓரளவுக்குத்தான் எழுதியிருக்கிறேன் என்பது புரிகிறது.
.
Mr. Nobody (2009) - ஒரு முடிவிலா Labyrinth அன்பைத்தேடும் கனவு.
.

Mr. Nobody : TRAILER



18.04.2011

3 comments:

MSK / Saravana said...

Rotten Tomottoes தளத்தில் இந்த படத்திற்கான Audience விமர்சனத்தில் இந்த வரி எனக்கு பிடித்திருக்கிறது..

"Expect the unexpected. Try to answer the unanswerable question that writer-director Van Dormael poses. It is a worthwhile exercise. - Bruce Kirkland"

சென்ஷி said...

படம் பார்த்துட்டு மறுக்கா வாரேன்! :)

calis said...

Very good view, keep it up.

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..