நண்பர்களனைவருக்கும் இனிய பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பொல்லாதவனுக்கு பிறகு தனுஷ்-வெற்றிமாறன்-G.V.பிரகாஷ் வெற்றிக்கூட்டணியில் வெளிவந்திருக்கும் படம் ஆடுகளம். பொல்லாதவனுக்கு பிறகான எதிர்பார்ப்பை வெற்றிமாறன் கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். சிறப்பாக வந்திருக்கிறது ஆடுகளம்.
.
சேவல் சண்டையில் பேட்டைக்காரன்தான் மதுரையிலேயே 40 வருடமாக கில்லாடி. (பேட்டைகாரனாக நடித்திருப்பவர் ஒரு கவிஞர், பெயர்தான் ஞாபகத்தில் வரமாட்டேனென்கிறது)அவரின் மூன்று முக்கிய ஆட்கள் ஒரு பெரியவர், கிஷோர், தனுஷ். இவர்களின் முக்கிய போட்டிக்காரன் உள்ளூர் போலிஸ் இன்ஸ்பெக்டர். எப்படியாவது பேட்டைக்காரனின் சேவலை ஒரு முறையாவது வென்றுவிட வேண்டுமென்பது அவரின் தீராத வெறி. திரைப்படத்தின் முதல் பாதி இவர்களின் சண்டைகளிலேயே விறுவிறுவென போகிறது. இதற்கிடையில் தனுஷ், ஆங்கிலோ-இந்தியன் பெண்ணான தப்சி பானு மீது காதல் கொள்கிறார். இதற்கிடையில் பேட்டைக்காரனின் உற்ற நண்பனை எதிர்சாரர் போட்டுத்தள்ள, ஒரு பெரிய சபதத்தின் பின், ஒரு பெரிய சேவல் சண்டை போட்டியில் இரண்டு குழுவும் மோதிக்கொள்கிறது. விறுவிறுப்பான நரம்புகள் அதிரும் சேவல் சண்டை. தனுஷின் சேவல் முக்கிய கட்டத்தில் எதிர்சாரரின் சேவலை மூன்று முறை தோற்கடித்து , மூன்று லட்சம் பணமும் வெற்றி பெறுகிறார். தன்பேச்சை கேட்காத தனுஷ் மீது பேட்டைக்காரனின் வன்மம் படரத் துவங்க இந்த சண்டைச் சேவல்களின் வாழ்க்கை என்னவானது என்பது மீதிப்பாதி.
.
பொல்லாதவனுக்கு பின்பு வெற்றிமாறனின் இரண்டாவது படம் என்பதால் மிகப்பெரும் எதிர்பார்ப்பு எனக்கிருந்தது. பொல்லாதவனை விடவும் சிறப்பாக எடுத்திருக்கிறார். மதுரையின் பேச்சு வழக்கும், சேவல் சண்டைகளின் உக்கிரமும், மனிதர்களின் வன்மத்தையும் மிகசிறப்பாக படத்தில் கொண்டுவந்திருக்கிறார். குறிப்பாக கதாப்பாத்திர தேர்வு மிகமிக சிறப்பு. பேட்டைக்காரன், தனுஷ், கிஷோர், தனுஷின் அம்மா, தனுஷின் நண்பர், போலிஸ் இன்ஸ்பெக்டர் என எல்லாருமே அருமை. தனுஷின் காதல் கதை தேவையில்லாதது என்று சொல்ல நினைத்தாலும், கடைசியில் தனுஷுக்கு வேறு யார் இருந்திருப்பார்கள் என்பதற்காக அந்த நாயகியும் அவசியமாகிறது. மதுரை வட்டார மொழி வழக்கில் வசனங்களும் அருமை. G.V.பிரகாஷின் பின்னணியிசையும் அருமை. மேலும் எந்த பாடலையும் பாடல் காட்சியாய் படமாக்காமல், பின்னணியில் மட்டும் ஒலிக்கவைத்திருப்பது சிறப்பு. அதேநேரம் "ஒத்த சொல்லால" பாடலை பாடல் காட்சியாய் திரையில் எதிர்பார்த்திருந்தேன் என்பதும் உண்மை. அதேபோல் வரும் இரண்டு சண்டைக்காட்சியும் இயல்பான சண்டையாகவே இருந்தது. சினிமா சண்டைகாட்சிகள் அல்ல.
