Saturday, October 30, 2010

புதுசுக் கண்ணா.. புதுசு..

அன்பின் நண்பர்களுக்கு,

இந்த தளத்திற்காக புதியதாய் ஒரு டொமைன் வாங்கியிருக்கிறேன். http://www.ThaCinema.com/

நன்றாக கவனிக்கவும் The அல்ல Tha.
TheCinema.com கிடைக்கவில்லை என்பதனால் e பதிலாக a. (ஒரு குருட்டு ஐடியா :))

ஆனால் மிக சுறுசுறுப்பாக ஏற்கனவே வாங்கியிருந்த TheMSK.com டொமைனில் இந்த தளத்தை Blog.TheMSK.com என்று configure செய்துவிட்டதால் இப்போது சின்ன பிரச்சனை ஆகிவிட்டது என்று கருதினேன். ஆனால் Blog.TheMSK.com முகவரியை, இந்த ThaCinema.com தளத்திற்கு Forward செய்திருக்கிறேன். இதுவும் உதவியாய் இருக்குமென்று நினைக்கிறேன்..

msk-cinema.blogspot.com முகவரியின் மூலம் வருபவர்களுக்கும், ரீடரில் படிப்பவர்களுக்கும் பிரச்சனை இருக்காது.

இனி இந்த தளம். http://www.ThaCinema.com/

மிக்க நன்றி. தொடர்ச்சியாய் சினிமா பற்றி பேசுவோம். :)

30.10.2010

Wednesday, October 27, 2010

Trainspotting (1996) - மிகை போதை


IMDB RATING : 8.2/10
.

Irvine Welsh எழுதிய நாவலை அடிப்படையாகக்கொண்டு, பிரிட்டிஷ் இயக்குனர் Danny Boyle இயக்கத்தில் வெளிவந்த Scottish திரைப்படம் Trainspotting (1996). Slumdog Millionaire படம் மூலமாகத்தான் இயக்குனர் Danny Boyle அறிமுகம் எனக்கு. இவரின் இயக்கத்தில், Leonardo DiCaprio நடிப்பில் வந்த The Beach (2000) படமும் எனக்கு பிடித்திருந்தது. இந்த Trainspotting திரைப்படம் மிகுந்த குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். நல்ல விமர்சனகளை பெற்ற இத்திரைப்படத்தை "பிரிட்டிஷ் pulp fiction" என்று விளம்பரம் செய்து அமெரிக்காவிலும் வெளியிட்டார்கள். நூறு சிறந்த பிரிட்டிஷ் திரைப்படங்களில் ஒன்று என்று British Film Institute மதிப்பிட்டிருக்கிறது. மிக சிறந்த scottish திரைப்படம் இது என்று பலரும் கருதுகிறார்கள். (நன்றி Wiki)
.

Sunday, October 10, 2010

Doug Jones - வேடதாரி


Star wars, Alien, MIB, போன்ற Sci-Fi/வேற்றுகிரகவாசிகள் நிறைந்த படங்கள்; LOTR, Harry potter, Narnia போன்ற மாய உலக படங்கள்; பேய் படங்கள், myth படங்களிலெல்லாம் விதவிதமான கற்பனை உயிரினங்கள், மனிதர்கள், பேய்கள், வேற்றுகிரகவாசிகள் வருவதை பார்த்திருப்போம். அந்த உயிரிகளாக வேடம் கட்டியவர்களை பற்றி நான் யோசித்து இருக்கிறேனே தவிர, அவர்கள் யார் என்பதை நான் தேடிப் பார்த்ததே இல்லை. ஆனால் சமீபத்திய Pan's Labyrinth பதிவுக்காகப் படத்தை இரண்டாம் முறையாகப் பார்த்தபின் அந்த வேடமணிந்தவர் யார் என்று தேடிப் பார்க்கவைத்தது படம். குறிப்பாக குழந்தைகளை உண்ணும் Thin Pale Yellow Man கதாபாத்திரத்தின் உடல்மொழி. Doug Jones. இந்த கலைஞன் தான் அந்த வேடதாரி.

(Pans Labyrinth படத்தின் உருவாக்கம் பற்றிய ஒரு அருமையான சுட்டி. படிக்கத் தவறாதீர்..)

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..