Wednesday, June 9, 2010

பிரிட்டிஷ் இயக்குனர் Guy Ritchie - ஒரு பார்வை..


Neo-Noir Crime Drama படங்களில் அதன் narration, narrator, screenplay, style, color, music, இதெல்லாம் மிக முக்கியமான ஒன்று. காட்சியின்பம் தரும் காட்சிகள் மிக முக்கியமானவை. தனது படங்களில் அதை சிறப்பாக செய்யும் இயக்குனர் Guy Ritchie. எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்களில் ஒருவர். அவரின் Sherlock Holmes இப்போதுதான் (இரண்டு மாதம் முன்பு; பதிவும் அப்போதே எழுத ஆரம்பித்தது) பார்த்து முடித்தேன். சரி படத்தை பற்றி எழுதலாம் என்று நினைத்தால், இன்னும் இவரின் Lock, Stock and Two Smoking Barrels (1998), Snatch. (2000) பற்றி ஏற்கனவே கொஞ்சமாக எழுதியிருந்தாலும், RocknRolla (2008), Revolver (2005) படங்களை பற்றி இன்னும் எழுதவில்லை என்பது நினைவுக்கு வந்தது. சரி Revolver பற்றி எழுதிவிட்டு பின்பு Sherlock Holmes பற்றி எழுதலாம் என்று இப்பதிவில் Revolver பற்றி எழுதுகிறேன்.
.
முதலில் இயக்குனர் Guy Ritchie பற்றி கொஞ்சம் பேசிவிடுவோம்.




(Guy Ritchie பற்றி தெரியாதவர்கள் இந்த வீடியோவை பார்த்தபின் தொடரவும். இது Snatch படத்தின் பெயர் போடும் காட்சி. Snatch பார்த்தவர்களும் இந்த வீடியோவை பார்க்கலாம் :))



பொதுவாக எல்லாக்கதைகளிலும் இரட்டை எதிர்நிலைகளோடு கதை சுழலும். ஆண்-பெண், நல்லவன்-கெட்டவன், திருடன்-போலிஸ், ஹீரோ-வில்லன், Good-Evil, நல்ல வார்த்தைகள் - கெட்ட வார்த்தைகள் இப்படியாக. ஆனால் Guy Ritchie-ன் கதைகள் அப்படியல்ல. இவரின் கதைகளில் எல்லாருமே கெட்டவர்கள், கெட்ட வார்த்தைகள், பொதுவாக ஆண்கள் இப்படியாக. இப்படி ஒற்றை நிலைகளில் மெதுவாக ஊர்ந்து செல்லும் திரி மீதான நெருப்பு போன்றதொரு கதை, பின்பு இறுதியில் வெடிகுண்டோடு பிணைகையில் அதிவேகமாக வெடித்து சிதறுவதை போல் புனையப்படும் கதைகள் இவருடையது. மேலும் இக்கதைகள் மிக அற்புதமான கதைசொல்லியின் மொழியில் நகர்வது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. குறிப்பாக இவர் அறிமுகப்படுத்திய Jason Statham-ன் குரல். மேலும் Quentin படங்களை போல் அதிக இறுக்கமில்லாமல் கொஞ்சம் நகைச்சுவையோடும் குறும்போடும் கதை சொல்பவர்.
.
Quentin படங்களில் வரும் புத்திசாலி மனிதர்களாகவோ அல்லது Coen Brothers-ன் black comedy படங்களில் வரும் முட்டாள்தனமான (கடுப்பேற்றும் வகையில் முட்டாள்தனமாக, மொக்கையாக சிரித்துக்கொண்டே இருக்கும் போதே டுமீல்.. டுமீல்.. :)) மனிதர்களாகவோ இல்லாமல் இரண்டும் வகையிலும் இருக்கும் மனிதர்கள் இவரின் கதாபாத்திரங்கள். எல்லாருமே Gangsters, Gamblers, Thieves, Smugglers, Porn Kings, Bookies and etc., இவரின் கதாபாத்திரங்கள், கதாபாத்திரங்களின் பெயர்கள், அவர்களின் மனம், மனோபாவம், பழக்கவழக்கங்கள், பேச்சுக்கள், உரையாடல்கள், மொழிகள் எல்லாமே மிகுந்த சிரத்தையோடு உருவாக்கப்பட்டிருக்கும். (Snatch படத்தில் Brick Top, கொலை செய்வது எப்படி என்று விளக்கும் காட்சி, ஒரு அழகான உதாரணம்).



