Original Title : Madeo (마더)
Director: Bong Joon-ho
IMDB Rating : 8.0/10
Rotten Tomatoes Rating : 95%
இயக்குனர் Bong Joon-ho-ன் இயக்கத்தில் நான் பார்த்த முதல் திரைப்படம் The Host (2006). நம்மில் அநேகர் பார்த்திருக்கக்கூடிய திரைப்படம். ஓரிரு வருடங்களுக்கு முன்பு அந்தத் திரைப்படத்தை பார்த்த போது அதன் இயக்குனரைப் பற்றியெல்லாம் நான் அறிந்திருக்கவுமில்லை. பின்னரும் கூட.
ஆனால் சமீபத்தில் இவரின் Memories of Murder (2003) திரைப்படத்தைப் பார்த்தபின்பு இவரின் மற்றத் திரைப்படங்களையெல்லாம் பார்த்தே ஆகவேண்டும் என்ற ஆவல் வந்ததது. இவர் இதுவரை இயக்கியத் திரைப்படங்கள் நாலே கால் மட்டுமே. இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போகும் திரைப்படம் இவரின் சமீபத்திய திரைப்படமான Mother (2009).
.
ஒரு முதிய அம்மா. மூலிகைகளை விற்பதும், அனுமதியற்ற Acupuncture வைத்தியம் செய்வதும் அவரின் தொழில். அவரின் பையன். அவன் இளைஞன் என்றாலும் மனதளவில் அப்படியில்லை. கொஞ்சம் Mentally Disturbed. எல்லாவற்றையும் உடனுடக்குடன் மறந்துவிடுபவன். எத்தனை வயதானாலும் தன் குழந்தையை குழந்தையாகவே கருதுவாள் அம்மா. இந்தக் குழந்தை மனதளவிலும் குழந்தை என்பதால் அவனை கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறாள். இவர்களின் வீடருகே இளம் பள்ளிச்சிறுமி கொலைசெய்யப்படுகிறாள் ஒரு மழையிரவில். காவல்துறை இந்த அம்மாவின் பையனை கைது செய்கிறது. தன் பையன் கொலையெல்லாம் செய்திருக்க வாய்ப்பில்லை என்று அந்த அம்மா மன்றாடுகிறாள். கொலை செய்தவனை எப்படியாவது கண்டுபிடித்து தன் பையனை காப்பாற்றவேண்டுமென்று போராடுகிறாள். இந்த தேடுதலே இத்திரைப்படம் Mother.
.
சிறப்பானக் கொரியத் திரைப்படங்களாக தேடித் தேடி பார்த்துக்கொண்டிருக்கிறேன். இவர்களின் மிகசிறப்பான பலம் கதை, திரைக்கதை, கதைசொல்லும் முறை, உணர்வுகளை உணர்வுகளாக காட்சியில் கொண்டு வரும் திறமை, இவர்களின் நடிகர்கள், ரத்தமும் சதையுமான யதார்த்தம், நூறு இளையராஜாக்கள் வாசிப்பது போன்ற மிகசிறப்பான பின்னணி இசை போன்றவை. ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் ஒரு கதையை திரைப்படமென்கிற காட்சி ஊடகத்தில் எப்படி கொண்டுவரவேண்டுமென்று தெரிந்த இயக்குனர்கள். இத்திரைப்படமும் அதற்கு கொஞ்சமும் விதிவிலக்கல்ல.
.
