Saturday, November 27, 2010

நந்தலாலா - திரைவிமர்சனம்


Butterfly Surya பதிவின் மூலம்தான், ஜப்பானிய இயக்குனர் Takeshi Kitano-ன் இயக்கத்தில் வெளிவந்த Kikujirô no natsu (1999) படத்தை அறிந்துகொண்டேன் என்று நினைக்கிறேன். ஒரு வருடத்திற்கும் மேலாக கையில் இருந்தும் இன்னும் ஏன் பார்க்காமல் வைத்திருக்கிறேன் என்றே தெரியவில்லை. இப்படத்தை தழுவியே "நந்தலாலா" எடுக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்ட பின்பும், Kikujirô no natsu (1999)-வை பார்க்க விரும்பியும், முடியாமல் தள்ளித்தள்ளி போகிறது . இதற்காகவே விரைவில் Kikujirô no natsu (1999) பார்க்கப் போகிறேன். இப்படத்தை பார்த்த பின்புதான் "நந்தலாலா" பற்றி எழுதியிருக்கவேண்டும். மிக அதிக வேலைப்பளு காரணமாக அது சாத்தியப்படவில்லை. நிச்சயம் அடுத்தவாரத்தில் இவ்விரண்டு படங்களின் ஒற்றுமை, வேற்றுமைகளை எழுதுகிறேன்.
.

Tuesday, November 23, 2010

Scott Pilgrim vs. the World (2010)

.
IMDB RATING : 8.0/10
ROTTON TOMATOES : 81%
.

Shaun of the Dead மற்றும் Hot Fuzz ஆகிய திரைப்படங்களை இயக்கிய Edgar Wright இயக்கத்தில் இந்த வருடம் வெளிவந்தத் திரைப்படமிது. Bryan Lee O'Malley படைப்பில் ஆறு புத்தகங்களாக வந்த Scott Pilgrim காமிக் நாவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள். நல்ல விமர்சனங்களை பெற்றிருந்த போதும் வசூல்ரீதியாக வெற்றிபெறாமல் போனது இத்திரைப்படம்.
.

Tuesday, November 9, 2010

Kung Fu Panda 2 in 3D - Kaboom Of Doom Official Trailer

PO is Back.. :)



09.11.2010

Friday, November 5, 2010

வ (குவாட்டர் கட்டிங்) - திரைவிமர்சனம்


.

புஷ்கர் - காயத்ரியின் முதல் படமான ஓரம்போ (ஆட்டோ) எனக்கு பிடித்திருந்தது. என்பதனாலேயே இந்த படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஒரு முன்னிரவில் சென்னைக்கு வருகிறார் சுறா (மிர்ச்சி சிவா). அவரை வரவேற்கிறார், சுறாவின் வருங்கால மாமா S.P.B.சரண். விடிகாலை, சுறா, சவுதிக்கு பறக்க போகிறார் (சவுதியில் வேலை). இருப்பதோ இன்று ஒரு இரவு. சவுதியில் மதுவுக்கு தடை. கடைசியாக தாய்த் தமிழ்நாட்டில் ஒரு குவாட்டர் அடிக்க ஆசைப்படுகிறார். ஆனால் தேர்தல் காரணமாக டாஸ்மாக்குகள் மூடல். எப்படியாவது ஒரு குவாட்டர் தேத்திவிட வேண்டுமென்று சிவாவும், சரணும் குட்டிக்கரணம் அடிப்பதே படம். கூடவே ஜான் விஜய், மற்றும் இன்னபிற ஓரம் போ நடிகர்கள்.
.

உத்தமபுத்திரன் - திரைவிமர்சனம்


.

தனக்கான "ஆடுகளத்தில்" நன்றாகவே ஆடிக்கொண்டிருந்த தனுஷ்க்கு என்ன ஆயிற்று?? ஒருவேளை "கெட்டப் பசங்களின் ஹீரோ" என்கிற இமேஜை உடைக்க விரும்பி இந்த மாதிரியான family-comedy-emotional-drama படங்களில் நடிக்கிறாரா அல்லது தெலுங்கில் வெற்றிபெறும் படங்களை விஜய், ஜெயம் ரவிக்கு ஈடாக ரீமேக்கித் தள்ளி விரும்புகிறாரா அல்லது தனது நண்பரான இயக்குனர் மித்ரன் ஜவஹருடன் தொடர்ந்து படம் (யாரடி நீ மோகினி, குட்டி, உத்தம புத்திரன்) செய்வதை விரும்புகிறாரா என்று புரியவில்லை.
.

Wednesday, November 3, 2010

திரைத்துணுக்குகள் 03.11.10 - The Dark Knight Rises (2012)


Batman 3
Batman மூன்றாம் படம் எடுப்பதில் ஆரம்பம் முதலே அவ்வளவாக ஈடுபாடு காட்டாத Christopher Nolan, பிறகு தனது சகோதரர் Jonathan Nolan எழுதிய கதை பிடித்திருப்பதாகவும், கதையை செதுக்கிவிட்டு பின், Batman 3 எடுக்கப்போவதாகவும் அறிவித்திருந்தார்.மேலும் இப்படம் முதல் இரண்டு படங்களுக்கு Conclusive-ஆக இருக்கும் என்ற நோலன், இப்படம் தான் இயக்கிய இரு Batman படங்களின் முடிவாக இருக்குமென்றும் கூறியிருந்தார். (Nolan's Batman Trilogy). நோலன், கடந்த வாரம் இப்படத்தின் பெயரை வெளியிட்டார். The Dark Knight Rises (2012). July 20, 2012 -ல் படம் வெளியாகும்.

Monday, November 1, 2010

Millennium Trilogy - The Girl with the Dragon Tattoo : Swedish

மதம் சார்ந்தும், அரசியல் கொள்கைகள் சார்ந்தும், அதிகாரம் சார்ந்தும், தனிப்பட்ட முறையிலும், பெண்கள் மீது, குறிப்பாக சிறுமிகள் மீது நடத்தப்படுகிற பாலியல் வன்முறையை மையமாக வைத்து (inspired from true events), ஸ்வீடிஷ் எழுத்தாளரும் பத்திரிக்கையாளரும் Stieg Larsson, எழுதிய மூன்று நாவல்கள் தான் Millennium Trilogy. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் இந்நாவல்களை திரைப்படமாக்கியிருக்கிறார்கள். இத்திரைப்படங்களை ஹாலிவுட் மறுவுருவாக்கம் செய்து வருகிறது. எனக்கு பிடித்த ஹாலிவுட் இயக்குனர்களில் ஒருவரான David Fincher, தற்போது The Girl with the Dragon Tattoo படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.
.

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..