
WATCHMEN (2009)
WATCHMEN (2009) : IMDB RATING :: 7.8/10
Film Noir திரைப்படங்கள் மற்றும் காமிக்ஸ் திரைப்படங்கள் மீதான இயக்குனர்கள் மற்றும் ரசிகர்களின் கவர்ச்சி, சூப்பர் ஹீரோ படங்களையும் விட்டுவைக்கவில்லை அல்லது சூப்பர் ஹீரோக்களின் கதைகளை படமாக்குகையில் Default Template வடிவத்தில் படமாக்கும் கொடுமையிலிருந்து விடு்பட்டு, வேறு வடிவங்களில் திரைப்படமாக்கும் முயற்சி என்றே கருதவேண்டியிருக்கிறது. அவ்வகையில் எனக்கு பிடித்த திரைப்படங்கள் நோலனின் பேட்மேன் சீரிஸ் திரைப்படங்கள். நவீன வடிவ சூப்பர் ஹீரோ. நோலன், பொத்தாம் பொதுவான சூப்பர் ஹீரோ அணுகுமுறை அல்லாது பேட்மேனை (கூடவே ஜோக்கரும்) வடிவமைத்திருந்தார். போலவே கடந்த வருடத்தின் WatchMen திரைப்படமும், இவ்வருடத்தின் Kick Ass திரைப்படமும் முக்கியமானவையாக தோன்றுகின்றன. WatchMen திரைப்படத்தை பற்றி படம் வந்த புதிதில் பாலா எழுதியிருந்தார். அத்திரைப்படத்தின் திரைப்பட உருவாக்கமும் மிக வித்தியாசமான காட்சி அனுபவமாகவே இருந்தது.

KICK ASS (2010)
KICK ASS (2010) : IMDB RATING :: 8.2/10 :::: Top 250: #164
கூடவே கலைத்து போடுதலை திரைக்கதை என்ற அளவிலும் தாண்டி ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை வரை கொண்டுவந்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது. மிகுந்த காட்சியின்பங்களை முன்னிறுத்தி உருவாக்கும் திரைப்படங்கள் நம்மை கட்டிப்போட்டு ரசிக்கவைக்கிறன.
.
இந்த வருடம் ஆங்கிலத்தில் வெளியான நல்ல படங்களுள் ஒன்று, சமீபத்தில் ரசித்த பார்த்த படங்களுள் ஒன்று Kick Ass. Kick Ass என்ற பெயரில் வெளியான காமிக்ஸை படமாக்கியிருக்கிறார்கள். நான் அறிந்தவகையில், SinCity படத்தை தொடர்ந்து அவ்வகையிலான காமிக்ஸ் + Neo Noir திரைப்பட உருவாக்கம் (making), புது trend ஆகிவிட்டது போல. இத்திரைப்படத்தின் திரைப்பட உருவாக்கத்தை ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமானால் "அட்டகாசம்". இந்த திரைப்படத்தின் முதல் ட்ரைலர் வந்த போது இது ஒரு நகைச்சுவை (teen comedy) திரைப்படம் என்றே நினைத்திருந்தேன். பின் வந்த ட்ரைலர்களை கவனிக்கவும் மறந்துவிட்டேன். படம் பார்த்தபோது தான் தெரிந்தது இது comedy, action, thriller, superhero - Neo Noir திரைப்படம் என்று. மிக அதிகமான வன்முறை கொண்ட படமென்பதாலும் மேலும் ஒரு குட்டிப்பெண் அவ்வன்முறையை செய்வதாலும் நிறைய கண்டன விமர்சனங்களையும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்ற படமிது.
.
