Saturday, May 22, 2010

கொல கொலயா முந்திரிக்கா - திரைவிமர்சனம்



.

கொல கொலயா முந்திரிக்கா
நெறைய நெறைய சுத்தி வா
கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்
கண்டுபிடி கண்டுபிடி
.
கோடையை குறிவைத்து எடுக்கப்படும் படங்களில் ஏழுபடங்கள் நேற்றைக்கு வெளியாகியிருக்கிறது. அவற்றுள் "மாஞ்சா வேலு"வையோ, "கனகவேல் காக்க"வோ பார்க்கும் மனதைரியம் இன்றி, பார்க்க நினைத்த படங்கள் T.P.கஜேந்திரன் இயக்கத்தில் விவேக் நடித்து வரும் "மகனே என் மருமகனே" அல்லது கிரேசி மோகன் கதை-வசனத்தில் வரும் இந்த "கொல கொலயா முந்திரிக்கா". இரண்டுமே நகைச்சுவை படங்கள் என்பதால். அதில் கொல கொலயா முந்திரிக்கா படத்தை இன்று பார்த்தேன்.

.
"வல்லமை தாராயோ" படத்தை எடுத்த மதுமிதா இயக்கத்தில், கிரேசி மோகன் கதை-வசனத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் இந்த கொல கொலயா முந்திரிக்கா. எண்பதுகளில், ஒரு ஜமீனின் வைரங்கள், நான்கு நாற்காலிகளில் (நான்கில் ஒன்று; நான்கில் எந்த ஒன்று என்பது ரகசியம்) மறைத்துவைக்கப்படுகின்றன. கதை நிகழ்காலத்தில் துவங்குகிறது. நாயகன் கார்த்திக்குமார் ஒரு திருடன். நாயகி ஷிகா மற்றும் அவள் தந்தை M.S.பாஸ்கரும் திருடர்கள். பின் தமிழ்சினிமா வழக்கப்படி அந்த ஜாமீனில் வேலைபார்த்த, தற்போது கோமாவில் இருக்கும், டெல்லி கணேஷ் மூலம் கார்த்திக்கு தெரியவர, பின் கார்த்திக்கும், ஷிகாவும் வைரங்களை ஒரு புறம் தேட, அந்த ஜமீனின் பங்காளி ஆனந்தராஜும் அவரின் ஆட்களும் மறுபுறம் தேட, இடையில் சிரிப்பு போலிஸ் ஜெயராம் ஒரு Chip தேட, ஒவ்வொரு நாற்காலியையும் எப்படி தேடினார்கள், எந்த நாற்காலியில் அந்த உண்மையான வைரங்கள் இருந்தது என்பதெல்லாம் மீதிக்கதை.
.
படம் பெயர் போடும் விதம் எனக்கு பிடித்திருந்தது (Catch Me If You Can படத்தில் வருவது போல அனிமேட்டட்). படத்தின் கதையில் ஒரு நல்ல நகைச்சுவை படத்தை எடுத்திருக்கலாம். இவர்கள் முடிந்தவரை சிறப்பாக எடுக்க முயற்சித்திருக்கிறார்கள். கார்த்திக், புதுமுக நாயகி ஷிகா (பின்னணி குரல் சுச்சி), M.S.பாஸ்கர், ஆனந்தராஜ், ராதாரவி என எல்லாருமே நன்றாக செய்திருகிறார்கள். இயல்பாக சிரிக்க வைக்கிறார்கள். ஜெயராம் மட்டும்தான் பாவம், மொக்கை போடும் சிரிப்பு போலிஸ். (மொக்க தாங்கல). பாண்டியராஜன், சரத்குமார், பழைய நடிகர் ராகவன் போன்றவர்கள் நட்புக்காக வந்து போகிறார்கள்.
.
கிரேசி மோகன் கதை-வசனம் என்பதால், வசனங்களில் நன்றாகவே தெரிகிறார். singh-sing, sick-sikkh போன்ற வார்த்தை விளையாட்டுக்கள் ஏராளம். குப்பத்து காதல் தாதா ராதாரவி, பஞ்சாயத்து செய்யும் இடங்கள் இன்னொரு "என்ன கையை புடிச்சி இழுத்தியா". சிரிப்பு வெடி காட்சி இது. இதை போல் சிறிதும் பெரிதுமாக சிரிக்கவைக்கும் காட்சிகள் பல இருப்பதால், படம் மொக்கையாக இல்லாமல் இருக்கிறது. நாற்காலிகள் இப்போதிருக்கும் இடங்களை கண்டுபிடிக்கும் காட்சிகள் over logicless and மொக்கை. மொத்தத்தில் திரையில் ஒரு கிரேசி மோகன் நாடகம். உங்களுக்கு கிரேசி மோகன் நாடகங்கள் பிடிக்குமென்றால் நிச்சயம் இந்த படத்தை பார்க்கலாம். (இந்த நகைச்சுவை படத்தில் நீங்கள் லாஜிக் எதிர்பார்க்கக்கூடாது.)
.
இயக்கம் மதுமிதா, இவரின் "வல்லமை தாராயோ" படத்தை பார்த்ததில்லை. இந்த படத்தை பொறுத்தவரை ஓகேவாக செய்திருக்கிறார். L.K.விஜய் ஒளிப்பதிவு தெளிவாக இருந்தது. செல்வகணேஷ் (வெண்ணிலா கபடி குழு??!!) இசையில் பாடல்கள், பின்னணி இசை பெரிதாக ஈர்க்கவில்லை. பிரான்சிஸ் கிருபா ஒரு பாடல் எழுதி இருக்கிறார் (எந்த பாடலென்று தெரியவில்லை).
.
கடந்த வருடங்களின் 'பொய் சொல்ல போறோம்', 'திரு திரு துறு துறு' போல, இந்த வருடம் கொல கொலயா முந்திரிக்கா. எளிமையாக சிரிக்கவைக்கும் முயற்சி. ஆனால் 'பொய் சொல்ல போறோம்', 'திரு திரு துறு துறு' அளவுக்கு இல்லை, கொஞ்சம் கம்மிதான் என்பதையும் சொல்லிவிடுகிறேன்.
.
இந்த படம் சென்னையில்கூட மிக குறைந்த அளவில்தான் வெளியாகியிருக்கிறது. எனவே ஓரிரு வாரங்கள் ஓடக்கூடும். கோடையும் ஓரிரு வாரத்தில் முடிந்துவிடும். எனவே குடும்பத்தோடு செல்ல சரியான படம்தான் என்பதால், குழந்தைகளோடு சென்று சிரிக்கலாம். நிச்சயம் கடுப்பேற்றாது என்றே நினைக்கிறேன்.
.
கொல கொலயா முந்திரிக்கா - வைரங்களை தேடும் கிரேசி மோகன் நாடகம்
.

மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
22.05.2010

19 comments:

King Viswa said...

தோ வந்துட்டேன், மீ தி பர்ஸ்ட்

King Viswa said...

//குழந்தைகளோடு சென்று சிரிக்கலாம்//

அப்போ நான் போய் பாக்கலாம்கிறீங்க. ஒக்கே பாஸு. செஞ்சுடலாம்.

King Viswa said...

//செல்வகணேஷ் (வெண்ணிலா கபடி குழு??!!) இசையில் பாடல்கள்//
சந்தேகப்படவேண்டாம், அவரேதான்.

King Viswa said...

//இந்த படம் சென்னையில்கூட மிக குறைந்த அளவில்தான் வெளியாகியிருக்கிறது. எனவே ஓரிரு வாரங்கள் ஓடக்கூடும்//

இதுபோன்ற படங்களுக்கு இந்த தியேட்டர்காரர்கள் வரவேற்ப்பு அளிப்பதில்லை. அவர்களை பொறுத்தவரையில் ஒரு சுறாவோ அல்லது சிங்கமோதான் முக்கியம், அவை எவ்வளவு மரண மொக்கையாக இருந்தாலும் அடுத்து காவல்காரன் ரத்த சரித்திரம் என்று ஓடுவார்கள்.

King Viswa said...

//இயக்கம் மதுமிதா, இவரின் "வல்லமை தாராயோ" படத்தை பார்த்ததில்லை. இந்த படத்தை பொறுத்தவரை ஓகேவாக செய்திருக்கிறார். //

அதுகூட ஓக்கேதான். மொக்கையில்லை. என்ன கொஞ்சம் செண்டி ஜாஸ்தி. பாத்திரத்தையும் மீறி பார்த்திபன் தெரிவதால் ஓடவில்லை.

King Viswa said...

