Sunday, February 20, 2011

I Saw the Devil (2010) (Korean) - பிசாசை வேட்டையாடுதல்

.
Original Title : Akmareul boatda (악마를 보았다)
Director: Kim Ji-Woon
IMDB Rating : 8.0/10
Rotten Tomatoes Rating : 86%
.

தென்கொரிய இயக்குனர் Kim Ji-Woon-ன் A Tale of Two Sisters (2003), A Bittersweet Life (2005) படங்களை பற்றி பதிவெழுதிருந்த போதே இப்படத்தை பற்றி எழுதியிருந்தேன். இப்படத்திற்காக காத்திருக்கிறேன் என்று. இயக்குனர் Kim Ji-Woon-ன் திரைப்படமென்பதால் இத்திரைப்படதிற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது, என்னைப்போலான இவரின் உலகளாவிய ரசிகர்களிடத்து.
.

கொமோடோ ட்ராகன் (Komodo Dragon) பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அளவில் பெரிய பல்லி இனத்தை சேர்ந்தது. அதன் எச்சில் உலகின் மிகு அசுத்தமான ஒன்று. அதனால் ஓடி பிடித்து வேட்டையாடி உண்ணமுடியாத ஒன்று (சில சமயங்களைத் தவிர). அது தன் இரையை ஒரு கடி கடித்து விட்டுவிடும். பின்பு தன் இரையை பின்தொடர ஆரம்பிக்கும். அந்த கடிபட்ட மிருகம் கொஞ்சம் கொஞ்சமாக நோய்வாயுற ஆரம்பிக்கும். கிட்டத்தட்ட ஒரு வாரத்தில் முழுமையாக தன் வலிமையை இழந்துவிடும் இரையை, கொமோடோ ட்ராகன்கள் சூழ்ந்து வேட்டையாடி உண்டுவிடும். இந்த படத்தில் கிட்டத்தட்ட இந்த மாதிரி ஒரு சூழல் வருகிறது.
.
பெண்களை கடத்தி வன்புணர்ந்து கொடூரமாக கொலைசெய்யும் தொடர் கொலைகாரனொருவன் ஒரு பெண்ணை கொடூரமாக கொலைசெய்கிறான். அது அவனது வாடிக்கைதான் (He hunts for pleasure). ஆனால் இந்த பெண்ணின் காதலன், கொரிய உளவுத்துறையில் பணிபுரிகிறவன். இவள் அடைந்த வலியைவிட பத்தாயிரம் மடங்கு வலியை அந்த கொலைகாரனுக்கு தருவேன் என்று சபதம் கொள்கிறான். பார்க்கையில் ஒரு பழிவாங்கும் கதைதான் என்றாலும் எடுத்தவிதம் உண்மையிலேயே ரத்தக்களரியானது. இந்த கொலைகாரன், காவல்துறையின் சந்தேகத்தில் இருக்கும் ஒருவன் என்பதால் அவனை கண்டுபிடிப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை இந்த பெண்ணின் காதலனுக்கு. ஆனால் பார்த்தவுடனேயே அவனை கொன்றுவிடாமல் அவனை கொஞ்சமாய் அடித்துவிட்டு விட்டுவிடுகிறான். பின்னர் அவனை பின்தொடர்ந்து பின்தொடர்ந்து அவனை பழிவாங்குகிறான், கொமோடோ ட்ராகன்களை போலவே.
.
இத்திரைப்படத்தின் கிட்டத்தட்ட 80% சதவீத காட்சிகள் ரத்தத்தில் தோய்த்தெடுத்தது போல இருக்கிறது. மிகுந்த ரத்தம். அந்த கொலைகாரன் உண்மையிலே ஒரு பிசாசு, கடைசிக்காட்சி வரை. அவனைப்போன்ற ஒரு பிசாசை பழிவாங்குதல் என்பது, அவனுக்கு வலியையும் பயத்தையும் தருவதென்பது எவ்வளவு கடினமானதொன்று. ஒரு "கொல்லும் எந்திரம்" போலிருக்கிறான் அந்த கொலைகாரன். எனவே இவனும் ஒரு பிசாசாகிறான். இருப்பினும், "உன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் நான் எடுத்துக்கொண்டேன், ஆனால் என்னிடமிருந்து எடுத்துக்கொள்ள உனக்கு எதுவுமே இல்லை" என்றவன் சிரிக்கும் போது உண்மையிலே தோற்றுவிடுகிறான் இந்த காதலன்.
.
இத்திரைப்படத்தில் அந்த கொலைகாரனாக வருவது Oldboy (2003), Lady Vengenge (2005) படங்களில் நடித்த Choi Min-sik, பழிவாங்கும் காதலனாக நடித்திருப்பது Joint Security Area (2000), BitterSweet Life (2005), The Good the Bad the Weird (2008) படங்களில் நடித்த Lee Byung-hun. இரண்டு பேருமே அந்தந்த கதாப்பாத்திரங்களில் சிறப்பாக செய்திருக்கிறார்கள். அதுவும் கொலைகாரனாக வரும் Choi Min-sik அதகளம் செய்கிறார். ஆனால் Lady Vengenge படத்தை போலவே இத்திரைப்பட கதாபாத்திரமும் அமைந்திருப்பது அவருக்கு லட்டு மாதிரி. ஆனால் தென்கொரியாவில் இவர் மிகுந்த வெறுக்கப்படும் நடிகராகக் கூட இருக்கலாம். :)
.
இயக்குனர் Kim Ji-Woon இத்திரைப்படத்தை சிறப்பாக எடுத்திருந்தாலும் அவரின் Master Piece படம் இதுவல்ல. அவரை பொருத்தவரை இத்திரைப்படம் அவருக்கும் லட்டு மாதிரிதான் இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது. ஆனால் மிகுந்த வன்முறையான ஒரு படம் எடுக்கப்போகிறார் என்று முன்பே தெரிந்திருந்தால் இத்திரைப்படம் அவ்வளவு வன்முறையாய் எனக்கு தெரியவில்லை. மேலும் சிறப்பான பின்னணிஇசை. அதுவும் கடைசிக்காட்சியில் அந்த காதலன் நடந்து போகத்துவங்க அந்த நீளும் காட்சியின் பின்னணியிசை அப்படியே படத்தின் பெயர்களோடு தொடர்ந்து, மிகசிறப்பாக இருந்தது. குறிப்பாக பியானோ, வயலின், செல்லோ போன்ற இசைக்கருவிகளை, கொரிய இசைக்கலைஞர்கள் மிகசிறப்பாக வாசிக்கிறார்கள். கூடவே மிகசிறப்பான ஒளிப்பதிவு.
.
தமிழ்ப்படங்களில் 'வன்முறை மிகுந்த திரைப்படம்', 'இது பலவீனமானவர்களுக்கு அல்ல' என்பவர்கள் இத்திரைப்படத்தை பாருங்கள். கொஞ்சமேனும் வன்முறையை புரிந்துகொள்ள இயலும்.
ஒரு தகவலுக்காக : இத்திரைப்படமும் வன்முறைக்காட்சிகளுக்காக நிறைய வெட்டுகளை வாங்கியபின்னரே அவர்களின் சென்சார் போர்ட் வெளிவிட அனுமத்திருக்கிறது.
.
I Saw the Devil (2010) - வேட்டையாடும் பிசாசை வேட்டையாடுதல்..
I Saw the Devil (2010) - ஒரு பிசாசை இங்கு காணுங்கள்..
.

