Saturday, February 19, 2011

நடுநிசி நாய்கள் - திரைவிமர்சனம்


விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்திற்கு பிறகு கௌதமின் இயக்கத்தில் வந்திருக்கும் படம்தான் இந்த நடுநிசி நாய்கள். ஒரு சைக்கோ சீரியல் கில்லர் பற்றிய திரைப்படம். சிறுவயதிலேயே சொந்த தந்தையாலேயே பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப்படும் சிறுவன் ஒருவன் பின்னாளில் மனபிறழ்வு ஏற்பட்டு ஒரு தொடர் கொலைகாரனாக மாறி இளம்பெண்களை கடத்தி வன்புணர்ந்து கொலை செய்யும் அளவுக்கு மாறிவிடுகிறான்.
.

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள், அதனால் கொஞ்சம் மனநிலை பாதிக்கபட்டவன் போன்றவற்றைஎல்லாம் காதல் கொண்டேன் படத்தில் பார்த்தாயிற்று. கவுதம் இப்படத்தில் என்ன செய்திருக்கிறார் என்பதை பார்ப்போம்.

சைக்கோ சீரியல் கில்லர் படத்திற்காக இலக்கணங்கள் எதுவோ அதை அப்படியே பின்தொடர்ந்து படமெடுத்திருக்கிறார் கவுதம். முகத்திற்கு வெகு அருகில், நெற்றிக்கு மேலிருந்து படமெடுக்கும் கேமெரா பதிவில் வாக்குமூலம் தரும் சைக்கோ கில்லர், தலையை உதறிக்கொண்டு பிடித்துக்கொண்டு உணர்ச்சிவசப்படும், அல்லது வேறொரு மனிதனாய் பேசும் ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி மாதிரி நிறைய கிளிஷே காட்சிகள். psycho, the chaser, மாதிரி நிறைய படங்கள் நினைவுக்கு வந்து போகிறது. அந்த பார்ட்டி eyes wide shut படத்தை ஞாபக படுத்துகிறது. சைக்கோ திரைப்படங்களையும் ஒரு பார்முலாவில் அடக்குகிறார்கள் :(
.
படம் முழுக்க வீரா என்கிற அந்த தொடர் கொலைகளை செய்யும் இளைஞன் மட்டுமே. பாதி படத்திற்கு பின் சமீரா வருகிறார். படத்தின் திரைக்கதை கொஞ்சம் The Chaser படம் மாதிரி. படத்தின் மிகப்பெரும் பலம் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு. படத்தின் அதிகமான காட்சிகள் இரவில் நடக்கிறது. இரவை சிறப்பாக படம்பிடித்திருக்கிறார்.
.
உலகம் முழுக்க நிறைய பெண் குழந்தைகளும், அதே அளவில் ஆண் குழந்தைகளும் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர். அதேநேரம் அந்த குற்றங்களை செய்பவர்கள் அந்த குழந்தைக்கு வெகு அருகில் இருப்பவர்களே. இதையெல்லாம் தமிழ் சினிமாவில் காட்ட முடியாத என்று நினைத்திருந்த போது, அதை எடுத்த தைரியத்திற்காக கவுதமை பாராட்டவேண்டும். குறிப்பாக தந்தையாலேயே பாலியல் வன்முறைக்கு ஆளாகும் சிறுவன், பக்கத்து வீட்டு மீனாட்சியம்மா கதாப்பாத்திரம், இந்த மீனாட்சியம்மா கதாபாத்திரம் கலாச்சார காவலர்களை மிகுகோபமடைய வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
.
படத்தில் நிறைய குறைகள் இருக்கின்றன. ரொம்பவே போரடிக்கும் திரைக்கதை, ஒரு த்ரில்லர் கொஞ்சம் கூட த்ரில்லராய் இருக்காதது, நிறைய கிளிஷேக்கள், பழைய சைக்கோ திரைப்பட பார்முலாக்கள், லாஜிக்குகள் இல்லாதது போன்றவை. அதே நேரத்தில் பாடல்களோ அல்லது பின்னணியிசையோ இல்லாமல் படம் எடுக்கும் தைரியத்திற்காக கவுதமை பாராட்ட வேண்டும்.
.
நடுநிசி நாய்கள் - நல்ல முயற்சி. சிறப்பாக தர முயன்றிருக்கலாம். அதே நேரம் படம் பலவீனமானவர்களுக்கும் கலாச்சார காவலர்களுக்கும் ஏற்றது அல்ல.
.

