Saturday, May 29, 2010

சிங்கம் - திரைவிமர்சனம்


"இந்த படத்தோட ட்ரைலர் பார்த்துமா நீ இந்த படத்துக்கு போன?" என்று நீங்கள் கேட்கக்கூடும். எல்லாம் அனுஷ்காவுக்காகதான். அதுவும் அந்த "என் இதயம்" பாடலுக்காகவே இந்த படத்துக்கு போகலாம்.. ஒன்றை டன் அடிவாங்கலாம்.. :)
அகில உலக அனுஷ்கா ரசிகர் மன்றம்
சென்னை
.

ரொம்ப வெயிலுங்க. ரொம்ப ரொம்ப அதிகம். அதான் ஏசியில் போய் உட்காரலாம் என்று வாராவாரம் தியேட்டருக்கு செல்வது. மேலும் திரைப்படம் பார்க்கும் போதைக்காக கண்டகண்ட படங்களுக்கும் நான் செல்வதுண்டு. சில படங்களுக்கு இந்த மாதிரி பதிவு எழுதுவதை நான் விரும்புவதும் கிடையாது. ஆனால் சிங்கம்......

Saturday, May 22, 2010

கொல கொலயா முந்திரிக்கா - திரைவிமர்சனம்



.

கொல கொலயா முந்திரிக்கா
நெறைய நெறைய சுத்தி வா
கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்
கண்டுபிடி கண்டுபிடி
.
கோடையை குறிவைத்து எடுக்கப்படும் படங்களில் ஏழுபடங்கள் நேற்றைக்கு வெளியாகியிருக்கிறது. அவற்றுள் "மாஞ்சா வேலு"வையோ, "கனகவேல் காக்க"வோ பார்க்கும் மனதைரியம் இன்றி, பார்க்க நினைத்த படங்கள் T.P.கஜேந்திரன் இயக்கத்தில் விவேக் நடித்து வரும் "மகனே என் மருமகனே" அல்லது கிரேசி மோகன் கதை-வசனத்தில் வரும் இந்த "கொல கொலயா முந்திரிக்கா". இரண்டுமே நகைச்சுவை படங்கள் என்பதால். அதில் கொல கொலயா முந்திரிக்கா படத்தை இன்று பார்த்தேன்.

Thursday, May 20, 2010

Chungking Express [1994] - Chinese (Chung Hing sam lam) - காதல் நகரும் திசை..


IMDB RATING : 8.0/10
.

பிரபல சீன இயக்குனர் Kar Wai Wong, இயக்கத்தில் வந்த திரைப்படம். அவர் தனது Ashes of Time (Dung che sai duk)(1994). பட வேலையின் இடையில் இரண்டுமாதங்கள் ஓய்வில் தன் எண்ணப்போக்கில் கதை உருவாக்கி (கதை தன்னைத் தானே எழுதி கொள்கிறது, என்பது போல) இயக்கிய படம். இரண்டு மெல்லிய காதல் கதைகள் ஒன்றன் பின் ஒன்றாக வரும்படி கதை உருவாக்கியிருக்கிறார். இரண்டு கதைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; இரண்டு கதைகளும் திரைக்கதையில் குறுக்கிட்டுக்கொள்வதில்லை; இரண்டாம் கதையில் வரும் ஓரிரு கதை மாந்தர்கள் முதல் கதையில் வந்து போவதுண்டு, ஏனெறால் கதை நிகழும் காலமும், இடமும், அந்த மனிதர்கள் பொதுவாய் வந்து போகும் இடங்களும் ஒன்று அல்லது ஒன்றிரண்டு. இரண்டு கதைகளும் காதலனின் பார்வையில் சொல்லப்படுகிறது. இரண்டு காதலர்களும் போலீஸ்காரர்கள். முதல் கதையில் இன்னொரு குட்டிகதையும் உண்டு. மேலும் இயக்குனர் தொடர்ச்சியாய் மூன்றாவது கதையும் எழுதிவிட, பின்னர் நீளம் கருதி அதை தனி திரைப்படமாய் Fallen Angels (Duo luo tian shi) (1995) எடுத்திருக்கிறார்.

