தெலுங்கில் கடந்த வருடம் வெற்றிகரமாக ஓடிய ரவி தேஜாவின் "கிக்" திரைப்படத்தை ரீமேக்கியிருக்கிறார்கள். எனக்கு "ஜெயம் ராஜா" ரீமேக்கும் படங்கள் என்றாலே கொஞ்சம் ஒவ்வாமை. படத்தில் எல்லாருமே குவாட்டர் ரம் அடிச்ச மாதிரி ஓவர் எனர்ஜிடிக்கா இருப்பாங்க. மேலும் படம் முழுக்க குத்தாட்டம் போட்டு விட்டு, கடைசி காட்சிகளில் நீதி சொல்வது எல்லாம் கடுப்படிக்கிற அழுதப்பழசு விஷயங்கள். இருந்தாலும் தமன்னா-க்காக சென்றேன். :) வழமை போலவே இப்படத்திலும் ஜெயம் ரவி, தமன்னா, ஷ்யாம், பிரபு, சுகாசினி, லிவிங்க்ஸ்டன், சத்யன், சந்தானம், வடிவேலு, மயில்சாமி, கஞ்சாகருப்பு (ஏன் விவேக்கை மட்டும் விட்டுட்டீங்க) ராதாரவி, மன்சூர் அலிகான், தியாகு, நளினி, மனோபாலா, இன்னும்ம்ம் பெயர் தெரியாத ஏகப்பட்ட நடிகர்கள். யப்பா சாமி.. மொத்த தமிழ் திரையுலக நடிகர்களையும் வெச்சி ஒரு படம். (அப்படியே விஜயகாந்த், சரத்குமார், கமல், ரஜினி கூட்டிட்டு வந்திருந்தா, நடிகர் சங்க நிதி வசூல் செய்திருக்கலாம்).
.
இந்த படத்தில் எத்தனை முறை கிக் என்ற வார்த்தை பயன்படுத்த பட்டிருக்கிறது என்பதை கணக்கெடுத்து சொன்னால், உங்களை கின்னஸுக்கு என் சொந்த செலவில் பரிந்துரை செய்கிறேன். ஒரு கோடி முறை அவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ங்கொய்யால திருப்பி திருப்பி எல்லா கதாப்பாத்திரமும் "கிக்", "கிக்", "கிக்கோ கிக்" என்று சொல்லி கடுப்பேத்தறாங்க யுவர் ஆனர். மேலும் தமன்னா "ங்கொய்யால", "புலாசுளாகி" போன்ற வார்த்தைகளை அசால்ட்டாக பயன்படுத்தி நம்மை கவர்கிறார். மேலும் குட்டி குட்டி உடைகளில், தமன்னா ராக்ஸ்.. :)))))
.
படத்தின் மிக பெரிய பிரச்சனையே ஜெயம் ரவிதான். அவருக்கு சற்றும் ஒத்து வராத கதாப்பாத்திரம். கத்தி கத்தி சாவடிக்கிறார். மேலும் பின்னணி இசை தமன் போல. தியேட்டர் பிரச்சனையா அல்லது படத்திலா என்று தெரியவில்லை. எல்லா காட்சிகளிலும் (சத்தியமா எல்லா காட்சிகளிலும்) பின்னணியில் நான்கு தோட்டா வெடிக்கும் சத்தங்கள். ஆனால் யுவனின் இசையில் ஓரிரு பாடல்கள் நல்லா இருக்கு. குறிப்பாக "சுசீலா" குரலில் வரும் "சொல் பேச்சு கேட்காத சுந்தரி". மேலும் மிகப்பெரிய கொள்ளைக்காரன் ஜெயம் ரவி (சிறார்களுக்கு உதவும் ராபின் ஹூட்), கொள்ளையடிக்கிற திட்டங்கள், உத்திகள், செயல்திறன்கள் யப்பா யப்பா.. இனிமேல் எவனாவது ஹாலிவுட்டில் robbery படம் எடுக்கட்டும். ங்கொய்யால. மேலும் இந்த ஜெயம் ரவியே இப்படின்னா, அடுத்து ராஜா இயக்கத்தில் எங்கள் இளைய தளபதியின் வேலாயுதத்தை நெனச்சாலே.. அம்மாடி..
.
இதுக்கு மேல எல்லாம் இந்த படத்துக்கு என்னாலே எழுத முடியாது - Family Entertainer படம் பார்க்கனும்ன்னு நெனச்சா போய் பாருங்க. அல்லது தமன்னா-க்காக போங்க. மற்றபடி...
.
The Sorcerer's Apprentice [2010]
IMDB RATING : 6.3 / 10கடந்த வாரம் டிஸ்னி தயாரிப்பில் வெளிவந்த படம் தான் The Sorcerer's Apprentice. கடந்த வாரம் டிஸ்னி தயாரிப்பில் வெளிவந்த படம் தான் . இந்த வருடம் வந்த Kick Ass திரைப்படத்தில் கொஞ்சம் நல்ல கதாபாத்திரத்தில் வந்த Nicholas Cage-ஐ இந்த படத்தில் நடிக்க வச்சி காமெடி பீசாக்கிட்டாங்க. Monica Belluci கூட இறுதியில் தான் வராங்க..
.
