சிம்பு, சந்தானம், அனுஷ்கா, பரத், வேகா, பிரகாஷ்ராஜ், சோனியா அகர்வால், ஜெயப்ரகாஷ், கணேஷ் மற்றும் பலர் நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் வானம். தெலுங்கில் வந்து வெற்றிபெற்ற Vedam திரைப்படத்தை தமிழில் ரீமேக்கியிருக்கிறார்கள். தமிழிலும், இப்படத்தை தெலுங்கில் இயக்கிய க்ரிஷ்தான், இயக்கியிருக்கிறார்.
.
பல்வேறு தனிக்கதைகள் ஓரிடத்தில் வந்து சேர்வது போல் தமிழில் அரிதாகத்தான் படங்கள் வந்திருக்கும். இத்திரைப்படத்தில் ஐந்து தனிக்கதைகள், சென்னையில், ஒரு மருத்துவமனையில் வந்து சேர்ந்து, பின் பிரிந்து போகிறது. இக்கதைமாந்தர்களின் வாழ்க்கைப் பயணம் வானம்.
.
தன் பணக்காரக் காதலியுடன் பார்ட்டிக்கு செல்ல ரூ.40000 பணத்துக்கு அலையும் குப்பத்து "கேபிள்" ராஜா (சிம்பு). தானிருக்கும் இடத்திலிருந்து தப்பித்து சென்னைக்கு வந்து தனியாய் தொழில் செய்ய வரும் பாலியல் தொழிலாளி சரோஜா (அனுஷ்கா). சென்னைக்கு Live Concert செய்யவரும் பரத், வேகாவின் Rock Band. முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதி என்று நினைக்கும் ஒரு காவல்துறை அதிகாரி. இவரால் பாதிக்கப்படும் நசீர் (பிரகாஷ்ராஜ்). கந்துவட்டி கொடுமை காரணமாக தன் மகனின் படிப்புக்காக, சிறுநீரகம் விற்க சென்னைக்கும் வரும் சரண்யா. இவர்கள் எல்லாம் வந்து சேரும் ஒரு மருத்துவமனையை, தீவிரவாதிகள் உட்புகுந்து மக்கள் அனைவரையும் சுட்டுத்தள்ள துவங்க, தங்களையும் மக்களையும் காப்பாற்றமுடிந்ததா என்பது படம்.
.
விண்ணைத்தாண்டி வருவாயா வெற்றிக்கும் பின் சிம்பு, இப்படத்தை ஒப்புக்கொண்டது பாராட்டவேண்டிய விஷயம். இந்த கதாபாத்திரத்தில் சிம்பு நடித்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. சரண்யா, சிறுநீரகம் விற்று கிடைக்கும் ரூ.40000 பணத்தை, திருடிக்கொண்டு ஓடும் கதாப்பாத்திரம் சிம்புவினது. படத்தை இலகுவாக்குவது அல்லது நீர்த்து போக செய்வது அல்லது நம்மை வயிறுகுலுங்க சிரிக்கவைத்து மகிழ்விப்பது சந்தானம் கதாப்பாத்திரம். சந்தானம் பட்டைய கிளப்புகிறார். அவரின் ஒவ்வொரு வசனமும் வெடி. அனுஷ்காவின் பாடலை, அப்படியே தெலுங்கில் இருந்து தமிழுக்கு டப் செய்து விட்டார்கள். அனுஷ்கா ரசிகர்கள் இப்படத்திற்கு நிச்சயம் செல்லலாம்.
திவ்யா, அனிதா கதாப்பாத்திரங்களை மறக்கமுடியுமா. இப்படத்தில் சோனியா அகர்வாலை பார்த்தபோது மனதுக்கு ஒருமாதியாய் இருந்தது..
.
பொருளாதாரம், பணம், மதம், கடவுள். இவற்றின் பிரச்சனைக்குள் மனிதன் தத்தளிக்கிறான் என்பதை சொல்கிறது இத்திரைப்படம். கூடவே எல்லா முஸ்லீம்களும் தீவிரவாதியல்ல. சந்தேகக்கண் கொண்டு பார்க்கவேண்டாம் என்பதையும் படம் சொல்கிறது. அப்பாவிகளை, சாதாரண மனிதர்களை துன்புறுத்தும் எதுவும் தீவிரவாதம் தான் என்பதயும் சொல்கிறது. பொருளாதாரம், பணம், படிப்பு, மதம், கடவுள் இது எல்லாம் இல்லாமல் மனிதன் அந்த ஆதிவிலங்காகவே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இப்போதிருக்கும் மனிதன், அந்த ஆதி விலங்கைக் காட்டிலும் மோசமானவனாக இருக்கிறான். அவனை பார்க்கவே பயமாய் இருக்கிறது.
