Original Title : Palwolui Christmas (8월의 크리스마스)
Director: Hur Jin-ho
IMDB Rating : 7.6 / 10
Rotten Tomatoes Rating : 89 %
.
கிட்டத்தட்ட, கடந்த பத்து பதினைந்து வருடங்களாக, உலக கவனத்தை தன் பக்கமாய் திருப்பி வைத்திருக்கின்றன, தென் கொரிய திரைப்படங்கள். ஆரம்ப காலங்களில், அப்படி தென்கொரியத் திரைப்படங்கள் உலக அரங்கில் கவனம் பெற காரணமாக அமைந்த சில முக்கிய திரைப்படங்களுள் இதுவும் ஒன்று. இன்றுமே தென் கொரியாவிலும், சைனாவிலும் திரைக்கதை, ஒளிப்பதிவு தொடர்பான வகுப்புகளில் அடிக்கடி இடம்பெறும் படமாக இப்படம் இருக்கிறது. இத்திரைப்படத்திற்கு பின் வந்த இயக்குனர்களும், படங்களும் இத்திரைப்படத்தினால் தாக்கம் பெற்றிருந்தனர்.
.
சரி படத்திற்கு வருவோம். நகைச்சுவை கலந்த காதல் திரைப்படங்கள் கொரியர்களுக்கு அல்வா சாப்பிடுவது போன்றது என்பதை நிரூபிக்கும் இன்னொரு படம்.
.
முப்பது வயதைக் கடந்த, திருமணம் செய்துகொள்ளாத, ஒரு சின்ன புகைப்பட ஸ்டுடியோ வைத்திருக்கும் நாயகன், தன் தந்தையோடு வாழ்ந்து வருகிறார். நாயகனின் சகோதரி, சகோதரியின் கணவர், அவர்களின் குழந்தை அவ்வபோது வீட்டிற்கு வந்து பார்த்துவிட்டு போவார்கள். இந்த நாயகன் கூடிய விரைவில் இறக்கப்போகிறவர். அவருக்கு ஏதோ ஒரு நோய்.
.
கிட்டத்தட்ட இருபது வயதுடைய நாயகி, போக்குவரத்து காவல்துறையில் பணிபுரிகிறவர். நிறைய புகைப்படங்களை பிரின்ட் எடுக்க நாயகனது கடைக்கு வரத்துவங்கி, பேசி பழகி, பின் மெதுவாக அவன் மீது காதல் அரும்புகிறது. இவர்களின் வாழ்க்கை என்னவானது என்பது திரைப்படம்.
.
மென்மையின் மேன்மை இந்த திரைப்படம். இறக்கப்போகிற நாயகன். இதுவே இந்தியத் திரைப்படமாக இருந்தால் படத்தில் நெஞ்சை கசக்கி பிழிந்து துவைத்து காயவைக்கிற அளவுக்கு சென்டிமென்டால் கொன்றிருப்பார்கள். (சமீபத்திய உதாரணம் : காவலன்) இந்த படத்தில் அந்த மாதிரி செண்டிமெண்ட் இல்லை. நாயகன் சிரித்தமுகம் மாறாது இருக்கிறான். எப்போதும் மென்சிரிப்பு. நாயகனின் அப்பாவோ அல்லது சகோதரியோ முகத்தை உம்மென்று வைத்துக்கொள்வதில்லை. அவர்களுக்கு அவன் இறக்கப்போவது தெரியுமா என்பதே நமக்கு தெரியாது. நாயகனுக்கு உடம்புக்கு என்ன, அவனுக்கு என்ன நோய் என்பதும் நமக்கு தெரியாது.
நாயகிக்கு இறுதிவரை இவன் இறக்கப்போவது தெரியாது. இறந்தபின்னும் தெரியாது. நாயகி இவனுக்கும், இவன் நாயகிக்கும் எழுதும் கடிதங்கள், பார்வையாளர்களாகிய நமக்கு காட்டப்படுவதில்லை. நாயகன் படிக்கும்போது கடித்ததில் நாயகி அழுதுக்கொண்டே அவள் குரலில் அக்கடிதம் வாசிக்கப்படுவதும், நாயகி படிக்கும்போது கடித்ததில் நாயகன் அவன் குரலில் அக்கடிதம் வாசிக்கப்படுவதும் இல்லைவே இல்லை. ஆனால் படம் முழுதும் மெல்லிய நகைச்சுவை அல்லது புன்சிரிப்பு இருந்துகொண்டே இருக்கிறது. ஆனால் படம் முடியும் போது மனம் ஆழ்ந்து கணக்கும். மென்மையின் கனம்..
.