High School-லில் படிக்கும் மிகசாதாரணமான ஒரு இளைஞன். ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமானால் Loser. கிட்டத்தட்ட மொத்த அமெரிக்க மக்களை போல் காமிக்ஸ், சூப்பர் ஹீரோ விரும்பி. அல்லது அடிமை. படம் முழுக்க இந்த இளைஞனின் Narration-ல் படம் நகர்கிறது. ஒரு சமயத்தில் சூப்பர் ஹீரோ போல் ஆகிவிட முனைந்து, ஒரு சூப்பர் ஹீரோ உடையணிந்து, Kick Ass என்ற பெயரில் இரவில் செல்கையில், ஒரு சண்டையில் செமைத்தையாக அடிவாங்கிக்கொண்ட போதும், அதற்கு முன் கத்திக்குத்து வாங்கிய போதிலும், Youtube மூலமும் MySpace மூலமும் அமெரிக்க இளசுகளிடையே புகழ் வாங்கிவிடுகிறான் Kick Ass. இதற்கிடையில் வருகிறார் Nicholas Cage. இவரும் (Big Daddy) இவரின் குட்டிப்பெண்ணும் (Hit Girl) சூப்பர் ஹீரோ போலவே தங்களை தயார் செய்துக்கொள்கிறார்கள், Batman மாதிரி. Nicholas Cage ஒரு முன்னாள் Cop. தன் மனைவியை வேலையை பறி கொடுத்து, பத்து வருடங்கள் ஜெயிலில் கழித்த, Nicholas Cage வில்லனை (Mark Strong) பழிவாங்க தன்னையும் தன் பத்து வயது பெண்ணையும் தயார் செய்கிறார். வில்லனின் அடியாட்களை கொன்றுவிடும் ஒரு சமயத்தில், இதெற்க்கெல்லாம் Kick Ass காரணமென்று வில்லன் கருத, வில்லனின் பையன் (இவனும் அதே High School-லில் படிக்கிறவன்), தானும் ஒரு சூப்பர் ஹீரோ போல (Red Mist) வந்து Kick Ass-யின் நண்பனாகி யார் வில்லனின் ஆட்களை கொன்றார்கள் என்பதை கண்டுபிடிக்க முயல்கிறான். இதற்கிடையில் Kick Ass-ம் அவன் பள்ளியை சேர்ந்த பெண்ணுக்குமான புதுக்காதல். பின் என்னவெல்லாம் ஆனது என்பதை படம் பார்த்து அனுபவியுங்க.
.
படத்தின் மிகப்பெரும் பலமே சிறப்பான திரைப்பட உருவாக்கமும், பின்னணி இசையும், வசனங்களும் கொண்ட திரைக்கதை. பின்னணி இசையை பற்றி மிகப்பெரிய கட்டுடைப்பு என்றே சொல்லலாம். காதல், சண்டைக்காட்சிகள், உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு எப்படிப்பட்ட பின்னணி இசை இருக்குமோ அதையெல்லாம் கவிழ்த்துபோட்டு ஏறி மிதித்தது போன்றதொரு பின்னணி இசை. (இது இப்போதைய Neo Noir படங்களின் trend தாம்). குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் ஒரு உச்சபட்ச, ரத்தம் தெறிக்க நடைபெறும் சண்டைக்காட்சியின் பின்னணியில் "ஹல்லேலூயா" பாடல் மற்றும் பின்னணி இசை. மேலும் Kick Ass தான் கதைசொல்லி. கதைசொல்லியின் மூலம் சொல்லப்படும் வசனங்கள் எல்லாம் அருமை. மிகுந்த சுய எள்ளலும் சூப்பர் ஹீரோக்கள் மீதான எள்ளலும் என நிறைய நல்லா இருந்தது..
.
படத்தின் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் செம. வெகுநாட்களுக்கு பிறகு Nicholas Cage-க்கு நல்ல கதாப்பாத்திரம். குறிப்பாக Hit Girl-ஆக வரும் சிறுமியும் (Chloë Moretz) கலக்கல். வழமை போலவே Mark Strong கலக்கல். படத்தை இயக்கியவர் Matthew Vaughn. Lock, Stock and Two Smoking Barrels மற்றும் Snatch திரைப்படங்களின் தயாரிப்பாளர். Layer Cake, Stardust படங்களை இயக்கியவர். இந்த திரைப்படத்தை பார்க்கையில் Coen Brothers-ம் Guy Ritchie-ம் இணைந்து இயக்கிய படம் போலவே இருந்தது. Brad Pitt-ம் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர். மேலும் இத்திரைப்படத்திற்க்கு கண்டன விமர்சனங்களும் நிறைய. படத்தின் பெயர் முதல் குழந்தைகள் மனதில் வன்முறையை வளர்க்கும் படம். ஒரு குட்டிப்பெண் மிகப்பெரும் வன்முறையை கையாள்வது. மிக அதிகப்படியான வன்முறை கொண்ட படம். என நிறைய கண்டங்களும் உண்டு.
.
Kick Ass - Watch it..
KICK ASS TRAILER 1
KICK ASS TRAILER 2
KICK ASS TRAILER 3
.

