
பொதுவாக இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் வெளிவரும் படங்கள் நல்ல படங்களாகத்தான் இருக்கும். "அறை எண் 305ல் கடவுள்" திரைப்படத்திற்கு பின் இரண்டாவது முறையாக மிகப்பெரும் மொக்கையை சந்தித்தது இந்த ரெட்டச்சுழி படத்தில்தான்.
.
பாரதிராஜா (கம்யுனிஸ்ட்), பாலச்சந்தர் (காங்கிரஸ்காரர்) குடும்பத்திற்க்கிடையேயான 40 வருடப் பகை இவர்கள் வீட்டு குட்டிப்பிள்ளைகள் வரை தொடர்கிறது. இவர்கள் வீட்டில் பத்து, அவர்கள் வீட்டில் பத்து என்று குட்டிக்குட்டி உருப்படிகள். மிக முதிர்ச்சியான வார்த்தைகள் செய்கைகளோடு திரையில் உலவும் குட்டிப்பசங்க என்றாலே எனக்கு மிகப்பெரும் ஒவ்வாமை. குறைந்தபட்சம் "பசங்க" திரைப்படம் போலாவது இருந்திருக்கலாம். சத்தியமா இல்லை. அந்த குட்டிப்பசங்க நடவடிக்கைகள் இன்னொரு "
மாத்தி யோசி". இதற்கிடையில் இந்த வீட்டு அஞ்சலிக்கும் அந்த வீட்டு ஒரு பையனுக்கும் (வேறு எவருமே கிடைக்கவில்லையா இந்த கதாப்பாத்திரத்துக்கு) காதல். இடையில் கருணாஸ். ஸப்பாஆஆஆஆஆ முடியல.

நம் தமிழ்ப்பட ஹீரோ, மிக அலட்சியமான cool guy.. குழந்தைகளுக்கு குச்சிமிட்டாய் வாங்கி கொடுப்பார்.. நண்பர்களோடு பியர் குடித்து நட்போடு இருப்பார்.. காமெடி செய்வார். ஹீரோயினை கண்டதும் லவ்வுவார். பாட்டு பாடுவார். கலர் கலர் டிரஸ்ஸோடு வெளிநாட்டிலும்/மழையில் சில்லென்று நனைந்தபடியும் டூயட்டுவார். விவேகமானவர். எந்த பிரச்சனையையும் அதிபுத்திசாலிதனமாக சமாளிப்பார். உலகம் முழுதும் அவருக்கு பாதைகளும் திசைகளும் தெரியும் (ஒரு google maps மாதிரி). அவருக்கு எல்லாம் தெரியும். அவரின் மொபைல் எப்போதும் வேலை செய்யும். கூடவே சுற்றும் ஹீரோயின் பசியை, கண்ணைப்பார்த்தே அறிந்து கொள்வார். ஹீரோயினுக்காக எந்தனை பேரை வேண்டுமானாலும் அடிப்பார். ஆயிரம் முறை இரும்பு பைப்பினால் அடிவாங்கினாலும் பின்பு இரண்டாயிரம் பேர்களை அடிக்கும் உடல் பலம் கொண்ட மிகப்பெரும் ஆண்மகன். அவர் பெயர்தான் சிவா. அட நான் நம்ம "அகில உலக சூப்பர் ஸ்டார்" சிவாவை சொல்லல. இந்த பையா பட ஹீரோ சிவாவ சொல்றேன். :)

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ், ராம நாராயணன் பெருமையுடன் வழங்கும் மர்மதேசம்.
.
பையா ஹவுஸ்புல். என்பதனால்தான் இத்திரைப்படத்திற்க்குள் நுழைந்தேன். கொஞ்சம் இத்திரைப்படத்தை எதிர்பார்த்திருந்தேன். சரி இந்த படத்தை விடுங்க. இந்த படம் போடும்முன் ராம நாராயணனிடமிருந்து அடுத்து வரப்போகும் அந்த "குட்டிபிசாசு (யாருக்கும் அடங்காதவள்)" திரைப்படத்தின் ட்ரைலர் காண்பிக்கப்பட்டது. உலகத்தின் ஒட்டுமொத்த கொடுமையை மூன்று நிமிடத்தில் அனுபவிக்க வைத்தார்கள். ஒரு சிறு பெண் குழந்தையும், பாபா காரும், குத்தாட்டம் ஆடிய Transformer-ம், பாம்பும் என கிராபிக்ஸ் கொடுமை. அந்த குட்டிப்பெண், ராம நாராயணனின் பேத்தியாக இருக்குமோ!!!!
ஸப்பாஆஆஆஆஆஆ...
.
சரி நாம் மர்ம தேசத்துக்கு வருவோம். கிரேக்க இதிகாச புனைவுக்கதை. இந்த மாதிரியான படத்தில் நீங்க என்னென்ன எதிர்பாப்பீர்களோ, அது அப்படியே அச்சுபிசகாமல் கொடுத்திருக்கிறார்கள். கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையேயான போர்.