மேலும் ஒரு திரைப்படத்தின் கடைசிக்காட்சி எப்படி இருக்கவேண்டுமென்பதற்கு இவரின் இவ்விரு படங்கள் (Mother மற்றும் Memories of Murder) மிகச் சரியான உதாரணம் என்பேன். மேலும் பின்னணியிசை எப்படியிருக்கவேண்டுமென்பதற்கும். (இங்கு கடைசிக்காட்சி என்பதை கடைசிக்காட்சி என்பதாகவே புரிந்து கொள்ளவும். கிளைமாக்ஸ் என்பதாக புரிந்து கொள்ளவேண்டாம். இத்திரைப்படங்கள் உச்சக் காட்சி (climax) போன்றவற்றில் நம்பிக்கையற்றவை)
உண்மையில் இத்திரைப்படத்தின் (Mother) கடைசிக்காட்சியில் பிரமிப்புகளில் உச்சத்துக்கே சென்றேன் என்பதே உண்மை. அந்தக் கடைசிக்காட்சியில் அந்த அம்மா, அந்த சுற்றுலா பேருந்தில், நினைவுகளை உதறித் தள்ளிவிட்டு, சக மனிதர்களோடு, ஆடத்துவங்கும் காட்சியில் (முதல்காட்சியை போலவே), பின்னணியில் மாலை மஞ்சள் வெயிலில், அதிரும் காட்சியாக, அந்த பின்னணியிசையும், அதோடு அந்த நீண்டக்காட்சி முடிந்து பெயர்கள் திரையில் ஓடும்போது அப்படியே தொடரும் பின்னணியிசையும்....... உண்மையிலேயே காட்சியின் உச்சம்.. பிரமிப்பின் உச்சம்.. அற்புதத்தின் உச்சம்.. That was an Epic Scene..
.
Mother (2009) - நினைவுகளை உதறித்தள்ளத் துடிக்கும் தாய்மை..
.
Mother : Official Trailer
17.01.2010





10 comments:
இது ஒரு சிறப்பான படம், குறிப்பாக முடிவு.
இந்த இயக்குனரின் முதல் படத்தை நீங்கள் பார்த்துள்ளீர்களா? அது ஒரு உளவியல் ரீதியான பிரச்சினையை பற்றிய படம். மிகவும் நேர்த்தியாக சொல்லி இருப்பார்கள்.
இவரின் டோக்கியோ (ஒரு பாகம் இவர் இயக்கி இருப்பார்) கதையளவில் சுமார்தான் என்றாலும் அருமையான ஒரு பேண்டசி
கடைசி காட்சியை நீங்கள் விவரித்திருந்தவிதம் படத்தின் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தி இருக்கிறது. தேடி பிடித்து பார்க்க முயல்கிறேன்..
@King Viswa : முதல் படத்தையும், டோக்யோவும் இன்னும் பார்க்கல. ஆனா கையில் இருக்கு.. விரைவில் பார்த்துவிட்டு பதிவில் பகிர்கிறேன்.. நன்றி :)
@கவிதை காதலன் : நிச்சயம் பாருங்க. நன்றி..
Please write a review about "My sassy girl". Thanks.
நல்ல கொரியன் படத் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.நன்றி.
@Ara : நன்றி. My sassy girl திரைப்படம் பற்றி ஏற்கனவே நிறைய பேர் எழுதியிருக்காங்களே, நண்பரே.. அதனால்தான் யோசிக்கிறேன்..
@உலக சினிமா ரசிகன் : நன்றி..
எனக்கு இந்தக் கதை, ராம் படத்தை நினைவுபடுத்துது.... ஆனால், ராமுக்கு அப்புறம் தானே இது வந்தது :) . . அப்ப இதுனால என்ன தெரியுதுன்னா, தமிழ்ப்படத்தையும் சுடுறாங்கப்பா.... juz kidding :-) ...
Thanks for sharing MSK..
நன்றி கருந்தேள்.. :)
நன்றி லேகா.. :)
தமிழ் பட டைரக்டர்கள் இந்த படத்த நோட் பண்ணுங்கப்பா.
எடுத்தவுடனேயே என்னடா இந்தம்மா டான்ஸ் ஆடுது படத்த தப்பா டவுன்லோட் பண்ணிட்டோமான்னு நினைச்சேன்.
அம்மா மகன் இடையே உள்ள அன்யோன்யத்தை காண்பிக்கும் விதமாக (நடுநிசி கழிசடையை சொல்லவில்லை) - ஒரு காட்சியில் மகன் நின்றுகொண்டே உச்சா போவான். அம்மா ஊட்டி உணவு விட்ட பின்பு அவன் கடந்தவுடன் - அந்த இடத்தை சுத்தம் செய்வது.. 10 செகண்டுகளே இந்த காட்சி வந்தாலும் உணர்வுபூர்வமிக்கது இந்த படம்.
அம்மா ஓகே ஆனா அந்த பையன் இன்னும் சிறப்பா நடித்திருக்கலாம்.
Post a Comment