Saturday, July 31, 2010

ரஜினி எனும் மீப்பெரும் பிம்பம்..




எந்திரன் திரைப்படத்தின் பாடல்கள் இன்று வெளியாகின்றன. ரஜினியின் திரைப்படங்கள் வெளியாகும் நேரங்கள் கொண்டாட்ட மனநிலையை தருபவை. இப்போதெல்லாம் டிக்கெட் என்பததெல்லாம் பிரச்சனையாக இருக்காது, சென்னையை பொறுத்தவரை. நிறைய மல்டிப்ளெக்ஸ், நிறைய திரையரங்குகளில் வெளியாவது, ஆன்லைன் புக்கிங் என வந்துவிட்டதால், முதல் நாள் படம் பார்ப்பதெல்லாம் பெரிய பிரச்சனையே அல்ல. நிச்சயம் முப்பது அல்லது நாற்பது வயதுக்காரர்களுக்கு, ரஜினியின் ஆரம்ப கால ரசிகர்களுக்கு, அந்தகாலத்தில் கிடைத்த கொண்டாட்ட மனநிலை என்னை போன்ற இருபது+ வயதினருக்கு கிடைப்பதரிது என்றாலும் இப்போதும் ரஜினியின் திரைப்படங்களின் மீதான ஆர்வம் குறைவதில்லை.

Saturday, July 24, 2010

தில்லாலங்கடி - The Sorcerer's Apprentice [2010] - திரைவிமர்சனம்


தெலுங்கில் கடந்த வருடம் வெற்றிகரமாக ஓடிய ரவி தேஜாவின் "கிக்" திரைப்படத்தை ரீமேக்கியிருக்கிறார்கள். எனக்கு "ஜெயம் ராஜா" ரீமேக்கும் படங்கள் என்றாலே கொஞ்சம் ஒவ்வாமை. படத்தில் எல்லாருமே குவாட்டர் ரம் அடிச்ச மாதிரி ஓவர் எனர்ஜிடிக்கா இருப்பாங்க. மேலும் படம் முழுக்க குத்தாட்டம் போட்டு விட்டு, கடைசி காட்சிகளில் நீதி சொல்வது எல்லாம் கடுப்படிக்கிற அழுதப்பழசு விஷயங்கள். இருந்தாலும் தமன்னா-க்காக சென்றேன். :) வழமை போலவே இப்படத்திலும் ஜெயம் ரவி, தமன்னா, ஷ்யாம், பிரபு, சுகாசினி, லிவிங்க்ஸ்டன், சத்யன், சந்தானம், வடிவேலு, மயில்சாமி, கஞ்சாகருப்பு (ஏன் விவேக்கை மட்டும் விட்டுட்டீங்க) ராதாரவி, மன்சூர் அலிகான், தியாகு, நளினி, மனோபாலா, இன்னும்ம்ம் பெயர் தெரியாத ஏகப்பட்ட நடிகர்கள். யப்பா சாமி.. மொத்த தமிழ் திரையுலக நடிகர்களையும் வெச்சி ஒரு படம். (அப்படியே விஜயகாந்த், சரத்குமார், கமல், ரஜினி கூட்டிட்டு வந்திருந்தா, நடிகர் சங்க நிதி வசூல் செய்திருக்கலாம்).

Friday, July 23, 2010

The Ghost Writer [2010] - முன்னாள் பிரிட்டிஷ் பிரதமரும் அமெரிக்க உளவுத்துறையும்..


IMDB RATING : 7.8/10
.

இயக்குனர் Roman Polanski இயக்கத்தில், இந்தவருடம் வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் The Ghost Writer. Chinatown (1974), The Pianist (2002), Oliver Twist (2005) போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களை இயக்கியவர்தான் இயக்குனர் Roman Polanski. நிறைய controversies மிகுந்த நபர். குழந்தைகள் மீதான பாலியல் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர். இந்தப்படத்தைக்கூட House Arrest-ல் இருந்தபடிதான் இயக்கியிருக்கிறார். கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் தான் வீட்டு சிறையில் இருந்து வெளிவந்திருக்கிறார்.
.
இத்திரைப்படம் The Ghost என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேரை மறைமுக அடிப்படையாக கொண்டு புனையப்பட்ட நாவல். முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி ப்ளேர் தன் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவை வழங்கியது ஏன் என்பதை சொல்கிற நாவலது.

Tuesday, July 20, 2010

Kick Ass [2010] - சூப்பர் ஹீரோக்களின் நவீன வடிவங்கள்..



