.
கதைத்தளம் Vs கதை
பலபேர் தங்கள் பதிவிலோ அல்லது பின்னூட்டங்களிலோ அன்பே சிவம், Planes Trains and Automobiles படத்தை காப்பியடித்தது. ஆய்த எழுத்து, Amores Perros படத்தை காப்பியடித்தது. விருமாண்டி, Rashomon படத்தை காப்பியடித்தது என்று போகிற போக்கில் குற்றம் சொல்வதை படிக்கும் போதெல்லாம் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.
ஏனென்றால் அவ்வை ஷண்முகி, Mrs. Doubtfire படத்தை காப்பியடித்தது என்று சொன்னாலோ அல்லது லாடம், Lucky Number Slevin படத்தை காப்பியடித்தது என்று சொன்னாலோ, பச்சைக்கிளி முத்துசரம், Derailed படத்தை காப்பியடித்தது என்று சொன்னாலோ, சிவா மனசுல சக்தி கொஞ்சம் மாற்றங்களோடு My Sassy Girl படத்தை காப்பியடித்தது என்று சொன்னாலோ, அது நியாமான குற்றசாட்டு.
ஆனால் Flashback, Non Linear, Reverese chronological மாதிரி, "மாற்றுக் கருத்து கொண்ட இருவரின் சிக்கலான பயணம்", "ஒரு புள்ளியில் மோதிச்சிதறும் மூன்று கதைகள்", "ஒவ்வொருவரின் பார்வையிலும் ஒவ்வொரு மாதிரியாக தோற்றமளிக்கும் கதை" என்பதெல்லாம் வெறும் தளம்தானே. அந்த தளத்தின் மீது தங்கள் கதைகளை கட்டமைக்கும் இயக்குனரை "காப்பியடிக்கிறான்" என்று குற்றம் சொல்வது சரியாக வராது என்பது என் எண்ணம்.
மிகப்பிடிக்கும் பாடல்களின் மீது படுத்துருளுதல்
2 weeks ago





