Saturday, August 21, 2010

நான் மகான் அல்ல - திரைவிமர்சனம்



'வெண்ணிலா கபடிக்குழு' படத்தை இயக்கிய சுசீந்திரனின் இரண்டாவது படம். ரஜினி திரைப்பட பெயரை வைத்திருப்பது ஒரு எதிர்பார்ப்பை கிளறிவிட மட்டுமே அன்றி, படத்துக்கும் தலைப்புக்கும் என்னப்பா சம்பந்தம். நாயகன் பழிவாங்குவதினால் அப்படியொரு தலைப்போ?? தற்போது மூன்றாவதாக, 'அழகர்சாமியின் குதிரை' சிறுகதையை திரைப்படமாக இயக்கி கொண்டிருக்கிறார்.
.
கிழக்கு கடற்கரை சாலையில் ஓராமாக ஒதுங்கும் காதலர்களை, மடக்கி ஆணை அடித்துப்போட்டுவிட்டு பெண்ணை கவர்வதை செய்யும் ஐந்தாறு கல்லூரி படிக்கும் இளைஞர்களோடு துவங்குகிறது படம். ஒரு ஜாலியான வேலையில்லாத இளைஞன் கார்த்தி. அமைதியான நடுத்தரக்குடும்பம். கூட நான்கு நண்பர்கள். தன் தோழியின் திருமணத்தில் பார்க்கும் பெண்ணை (காஜல்) காதலிக்க துவங்குகிறார். படபடவென, லூசுத்தனமான காதல்.
நண்பர்கள். குடும்பம் என முதல் பாதி ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், ஓரிடத்தில் துண்டுத்துண்டாக ஆண்-பெண்ணின் உடல்பாகங்கள் காவல்துறையால் கைப்பற்றப்பட, கொலையாளிகள், சாட்சியான கார்த்தியின் தந்தை கொன்றுவிட, கார்த்தி, கொலையாளிகளை பழிவாங்குவது மீதிப்படம்.
.
வழக்கமான பழிவாங்கும் கதைதான் என்றாலும், சொல்லியவிதத்தில் கவர்கிறார், சுசீந்திரன். ஒரு தெளிவான Crime Thriller என்று முடிவெடுத்துவிட்டே படத்தை தொடங்கியிருக்கிறார் போலும். நிறைய வன்முறை என்று படம் முடியும் போது தோன்றினாலும், ரத்தத்தை தெறிக்கும் வன்முறை அல்ல அது, படம் பார்ப்பவர்களின் ரத்தத்தை சூடேற்றும் வன்முறை. குறிப்பாக கார்த்திக்கு "பையா" போல் மிகப்பெரும் ஹீரோ போலலாமல் வருகிறார். குறிப்பாக இறுதிகாட்சியை தவிர, கார்த்திக்கு சண்டைகாட்சிகள் எதுவும் இல்லை. மேலும் இளம் கொலையாளிகளாக வரும் இளைஞர்கள் மிக கச்சிதமான தேர்வு, ரேணிகுண்டா திரைப்படம் போல.
.

கிட்டத்தட்ட திரைப்படத்துக்கு நாயகியே தேவையில்லைதான் என்றாலும், தமிழ்ப்படத்துக்கு மிக அவசியம் ஆச்சே. என்பதனால் காஜல் அகர்வால். காஜல் கொள்ளையழகு. குறிப்பாக ஏற்கனவே எல்லாருக்கும் பிடித்தமான பாடல் "இறகை போல", தொலைக்காட்சி பெட்டிகளை ஆளும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் படத்தில் மூன்று பாடல்கள் மட்டுமே பயன்படுத்தியது நல்லது. முதல் பாதி நிறைய தேவையற்ற காட்சிகள் என்றாலும், அவையனைத்தும் கார்த்தி'க்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் முதல் பாதியின் லூசுத்தனங்கள் கடுப்பையும், நகைச்சுவைகள் சிரிக்கவும் வைத்தன என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். கொஞ்சம் ரசனைதான். இரண்டாம் பாதி முழுக்க தேடல், கொலை, பழிவாங்குதல் என போகிறது. குறிப்பாக இறுதிசண்டைகாட்சியை ரத்தத்தை சூடற்றும் வகையில் அமைத்திருப்பதில் படம் வெற்றிபெறும் என்றே தோன்றுகிறது. என்ன, படத்தின் வன்முறைக்காக கொஞ்சம் விமர்சிக்கப்படும்.
.
மேலும் கொலையாளிகள், கொலையாளிகளுக்கு சாட்சியை கொல்ல உதவியவர், கார்த்தியின் தந்தை (சாட்சி), கார்த்தி, கார்த்திக்கு தெரிந்த அந்த தாதா, அவரின் ஆட்கள், என சண்டைபோட்டுகொள்ளும் எவருக்கும் எவருக்குள்ளும் எவ்வித முன் அறிமுகமோ அல்லது முன் பகையோ எதுவுமில்லாமல் இருப்பது சிறப்பு. மேலும் நடிகர் தேர்வு மிக சிறப்பான ஒன்று. கார்த்தியின் குடும்பம், குறிப்பாக கார்த்தியின் தந்தை ஜெயப்ரகாஷ், வெண்ணிலா கபடிக்குழு நண்பர், இளைஞர்கள், தாதா எல்லாரும் கனகச்சிதம். படமும் கச்சிதமான ஒன்றுதான். இப்படம் ஒன்றும் தமிழ் சினிமாவை புரட்டிபோடும் அல்லது இயல்பான திரைப்படம் அல்ல.
.
யுவன் திரைப்படத்தின் பலம். என்ன இறுதிகாட்சியின் பின்னணி இசை மட்டும் சொதப்புகிறது. மேலும் பாஸ்கர் சக்தியின் வசனம், மதி, மு.காசிவிஸ்வநாதன் ஆகியோரும் பலம். சுசீந்திரன் திட்டமிட்டு செய்கிற இயக்குனர். இத்திரைப்படத்தை பற்றி நிச்சயம் கலவையான விமர்சனங்கள் வரும். ஆனால் எனக்கு பிடித்திருந்தது.
.
நான் மகான் அல்ல - கச்சிதமாக தைக்கப்பட்ட கமர்சியல் Crime Thriller தமிழ்த் திரைப்படம்.
.