WATCHMEN (2009)

WATCHMEN (2009) : IMDB RATING :: 7.8/10


Film Noir திரைப்படங்கள் மற்றும் காமிக்ஸ் திரைப்படங்கள் மீதான இயக்குனர்கள் மற்றும் ரசிகர்களின் கவர்ச்சி, சூப்பர் ஹீரோ படங்களையும் விட்டுவைக்கவில்லை அல்லது சூப்பர் ஹீரோக்களின் கதைகளை படமாக்குகையில் Default Template வடிவத்தில் படமாக்கும் கொடுமையிலிருந்து விடு்பட்டு, வேறு வடிவங்களில் திரைப்படமாக்கும் முயற்சி என்றே கருதவேண்டியிருக்கிறது. அவ்வகையில் எனக்கு பிடித்த திரைப்படங்கள் நோலனின் பேட்மேன் சீரிஸ் திரைப்படங்கள். நவீன வடிவ சூப்பர் ஹீரோ. நோலன், பொத்தாம் பொதுவான சூப்பர் ஹீரோ அணுகுமுறை அல்லாது பேட்மேனை (கூடவே ஜோக்கரும்) வடிவமைத்திருந்தார். போலவே கடந்த வருடத்தின் WatchMen திரைப்படமும், இவ்வருடத்தின் Kick Ass திரைப்படமும் முக்கியமானவையாக தோன்றுகின்றன. WatchMen திரைப்படத்தை பற்றி படம் வந்த புதிதில் பாலா எழுதியிருந்தார். அத்திரைப்படத்தின் திரைப்பட உருவாக்கமும் மிக வித்தியாசமான காட்சி அனுபவமாகவே இருந்தது.

Saturday, July 17, 2010

Inception [2010] - Christopher Nolan-ன் பரிணாம வளர்ச்சி ?!?!?!


"உங்கள் கனவுகளில் நல்லதும் நடக்கலாம், கெட்டதும் நடக்கலாம். நேசிப்பவர்கள் விலகலாம். வெறுப்பவர்கள் நெருங்கிவரலாம். புதிர்பாதைகளினுள் சிக்கி திணறலாம். கொலைகளை செய்யலாம். தற்கொலை செய்துகொள்ளலாம். பிடித்த பெண்ணோடு கடற்கரையில் கைகோர்த்து நடக்கலாம். ஆனால் உங்கள் கனவுகளில் நடப்பவை அனைத்தும் நீங்கள் விரும்பியவே. உங்கள் உள்ளுணர்வின் விருப்பமே". என்பது மிக தட்டையாக என் வார்த்தைகளில் நான் சொல்லியிருப்பது, கனவுகளை பற்றி ஆராய்ச்சிகள் செய்து, கனவுகளுக்கு முதல் அறிவியல் விளக்கம் கொடுத்த சிக்மன்ட் பிராய்டின் கருத்து. The Interpretation of Dreams புத்தகத்தில் நிறைய Case Studies-களோடு பிராய்ட் விளக்கியிருக்கிறார்.
.
கனவுகளை பற்றிய ஓரிரு அறிவியல் கணிப்புகள் :

  • உங்களுக்கு முன்பின் தெரியாத ஒருவரை கனவில் காண்பதரிது. அப்படியே கண்டாலும் விழித்தபின் அந்த முகத்தை நினைவில் கொண்டு வரவே முடியாது.
  • கனவுகள் சில நொடிகள் முதல் ஓரிரு நிமிடங்கள் வரையே நீடிப்பதுண்டு. ஆனால் நாம் பலமணி நேரங்கள் கனவில் இருந்ததை போல் வாழ்ந்ததை போல் உணர்கிறோம்.

ஆனால் என்னை பொறுத்தவரை கனவுகள் மிகவும் அமானுஷ்யமானவை, அற்புதமானவை.

Sunday, July 11, 2010

மதராசப்பட்டினம் - திரைவிமர்சனம்


ஒரு எளிதான காதல் கதை. ஏழை ஆணுக்கும் பணக்காரப் பெண்ணுக்குமான காதல். இப்பழையக் கதையை, சுவாரஸ்யமாக, உணர்ச்சிகரமாக சொல்ல விரும்பி, கேமரூன் மிகப்பெரிய கப்பலின் கடைசிப் பயணத்தின் பின்னணியில் சொன்னார். இயக்குனர் விஜய், இந்திய சுதந்திரத்தின் பழைய மதராசப்பட்டினத்தின் பின்னணியில் சொல்லி இருக்கிறார். ஒருவேளை நிகழ்காலத்தின் இக்கதையை சொல்ல முயன்றிருந்தால் எப்படி இருந்திருக்கும்? சாப்ட்வேர் எஞ்சினியர் நாயகனுக்கும், கிளையன்ட் சைடு நாயகிக்கும் காதல் வருவதாய் சொல்லி இருக்கலாம். ஆனால் தமிழகத்தின் எல்லா சென்டர்களிலும் இப்படம் போகுமா என்பதும், நாயகனுக்கும் நிச்சயம் ஆங்கிலம் தெரிந்திருக்கும், மொழி பிரச்சனை இருக்காது, நிறைய தமிழ் சப்-டைட்டில் போடவேண்டியிருக்கும் என்பதும் படத்தை எல்லாத்தரப்பினரும் அணுகுவதில் பிரச்சனை வரும் என்பதனால், இந்திய சுதந்திரத்தின் பழைய மதராசப்பட்டினத்தின் பின்னணி தேவைப்பட்டிருக்கிறது போலும்.

சரி. காதலை எதன் பின்னணியில் சொன்னால் என்ன? காதல் எப்படி இருக்கிறது என்றால், ம்ம்ம்.. நல்லா இருக்கு.. படம் பார்க்கும் நம்மை கொடுமைப்படுத்தவில்லை.

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..