மேலும் கதாபாத்திரங்களின் தன்மைகேற்ப காட்சிகளின் நிறம் மற்றும் பின்னணி இசை எல்லாம் கொண்டே திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கும். லண்டனில் வசிக்கும் வெவ்வேறு நாட்டு, மொழி பின்னணி மாஃபியாக்கள், என்பதனாலேயே இவரின் படங்களுக்கு சப்-டைட்டில்கள் மிகுந்த அவசியமாகின்றன. (Snatch படத்தில் நாடோடி குழுவின் ஒருவரான, Mickey யாக வரும் Brad Pitt-ன் Pikey* ஸ்லாங்கில் பேசும் பேச்சு மொழி). (Note the Dog Vs Rabbit and its Backgroud score in the below video)

* Pikey Slang - WIKI LINK



மேலும் ஐரோப்பிய நில/அரசியல் பின்னணி பற்றி கொஞ்சம் தெரிந்திருந்தால் இன்னும் அதிகமாக இவர் படங்களை ரசிக்க முடியும் என்பது என் கருத்து. ஏனென்றால் அரசியல் மற்றும் நுண்ணரசியல்களை பேச்சுவாக்கில் பேசிவிட்டு போகிறார். கண்டிக்கத்தக்க, பாராட்டவேண்டிய நுண்ணரசியல்களை தடம் காண்பதற்கு பிரிட்டிஷ்/ஐரோப்பிய மனோபாவம் மற்றும் ஐரோப்பிய நில/அரசியல் பற்றிய புரிதல் அவசியம் என்று கருதுகிறேன்.
.
Lock, Stock and Two Smoking Barrels (1998), Snatch. (2000), Swept Away (2002), Revolver (2005), RocknRolla (2008), மற்றும் Sherlock Holmes (2009). இவைதான் இவர் இதுவரை இயக்கியிருக்கும் படங்கள். இதில் Lock, Stock and Two Smoking Barrels (1998), Snatch. (2000) மற்றும் RocknRolla (2008) படங்களை Trilogy என்று கூட சொல்லலாம். மூன்றுமே ஒரு பொதுவான Pattern-ல் இருப்பதால். Lock, Stock-ல் இரண்டு துப்பாக்கிகள், Snatch-ல் வைரம், RocknRolla-வில் நம்மிடம் காட்டப்படாத lucky painting. மேலும் இந்த Revolver படத்திலும் தேடப்படுவது The (Ulitmate) Formula. எனவே Quadrupology என சொல்லலாமா??!!! :)
.
Guy Ritchie, Manoj Night Shyamalaan போன்றவர்களின் மீது வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு, ஒரே மாதிரியான படங்கள் எடுக்கிறார்கள் என்பது. என்னை பொறுத்தவரை சிறப்பாக எடுக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை. (Manoj, lady in the water மற்றும் happening படத்தில் சறுக்கியது போல). சச்சின் பின்னி பெடலெடுக்கும் வரை சச்சின் ஆட்டத்தை ஏன் குறை சொல்ல வேண்டும்?
.
அதீத கெட்டவர்கள் (களவாணி பய சகவாசமா வச்சிருந்தோம்!!), அதீத வன்முறை, அதீத குறும்பு, அதீத நிறம், குணம், திடம் எல்லாம் கலந்த சுவை Guy Ritchie படங்கள். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும், காட்சியின்பம் பருக, Guy Ritchie படங்களை நிச்சயம் பார்க்கலாம்.
.
இவரின் படங்களில் எது இவரின் Best என்று எனக்குள் கேட்டுப்பார்த்தேன். Lock, Stock அல்லது Snatch என்று பலரும் சொல்லக்கூடும். Revolver என்று சிலர் சொல்லக்கூடும். RocknRolla என்று Guy Ritchie சொல்லக்கூடும். எனக்கு எதுவென்று சொல்லதெரியவில்லை. எல்லாமே இவரின் Best-கள் என்று மனம் சொல்கிறது. இருந்தபோதிலும் Revolver என்ற குதிரை முகத்தை நிமிர்த்தி ஜெயிக்கிறது. மிக சிறப்பான Psychological Thriller Game.
.
பதிவு மிக நீளமாக வளர்ந்துவிட்டது. எனவே Revolver, Sherlock Holmes அடுத்த பதிவில்>>>
.

மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
09.06.2010

20 comments:

ஹாலிவுட் பாலா said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் மூச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்!!!!!!!!!!!

ஹாலிவுட் பாலா said...

///ஒரு இலட்சம் ஹிட்ஸ்களையும், 100 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்./////

இதுல ரெண்டாவது பார்ட் இனி தேவையா?? :)

Saravana Kumar MSK said...

