
தொழிலதிபர் மதனகோபால் என்கிற மதனும்(மாதவன்), நடிகை அம்புஜா என்கிற அம்பு(த்ரிஷா)வும் காதலிக்கிறார்கள். ஆனால் மாதவன் நடிகையாக இருக்கும் த்ரிஷாவை சந்தேகிக்கிறார். என்பதனால் ஐரோப்பிய சுற்றுலா செல்லும் த்ரிஷாவை கண்காணிக்க மேஜர் R மன்னாரை (கமலை) private detective-ஆக நியமிக்கிறார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நண்பனுக்காக திர்ஷாவை பற்றி கெட்டவிதமாக சொல்லியாக வேண்டிய கட்டாயம் கமலுக்கு. பொய்கள், நாடகங்கள் பின் எல்லாம் சுபம். இதுதான் மன்மதன் அம்பு.
.
ஒரு சீரியசான படத்திற்கு பின்பு ஒரு நகைச்சுவை படமென்பது கமலின் reputation. தமிழில் முழுநீள நகைச்சுவை படங்கள் என்பதை இப்போதும் நம்புபவர் கமல். ஆனால் நிச்சயம் கிரேசி மோகன் இல்லாமல் களத்தில் இறங்கியிருக்கக்கூடாது. கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதிய கமல், நிச்சயம் வசன பொறுப்பை கிரேசி மோகனிடம் விட்டிருக்கவேண்டும். கிரேசி இல்லாமல் இது ஒரு நகைச்சுவை படமாகவும் இல்லாமல் Romance-Drama ஆகவும் இல்லாமல் நடுவில் தத்தளிக்கிறது. குறிப்பாக அந்த குஞ்சு குரூப்புக்கு பதிலாய் கிரசியை நடிக்கவும் வைத்து படத்தின் வசனத்தையும் கொடுத்திருந்தால் படம் பின்னியிருக்கக்கூடும்.
.
படத்தில் நாயகன் நாயகி என்றெல்லாம் எதுவுமில்லை. எல்லாருமே கதாபாத்திரங்கள் என்பது மிக்க மகிழ்ச்சியான ஒன்று தமிழ் திரைச்சூழலில். ஆனால் கமலுக்கும் திரிஷாவுக்கும் இடையில் Lost in Translation திரைப்படம் போல் அப்படியெதுவும் உணர்ச்சி பூர்வமாகஇல்லாமல் போவது மனதை படத்தோடு ஓட்ட மறுக்கிறது. கூடவே சங்கீதா, அவரின் குழந்தைகள், குஞ்சு குரூப் என கடுப்படிக்கும் கதாப்பாத்திரங்கள் கடுப்பேற்றுகிறது. கூடவே கமலின் over intellectual வசனங்கள். டூயட்டுகள் இல்லாதது ஆறுதல்.
.
ஆனால் அந்த விபத்தை எதிர் திசையில் காட்டிய விதத்துக்கு பாராட்டுக்கள். நேர்திசையில் காட்டப்படும் விபத்தை காட்டிலும் எதிர்திசையில் காட்டிய இவ்விபத்து நெஞ்சை பதறவைத்தது. அவ்விபத்தை தொடர்ந்து நீளும் "நீலவானம்" பாடலும் அசத்தியது. நிச்சயம் நல்ல முயற்சி. கமலுக்கும் படக்குழுவினர்க்கும் இதற்காக பாராட்டுகள். இந்த ஒன்றைத் தவிர வேறெதுவும் படத்தில் சிறப்பாக இல்லை. K.S.ரவிக்குமார் படமா என்பதில் மிகுந்த சந்தேகமாகவே இருக்கிறது. நிச்சயம் ஒரு நல்ல Romance-Comedy படமாக எடுத்திருக்ககூடிய படமிது.
.
மன்மதன் அம்பு - வில்லில் இருந்து புறப்படவே அல்லாத அம்பு..
.
ஆரண்ய காண்டம்
இதே நேரத்தில் இன்னொரு தகவலையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இதுவரை ஏதாவது தமிழ் திரைப்படங்கள், திரைப்பட விழாக்களில் Grand Jury பரிசெல்லாம் வாங்கியிருக்கிறதா என்று தெரியவில்லை.
விரைவில் வெளியாகவிருக்கும் ஆரண்ய காண்டம் திரைப்படம், இந்த வருடம் நியூயார்க்கில் நடந்த South Asian International Film Festival 2010-ல் Grand Jury பரிசை தட்டியிருக்கிறது..
கொரியத் திரைப்படங்களை போல் தமிழ் படங்களும் உலகளாவிய கவனிப்பை பெற, பங்களிப்பை செய்ய இது முதல் படியில் முதல் அடி.
S.P.B.சரண், தியாகராஜன் குமாரராஜா, யுவன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்..
http://www.saiff.org/2010/index.php?p=awards
Narrative Feature: Grand Jury Prize
Awarded by the jury to the festival’s most outstanding feature-length narrative film.
Winner: ANIMA AND PERSONA (Aaranya Kaandam)
.
25.12.2010





9 comments:
வெல்கம் பேக்.
சமீபத்தில் சரண் அவர்களை சந்தித்தேன். அடையாளமே கண்டுபிடிக்கமுடியவில்லை. நாணயம் படத்தின் ரிலீஸ் நேரத்தில் சந்தித்தது. இப்போது சுத்தமாக அவரை என்னால் அடையாளம் காணமுடியவில்லை. மனிதர் கிட்டத்தட்ட பழைய அஜித் ரேஞ்சில் இருக்கிறார்.
@King Viswa: உங்களுக்கும் Welcome Back.. :)
சரண் ரொம்ப குண்டாயிட்டருன்னு சொல்றீங்களா? (வ குவாட்டர் கட்டிங்).. சரணை பொறுத்தவரை இயக்குனர் சங்கரை போல நல்ல தயாரிப்பாளராக வருவார் என்று நம்புகிறேன். நல்ல திரைப்படங்கள் அவர் தயாரிப்பில் இருந்து வருமென்று நம்புகிறேன்..
Great news regarding "Aaranya Kaandam".Much awaiting to see d film.thanks for sharing.
ஆரண்ய காண்டம்...நானும் மிகுந்த எதிர்பார்ப்பில இருக்கேன்...இப்ப நீங்க வேற உசுப்பேத்தி விட்டிடீங்க...பார்க்கலாம்
நன்றி லேகா.. :)
நன்றி கொழந்த.. :)
ஆரண்ய காண்டம் படத்தை எதிர்பார்க்கிறேன்..
அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த வருடம் தங்களுக்கு பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!
@எஸ்.கே : நன்றி SK. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. :)
ஓஹோ...
முன்னாடி “வில்லு” தான் டர்ரு டாராச்சுன்னு பார்த்தா இப்போ “அம்பு”ம் புட்டுகிச்சா?
என்ன கொடுமை சரவணா இது?
உங்களுக்கும், குடும்பத்தார்க்கும் என் மனம் கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தல...
HAPPY NEW YEAR 2011 http://jokkiri.blogspot.com/2010/12/happy-new-year-2011.html
Post a Comment