Saturday, April 16, 2011

A Moment To Remember (2004) (Korean) - ஆழ்மனதில் உருகிக்கிடக்கும் மீச்சிறு நினைவு


Original Title : 내 머리 속의 지우개 (Literally Eraser in My Head)
Director: John H. Lee
IMDB Rating : 8.2/10
Han Cinema Link
.

50 First Dates (2004) திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள். ஒரு குறிப்பிட்ட நாளுக்கு பின்பான எதுவும் ஞாபகத்தில் வைத்திருக்க முடியாத காரணத்தினால், தொடர்ச்சியாய் ஒரே நாளை, ஒரே மாதிரி வாழ்ந்துகொண்டிருக்கும் நாயகியின் கதை. அந்தமாதிரியான ஒரு நாளில் அவளை சந்திக்கும் நாயகனுக்கு துவக்கத்தில் எதுவும் புரியாமல், பின்பு புரிந்துகொண்டு, அவளோடு எப்படி வாழ்கிறான் என்பதாய் முடியும் அத்திரைப்படம். A Moment to Remember (2004) திரைப்படத்திலும் அந்த மாதிரி ஒரு நிலை.
.

ஒரு திருமணமான ஆண் மீது காதல் கொண்டு, ஊரைவிட்டு ஓடிப்போக முயற்சிக்கும் போது, அவன் வராமல் போக, அந்த காதல் தோல்வியும் ஏமாற்றமும் அவளுக்கு தாளாத மன அழுத்தத்தை தருகிறது. இதன் காரணமாக அவளுக்கு, சிற்சில விஷயங்களில் மறதி வருகிறது. ஓரிரு வருடங்களுக்கு பிறகு, அவள் இன்னொருவனை சந்திக்கிறாள். ஒரு மிக அழகான காதல் இருவருக்கும் வருகிறது. திருமணமும் ஆகிறது. இவன் ஆர்கிடெக்ட். அவள் பேஷன் டிசைனர். வாழ்வின் அனைத்து தருணங்களும் தளும்ப தளும்ப காதலாலும் மகிழ்ச்சியாலும் நிறைகிறது. பின்பான ஒரு சமயத்தில் தன் ஞாபக மறதி அதிகமாகுவதை உணரும் அவள், மருத்துவரை சந்திக்கிறாள். பரிசோதனைகளுக்கு பிறகு அவளுக்கு Alzheimer's disease எனும் மறதி நோய் வந்திருப்பது தெரிகிறது.
.
Alzheimer's disease எனும் மறதி நோய் தாக்கினால், சமீப நினைவுகளில் துவங்கி கொஞ்சம் கொஞ்சமாய் ஞாபகங்கள் மறைந்துகொண்டே போய், ஒரு கட்டத்தில் அனைத்தும் மறந்து, கிட்டத்தட்ட மூளைச்சாவு வந்துவிடும், உடலில் மரணம் வரும் முன்பு. இவளின் சமீப நினைவு, இவனும், இவனுடனான காதலும்தான். "நீ எதற்கும் கவலைப்படாதே, உன் நினைவாய் நானிருப்பேன்" என்று சொல்லி, வீடு முழுதும் துணுக்குக் குறிப்பால் (Sticky Notes) நிரப்புகிறான். இவளுக்கு எல்லாமுமாயும் இருக்கிறான். சமயத்தில் அவளுக்கு எல்லாமும் மறந்துவிடுகிறது. பின் நினைவுகள் திரும்புகிறது. இவ்வாறான நினைவு அலைக்கழிப்பால், தன் கணவனையே, தன் முந்தைய காதலனின் பெயரால் அழைக்க கூடிய அளவுக்கு போய்விடுகிறது. இவர்களின் அழகான காதல் வாழ்க்கை என்னவானது? இவளுக்கு அவன் யாரென்பதாவது ஞாபகத்தில் இருந்ததா?
.

