Saturday, May 29, 2010

சிங்கம் - திரைவிமர்சனம்


"இந்த படத்தோட ட்ரைலர் பார்த்துமா நீ இந்த படத்துக்கு போன?" என்று நீங்கள் கேட்கக்கூடும். எல்லாம் அனுஷ்காவுக்காகதான். அதுவும் அந்த "என் இதயம்" பாடலுக்காகவே இந்த படத்துக்கு போகலாம்.. ஒன்றை டன் அடிவாங்கலாம்.. :)
அகில உலக அனுஷ்கா ரசிகர் மன்றம்
சென்னை
.

ரொம்ப வெயிலுங்க. ரொம்ப ரொம்ப அதிகம். அதான் ஏசியில் போய் உட்காரலாம் என்று வாராவாரம் தியேட்டருக்கு செல்வது. மேலும் திரைப்படம் பார்க்கும் போதைக்காக கண்டகண்ட படங்களுக்கும் நான் செல்வதுண்டு. சில படங்களுக்கு இந்த மாதிரி பதிவு எழுதுவதை நான் விரும்புவதும் கிடையாது. ஆனால் சிங்கம்......

.
சூர்யாவின் இருபத்தி ஐந்தாவது படமாம். "சுறா" பத்து தாய்க்கு சமம் என்றால் "சிங்கம்" பத்து சுறாவுக்கு சமம். சிங்கத்தலை, இரும்பு உடல், ஒன்றை டன் கொதிக்கும் இரும்பு கைகள் கொண்ட, தூத்துக்குடி-சென்னை-பாண்டிச்சேரி-நெல்லூர் வரை எல்லா சாலை மற்றும் ஸ்பீட் பிரேக்கர் அனைத்தையும் தெரிந்த "போலிஸ்" சூர்யா, பாடல் காட்சி மற்றும் கிளைமாக்ஸ் தவிர கிட்டத்தட்ட படம் முழுக்க போலிஸ் உடையிலேயே விறைப்பாக திரிகிறார். உச்சஸ்தாயில் கத்துகிறார், சவால் விடுகிறார்.எதிரிகளை பந்தாடுகிறார். சிங்கம் போல் பாய்கிறார். தூக்கி வீசுகிறார். துப்பாக்கியால் சல்லடையாக்குகிறார். வில்லனின் திட்டங்களை தவிடு பொடியாக்குகிறார். பாடல் காட்சியில் கூட தினவெடுத்து ஆடுகிறார், கத்தி கத்தி பாடுகிறார்.. றார்.. றார்.. றார்.. றார்.. றார்.. றார்.. றார்.. றார்.. றார்..
.


இன்னும் எவ்ளோ நாளுக்குத்தான் தப்பி ஓடும் வில்லன் செல்லும் பாதையில் சத்தம் வரும் பொருள் இருக்கும்? இன்னும் எவ்ளோ நாள் தான் வில்லன் நாயகியை வைத்து நாயகனை மடக்க முயற்சிப்பது? வில்லனின் முதல் அடியாள், நாயகனின் ஒரே அடியில் மூர்சையாகுவது? கடத்துவது, கட்டபஞ்சாயத்து செய்வது, கத்துவது, து? து? து? து? து?
.
திரைக்கதை புத்தகத்திலிருந்து..

வில்லன் அறிமுகம். நாயகன் அறிமுகம். நகைச்சுவை நடிகன் அறிமுகம். நாயகன் சண்டையிடுகிறார். விளையாட்டில் ஜெயிக்கிறார். ஓபனிங் சாங். நாயகி அறிமுகம். குடும்பங்கள் அறிமுகம். நாயகன் - வில்லன் மோதல். நாயகன் - நாயகி - அறிவுரை - காதல் - டூயட். நகைச்சுவை ஓடுதளம் (காமெடி ட்ரேக்), நாயகன் - வில்லன் அடியாட்கள் மோதல். குடும்பங்கள் மோதல். நாயகன் - கெட்ட போலிஸ் - வில்லன் - அரசியல்வாதி - மோதல். பாடல்கள் - சண்டைகள் - நகைச்சுவைகள் - வில்லன்கள் ; நாயகன் ஜெயிக்கிறார். Mission Accomplished. சுபம்.
.
ஹரி - சூர்யா கூட்டணி ஆறு, வேல் வெற்றிக்கு (!!) பின் ஒன்றை டன் அடி அடித்திருக்கிறார்கள். விவேக் மிகக்கொடுமை. அனுஷ்கா - யபாஆஆஆஆ. பிரகாஷ்ராஜ் - ஐயோ பாவம். சூர்யா - அனுஷ்கா உயர பிரச்சனையே பெரும் பிரச்சனை போல இயக்குனருக்கு. சூர்யாவும் அனுஷ்காவும் கிட்ட நின்று கூட பேசுவதில்லை, ஆடுவதில்லை. தேவிஸ்ரீ பிரசாத் இசையில் "காதல் வந்தாலே" பாடல் எனக்கு பிடித்திருக்கிறது. படத்தின் தூண்களே இயக்குனரும், ஒளிப்பதிவாளரும், படதொகுப்பாளரும், சண்டைக்காட்சி அமைப்பாளரும், சூர்யாவும் ஆவர். நல்லா இருங்க சாமி.
.
சிங்கம் - மிக அதிகப்படியான மசாலா விரும்பிகள் நிச்சயம் பார்க்கலாம்.
அல்லது அனுஷ்கா ரசிகர்கள் பார்க்கலாம்.
.

மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
29.05.2010

10 comments:

King Viswa said...

மீ தி பர்ஸ்ட்.

King Viswa said...

//வில்லனின் முதல் அடியாள், நாயகனின் ஒரே அடியில் மூர்சையாகுவது?? து? து? து? து? து?//

தூ, தூ, தூ, தூ, தூ, தூ,...............................