படத்த பத்தி சொல்லவேண்டும் என்றால், படமா இது?? வருடத்துக்கு ஒரு நாலு படம் Lord of the Rings, Narnia, Harry Potter, Greek Myth ஸ்டைலில் எடுக்கவேண்டுமென்று முன்பே முடிவு பண்ணிடுவாங்க போல. அப்படி வந்த படங்கள் தான் Lighting Thief மற்றும் The Sorcerer's Apprentice. ஒரு நல்ல மந்திரவாதி. ஒரு கெட்ட மந்திரவாதி. ஜாடியினுள் அடைபட்டிருக்கும் நாயகி மற்றும் உலகத்தை அழித்துவிடும் கொடூரமான சூன்யக்கார கிழவி. உலகத்தை காப்பாற்ற பிறந்த சிறுவன். சிறுவன், இளைஞன் ஆனதும் அவனுக்கு பயிற்சி தரும் நல்ல மந்திரவாதி (Sorcerer's Apprentice - படத்தோட பேரு வந்துருச்சா). கதை நடப்பதோ 2010-ல், பிசியான நியூ யார்க் தெருக்களில். எப்பூடி..???
.
முடியல. இந்த படத்தை பத்தி எழுதறது எல்லாம் ரொம்ப கடினமான ஒன்று. தயவு செய்து இந்த படத்துக்கு போயிடாதிங்க. பார்த்துராதீங்க.. அவ்ளோ தான் சொல்வேன்..
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
23.07.2010





14 comments:
//இந்த படத்தில் எத்தனை முறை கிக் என்ற வார்த்தை பயன்படுத்த பட்டிருக்கிறது என்பதை கணக்கெடுத்து சொன்னால்//
பத்து வருடங்களுக்கு முன்பு பிரசாந்த் "நடித்து" (?!?!) வந்த "ஹலோ" படத்திலும் இதே கூத்துதான். படம் முழுக்க யாராவது ஹலோ, ஹலோ என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அப்போது இவர்கள் எத்தனை முறை ஹலோ சொல்கிறார்கள் என்று எண்ண இரண்டு முறை பந்தையம் கட்டி அந்த படத்தை பார்த்து பந்தயத்தில் வென்றேன் (மொத்தம் 56 முறை).
//மேலும் இந்த ஜெயம் ரவியே இப்படின்னா, அடுத்து ராஜா இயக்கத்தில் எங்கள் இளைய தளபதியின் வேலாயுதத்தை நெனச்சாலே.. அம்மாடி//
வேலாயுதம்? அதையும் பார்ப்போம்.
நீங்கதான் இருக்கீங்களே? பார்த்துட்டு சொல்ல மாட்டீங்க?
அதுக்கு முன்னாடி காவல் காதல் என்றொரு படம் வேறு வருகிறது.
@King Viswa : //பந்தயத்தில் வென்றேன் (மொத்தம் 56 முறை).//
நீங்க மனுசனே இல்லை.. தெய்வம்ண்ணே..
ஆனா இந்த படத்துக்கு எண்ணி சொல்லுங்க பார்ப்போம்.. :)))
@King Viswa :
//நீங்கதான் இருக்கீங்களே? பார்த்துட்டு சொல்ல மாட்டீங்க? //
//அதுக்கு முன்னாடி காவல் காதல் என்றொரு படம் வேறு வருகிறது//
நிச்சயமா பார்ப்பேன்.. எங்கள் தளபதியின் படத்தை பார்ப்பதை தவிர வேறேதும் அறியேன் பராபரமே.. :)
KING VISWA.. எல்லா படத்தையும் நாங்களே பாத்துட்டு சொன்னா..உங்களுக்கென்ன ஜாலிதான்..:(
செம நக்கலான பதிவு
//KING VISWA.. எல்லா படத்தையும் நாங்களே பாத்துட்டு சொன்னா..உங்களுக்கென்ன ஜாலிதான்//
அண்ணே, (உங்களைப்போல) அண்ணன் உடையான் படத்திற்கு அஞ்சான்
//ஆனா இந்த படத்துக்கு எண்ணி சொல்லுங்க பார்ப்போம்.//
இதுவரைக்கும் ஒரே ஒரு ஜெயம் ரவி படம்தான் பார்த்திருக்கேன், அதுவும் ஒரு நாள் சென்னையில் வெயில் அதிகமானதால் நண்பருடன் தியேட்டரில் சென்று உட்கார்ந்தபோது.
@Cable Sankar : வாங்க தலைவரே..
@சி.பி.செந்தில்குமார் : நன்றிங்க.
@King Viswa : இந்த படத்த நீங்க கட்டாயமா பார்க்கோணும், என்பதே என் விருப்பம்.. :)
patama athu kastamata muruga
"சுசீலா" குரலில் வரும் "சொல் பேச்சு கேட்காத சுந்தரி"-இந்தப் பாடலை பாடியவர் 'சித்ரா' என்று நினைக்கிறேன்.
தல,தெலுகு ல கிக் படம் நல்லா இருந்தது.ரவி (தெலுகு ரவி :) ) நல்லாப் பண்ணி இருந்தார்.அப்புறம்,இலியானா கூட compare பண்ணினா,தமன்னா அடாசு. :)
Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com
Post a Comment