
Neo-Noir Crime Drama படங்களில் அதன் narration, narrator, screenplay, style, color, music, இதெல்லாம் மிக முக்கியமான ஒன்று. காட்சியின்பம் தரும் காட்சிகள் மிக முக்கியமானவை. தனது படங்களில் அதை சிறப்பாக செய்யும் இயக்குனர் Guy Ritchie. எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்களில் ஒருவர். அவரின் Sherlock Holmes இப்போதுதான் (இரண்டு மாதம் முன்பு; பதிவும் அப்போதே எழுத ஆரம்பித்தது) பார்த்து முடித்தேன். சரி படத்தை பற்றி எழுதலாம் என்று நினைத்தால், இன்னும் இவரின் Lock, Stock and Two Smoking Barrels (1998), Snatch. (2000) பற்றி ஏற்கனவே கொஞ்சமாக எழுதியிருந்தாலும், RocknRolla (2008), Revolver (2005) படங்களை பற்றி இன்னும் எழுதவில்லை என்பது நினைவுக்கு வந்தது. சரி Revolver பற்றி எழுதிவிட்டு பின்பு Sherlock Holmes பற்றி எழுதலாம் என்று இப்பதிவில் Revolver பற்றி எழுதுகிறேன்.
.
முதலில் இயக்குனர் Guy Ritchie பற்றி கொஞ்சம் பேசிவிடுவோம்.