.
பல காட்சிகள் சிறப்பு. போலிஸ் ஸ்டேஷனில் பேட்டைக்காரனுக்கு நடந்த அவமானம் முதல் கடைசிக்காட்சியில் தனுஷிடம் எந்த விளக்கமும் கொடுக்காமல் முடித்துக்கொள்வது மாதிரியான காட்சிகள் மிக சிறப்பு. அவமானங்களை பதிவு செய்யாமல் விட்டிருப்பது சிறப்பு. சேவல்களை துன்புறுத்தக் கூடாதென்பதற்க்காக சேவல் சண்டைகளில் நிறையகாட்சிகளை கிராபிக்ஸ் மூலம் உருவாக்கியிருக்கிறார்கள். கடந்த இரண்டுமூன்று படங்களாக வெறுப்பேற்றிய தனுஷ்க்கு அல்வா மாதிரியான கதாப்பாத்திரம், பட்டையை கிளப்பியிருக்கிறார். தனுஷ்க்கு வெற்றிப்படமாக மட்டுமல்லாமல் பெயர் வாங்கித்தரும் படமாகவும் வந்திருக்கிறது.
நிச்சயம் இந்த புதுவருடத்தின் முதல் சிறப்பான பங்களிப்பாக இந்த ஆடுகளம் வந்திருக்கிறது. தரமான தமிழ்த் திரைப்படம். உலகத் திரைப்பட விழாக்களில் பங்குபெறகூட அனுப்பலாம். வெற்றிமாறனுக்கும் தனுஷ்க்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். வெற்றிமாறன் தமிழ்சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம்.
படத்தில் பணியாற்றிய அத்துணை கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள். வருடத்துவக்கத்திலேயே சன் பிக்ச்ஸ்ர்சுக்கு வெற்றிப்படம்.
.
ஆடுகளம் - வஞ்சத்தில் வீழும் சண்டைச்சேவல்கள்
.
டிஸ்கி 1 : பொல்லாதவன் பைசைக்கிள் தீவ்ஸ்'ன் உல்டா என்று சிலர் சொல்லியதை போல் இந்த ஆடுகளம் அமேரோஸ் பெரோசின் உல்டா என்று யாரேனும் சொல்லாடாதீங்கப்பு. தமிழில் நாலு பேர்தான் நல்ல படம் எடுக்கணும்ன்னு இருக்காங்க. அவங்களையும் தொரத்திடாதீங்க. (ஆனால் உண்மையாகவே எங்கிருந்தோ சுட்டிருந்தால் மட்டும் சொல்லவும்)
டிஸ்கி 2 : சேவல் காடு என்னும் சிறுகதையைத்தான் ஆடுகளமாய் எடுத்திருக்கிறார்கள் என்றொரு தகவல் உலவுகிறது. நான் சேவல் காடு படித்திருக்கவில்லைஎன்பதால் அதைப் பற்றி எந்தகருத்தும் சொல்ல இயலவில்லை.
14.01.2011





22 comments:
hot review
Thanks..
என்னா ஸ்பீடுப்பா???
நான் படத்தை சொல்லலை.. உங்க வேகமான விமர்சனத்தை சொன்னேன்.. நைஸ்..
பொங்கல் வாழ்த்துக்கள்.
அடுத்தபடியாக என்ன படம் பார்க்கும் உத்தேசம் இந்த பொங்கலுக்கு? சிறுத்தை? காவலன் (வந்தால்?)
சாமானியனா வர பாத்திரங்களில் தனுஷ் நடிப்பு எனக்குப் பிடிக்கும். ம், அப்ப படம் பார்கலாம்ற.
அனுஜன்யா
@sakthistudycentre-கருன் : நன்றி..
