IMDB RATING : 8.2/10
.
Irvine Welsh எழுதிய நாவலை அடிப்படையாகக்கொண்டு, பிரிட்டிஷ் இயக்குனர் Danny Boyle இயக்கத்தில் வெளிவந்த Scottish திரைப்படம் Trainspotting (1996). Slumdog Millionaire படம் மூலமாகத்தான் இயக்குனர் Danny Boyle அறிமுகம் எனக்கு. இவரின் இயக்கத்தில், Leonardo DiCaprio நடிப்பில் வந்த The Beach (2000) படமும் எனக்கு பிடித்திருந்தது. இந்த Trainspotting திரைப்படம் மிகுந்த குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். நல்ல விமர்சனகளை பெற்ற இத்திரைப்படத்தை "பிரிட்டிஷ் pulp fiction" என்று விளம்பரம் செய்து அமெரிக்காவிலும் வெளியிட்டார்கள். நூறு சிறந்த பிரிட்டிஷ் திரைப்படங்களில் ஒன்று என்று British Film Institute மதிப்பிட்டிருக்கிறது. மிக சிறந்த scottish திரைப்படம் இது என்று பலரும் கருதுகிறார்கள். (நன்றி Wiki)
.
படத்தின் பெயரைவைத்து "ரயிலை வேடிக்கை பார்த்தல்" என்று முடிவுக்கு வரவேண்டாம். படம் முழுக்க முழுக்க "ஹெராயின்" பற்றியே பேசுகிறது. ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க் நகரத்தில், பின் எண்பதுகளில் கதை நிகழ்கிறது. வேலைவெட்டியில்லாமல், பொருளாதாரத்தில் பின் தங்கிய, இங்கிலாந்து மீது, ஆங்கிலம் மீது கோபம் கொண்ட, வாழ்க்கையில் விரக்தி அடைந்த, ஹெராயினுக்கு அடிமையாகிப்போன Scottish இளைஞர்கள் சிலரின் வாழ்க்கையை பதிவுசெய்து கடந்துபோகிறது இத்திரைப்படம். Ewan McGregor நரேஷனில் துவங்குகிறது படம். ஒரு சராசரி, நடுத்தரவர்க்க மனிதனாய் நான் ஏன் இருக்கவேண்டும், ஹெராயின் இருக்கும்போது என்ற வினாவோடு ஹெராயினை விளக்கத்துவங்குகிறார். உங்கள் வாழ்நாளில் இதுவரை அடைந்த, மிகை கலவி உச்சத்தை, ஆயிரம் முறை பெருக்கினால் வரும் இன்பத்தை ஹெராயின் தருகிறது என்கிறார். தொடர்ச்சியான காட்சிகள் நண்பர்கள் ஒரு வீட்டில் ஹெராயின் செலுத்திக்கொண்டு போதையில் வீழ்கிறார்கள். ஒரு பெண் தோழியும் கூடவே. அவர்களில் குழந்தை அந்த வீட்டில் தவழ்ந்து கொண்டிருக்கிறது கவனிப்பாரற்று.
.
ஆனால் ஹெராயினின் போதை குறையத்துவங்கும்போது அதன் பாதகங்கள் அதிகம். குறிப்பாக அஜீரணம் மற்றும் வயிற்றுப்போக்கு. வழக்கம் போல் இனி ஹெராயினை கைவிட வேண்டுமென்று முடிவெடுக்கிறார் Ewan. குறிப்பாக ஹெராயினால் பெண்ணில்லாமல் இருக்கிறோம் என்று உணர்ந்தபின், ஒரு பெண்ணை முதல் முறை பார்த்தபோது தனக்குள் காதல் வந்ததாக உணர்ந்து அவளுடன் கூடினால், அந்த பெண்ணோ பள்ளியில் படிக்கும் பெண். பின் ஹெராயினை கைவிட பெற்றோர்கள் வற்புறுத்த, மிகுந்த வலிகளுக்கு பிறகு, பின் லண்டன் வந்து ஒரு வேலை தேடி, ஒரு சராசரி நடுதரவர்க்க மனிதனாக முயற்சிக்கும் போதும், நண்பர்களால் மீண்டும் வருகிறது பிரச்சனை. பின் இவர்கள் வாழ்க்கை என்னவானது என்பது மீதிக்கதை.
