IMDB RATING : 8.0/10
ROTTON TOMATOES : 81%
.
Shaun of the Dead மற்றும் Hot Fuzz ஆகிய திரைப்படங்களை இயக்கிய Edgar Wright இயக்கத்தில் இந்த வருடம் வெளிவந்தத் திரைப்படமிது. Bryan Lee O'Malley படைப்பில் ஆறு புத்தகங்களாக வந்த Scott Pilgrim காமிக் நாவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள். நல்ல விமர்சனங்களை பெற்றிருந்த போதும் வசூல்ரீதியாக வெற்றிபெறாமல் போனது இத்திரைப்படம்.
.
இதுவரை காமிக்கலான வகையில் உருவாக்கப்பட்ட திரைப்படங்களை பார்த்திருக்கிறோம். இந்த படமும் காமிக்கலாகவும் மேலும் வீடியோகேம் மாதிரியான உருவாக்க முறையில் எடுத்திருக்கிறார்கள். அதுவே படம் எனக்கு மிகவும் பிடித்து போக மிக முக்கிய காரணமாகி போனது. Comical + Video Gamic way of Narrating the story + Picturization. (யாரையாவது வீழ்த்தினா திரையில் Game Points கொட்டுது). ஒருவேளை நான் சொல்றது புரியவில்லை என்றால் கீழிருக்கும் ட்ரைலரை காணவும். :)
.
Scott Pilgrim, மற்றும் அவனிரு நண்பர்கள் சேர்ந்து ராக் இசை Band ஆரம்பித்து பயிற்சிகளில் இருப்பவர்கள். அடிக்கடி அவனுடைய தோழிகள் மாறிக்கொண்டே இருப்பார்கள். ஒருமுறை தன் கனவுதேவதையை அவன் காண்கிறான். அவளுடன் காதலை வளர்க்கும் முயற்சியில்தான் தெரிகிறது. அவள் வேண்டுமென்றால் அவளுடைய முன்னாள் ஏழு காதலர்களை (7 Evil Exes : 6ஆண்கள் + 1 பெண்) அவன் வீழ்த்தவேண்டும். அப்பெண்ணின் முன்னாள் காதலர்கள் எல்லாம் சேர்ந்து The League of Evil Exes எனும் ஒரு League வைத்திருக்கிறார்கள். மேலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சக்தி வேறுயிருக்கிறது. ஆனால் படத்தில் இதெல்லாம் சர்வசாதரணமாக வந்து போவதும், அவர்கள் சண்டையிட்டு கொள்வதும், அதை Video Gamic Approach-ல் படத்தொகுப்பு செய்திருப்பதும் அசத்துகிறது. படத்தின் இயக்குனர், ஒளிப்பதிவாளர், குறிப்பாய் படத்தொகுப்பு செய்தவர் மூவரையும் பாராட்டவேண்டும் + VFX.
.
மேலும் இது ஒரு நகைச்சுவை படமென்பதால், சண்டைக்காட்சிகள் டம்மியாக இருக்குமென்று எண்ண வேண்டாம். எல்லாம் அதிரடி சண்டைகாட்சிகள், பன்ச் டலயாக்குகள் என ஒரே களேபரம். மேலும் வசனங்கள் எல்லாம் அதகளம். நன்றாக சிரிக்கலாம். :))
Sample dialogue : (நண்பன், Scott-இடம் இது காதலை சொல்லவேண்டிய தருணம் என்கிறான்)
Friend : "Time to use the L word."
Scott : "Lesbian?"
Friend :"The other L word."
Scott : "Lesbians?"
இப்படியாக போகும் கதையில் தன் காதலியின் முன்னாள் காதலர்களை வீழ்த்தினானா, அவள் காதலை அடைந்தானா என்பதை திரையில் பார்க்கவும்.. :)
.
இதைத் தவிர்த்து படத்தின் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் சிறப்பாக உருவாக்கம் பெற்றிருக்கிறது. Scott, Scott-ன் தங்கை, Scott-ன் Band நண்பர்கள், அவன் காதலி, முன்னாள் காதலிகள், 7 Evil Exes, Scott-ன் அறை நண்பன், அவன் காதலர்கள் என எல்லாருமே. மேலும் Scott-ம் அவன் நண்பர்களும் Rock இசை Band வைத்திருக்கிறார்கள் என்பதனால் படம் முழுக்க ராக் இசை, கிட்டார் இசை என அதுவும் நல்லா இருக்கு.
.
இந்த வருடம் வந்த KickAss (2010) திரைப்படம் மாதிரியே இந்த படமும். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. Comical + Vedio Gamic way of Narrating the story + Picturization.
.
Scott Pilgrim vs. the World(2010) - An Epic of Epic Epicness Comedy.. :)
Scott Pilgrim vs. the World : Wallpaper 1920x1200
.
IMDB LINK
My Rating : ****
Scott Pilgrim vs. the World(2010) : TRAILER
23.11.2010





7 comments:
Nice Film! super review!
உங்க விமர்சனம் நல்லாயிருக்கு.. படத்தைப் பார்க்க முயற்சிக்கிறேன்.. நன்றி..
நன்றி எஸ்.கே..
நன்றி பாபு..
வேற ஒரு போஸ்ட் படிச்சுட்டு அதுல கமெண்ட் போடறதுக்கு உங்களோட பிளாக்குல போட்டுட்டேங்க.. குழம்பிடாதீங்க.. மன்னிக்கவும்..
நிச்சயமாக இது ஒரு அருமையான படம் நண்பரே, நன்றாக சிரித்து ரசித்து கண்டுகளித்தேன். இதுபோலான படங்கள் வேறு என்னென்ன உள்ளது என்று சொல்ல முடியுமா? நான் Kick-Ass, Sin City, The Spirit பார்த்திருக்கிறேன்...
@பதிவுலகில் பாபு : :)
@Baby ஆனந்தன் : இந்த இயக்குனரின் Shaun of the Dead மற்றும் Hot Fuzz ரெண்டுமே இந்த ஸ்டைல்லதான் இருக்கும். வேற படங்கள கொஞ்சம் யோசிச்சி சொல்றேன்.. நன்றி.. :)
Post a Comment