@கவிதை காதலன் : நன்றி :)
@King Viswa : நன்றி. சிறுத்தை போவேன் என்று நினைக்கிறேன்.. :)
என்னா ஸ்பீடுப்பா???
நான் ஓட்டு போட்டுட்டேன்..
http://sakthistudycentre.blogspot.com
@அனுஜன்யா : நிச்சயம் பார்க்கலாம்.. நன்றி :)
@sakthistudycentre-கருன் : நன்றி..
உங்களோட கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா.. என்னா ஸ்பீட்... நிச்சயம் பார்க்க போறேன்..
//சேவல் சண்டையில் பேட்டைக்காரன்தான் மதுரையிலேயே 40 வருடமாக கில்லாடி. (பேட்டைகாரனாக நடித்திருப்பவர் ஒரு கவிஞர், பெயர்தான் ஞாபகத்தில் வரமாட்டேனென்கிறது)அவரின் மூன்று முக்கிய ஆட்கள் ஒரு பெரியவர், கிஷோர், தனுஷ்.//
அப்போ பேட்டைக்காரனும், தனுஷும் ஒரே க்ரூப்தானே?
// இவர்களின் முக்கிய போட்டிக்காரன் உள்ளூர் போலிஸ் இன்ஸ்பெக்டர். எப்படியாவது பேட்டைக்காரனின் சேவலை ஒரு முறையாவது வென்றுவிட வேண்டுமென்பது அவரின் தீராத வெறி. திரைப்படத்தின் முதல் பாதி இவர்களின் சண்டைகளிலேயே விறுவிறுவென போகிறது.//
அதாவது தனூஷ் க்ரூப்பும், போலீஸ்காரன் க்ரூப்பும் சண்டை போடுறாங்க. ரைட்டா?
//இதற்கிடையில் தனுஷ், ஆங்கிலோ-இந்தியன் பெண்ணான தப்சி பானு மீது காதல் கொள்கிறார். இதற்கிடையில் பேட்டைக்காரனின் உற்ற நண்பனை எதிர்சாரர் போட்டுத்தள்ள, ஒரு பெரிய சபதத்தின் பின், ஒரு பெரிய சேவல் சண்டை போட்டியில் இரண்டு குழுவும் மோதிக்கொள்கிறது.//
அதாவது தனூஷ் க்ரூப்பும், எதிர்சாராரும்.. சரியா?
// விறுவிறுப்பான நரம்புகள் அதிரும் சேவல் சண்டை. தனுஷின் சேவல் முக்கிய கட்டத்தில் எதிர்சாரரின் சேவலை மூன்று முறை தோற்கடித்து , மூன்று லட்சம் பணமும் வெற்றி பெறுகிறார். தன்பேச்சை கேட்காத தனுஷ் மீது பேட்டைக்காரனின் வன்மம் படரத் துவங்க இந்த சண்டைச் சேவல்களின் வாழ்க்கை என்னவானது என்பது மீதிப்பாதி.//
இங்க எப்படி பேட்டைக்காரனும் தனுஷும் எதிரெதிர் அணி ஆனார்கள்? படம் பாருங்கன்னு சொல்லாதீங்க. நீங்க சொன்ன கதைல ஏன் இந்த ஜம்ப்?
நானும் வெற்றிமாறனின் படத்தை வெகுவாக எதிர்பார்த்திருந்தேன். உங்கள் விமர்சனத்திலிருந்து ஒரு நல்ல படம் என்று புரிகிறது.
பல காட்சிகள் சிறப்பு. போலிஸ் ஸ்டேஷனில் பேட்டைக்காரனுக்கு நடந்த அவமானம் முதல் கடைசிக்காட்சியில் தனுஷிடம் எந்த விளக்கமும் கொடுக்காமல் முடித்துக்கொள்வது மாதிரியான காட்சிகள் மிக சிறப்பு.
மேலும் எந்த பாடலையும் பாடல் காட்சியாய் படமாக்காமல், பின்னணியில் மட்டும் ஒலிக்கவைத்திருப்பது சிறப்பு.