@ஹாலிவுட் பாலா : ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு பீலிங்.. ஒவ்வொரு விருப்பம்.. :)

ம்ம்..மாத்திடலாம். நூறிலிருந்து இருநூறுக்கு.. :)

நன்றிங்க்னா..

King Viswa said...

//நன்றிங்க்னா//

நடிகர் - மருத்துவர் இளைய தளபதி விஜய் அவர்களின் அண்ணா ஸ்டைலை பின்பற்றும் MSK அவர்களை வன்மையாக கண்டித்து உடனடியாக டி குடிக்கும் போராட்டத்தில் குதிக்கிறேன்.

King Viswa said...

ஒரே மாதிரி படங்களை எடுத்தாலும்கூட அதில் திரைக்கதை சற்று வேகமாக இருந்தால் வெற்றி பெறலாம் என்பதை பிரபல இயக்குனர் Sign of God நிரூபித்துள்ளார்.

இவர் யார் என தெரிய மின் அஞ்சல் அனுப்புங்கள்.

ஜெய் said...

சரவணகுமார்.. Guy Ritchie பத்தி இவ்வளவு சொல்லிட்டு, தலைவி மடோனா பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லாம போயிட்டீங்களே... அட் லீஸ்ட் ஒரு ஃபோட்டோவாவது போட்டு இருக்கலாம்...

போஸ்ட் சூப்பர்.. ரிவால்வர் இன்னும் பாக்கல.. உங்க விமர்சனத்துக்கு வெயிட்டிங்...

Saravana Kumar MSK said...

@King Viswa : அவரின் வழிகாட்டுதலின் பேரில் நடக்கும், "ண்ணா" பயன்படுத்தும் என்னை எதிர்ப்பது, எங்கள் டொக்டர் "சுறா" விஜயை அவமதிப்பது போலாகும்.. :)

அந்த இயக்குனர் ஹரிதானே?

நன்றிங்க்னா.. :)


@ஜெய் : அவரின் படங்களை பற்றி மட்டும்தான் பேசவேண்டும், அவரின் auto-biography பற்றி பேசவேண்டியதில்லை என்பதனால்தான் குறிப்பிடவில்லை. மேலும் Swept Away அந்த அளவு குறிப்பிட வேண்டிய படமுமல்ல என்பதனாலும். இவர் பெயரை சொன்னாலே, மடோன்னா பற்றிதான் பேச ஆரம்பிக்கிறார்கள். :) பாவம் மனிதர்.
நன்றிங்க்னா.. :)

King Viswa said...

Sign = லிங்கம் (Sanskrit)
God = சாமி

So,

Sign of God = லிங்குசாமி.

எப்புடி?

இவருதான் தன்னோட பழைய படங்களையே ரிபீட் பண்ணுறாரு.

King Viswa said...

//நன்றிங்க்னா//

சின்ன இளைய தளபதி வாழ்க.

ஆகையால், இன்றுமுதல் MSK அவர்களுக்கு "சின்ன இளைய தளபதி" என்ற பட்டம் கொடுத்துள்ளதால் அவரை அனைவரும் "சின்ன இளைய தளபதி" என்றே அழைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Saravana Kumar MSK said...

@King Viswa : நான் ஹரின்னு நெனச்சிட்டேன்.. சரி ப்ரீயா விடுங்க.

//"சின்ன இளைய தளபதி"//
GRRRRRRRR...
சுறா, சிங்கம், பெண்சிங்கம் படங்களை தொடர்ச்சியாக முப்பது நாட்களுக்கு பார்க்கும் பொன்னான வாய்ப்பை உங்களுக்கு வழங்குகிறேன்..
:)

சென்ஷி said...

Swept Away.. மாத்திரம் இன்னும் பார்க்கலை. சப் டைட்டில் இல்லாம இவர் படத்தை பார்க்கறப்ப சில கெட்ட வார்த்தை மாத்திரம்தான் புரிஞ்சுக்க முடிஞ்சது. அப்புறம் ஒருவழியா தேடி சப்டைட்டிலும் கிடைச்சி பார்த்து முழு இன்பம் அனுபவிச்சாச்சு.

(தானைத் தலைவி மடோனாவோட ஹஸ்பெண்டா கொஞ்ச நாள் வேலைப் பார்த்தாருன்னும் சொல்லி இருந்திருக்கலாம்!)

கருந்தேள் கண்ணாயிரம் said...