நாயகன், துவக்கத்தில் புன்சிரிப்போடு இருந்தாலும் நாள் நெருங்க நெருங்க அவனிடம் ஒரு பதற்றம் வருவதை உணரமுடியும். நாயகி, துவக்கத்தில் நாயகனின் மீது எவ்வித எண்ணமும் இல்லாமல் இருந்தாலும் போக போக அவளிடம் வரும் சிரிப்பும் வெட்கமும் தன்னை அழகுசெய்துகொள்வதும் அழகு. (அந்த பெண் ஏற்கனவே கொள்ளையழகு என்பது வேறுவிஷயம்)
.
இன்னொரு மிகமுக்கியமான காட்சியொன்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். ஒரு பெரியகுடும்பம், குடும்ப புகைப்படம் எடுத்துக்கொள்ள நாயகனின் ஸ்டுடியோவுக்கு வருகிறது. குடும்ப புகைப்படம் எடுத்துக்கொண்ட பின் அக்குடும்ப தலைமகன், தன் வயதான அம்மாவை உட்காரவைத்து, ஒரு தனி புகைப்படம் எடுக்க சொல்கிறான் நாயகனிடம். அந்த முதிய அம்மாவின் கண்களில் அப்பட்டமாக தெரிகிறது, இந்த புகைப்படம் தனது வீட்டில் மாலைப்போட்டு சுவற்றில் மாட்டிவைக்கப் போகிற படமிது என்று. அது சரியாக வரவில்லை என்று காரணம் கூறி தனியே ஸ்டுடியோ வரும் அந்த முதிய அம்மா, இன்னொரு படமெடுக்க, தனக்கு பிடித்த உடையுடன் இன்னும் அழகாய் வந்து அமர்கிறார். "இதுக்கு காசு கேட்க மாட்டில்லை" என்று அம்மா, நாயகனிடம் சொல்லும் காட்சியை என்னவென்று சொல்ல.
தன் தந்தைக்கு எப்படி டிவியில் படம் போடவேண்டுமென்று விளக்கும் காட்சி...
.
Innocence இன்னும் வாழ்கிறது என்பதற்கு இத்திரைப்படம் ஒரு வாழும் உதாரணம். மிகச்சிறப்பான ஒளிப்பதிவு, பின்னணியிசை, திரைக்கதை என்பதையெல்லாம் சொல்லவும் வேண்டுமா? :)
.
ஆங்கிலம், பிரெஞ்சு Romance Comedy Melodrama திரைப்படங்கள் கிளிஷேவாகிவிட்ட நிலையில், இத்திரைப்படமும் இதற்கு பின் வந்த இதேமாதிரியான சில தென் கொரியத்திரைப்படங்களும்தாம் புத்துணர்ச்சிமிக்க Romance Comedy Melodrama திரைப்படங்களை நமக்கு தருகின்றன என்கிறார் ஒரு Linda Williams என்றொரு சினிமா விமர்சகர். My Sassy Girl திரைப்படத்திற்கு இன்னொரு மிக பொருத்தமான ஜோடி, இத்திரைப்படத்தில் நடித்தவர்கள்தான் என்கிறார் My Sassy Girl திரைப்படத்தின் கதையாசிரியர்.
- நன்றி விக்கிபீடியா
.
Christmas in August (1998) - Pure Innocence.. Pure Love.. Pure Humanity.. Its Damn Pure..
மிகுந்த மென்மையான, அப்பழுக்கற்ற, மேன்மையான படம்.
.
I always knew that feelings of love would fade just like old photographs. But for you, you will always remain in my heart, as you are in my last moment. Thank you and goodbye...
.
இந்த திரைப்படத்தின் ட்ரைலர் கிடைக்கல. ஆனால் அதைவிட சிறப்பான, அந்த பாட்டி ஸ்டுடியோவிற்கு திரும்ப வந்து புகைப்படம் எடுக்கும் காட்சியை இணைத்திருக்கிறேன். நிச்சயம் தவறாமல் பாருங்கள்.
01.04.2011





11 comments:
நீண்ட நாள் கழித்து ஒரு பதிவு.அதுவும் சரிதான்.சிங்கம் மெதுவாத்தான் குட்டி போடும்.
கொரியப் படங்கள் எல்லாமே silent killers தல.சிரிக்க சிரிக்க கொண்டு போய் கடைசில கண்ணு கலங்க வச்சுருவாங்க.ஓவர் செண்டிமெண்ட் எல்லாம் இருக்காது.இந்த படம் டவுன்லோட் பண்ண எடுத்து வச்சு இன்னும் பண்ணல.சீக்கிரமே பார்த்துட்டு நானும் ஒரு கொடுமைய போடுறேன். :)
இது உங்களுக்கு பிடிச்சிருந்தா நீங்க பார்க்க வேண்டிய படம் ஒண்ணு இருக்கு.