Monday, May 17, 2010

திரைத்துணுக்குகள் 17.05.2010 மற்றும் Norbit (2007)

A.R.ரஹ்மான்
விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் பின்னணி இசை BGM-களை, படத்திலிருந்து பிரித்தெடுத்து கொடுத்திருக்கிறார்கள் 123musiq.com இந்த தளத்தில். படத்திலிருந்து பிரித்தெடுத்து கொடுத்திருப்பதால், ஒலித்தரம் கொஞ்சம் குறைவுதான், இருந்தாலும் இனிய இசைக்காக தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள். படத்தின் பெயர் போடும் போது வரும், முதன் முதலாக ஜெஸ்ஸி அருகில் வந்து பேசும்போது வரும், பின்னர் KFC-ல் சந்திக்கும்போது வரும், அவர்கள் முதன்முதலாக வெளியே செல்லும் போது வரும் பின்னணி இசைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை.
தரவிறக்கம் செய்ய : Vinnaithaandi Varuvaayaa BGM

Sunday, May 16, 2010

கேளுங்கள் - A.R.ரஹ்மான் இசையில் தமிழ் செம்மொழி மாநாட்டின் மைய நோக்கு பாடலை

A.R.ரஹ்மான் இசையில் தமிழ் செம்மொழி மாநாட்டின் மைய நோக்கு பாடல்..




Saturday, May 8, 2010

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் - திரைவிமர்சனம்


தமிழில் வழக்கொழிந்த சில பழையனவற்றை திரும்பத் தரும் படைப்பாளியாக உருவெடுக்க முயல்கிறார் சிம்புதேவன். தன் முதல் படத்தில் வரலாற்றுப் புனைவையும், இரண்டாம் படத்தில் கடவுள் நிகழ்காலத்தில் பூமிக்கு வரும் புனைவையும் எடுத்தவர், இப்படத்தில் கௌபாய் கதையை தூசுத் தட்டியிருக்கிறார். தமிழ் மண்ணிற்கும், கௌபாய் கதைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, தமிழில் அந்தக் காலத்தில் அந்த வகைப் படங்களை எடுத்தனர், ஜெய்ஷங்கர் அந்த காலத்தில் கௌபாய் படங்களில் நடித்தார், என்பதைத் தவிர. எனவே படத்தின் துவகத்திலேயே கௌபாய் வரலாறை சொல்லிவிட்டு, இது ஒரு தமிழ் கௌபாய் புனைவு என்று சொல்லிவிடுவதால், இனி அது படைப்பாளியின் சுதந்திரம். என்றாலும், படம் துவங்கிய சில நிமிடங்களுக்கு, அந்த வகை தமிழ் கௌபாய் கதைக்குள் செல்ல, மூளை மறுப்பு சொல்லி, பின் பழக்கப்பட்டு சமாதானம் ஆகிறது.

Thursday, May 6, 2010

திரைத்துணுக்குகள் - 06.05.2010

பார்க்கிற எல்லா படங்களைப் பற்றியும் எழுதிவிடமுடிவதில்லை என்பதனால், சில படங்களை இப்படியான சினிமா துணுக்குகள் பதிவில் மொத்தமாக எழுதிவிடலாம் என்றிருக்கிறேன். மேலும் சில விஷயங்கள் பகிர்வதற்காக இந்த தொடர் தொகுப்புப் பதிவு.

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0

முதல் கொடுமை

வெகுநாட்களாக பகிரவேண்டுமென்று நினைந்திருந்த ஒன்று இது. பாலச்சந்தர் தயாரிப்பில், செல்வன் இயக்கத்தில், ஜீவன் நடிப்பில் வரப்போகும் என்று ஒரு வருடமாக சொல்லிக்கொண்டிருக்கும் படம் கிருஷ்ணலீலை. படத்தின் ட்ரைலரை பார்க்க நேர்ந்தபோது மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். எனக்கு மிகவும் பிடித்த, புகழ் பெற்ற V for Vendetta (2005) படத்தை உல்டா அடித்திருக்கிறார்கள். அது என்னை அதிர்ச்சியடைய செய்யவில்லை. அந்த முகமூடியோடு ஜீவன் அமர்ந்திருக்க ஹீரோயின் குட்டி டிரஸ்ஸோடு டூயட் பாடுவது. ஸ்ஸப்ப்பாஆஆ.. எவ்வளவு தூரம் கேவலமாக சிந்திக்கமுடிந்திருக்கிறது. இதற்கு பேரரசுகளே பரவாயில்லை.

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..