//Sign = லிங்கம்//

விஸ்வா இங்கே வந்து கெட்டவார்த்தை பேசி லந்து செய்வதால், நான் உடனடியாக சால்ட் பிஸ்கட் சாப்பிடும் போராட்டத்தில் குதிக்கிறேன் . .

சின்ன இளைய தளபதி - இந்த ‘குட்டி’, ‘மினி’, மைக்ரோ’ மாதிரி வார்த்தைகளையும் போட்டுக்கொள்ளலாமே?? இப்புடி - சின்னக்குட்டி மைக்ரோமினி தளபதி..

கருந்தேள் கண்ணாயிரம் said...

அப்பறம், அந்த டெம்ப்ளேட் ஓட்டு - அதுல மூணாவது ஆப்ஷன் பிரமாதம் ;-) அதுலதான் நானும் குத்துனேன் . . நல்லாக்கீது நைனா !

ஹாலிவுட் பாலா said...

//அப்பறம், அந்த டெம்ப்ளேட் ஓட்டு - அதுல மூணாவது ஆப்ஷன் பிரமாதம் ;-) அதுலதான் நானும் குத்துனேன் . . நல்லாக்கீது நைனா !
//

அடப்பாவிகளா... அப்ப மொத ஆப்ஷன விழுந்த ஓட்டு மட்டும்தான் சரவணனுதா?

Saravana Kumar MSK said...

@சென்ஷி : சப் டைட்டில் இல்லாம சத்தியமா பார்க்கமுடியாது. :)

//தானைத் தலைவி மடோனாவோட ஹஸ்பெண்டா கொஞ்ச நாள் வேலைப் பார்த்தாருன்னும் சொல்லி இருந்திருக்கலாம்!//
இப்படிதான் சொல்லலாம்னு நெனச்சேன்.. அது அவரை சிறுமை படுத்துவதாக ஆகிவிடுமோ என்று சொல்லவில்லை. நன்றி தல. :)


@கருந்தேள் கண்ணாயிரம் : //சின்னக்குட்டி மைக்ரோமினி தளபதி..//
தளபதின் ஐம்பது படங்களையும் தொடர்ச்சியாக ஒருவருடம் பார்ப்பீராக!!!

//அப்பறம், அந்த டெம்ப்ளேட் ஓட்டு - அதுல மூணாவது ஆப்ஷன் பிரமாதம் ;-) அதுலதான் நானும் குத்துனேன் . . நல்லாக்கீது நைனா !//
நீங்க நெம்ப நல்லவரு. பதிவை பத்தி ஒன்னும் சொல்லல!! நன்றிங்க்னா..


@ஹாலிவுட் பாலா : ம்ம். ஆமாம்.. :) :(

Baby ஆனந்தன் said...

தலைவரைப் பற்றி எழுத ஆரம்பித்து இருக்கிறீர்கள். தொடரட்டும் கலைப்பணி :-)

மயில்ராவணன் said...

எனக்கும் ஜெய்க்கு இருக்குற ஆதங்கம்தேன்.சூப்பர் பதிவு........அப்பிடியே மடோன்னாஆஆஆ போட்டோ ஒண்ணு போட்டிருக்கலாம்....நெக்ஸ்ட் டைம் இந்த தப்ப பண்ணாதீங்க்ணா......மனசு வலிக்குது :)

Saravana Kumar MSK said...

@Baby ஆனந்தன் : நன்றிங்க்னா.. :)


@மயில்ராவணன் : எல்லாரும் சொல்றீங்க. அடுத்த தடவ மடோன்னா படம் போட்ருவோம்.. :) நன்றிங்க.

ஜாக்கி சேகர் said...

ரிச்சியோட ஸ்நாட்சு பார்த்து இருக்கேன்..

வெடிகுண்டு வெங்கட் said...

மக்களே,
நிரம்ப நாட்களாக நானும் இந்த ஒலக சினிமா விமர்சனம் எதையாவது எழுதணும் என்றே நினைத்துக் கொண்டு இருந்தேன். இப்போது ஆரம்பித்தும் விட்டேன். இனிமேல் நான் ரசித்த ஒலக சினிமா காவியங்களை உங்களுக்கு பகிரவும் முடிவெடுத்துவிட்டேன்.

இந்த வரிசையில் முதல் படமாக ஓல்ட் டாக்ஸ் Old Dogs 2009 என்ற படத்துடன் ஆரம்பித்துள்ளேன். இந்த படத்தை பொறுத்த வரையில் இந்த படத்தின் இயக்குனர் ஒரு முக்கிய காரணம். மேலும் படிக்க இங்கே செல்லவும்:

வெடிகுண்டு வெங்கட்டின் ஒலக சினிமா

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..