.
படம் முழுக்க ஹெராயின். ஹெராயின். ஹெராயின். குறிப்பாக அந்த போதையை, போதையில் வீழ்வதை, போதையின் இன்பத்தை, போதையின் உபாதையை, ஹெராயினை கைவிட முடியாமல் தவிக்கும் நிலைமையை, ஆகிய மனநிலைகளை காட்சிகளில் கொண்டு வர முயற்சித்திருக்கிரார்கள். குறிப்பாக வயிற்றுபோக்கு தாளாமல் செல்லும் ஒரு மிக மிக கேவலமான கழிவறை (worst restroom in scotland) காட்சி, வாரக்கணக்கில் போதையில் கிடந்தது கவனிப்பார் இல்லாமல் இறந்து போகும் குழந்தை, அக்குழந்தை இறந்த சோகம் தாளாமல் அப்போதே மீண்டும் ஹெராயின் பயன்படுத்தும் காட்சி, அக்குழந்தைக்கு யார் தந்தை என்று Ewan குழம்பும் காட்சி, பூனையின் கழிவினால் மூளை காய்ச்சல் போன்ற ஒன்றினால் இறந்துபோகும் நண்பன், என மிகுந்த அதிர்ச்சிகளையும் உள்ளடக்கியே இருக்கிறது படம். கூடவே செம நரேஷன். படம் முழுக்க Ewan பேசிக்கொண்டேயிருக்கிறார்.
.
கையில் காசில்லை, வேலையில்லை, காதலியின் பிரிவு, வன்முறை, தாழ்வு மனப்பான்மை, துரோகம், அன்பு கிடைக்காமை, திருட்டு, வழிப்பறி, கொள்ளை, என பல்வேறு காரணங்கள் ஹெராயினை பயன்படுத்த துவங்கும் புள்ளியாகவும், தொடர்ச்சியாக பயன்படுத்த கிடைக்கிற காரணங்களாகவும் அமைந்துவிடுகிறது இவர்களுக்கு.
.
இயக்குனர் Danny Boyle. வெவ்வேறு நிலங்களில் பயணம் செய்து படம் எடுக்கக்கூடியவர் போல. ஒரு Adventure விரும்பி என்று நினைக்கிறேன். ஒரு படம் லண்டனில், ஒரு படம் ஸ்காட்லாந்தில், ஒரு படம் இந்தியாவில், ஒரு படம் தாய்லாந்தில், ஒரு படம் அமெரிக்காவில் என பல்வேறு நிலப்பரப்புகளில் பல்வேறு கதைகளை இயக்கக்கூடியவராய் இருக்கிறார். படங்களில் நிறங்களில் (tone) மிகுந்த கவனம் செலுத்துபவராய் இருக்கிறார். இந்த படத்தின் இசை, கை ரிட்சி/குவென்டின் படங்கள் மாதிரியான இசை. இவரின் அடுத்தப்படமான 127 Hours எப்படியிருக்கும் என்று பார்க்கலாம்.
.
கொசுறு தகவல் : இந்த படத்தில் நூறுக்கும் அதிகமான முறை fuck என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. :)
http://en.wikipedia.org/wiki/List_of_films_that_most_frequently_use_the_word_%22fuck%22
.
Trainspotting (1996) - மிகை போதை.. :)
.
TRAINSPOTTING TRAILER - 18+ or 21+ (Dont watch this trailer in office, especially)
27.10.2010





5 comments:
நல்ல விமர்சனம்...
நல்ல விமர்சனம் நண்பா
ஸ்லம்டாக் மில்லியனரில் நிறைய தகவல் பிழைகள் இருந்ததால்,இவரது படங்கள் பார்க்காமல் தவிர்த்தேன்,இதை விரைவில் பார்க்கிறேன்.
@இராமசாமி கண்ணண் : நன்றி..
@கீதப்ப்ரியன் : நன்றி..
தமிழ்நாடு சர்வதேச திரைப்பட விழா 2010 - ஒரு நேரடி ரிப்போர்ட்
நல்ல படம்.நானும் பாத்துருக்கேன்.நல்லா இருக்கு போஸ்ட்.
Post a Comment