கிழக்கு கடற்கரை சாலைகளில் ஒதுங்கும் காதலர்கள், கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள். :)

.
வந்துட்டீங்க. அஜித்தின் ஐம்பதாவது படம் மங்காத்தா'வின் டீசர் ட்ரைலர் பார்த்துட்டு போங்க.. (அஜித், ஏன் தொடர்ந்து கோட் சூட், துப்பாக்கி மோகத்தில் இருக்கிறார்?) யுவனின் பின்னணி ராக்ஸ்.. வெங்கட் பிரபு என்ன செய்யறாருன்னு பார்ப்போம்.



.
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
21.08.2010

15 comments:

Saravana Kumar MSK said...

இன்ட்லியின் பட்டனை காணோமே? எதாச்சும் செய்யனுமா ??

ஆர்.கே.சதீஷ்குமார் said...

எனக்கும் காணோம் காக்கா தூக்கிட்டு போயிருச்சோ...விமர்சனம் கடைசி பஞ்ச் நல்ல அருமையான வரி.

நான் மகான் அல்ல - கச்சிதமாக தைக்கப்பட்ட கமர்சியல் Crime Thriller தமிழ்த் திரைப்படம்.
.
கிழக்கு கடற்கரை சாலைகளில் ஒதுங்கும் காதலர்கள், கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள். :)

Mohan said...

நல்ல விமர்சனம். எனக்கும் படம் பிடித்திருந்தது.

Saravana Kumar MSK said...

தமிலிஷின் ஸ்ரிக்ப்டை கமென்ட் செய்துவிட்டு, இன்ட்லியின் ஸ்க்ரிப்ட்டை சேர்த்துவிட்டேன்.. இப்போது ஒட்டு பட்டை தெரிகிறது.

Saravana Kumar MSK said...

@ஆர்.கே.சதீஷ்குமார் : நன்றிங்க.

@Mohan : நன்றிங்க.

டுபாக்கூர்கந்தசாமி said...

நீங்க சொல்ரத பாத்தா நல்ல படமா தான் இருக்கும் போல, நம்பி பாத்துடுவோம்....

King Viswa said...

படம் ஒரு டைம்பாஸ் என்பதை அனைவரும் கூறிவிட்டார்கள்.

இதுவரை வந்த கார்த்தியின் படங்களில் இதுதான் பெஸ்ட் என்று இன்று டைம்ஸ் அப் இந்தியா வேறு கூறி இருக்கிறது.

ILLUMINATI said...

பார்த்துடுவோம்.எல்லோரும் நல்ல விதமா தான் சொல்றாங்க. :)

சி.பி.செந்தில்குமார் said...

வழக்கமான பழிவாங்கும் கதைதான் என்றாலும், சொல்லியவிதத்தில் கவர்கிறார், சுசீந்திரன். ஒரு தெளிவான Crime Thriller என்று முடிவெடுத்துவிட்டே படத்தை தொடங்கியிருக்கிறார்>>

நல்ல ,தெளிவான விமர்சனம்

எஸ்.கே said...

நல்லாயிருக்கு சார்!

Saravana Kumar MSK said...

@டுபாக்கூர்கந்தசாமி : பாருங்க. நன்றி.


@King Viswa: நிச்சயம் பார்க்கக்கூடிய படம்தான்.
//இதுவரை வந்த கார்த்தியின் படங்களில் இதுதான் பெஸ்ட் என்று இன்று டைம்ஸ் அப் இந்தியா வேறு கூறி இருக்கிறது.//
அடப்பாவிகளா?? அப்போ பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன் எல்லாம்??!!!


@ILLUMINATI : பாருங்க. நன்றி.


@சி.பி.செந்தில்குமார் : நன்றிங்க.


@எஸ்.கே : நன்றிங்க..

Anonymous said...

முதல் முதல் பாதி நிறைய தேவையற்ற காட்சிகள் என்றாலும், அவையனைத்தும் கார்த்தி'க்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. ----------------------------------முதல் பாதி படதிற்க தேவை இல்லை

Mayooresan said...

இன்னமும் பார்க்கவில்லை. விரைவில் பார்த்துவிட வேண்டியதுதான்.

Pareethi said...

நல்ல விமர்சனம்.

Saravana Kumar MSK said...

@Anonymous : :)) நன்றி..

@Mayooresan : பாருங்க.. நன்றி..

@Pareethi : நன்றி..

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..