19.02.2011

8 comments:

King Viswa said...

//நடுநிசி நாய்கள் - நல்ல முயற்சி. சிறப்பாக தர முயன்றிருக்கலாம். அதே நேரம் படம் பலவீனமானவர்களுக்கும் கலாச்சார காவலர்களுக்கும் ஏற்றது அல்ல//

மேக்கிங் வைஸ், படம் ஓக்கேதான். அந்த ஆரம்ப காட்சியே பிரமிக்க வைக்கிறது. ஆனால் அதன் பின்னர் படம் ஒரு மொக்கை. பலவீனமானவர்களுக்கு ஏற்றது அல்ல என்ற கருத்துடன் உடன்பாடு இல்லை.

கிங் விஸ்வா
இரண்டு புத்தம் புதிய தமிழ் காமிக்ஸ்கள் - இரும்புக் கை மாயாவி + சிக்பில் குழுவினர்

MSK / Saravana said...

@King Viswa :

//பலவீனமானவர்களுக்கு ஏற்றது அல்ல என்ற கருத்துடன் உடன்பாடு இல்லை.//

ஹா ஹா ஹா.. :))
பலவீனமானவர்கள் அப்படின்னா மொக்க படம் பார்க்கும் தைரியமில்லா பலவீனமானவர்கள் அப்படின்னு அர்த்தம். :))

அதே நேரம் அந்த அப்பா மற்றும் மீனாட்சியம்மா கதாபாத்திரம் பலவீனமானவர்களுக்கு இல்லைதானே.. 'என்னென்ன கண்றாவியெல்லாம் காட்டியிருக்கான் பாரு'ன்னு காதுபட கேட்டேன்..

நன்றி..

King Viswa said...

// ஒரு த்ரில்லர் கொஞ்சம் கூட த்ரில்லராய் இருக்காதது//

உங்க பதிவிலேயே இந்த வரிதான் இந்த படத்திற்கு மிகவும் பெருமை சேர்க்கும் விதத்தில் உள்ளது + MSK டச்.

King Viswa said...

உங்களுக்கு ஒரு கிசுகிசு தகவல்: படத்தின் இரண்டாம் பாகத்தில் வீராவும், சமந்தாவும் அந்த மனநல காப்பகத்தில் இருந்த தப்பித்து போய் Natural Born Killers படத்தில் வரும் ஜோடியை போல அட்டகாசம் செய்யப்போகிறார்கள்.

கிங் விஸ்வா
இரண்டு புத்தம் புதிய தமிழ் காமிக்ஸ்கள் - இரும்புக் கை மாயாவி + சிக்பில் குழுவினர்

முரளிகுமார் பத்மநாபன் said...

Nice view boss. :-)

சௌந்தர் said...

நல்ல விமர்சனம் எல்லோரும் படம் நல்லாயில்லை என்று சொல்றிங்க.....படம் பார்க்கலாம் இருந்தேன் ....இப்போ யோசிக்கிறேன்

MSK / Saravana said...

@King Viswa : இன்னொரு படமா??? :(((

@முரளிகுமார் பத்மநாபன் : நன்றிங்க.

@சௌந்தர் : யோசிங்க.. :) நன்றி.

USA விஜய் ரசிகன் said...

Good review sir , it will affect our culture.

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..