I SAW THE DEVIL (2010) : TRAILER


My Rating : 4.0/5.0
20.02.2011

11 comments:

King Viswa said...

இந்த படம் ஹிந்தியில் எடுக்கப்படபோவதாக ஒரு தகவல். கூடிய விரைவில் நம்ம ஆட்களும் இதனை எடுத்து விடுவார்கள்.

கிங் விஸ்வா
இரண்டு புத்தம் புதிய தமிழ் காமிக்ஸ்கள் - இரும்புக் கை மாயாவி + சிக்பில் குழுவினர்

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

இப்படத்தை,இப்போது தான் பார்த்தேன் நண்பரே,வதை,சித்ரவதை என்று பேசுபவர்கள் இதைப்பார்க்கவேண்டும். இதை ஒல்டுபாயை ஸிந்தா என திருடி எடுத்தது போல திருடிவிடுவார்களா? ஆனால் அற்பமாக காட்சி வைப்பார்கள்.இவ்வளவு டீடெய்ல்டாக சான்சே இல்லை.பிண்ணணி இசையும் கேமராவும் அபாரமாக இருந்தது.கடைசி வரை அந்த சைக்கோவை அந்த போலீஸ்காரன் எப்படி கொல்வான் என ஆர்வம் காட்டிவிட்டனர்.