.
நிரவ்ஷாவின் ஒளிப்பதிவு, யுவனின் இசை, க்ரிஷின் இயக்கம். "எவன்டி உன்னை பெத்தான்" பாடல் இன்னும் சிறப்பாக படமாக்கியிருக்கலாம் என்று தோன்றியது. இப்படத்தை ஒரு சீரியசான படமாக எடுத்திருக்க முடியும். ஆனால் வழக்கமான தமிழ்ப்படம் போல கொஞ்சம் கமர்சியல் மசாலாத்தனங்களை தடவியிருக்கிறார்கள். என்ற போதிலும் இது சுமாரான நல்ல தமிழ்படம்தான்.
.
வானம் - என்ன வாழ்க்கைடா இது..
.
30.04.2010





14 comments:
பாஸ், நீங்க தெலுகு ஒரிஜினல் பார்த்து இருப்பீங்க என்று நம்புறேன். கன்டென்ட் சூப்பர் என்றால் பெரும்பாலும் எல்லா மொழிகளிலுமே அது வெற்றி பெற்று விடும்.
படத்திற்கு செம ஒபெனிங் சென்னையில். பார்க்கலாம், அடுத்த வாரம் இது தொடருமா என்று.
கிங் விஸ்வா
சென்னை சூப்பர் கிங்க்ஸ் சித்திரக்கதை-சென்னை சூப்பர் கோமிக்ஸ்
லேட்டஸ்ட் காமிக்ஸ் தகவல்கள்-காமிக் கட்ஸ்
பை தி வே,
கஜ வீரன் தோர் படம் பார்த்தாச்சா?
King Viswa : இல்ல தல. Vedam கையில இருக்கு. ஆனா இன்னும் பார்க்கல. ஆனா அனுஷ்காவின் "எகிறி போதே" பாடல் பார்த்திருக்கிறேன்.. :))
Thor இன்னும் பார்க்கல தல..
பாஸ், உடனே நீங்க தெலுகு படம் பாருங்க. உண்மையிலேயே நல்ல படம். அதே சமயம் இந்த இயக்குனரோட கம்யம் படமும் சூப்பர் ஆன படம்.
சரி தல. பார்க்கிறேன்.. கம்யம் கூட நம்ம ஊர்ல ரீமேக்கினாங்க இல்ல.
அந்த கொடுமைய ஏன் கேக்குறீங்க பாஸ்? பாஷா படத்தை ஓமக்குச்சி நரசிம்மன வச்சி எடுத்தமாதிரி ஒரு ரீமேக் அது. தயவு செய்து அதை பார்க்காதீர்கள்.
//பாஷா படத்தை ஓமக்குச்சி நரசிம்மன வச்சி எடுத்தமாதிரி ஒரு ரீமேக்//
lol :))
// இது சுமாரான நல்ல தமிழ்படம்தான். //
என்னங்கய்யா இது? ;)
@ILLUMINATI: :)) ஆமாம் தல. :)
@King Viswa : Thor பார்த்துட்டேன்.. அப்படி ஒன்னும் சிறப்பா இல்லை.. Effects கூட ஓகே ரகம்தான்.. அவ்ளோதான்..
படம் ஓகே... ஆனா தெலுகு ல சூப்பர் படமிது...
நல்ல ரசிகன் நீங்கள் என்று விமர்சனத்திலேயே தெரிகிறது..
வானம் விமர்சனம்
என்ன வாழ்க்கைடா இது?
தல படம் தெலுங்குல பட்டைய கிளப்புச்சு தமிழ்லே STR இருக்கும்போது எப்படி நல்லாயிருக்கும். சந்தானம் இருந்ததாலெ முதல் பாதி பரவாயில்லே. படத்தோட ஹிட் சாங் எவண்டி உன்ன பெத்தான் தமிழ் வரிக்கு. இங்கே செல்லவும் http://shashtikavasam.blogspot.com/2011/05/blog-post_07.html
Post a Comment