முதலிலேயே ஒன்றை சொல்லிவிடுகிறேன். இது ஒரு அழகான காதல் மெலோ டிராமா. கடந்த பதிவில் சொன்னது போலவே அழகான, மெல்லிய நகைச்சுவையோடான காதல் திரைப்படங்கள், கொரியர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல. இத்திரைப்படமும், அவளுக்கு மறதி நோய் தாக்கியது தெரியவரும் வரை, படம் மெல்லிய நகைச்சுவையும், காதலுமாய் போகிறது. ஆனால் அதன் பின், Christmas in August திரைப்படம் மாதிரி அல்லாமல், கொஞ்சம் நெகிழ வைக்கும் காட்சிகள் உண்டு. ரத்தமும் சதையுமான காதலின் வலியை இப்படிக்கூட சொல்லவில்லையென்றால் எப்படி. ஆனால் அதிர்ச்சியான அல்லது சோகமான முடிவு இல்லாமல் கொஞ்சம் பாசிட்டிவான முடிவு எனக்கு பிடித்திருந்தது. இவளின் ஆழ்மனத்தில் உருகிக்கிடக்கும் ஒரு நினைவை கொண்டு அவனை உயிர்பித்துக்கொள்கிறான். அவளிடத்தே மீதமிருக்கும், அவனை பற்றியதான அம்மீச்சிறு நினைவு அவனுக்கு போதுமானதாயிருக்கிறது. மறுநாள், அவள் மீண்டும் எல்லாவற்றையும் மறந்து போகலாம்.
.
வழக்கமான காதல் நிறைந்த கொரியப்படங்களை போலவே, இத்திரைப்பட நாயகியும் கொள்ளையழகு. காதல் கொள்ளவைக்கும் அழகு. நாயகன் The Warrior (2001) [Musa], The Good the Bad the Weird (2008) படங்களில் நடித்திருப்பவர். "மெலோ டிராமாக்களை இன்று தென்கொரியத்திரைப்படங்கள் மட்டுமே வாழவைத்துக்கொண்டிருக்கிறது. மற்றவர்கள் கிளிஷேக்களால் நிறைந்து போனார்கள்", என்றொரு கருத்து இருக்கிறது. என்பதனால் ஒரு கோரிக்கை. இத்திரைப்படத்தை அறிவியல் பூர்வமாக அணுகவேண்டாம், சில லாஜிக் இடிக்கக்கூடும். அறிவியல் பூர்வமாக அணுகுவதற்க்கென்று ஒரு படம் வைத்திருக்கிறேன். அடுத்தப்பதிவில் அத்திரைப்படத்தை பற்றிதான் எழுதப்போகிறேன். :)
.
A Moment To Remember (2004) - தவறவிடாமல் பார்க்கவேண்டிய காதல் கதை.. கீழிருக்கும் ட்ரைலரை பாருங்கள். நீங்கள் நிச்சயம் இத்திரைப்படத்தை பார்ப்பீர்கள். தேடிப்பிடித்தாவது பார்ப்பீர்கள்.. :)

ஏனென்றால் (தட்டையாக சொல்லவேண்டுமானால்) இது ஒரு தென் கொரிய டைட்டானிக்..
.

A Moment To Remember (2004) : TRAILER WITH ENGLISH SUBTITLE




18.04.2010

10 comments:

MSK / Saravana said...

என்னால் இன்ட்லியில் Login செய்ய முடியவில்லை. UserName/Password தவறு என்கிறது.
Password Reset செய்ய email முகவரி தந்து, email-ல் வந்த Temp Password வைத்தும் Login செய்ய முடியவில்லை. அப்போதும் UserName/Password தவறு என்கிறது.

உங்களால் Login செய்ய முடிகிறதா?

உலக சினிமா ரசிகன் said...

நண்பரே இண்ட்லியில் இதே பிரச்சனை எனக்கும் இருக்கிறது.
மலையாளத்தில் அல்சைமர் வியாதியை மையமாக வைத்து தன்மாந்தரா என்ற அற்ப்புதமான படத்தை இயக்குனர் பிளஸ்ஸி கொடுத்தார். இப்படமும் அதே தளத்தில் இருந்தாலும் புதிய பரவசத்தை வழங்கும் என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளீர்கள்.நன்றியுடன் வாழ்த்துக்கள்.

உலக சினிமா ரசிகன் said...

//ஆழ்மனதில் உருகிக்கிடக்கும் மீச்சிறு நினைவு// “மீச்சிறு” என்பதன் அர்த்தம் புரியவில்லை.தயவு செய்து இந்த எளியவனுக்கு விளக்கவும்.

சென்ஷி said...

//“மீச்சிறு”//

மீச்சிறு - மிகச்சிறிய அல்லது சின்னஞ்சிறுன்னு சொல்லிக்கலாமா?!

MSK / Saravana said...

@உலக சினிமா ரசிகன் : எல்லாருக்கும் இண்ட்லி ப்ரச்சனை இருக்கிறது போலும்..

"தன்மாந்தரா" பட்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.. பார்க்க முயற்ச்சிக்கிறேன்.. நன்றி.. :)

மீச்சிறு - மிகமிகச் சிறிய என்று பொருள் கொள்ளலாம்.. :)



@சென்ஷிண்ணே :)) நன்றி..

MSK / Saravana said...

இன்ட்லியில் Login செய்ய முடிகிறது.. :))

Pareethi said...

Trailer அட்டகாசம்... கண்டிப்பா பாக்கணும்... Bgm சூப்பர்...

தல ஹன்கோவேர் two வா சான்சே இல்ல... அதுவும் வார்னர் ப்ரோதேர்ஸ்...
ஆனா இந்த மாதிரி கண்டினுவிட்டி வந்தா சொதபிடுவாங்கலே... பாப்போம்...

Pareethi said...

http://nasthenka.blogspot.com/2011/04/blog-post.html

Visit my blog...

MSK / Saravana said...

@Pareethi : நிச்சயம் பாருங்க.. நல்ல படம்.. :)

Hangover 2 நிச்சயம் ரகளையாய் இருக்கும் :))

நன்றி.. :)

KF said...

To download this movie in BRrip(Bluray rip), plz follow the link below:

http://goo.gl/tdXf0

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..