MSK / Saravana said...

@King Viswa : என்ன கொடும சார் இது?? என்னை பொறுத்தவரை நம்மவர்களுக்கு இந்த மாதிரியெல்லாம் படமெடுக்க சத்தியமா வராது (ஹிந்தியிலோ அல்லது தமிழிலோ அல்லது எந்த இந்திய மொழியிலோ) என்பது என் தாழ்மையானக் கருத்து. (செல்வராகவன் முயன்றால் ஒரு மிகுவன்முறை படமெடுக்க முடியும்ன்னு நெனக்கிறேன்)
நன்றி..


@கீதப்ப்ரியன்: அதேதான். இவனிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துவிட்ட பின், அவனை எப்படித்தான் பழிவாங்குவது என்று நானும் யோசித்தேன்.
நன்றி..

டெனிம் said...

வடை போச்சே...இந்த படத்திற்கு நான் விமர்சனம் எழுதி வைத்துள்ளேன்.... காலையில் எழுந்து போஸ்ட் பண்ணலாம் என்று இருந்தேன்,நண்பரே.... மிக அருமையான படம் 2:30 மணி நேரம் என்றாலும் கொஞ்சம் கூட போர் அடிக்காமல்.காட்சிகள் அனைத்தையும் மிக மெதுவாக,நுணுக்கமாக எடுத்துள்ள விதம் மிக அருமை,நடுநிசி நாய்கள் பார்க்க தியடோர் செல்லும் முன் பார்த்தப் படம்,அங்கே போய் செம டென்ஷன் ஆய்டுச்சு,கொவ்தமிற்கு யாராவது நல்ல த்ரில்ளீர் படம் போட்டு காமிங்கப்பா....

MSK / Saravana said...

@டெனிம்: பரவாயில்லைங்க.. நீங்க உங்க பாணியில உங்க மொழியில ஒரு தடவ எழுதுங்க.. படிக்க ஆவலாயிருக்கிறேன். நன்றி..

நாஞ்சில் பிரதாப்™ said...

கெளதம் மேனனை இந்த படத்தை பார்க்கசொல்லி பரிந்துரைக்கலாம்.
டோரன்டடில் இதன் லின்க் கிடைக்கிறதா என்ன?

MSK / Saravana said...

@நாஞ்சில் பிரதாப் : கிடைக்கிறது நண்பரே. torrentz.com தளத்தில் தேடிப்பாருங்கள். நன்றி.

Raj said...

stagevu.com இங்கே போய் படத்தோட டைட்டில் கொடுத்து சர்ச் செய்தால் ஆன்லைனாகவோ இல்லை டவுன்லோட் செய்துகொள்ளலாம் - மிகவும் சிறந்த படம்.. ஆனா அண்ணாச்சி சொல்ற மாதிரி 80% ரத்தம் இல்லை ... ம் ம் ம் ஒரு 50 சதவீதம் சொல்லலாம். என்னைபொருதவரையில் ரொம்ப ஹாரர் இல்லை (இன்னும் கொஞ்ச நாளில் ஹாஸ்டல் படமே ஹாரர் இல்லை என்று சொல்லப்போறேன்னு நினைக்கிறன்)

Pareethi said...

The Man From Nowhere.
இப்படத்தின் விமர்சனத்தை உங்களிடம் எதிர் பார்க்கிறேன்.
http://nasthenka.blogspot.com/2011/03/man-from-nowhere.html

MSK / Saravana said...

@Raj : //இன்னும் கொஞ்ச நாளில் ஹாஸ்டல் படமே ஹாரர் இல்லை என்று சொல்லப்போறேன்னு நினைக்கிறன்//
ஹா.ஹா. ஹா.. இந்த gore திரைப்படங்களும் பார்க்க பார்க்க பயமில்லாமல் போகும்.. :)
நன்றி..


@Pareethi : செம டைமிங் பரீத்தி.. சமீபத்தில்தான் இப்படம் கைக்கு வந்ததது.. பார்த்துவிட்டு எழுதுகிறேன்.. :)
நன்றி..

எஸ்.கே said...

வலைச்சரத்தில் தங்கள் பதிவை அறிமுகப்படுத்தி பயனடைந்தேன்! மிக்க நன்றி!
http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_18.html

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..