A moment to remember.
கல்யாணத்துக்கு பின்னையும் தொடரும் அழகான காதலின் கதை.ஹாலிவுட்ல வந்த Notebook படத்தின் அதே கதை தான்.ஆனா,notebook இதுக்கு முன்னாடி தூசி.கண்டிப்பா பாருங்க.
அப்புறம், A Bittersweet Life பார்த்துட்டேன்.ஏனோ எனக்கு பிடிக்கல. Just OK. :)
@உலக சினிமா ரசிகன் : ம்ம்.. ஆமாம் தல. எழுத நேரமில்லாம போயிடுச்சி.. இனி தொடர்ச்சியா எழுதறேன்.. நன்றி.. :)
@ILLUMINATI : A moment to remember. கையில இருக்கு. ஆனா ரொம்ப அழவச்சிருவாங்களோன்னு இன்னும் பார்க்காம வச்சிருக்கேன்.. Notebook-ம் அப்படித்தான்.. ஆனா இந்த படம் அழவைக்காது. மனசு அப்படியே கணக்கும். அவ்ளோதான். ரொம்ப அழகா இருக்கும்.
இதே மாதிரி இன்னொரு படம் பற்றியும் எழுத போறேன்.. :))
Bittersweet Life ஒரு ஆக்சன் படம் அவ்ளோதான். ஆனா அந்த ஸ்டைல் அந்த காரணம் எனக்கு பிடிச்சிருந்தது.. :)
நன்றி தல..
Thanks for the Intro MSK :)
படத்தின் சாம்பிள் பார்க்கும் போதே படத்தின் தரம் புரிகிறது. நல்ல பகிர்வு, படம் பார்த்ததும் பகிர்கிறேன்.நன்றி
A moment to remember,நான் சொன்ன அதே formula தான்.ஓவர் செண்டிமெண்ட் இருக்காது.படம் முழுக்க காமெடி,காதல்னு போகும்.ஆனா கடைசி frame ல சத்தியமா கண்ணு கலங்கிடும். :)
சீக்கிரம் பாருங்க.
@லேகா : என் கடமையைத்தான் நான் செஞ்சேன் :P
@மைதீன் : நிச்சயம் பாருங்க. :)
@ILLUMINATI : அப்ப சரி தல. இந்த வாரயிறுதியில பார்த்து விடுகிறேன்.. :) நன்றி..
தல, வழக்கம் போல நல்ல பதிவு. டவுண்லோட் போட்டாச்சு...
ஒரு சின்ன வேண்டுகோள் - கொரிய சினிமாவ கொண்டாடுங்க வேணாம்னு சொல்லல, நம்ம சினிமாவ அதுக்காக அசிங்கப்படுத்தாதீங்க. இங்க ரசிகர்களுக்காக மட்டும் தான் படம் எடுக்க முடியும், ரசனைக்காக எடுத்தா ஓடமாடேங்குதே... :-)
பார்த்துரலாம்... என்ன என்னால டவுன்லோட் போட முடியாது... கொரியன் மூவீஸ் DVD கிடைக்கமாட்டுது...
Secret sunshine அப்படின்னு ஒரு கொரியன் மூவி கிடைச்சிது... இன்னம் பாக்கல... நல்ல இருக்குமா...
The Secret in their eyes DVD யே இன்னைக்கு தான் யாதர்த்தமா கெடைச்சிச்சு... ரொம்ப நாலா தேடிட்டு இருந்தேன்... இனிமேதான் பாக்கணும்...
@Baby ஆனந்தன் : தல, ஒரு தமிழ் படம் கொஞ்சம் நல்லா இருந்தாலே சூப்பரா இருக்குன்னு எழுதற ஆளு, நான்.. "இதைத்தான் என் ரசிகர்கள் விரும்புகிறார்கள்" என்றோ அல்லது "இதைத்தான் தமிழ் ரசிகர்கள் விரும்புகிறார்கள்" என்றோ இவர்கள் சொல்வதெல்லாம் சுத்த பேத்தல்.. brain washing.. என்பது எனது கருத்து. எப்போதுமே நல்ல படங்களை தமிழ் ரசிகர்கள் ஓடவைத்திருக்கிறார்கள்.. :)
நன்றி..
@Pareethi : டவுன்லோட் போட முயற்சித்து பாருங்க..
Secret sunshine நல்ல படம்தான். பாருங்க.
The Secret in their eyes-ம் நல்ல படம்தான். பாருங்க. பார்த்துட்டு எழுதுங்க. :)
Man from No where பார்த்துட்டேன்.. கூடிய விரைவில் எழுதுகிறேன்.. :)
நன்றி..
Post a Comment