KISS KISS BANG BANG (2005)
KISS KISS BANG BANG (2005) : IMDB RATING :: 7.8/10
Kick Ass, WatchMen திரைப்படங்களை பேசுகையில் Kiss Kiss Bang Bang [2005] திரைப்படமும் ஞாபகம் வந்துவிட்டது. இப்போது எழுதாமல் போனால் பின் எழுதுவது கடினமாக போகும். Robert Downey Jr, Val Kilmer நடிப்பில் வெளியான திரைப்படம். Lethal Weapon சீரிஸ் திரைப்படங்களை Shane Black இயக்கத்தில் வந்த திரைப்படம். தவறுதலாக ஹாலிவுட்டுக்கு வரும் திருடன் Robert Downey Jr, ஹாலிவுட்டில் நடிக்க அலைந்து கொண்டிருக்கும் நாயகி, ஹாலிவுட்டில் ஒரு தயாரிப்பாளராக வரும் "Gay" Perry (Val Kilmer). Robert Downey Jr தான் கதைசொல்லி. அவ்ளோ sarcastic-க்கா கதைசொல்லி. கொலை, தவறுதலாக மாட்டிக்கொள்ளுதல், பெரிய கைகளின் தந்திரம், புலனாய்வு, திருப்பங்கள், முடிவு என்ற கதை என்றாலும் நல்ல Narration. நிச்சயம் பார்த்துடுங்க. வசூல் ரீதியில் தோல்விப்படமே என்றாலும் நல்ல விமர்சனங்களை சம்பாதித்த படம்.
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
20.07.2010




8 comments:
நல்ல அறிமுகங்கள்... மூணு படமுமே கேள்விப்பட்டிருந்தாலும், இனிதான் பார்க்கணும்...
வாட்ச்மென் படத்த, தியேட்டர்ல போயி (சத்யம்) பார்த்தேன்.. போன வருஷம்.. படத்துல கும்முனு ஒரு ‘சீன்’ இருக்கும்.. அந்த சீனைத் தவிர, இந்தப் படத்துல ஒரு புண்ணாக்கும் இண்ட்ரஸ்டிங்கா இல்ல... ;-) படம் மொக்கக்கடி.. மனசு நொந்து போயிட்டேன்.. அதப்பத்தி ஒரு பதிவு வேற எழுதி, கடுப்ப ஜாஸ்தி பண்ணிட்டீங்க ;-)
கிக் ஆஸ் படம் நல்லா இருக்குன்னு காதலர் எழுதியிருந்தாரு.. அதுவும் கிஸ்கிஸ்ஸும் இன்னும் பாக்கல.. பார்த்துட்டு, அப்புறம் வந்து கமெண்டு போடுறேன் ;-)
பார்த்துடுவோம்
வாட்ச்மேன் - பார்த்து நொந்தவன்.
கிக் ஆஸ் - அந்த சிறுமிக்காக மாத்திரம் பார்க்கலாம். மற்றபடி ரொம்ப சூப்பர்ன்னு சொல்லிக்க முடியலை.
மூணாவது படம் இன்னும் பார்க்கல.
@ஜெய் : பாருங்க ஜெய்.. நன்றி..
@கருந்தேள் கண்ணாயிரம் : (ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு பீலிங்) வாட்ச்மென் பத்தி பாலாவும் அப்படிதான் சொல்லியிருந்தார். எனக்கென்னவோ பிடிச்சிருந்தது. மேலும் ஒரு கட்டுரை மாதிரி எழுத ஆரம்பிச்சப்போ, வாட்ச்மென் பத்தி சொல்லிட்டு Kick Ass பக்கம் வரலாமேன்னு தான் எழுதியிருந்தேன்.. நன்றி.
@யாசவி : நிச்சயம் பாருங்க. மூணு படங்களிலும் கொஞ்சம் வன்முறை அதிகம் என்பதை மட்டும் சொல்லிக்கறேன்.. நன்றி.
@சென்ஷி : (ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு பீலிங்) நண்பர் கருந்தேள்க்கு சொன்னதுதான், தல, வாட்ச்மென் எனக்கென்னவோ பிடிச்சிருந்தது. ஆனா என்னை பொறுத்தவரை Kick Ass உண்மையிலேயே செமையா இருந்தது. :) நன்றி.
கிக் ஆஸ்' பட டிவிடியை கடையில் பார்த்துவிட்டு கேள்விப்படவேயில்லையே.. ஏதும் மொக்கைப்படமாக இருக்குமோ என்று வாங்காமலே வந்துவிட்டேன். அடுத்தமுறை வாங்கிவிடலாம்.
@ஆதிமூலகிருஷ்ணன் : ரொம்ப நல்ல படம். அசால்ட்டு பண்ணிருப்பாங்க.. பார்த்துடுங்க. நன்றி :)
vimarasanam நல்லாருக்கு.ஸ்டில்ஸ் இன்னும் அட்ராக்டிவ்வா போட்டிருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்கும்.
Post a Comment