தமிழ்சினிமாவில் “மன்மதன் அம்பு” போன்ற புதுமை என்ற பெயரில் குப்பையடிக்கும் படங்களைத் தவிர்த்து ஆடுகளம் போன்றவையும் வரத்தான் செய்கின்றன...
உலகத் திரைப்பட விழாக்களில் பங்குபெறகூட அனுப்பலாம்.
எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே இருக்கிறது... தமிழில் அப்படியொருபடமா?
இன்றிரவு இந்த படத்திற்குப் போகலாமென்றிருக்கிறோம்>!!
விமர்சனம் நச்
தனுஷின் காதல் கதை தேவையில்லாதது என்று சொல்ல நினைத்தாலும், கடைசியில் தனுஷுக்கு வேறு யார் இருந்திருப்பார்கள் என்பதற்காக அந்த நாயகியும் அவசியமாகிறது.
நம்ம தமிழ்சினிமாவுல கதை இருக்கோ இல்லையோ, காதல் இருக்கணும்... இது ஒரு பாழாப்போன விதி!!
@ஜீவபாலன் : நன்றி.. :)
@கார்க்கி : கொஞ்சம் கொச்சக் கொச்சன்னு எழுதிட்டேன்னு நெனைக்கிறேன்.. சரி விடுங்க.. :)
//இங்க எப்படி பேட்டைக்காரனும் தனுஷும் எதிரெதிர் அணி ஆனார்கள்? படம் பாருங்கன்னு சொல்லாதீங்க. நீங்க சொன்ன கதைல ஏன் இந்த ஜம்ப்?//
ஆனா சகா, அந்த வன்மம்தான் இரண்டாம் பாதியாகிறது.. அதை சொல்லவேண்டாம்ன்னு சொல்லல.. இதான் மேட்டரு.. //தன்பேச்சை கேட்காத தனுஷ் மீது பேட்டைக்காரனின் வன்மம்//
நன்றி சகா..
@ஆதவா : //எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே இருக்கிறது... தமிழில் அப்படியொருபடமா?//
அவ்வ்வ்வ். கொஞ்சம் ஓவரா எழுதிட்டனோ?? கொஞ்சம் எதிர்பார்ப்பை கொறச்சிக்கிட்டே போங்க தல. :)
//இது ஒரு பாழாப்போன விதி!//
இதுக்குத்தான் திட்டனும்ன்னு நெனச்சேன்.. ஆனா கடைசிக்காட்சியில் தனுஷ் யாரும் இல்லாத மாதிரி ஆகியிருப்பார்..
நன்றி..
@சி.பி.செந்தில்குமார் : நன்றிண்ணா.. :)
எதிர்பார்ப்பை கூட்டி விட்டீர்கள்....
படம் எப்படியோ விமர்சனம் சூப்பர்!
antha kavingarin peyar va.sa.jeyabalan.. ela kavingar avar.. padam kandipa parkanum.. nandri...
After movie ends in title cards i found the name of director of amerros perros...
உலகத் திரைப்பட விழாக்களில் பங்குபெறகூட அனுப்பலாம்.
GREAT Joke.
என்ன கொடுமைங்க. தாங்க முடியவில்லை
@அனுஜன்யா : பாருங்க அண்ணா.. நன்றி :)
@guru : நன்றி..
@எஸ்.கே : நன்றி..
@இராமசாமி : நன்றி
@புகழேந்தி : அப்படியா?? நான் கவனிக்கலை. நன்றி..
@SENTHILKUMARAN : இந்த வரியை எழுதும்போதே கொஞ்சம் யோசித்தேன். ஆனா நிச்சயமா கொஞ்சம் ட்ரிம் பண்ணி திரைப்பட விழாக்களுக்கு அனுப்பலாம் என்பது என் கருத்து.. நன்றி.
சிறுத்தை,காவலன்,ஆடுகளம் ஆகிய மூன்று படங்களும் நன்றாக உள்ளது போலவே........
நன்றி லக்கி லிமட்..
i just came to ur blog through karundhel..am just a filmbuff.. u can watch the filmography at the endtitles.. VEtrimaran is honest in this way..he has published the filmography and bibliography..
Post a Comment