King Viswa said...

//சிங்கம் - மிக அதிகப்படியான மசாலா விரும்பிகள் நிச்சயம் பார்க்கலாம். அல்லது அனுஷ்கா ரசிகர்கள் பார்க்கலாம்//

அனுஷ்கா அண்ணன் MSK வாழ்க.

கருந்தேள் கண்ணாயிரம் said...

ஆஹா . . இந்தப் படத்த இந்த வீக்கெண்ட் போயி ரசிக்கலாம்னு நினைச்சி வெச்சிருந்தேன் . . நெனப்புல மண். . (மனசாட்சி - அதெப்புடிடா இந்தப் படத்தப் போயி நம்புனே ??) . . என்னமோ போடா மாதவா . . .

கருந்தேள் கண்ணாயிரம் said...

மீ த ஃபோர்த்து அண்ட் ஃபிஃப்த்து !! :-)

pappu said...

Prince of persia இப்பட் சொதப்பிட்டாங்களேப்பா!

butterfly Surya said...

தனது முந்தைய 9 படங்களையும் திருப்பிப் போட்டு ஹரி கிண்டியுள்ள அதே திருநெல்வேலி அல்வா இந்தப் படம். இனிப்புக்கு பதில் வெறும் மிளகாய்த்தூளைக் கொட்டி வைத்திருக்கிறார். இரண்டரை மணிநேரம், உப்புப் பெறாத விஷயத்துக்காக அடித்துக் கொள்ளும் ரத்த வெறிபிடித்த திரைக்கதையை எப்போது விட்டுத் தொலைக்கப் போகிறாரோ…

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வெளியில் வரும் ரசிகர்கள் பலரும் சுறாவுக்கு இது பரவாயில்லை என்கிறார்கள். சுறாவாக இருந்தாலும் சிங்கமாக இருந்தாலும் மனிதர்களை கடித்து வைப்பது சர்வ நிச்சயம் என்ற உண்மை புரிந்தே படம் பார்க்க வருகிறார்கள் போலிருக்கிறது. சுறா, சிங்கம் மாதிரி படங்கள் தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, பார்ப்பவரையும் படுத்தும் நோய்கள் மாதிரிதான். அறுவை செய்தாவது அகற்ற வேண்டியது அவசியம்!

என்வழி.காம் விமர்சனத்திலிருந்து...

Saravana Kumar MSK said...

@King Viswa : வாங்க பின்னூட்ட புலி..

//தூ, தூ, தூ, தூ, தூ, தூ,...............................//
தமிழ் சினிமாவின் ஆக சிறந்த படைப்பாளிகளின் மீது காரி உமிழும் உங்களை கண்டித்து டீ குடிக்கும் போராட்டத்தை நடத்த உள்ளேன்.. :)

//அனுஷ்கா அண்ணன் MSK வாழ்க.//
அனுஷ்காவையும் - அண்ணன் MSK வையும் சேர்த்துவைத்த உங்களுக்கு நன்றி தெரிவித்து டீ குடிக்கும் போராட்டத்தை கைவிடுகிறேன்.. :) நன்றி.

@கருந்தேள் கண்ணாயிரம் : ஒன்றை டன் அடிவாங்கும் உடம்பு இருந்தால் போய் பாருங்க. :))) நன்றி.

@pappu : Prince of persia சொதப்பும் என்றொரு உள்ளுணர்வு இருந்துகொண்டே இருந்தது, clash of titans பார்த்த பின்..சரி விடுங்க. சிங்கம் போய் பாருங்க. :)
நன்றி.

@butterfly Surya : உண்மையில் இந்த மாதிரி படங்களுக்கு காசுகொடுத்து பார்த்து, வசூலில் என் பங்கும் இருப்பதால், அவர்களை ஊக்குவிக்கிறோம் என்ற குற்ற உணர்வு எப்போதும் எழாமல் இல்லை. இருந்தாலும் வாரவாரம் தியேட்டருக்கு செல்வது ஒரு addiction மாதிரி ஆகிவிட்டது. மேலும் இந்த மாதிரி படங்களுக்கு பதிவெழுதுவதையும் நான் விரும்புவதும் இல்லை (என்ன எழுத முடியும். இதே மதிவைதான் மீள் பதிவாக போட முடியும்).

//பலரும் சுறாவுக்கு இது பரவாயில்லை என்கிறார்கள். //
எனக்கு இது பத்து சுறாவாகத்தான் தெரிந்தது. ஆனா ரெண்டு படக்காரர்களுக்கும் மூக்கு ரொம்ப புடைப்பு. எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்க முடியுதோ??

//சுறாவாக இருந்தாலும் சிங்கமாக இருந்தாலும் மனிதர்களை கடித்து வைப்பது சர்வ நிச்சயம் என்ற உண்மை புரிந்தே படம் பார்க்க வருகிறார்கள் போலிருக்கிறது. சுறா, சிங்கம் மாதிரி படங்கள் தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, பார்ப்பவரையும் படுத்தும் நோய்கள் மாதிரிதான். அறுவை செய்தாவது அகற்ற வேண்டியது அவசியம்!//

உண்மையே.

நன்றி.

ஜோஸஃப் ச்சேண்ட்ரா said...

ண்ணா,

என்னோட படத்த பத்தி மறுபடியும் பேசறதுக்கு நன்றிங்கண்ணா.

ரொம்ப சீக்கிரம் காவல்காரன் மூலம் உங்கள மீட் பண்றேன்.

Saravana Kumar MSK said...

@ஜோஸஃப் ச்சேண்ட்ரா : சீக்கிரம் காவல்காரனா வாங்கண்ணா.. ஆவலா இருக்கேன்.. :)
நன்றி..

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..