Tuesday, August 31, 2010

திரைத்துணுக்குகள் 01.09.10; Death at a Funeral (2007) (2010)

.
கதைத்தளம் Vs கதை


பலபேர் தங்கள் பதிவிலோ அல்லது பின்னூட்டங்களிலோ அன்பே சிவம், Planes Trains and Automobiles படத்தை காப்பியடித்தது. ஆய்த எழுத்து, Amores Perros படத்தை காப்பியடித்தது. விருமாண்டி, Rashomon படத்தை காப்பியடித்தது என்று போகிற போக்கில் குற்றம் சொல்வதை படிக்கும் போதெல்லாம் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

ஏனென்றால் அவ்வை ஷண்முகி, Mrs. Doubtfire படத்தை காப்பியடித்தது என்று சொன்னாலோ அல்லது லாடம், Lucky Number Slevin படத்தை காப்பியடித்தது என்று சொன்னாலோ, பச்சைக்கிளி முத்துசரம், Derailed படத்தை காப்பியடித்தது என்று சொன்னாலோ, சிவா மனசுல சக்தி கொஞ்சம் மாற்றங்களோடு My Sassy Girl படத்தை காப்பியடித்தது என்று சொன்னாலோ, அது நியாமான குற்றசாட்டு.

ஆனால் Flashback, Non Linear, Reverese chronological மாதிரி, "மாற்றுக் கருத்து கொண்ட இருவரின் சிக்கலான பயணம்", "ஒரு புள்ளியில் மோதிச்சிதறும் மூன்று கதைகள்", "ஒவ்வொருவரின் பார்வையிலும் ஒவ்வொரு மாதிரியாக தோற்றமளிக்கும் கதை" என்பதெல்லாம் வெறும் தளம்தானே. அந்த தளத்தின் மீது தங்கள் கதைகளை கட்டமைக்கும் இயக்குனரை "காப்பியடிக்கிறான்" என்று குற்றம் சொல்வது சரியாக வராது என்பது என் எண்ணம்.

●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
சமீபத்தில் கவர்ந்த ட்ரைலர்


ஸ்லம்டாக் மில்லியனர் கூட்டணியின் அடுத்த படைப்பு. Danny Boyle + A.R.ரஹ்மானின் படைப்பு. 127 Hours.




புஷ்கர் - காயத்ரி இயக்கிய ஆட்டோ (ஓரம் போ) படத்தின் ட்ரைலரும் படமும் எனக்கு மிக மிக பிடித்திருந்தது. அவர்களின் இரண்டாம் படம், (குவாட்டர் கட்டிங்). இதோ ட்ரைலர். பாருங்க. அசத்தறாங்க.. i lov dis couple..



●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
சமீபத்திய பாடல்கள்


லீலை படத்தில் இசையமைப்பாளாராக அறிமுகமான சதீஷ் சக்கரவர்த்தியின் இரண்டாம் படம் கனிமொழி. (லீலை இன்னும் வெளியாகவில்லை என்பது வேறு விஷயம்..) லீலை படத்தின் பாடல்கள் எனக்கு பிடித்திருந்தன. "சில்லொன்று ஒரு கலவரம்" பாடல்தான் என் ரிங்டோன். என்பதனால் கனிமொழி மீது எதிர்பார்ப்பு இருந்தது. இந்த திரையிசையில் ஒரு பாடலை தவிர மற்றவை நல்லா தான் இருக்கு. (ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லல. ஓகே. நல்லாஇருக்கு)

யாரோ இவள் இவள் யாரோ பாடல், துள்ளல்..
Singers : Mukesh, Belashende
Lyricist: Na. Muthukumar

இன்னும் தேவன் ஏகாம்பரத்தின் பலே பாண்டியா, யுவனின் பாஸ் என்கிற பாஸ்கரன், ஹரிஹரனின் சிக்கு புக்கு இன்னும் கேட்கவே ஆரம்பிக்கல.. கேட்கணும்.. வ (குவாட்டர் கட்டிங்) திரைப்படத்தின் பாடலுக்காக வெயிட்டிங்.. இன்று பாடல் வெளியீடு..
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
இந்த வாரயிறுதியில் பார்க்க நினைக்கும் திரைப்படம்


இந்த வாரம் வெளியாகவிருக்கும் பலே பாண்டியா திரைப்படத்தை பார்க்கலாமென்று இருக்கிறேன். நகைச்சுவையாய் இருக்கும்ன்னு நம்பறேன். பார்ப்போம். :)
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●

Death at a Funeral (2007)
IMDB Rating : 7.3/10


Dirty Rotten Scoundrels, What About Bob, In and Out, Bowfinger, The Score முதலிய படங்களை இயக்கிய  Frank Oz இயக்கத்தில் 2007-ல் வெளிவந்த பிரிட்டிஷ் நகைச்சுவை திரைப்படம் Death at a Funeral.

