
இதுவரை தமிழ் சினிமா பதிவு செய்ய மறந்த மனிதர்கள் வசிக்கும் தெருதான் இந்த அங்காடித் தெரு. ஒரு நாள் முழுக்க சென்னை ரங்கநாதன் தெருவில் சுற்றிதிரிந்ததை போலொரு உணர்வு. நன்றி வசந்த பாலன், இனி தி.நகரில் துணிமணிகளை எடுத்துப்போடும் அந்த மனிதர்களை "இதை எடுங்க, அதை எடுங்க" என்று படுத்திஎடுக்க தயங்கவும், அவர்களை சிநேகமாய் பார்க்கவும், புன்னகைக்கவும், நன்றி சொல்லவும் எம்மக்களுக்கு முகம் வருமென்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆமாம், இந்த திரைப்படம் கூட்டம்கூட்டமாய் மக்கள் மொய்க்கும், தி.நகரில் கிட்டத்தட்ட கொத்தடிமைகளாக வேலைசெய்யும் அந்த இளம் மனிதர்களையும், மேலும் அந்த தெருவில் பிழைத்துக்கொண்டிருக்கும் மீச்சிறு மனிதர்களின் வாழ்வியல் போராட்டம் தான் இந்த அங்காடித் தெரு.

பக்கத்தில இருக்கிற படத்த பார்த்தீங்களா. பரபரப்பான மாற்று சினிமாவாம். என் வாழ்வில் முதல் முறையாக, படத்தின் அக்கப்போர் தாங்காமல் எழுந்து வெளியே வர எழுந்துவிட்ட படம். என் நண்பன் என்னும் கொலைகாரப்பாவி, "மச்சி, நம்ம உடம்பு எவ்ளோ தாங்குதுன்னு நமக்கு ஒரு கணக்கு தெரியவேண்டாமா, அதனால் முழுசா அடிவாங்கிடுவோம்" என்று சொன்னதால், மீதிப்படத்தையும் பார்த்து தொலைத்தேன். கொய்யால, படமாடா எடுக்கறீங்க!! அநியாயமா முன்னூறு ரூபா போச்சே..
IMDB RATING : 8.0/10 :: Top 250: #214
.
உங்களுக்கு Humming Bird பற்றி தெரியுமா?
.
மொத்த வாழ்க்கையையும் எதிர்த்திசையில் திருப்பமுடிந்தால்...
.
காலமும் மரணமும் பின்னிச் சூழ்கிற வாழ்வுதனிலே எதிர்வருகின்ற நிகழ்வுகளெல்லாம் நம்மை எப்படியெல்லாம் புரட்டிப்போடப்போகிறது என்பது புதிர். ஒவ்வொரு பிறப்புகளும், நம்மை சூழத்துவங்கும் மனிதர்களும், பின்பான மரணங்களும் நம்மை எவ்வாறெல்லாம் பாதிக்கப்போகிறதோ. எதுவும் நிஜமுமில்லை. எதுவும் நிகழாமலிருக்கவும் போவதில்லை.
You never know what’s coming for you.
.
திரைப்படம் முழுக்க காலம் மரணம் பற்றியே பேசுகிறது. வாய்வலிக்க பேசிக்கொண்டே இருக்கிறது. இசையும், காலம்-மரணம் பற்றிய பேச்சுமாக நிரம்பியிருக்கும் திரைப்படம்.