ஒரு வீட்டின் தந்தை இறந்து போகிறார். இறந்தவருக்கு இறுதியஞ்சலி மரியாதையை செலுத்த குடும்பத்தார், நண்பர்கள், உற்றார் உறவினர் அனைவரும் ஒன்று சேருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒவ்வொருவிதம். மேலும் இறந்தவரை பற்றிய ஒரு அதிர்ச்சியான ரகசியம் ஒன்று மகன்களுக்கு வந்து சேர்கிறது. இந்த மொத்த கூத்தும் தான் படம். நல்ல நகைச்சுவை திரைப்படம். (இதை சில பேர் sick movie என்று கூட சொல்லலாம்). இருந்தாலும் படம் நிதர்சனத்தை தான் பேசுகிறது. மொத்த படத்தையும் கிட்டத்தட்ட ஒரே வீட்டில் படம்பிடித்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு கதாப்பாத்திரமும் ஒவ்வொரு குணாதிசியம். இவர்களின் பையனும் அவன் மனைவியும் புதிதாக ஒரு வீடு வாங்கும் முனைப்பில் இருக்கிறார்கள். இன்னொரு பையன் அமெரிக்காவில் புகழ்பெற்ற எழுத்தாளன். வீட்டுக்காக ஐந்து பவுண்டுக்கூட தராதவன். குடும்ப நண்பர் ஒருவர். கோபக்காரர். அவரின் பெண் வேறு ஒருவனை காதலிக்கிறார். அந்த காதலன் மீது அப்படியொரு கோபம் அவருக்கு. அவரின் மற்றொரு பையன் ஒரு chemist. வீட்டிலேயே அதிக சக்தியுள்ள போதை மருந்துகளை நண்பர்களுக்காக தயாரிக்கிறவன். குடும்ப நண்பரின் பெண்ணை ஒரு தலையாய் காதலிக்கும் ஒரு தறுதலை. சக்கர நாற்காலி முதியவர். இன்னும் சிலர். நண்பர்கள், உறவினர்கள் என்று.

Death at a Funeral - நல்ல கருப்பு நகைச்சுவை திரைப்படம்.

●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●

Death at a Funeral (2010)

IMDB LINK


மேற்சொன்ன பிரிட்டிஷ் திரைப்படத்தின் அமெரிக்க ரீமேக் சமீபத்தில் வெளியானது. என்ன கொடும சரவணன்!! பெரும்பாலும் ஹாலிவுட்டில் ரீமேக்கப்படும் திரைப்படங்கள் மொக்கையாகத்தான் ஆகும். இந்த படமும் விதிவிலக்கல்ல. ஒருவேளை பிரிட்டிஷ் திரைப்படத்தை பார்க்காமல் இருந்திருந்தால் இந்த படம் பிடித்திருக்குமோ என்னவோ. அப்படியே காப்பியடித்திருக்கிறார்கள், வசனங்கள் உட்பட.

மேலும் பிரிட்டிஷ் திரைப்படத்தில் அனைவரும் வெள்ளையர்கள். இந்த படத்தில் அத்தனை பேரும் கருப்பர்கள். இந்த மாற்றத்திற்கு பின்னால் ஏதேனும் நிற அரசியல் இருக்கிறதோ என்னவோ. அல்லது இவர்கள்தான் பிரிட்டிஷ் படத்தின் உரிமையை வாங்கி ரீமேக் செய்தார்களா அல்லது ரீமேக்கில் வித்தியாசம் காட்டவோ என்பது தெரியவில்லை. Tracy Morgan, Martin Lawrence, Chris Rock பலர் நடித்து வந்திருக்கும் திரைப்படம்.
.
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
01.09.2010

10 comments:

எஸ்.கே said...

2007 death at a funeral படம் ரொம்ப நல்லாயிருக்கும். அதில் குள்ளமா வரவர் சூப்பரா நடிச்சிருப்பார். 2010 படம் இன்னும் பார்க்கலை.

King Viswa said...

குவாட்டர் கட்டிங் - புல் அளவுக்கு செம போதை ஏத்தும் என்று நம்புவோம்.

ஜாக்கி சேகர் said...

உங்கள் காப்பி கருத்தோடு100 சதவீதம் ஒத்து போகின்றேன்..

Saravana Kumar MSK said...

@எஸ்.கே : 2010 பார்க்காதீங்க. :)) நன்றி.

@King Viswa : எனக்கும் நம்பிக்கையிருக்கிறது.. :)) நன்றி.

@ஜாக்கி சேகர் : நன்றிங்க்ணா.. :))

கருந்தேள் கண்ணாயிரம் said...

//பலபேர் தங்கள் பதிவிலோ அல்லது பின்னூட்டங்களிலோ அன்பே சிவம், Planes Trains and Automobiles படத்தை காப்பியடித்தது. ஆய்த எழுத்து, Amores Perros படத்தை காப்பியடித்தது. விருமாண்டி, Rashomon படத்தை காப்பியடித்தது என்று போகிற போக்கில் குற்றம் சொல்வதை படிக்கும் போதெல்லாம் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்//

பதிவு ஒண்ணு சீக்கிரமே போடப்போறேன். அதுல இதுக்கு பதில் சொல்லுறேன் ;-) . இந்தப் பதிவை போடணும் போடணும்னு பாக்குறேன் டைமே இல்ல.. இப்ப நீங்க எழுதினதைப் பார்த்தவுடனே, போட்டே தீரணும்னு முடிவு பண்ணிட்டேன் ;-)

Prasanna Rajan said...

பிரிட்டிஷ் படத்தின் ரீமேக் தான் 2010இல் வெளியான படம். என்ன கருமத்துக்கு ரீமேக் செய்தார்களோ? அத்தனை த்ராபையாக இருந்தது. எல்லாம் ஹாலிவுட் ஸ்டுடியோக்களின் அளவு கடந்த காசு ஆசை...

பதிவுலகில் பாபு said...

Nice..

Saravana Kumar MSK said...

@கருந்தேள் கண்ணாயிரம் : எழுதுங்க. படிக்க ஆர்வமாயிருக்கிறேன்.. நன்றி :)

@Prasanna Rajan : :)) நன்றிங்க.

@பதிவுலகில் பாபு : நன்றி.

ஆதிமூலகிருஷ்ணன் said...

கதைத்தளம் குறித்த முதல் பகுதி மிகச்சரியானது. நம்மாளுங்க விமர்சனம்ங்கிற பேர்ல எழுதற பல, செமை.! ஹிஹி..

Death st a Funeral இன்னும் பார்க்கலை.

Anonymous said...

Nice site, nice and easy on the eyes and great content too.

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..