//எண்பதுகளில், ஒரு ஜமீனின் வைரங்கள், நான்கு நாற்காலிகளில் (நான்கில் ஒன்று; நான்கில் எந்த ஒன்று என்பது ரகசியம்) மறைத்துவைக்கப்படுகின்றன.//

நவாப் நாற்காலி நினைவிருக்கிறதா?

Saravana Kumar MSK said...

@King Viswa: வாங்க பின்னூட்ட புலி.

//அப்போ நான் போய் பாக்கலாம்கிறீங்க. ஒக்கே பாஸு. செஞ்சுடலாம்.//
ஆமாம் தல. உங்கள் பேரக் குழந்தைகளோடு.. ;)

//சந்தேகப்படவேண்டாம், அவரேதான்.//
அந்த மனுஷனுக்கு என்னாச்சி.!! :(


//இதுபோன்ற படங்களுக்கு இந்த தியேட்டர்காரர்கள் வரவேற்ப்பு அளிப்பதில்லை. அவர்களை பொறுத்தவரையில் ஒரு சுறாவோ அல்லது சிங்கமோதான் முக்கியம், அவை எவ்வளவு மரண மொக்கையாக இருந்தாலும் அடுத்து காவல்காரன் ரத்த சரித்திரம் என்று ஓடுவார்கள்.//
ஒன்றை டன் அடிவாங்க உடம்பை தயார் செய்துகொண்டீரா?? அனோஷ்க்கவுக்காக அடிவாங்கலாம் என்றிருக்கிறேன்.. :)

//அதுகூட ஓக்கேதான். மொக்கையில்லை. என்ன கொஞ்சம் செண்டி ஜாஸ்தி. பாத்திரத்தையும் மீறி பார்த்திபன் தெரிவதால் ஓடவில்லை.//
oops..


//நவாப் நாற்காலி நினைவிருக்கிறதா?//
அது என்னது?? தெரியலையே தல; பாண்டியராஜனின் பிம்பிலாக்கி பிலாப்பியா??

நன்றிங்க்னா.. :)

King Viswa said...

//ஆமாம் தல. உங்கள் பேரக் குழந்தைகளோடு..//

அப்போ நான் இன்னும் ஐம்பது வருஷம் வெயிட் பண்ணனுமே?

//நவாப் நாற்காலி நினைவிருக்கிறதா?//
அது என்னது?? தெரியலையே தல; பாண்டியராஜனின் பிம்பிலாக்கி பிலாப்பியா?

இல்லை, ஜெய் ஷங்கர் நடித்த ஒரு காமெடி படம், கதை கூட இதைப்போலத்தான் இருக்கும்.

Saravana Kumar MSK said...

@King Viswa :

//அப்போ நான் இன்னும் ஐம்பது வருஷம் வெயிட் பண்ணனுமே?//

அவ்வ்வ்வ்.. உங்களுக்கே ஓவரா தெரியல??

//இல்லை, ஜெய் ஷங்கர் நடித்த ஒரு காமெடி படம், கதை கூட இதைப்போலத்தான் இருக்கும்.//
ஓ. அப்படியா??
:)

Rafiq Raja said...

அப்ப கொல கொலயா பார்க்ககலாமா... தயேட்டரில நம்மள வச்சு காமடி பண்ண தான் இந்த டைட்டில வச்சிருப்பாங்கனு பயந்திட்டு இருந்தேன்...உங்கள் விமர்சனம் நம்பிக்கை தருகிறது. :)

எம்எஸ்கே... வெகு நாட்கள் கழித்து உங்கள் தளத்திற்கு வருகை தருகிறேன்... வந்து பார்த்தால் புதிய லேஅவுட், அட்ககாசமான தலைப்பு என்று உஜாலாவிற்கு மாறி இருக்கிறீர்கள்.... அருமையாக இருக்கிறது....

உங்கள் உழைப்பிற்கு கைமாறாக உங்களின் இரண்டு டார்கெட்டில் ஒன்றை முடித்து வைக்கிறேன்.. 100வது பின்தொடர்பாளாராக :)

Saravana Kumar MSK said...

@Rafiq Raja : கிரேசி மோகன் நாடங்கங்கள் பிடிக்குமென்றால் நிச்சயம் பார்க்கலாம். சிரிக்கலாம்.

இந்த லேஅவுட் கூட மாற்றலாமென்று இருக்கிறேன். wide screen-ல் மட்டும்தான் சரியாக வருகிறது தளம்.

100-க்கு ஸ்பெஷல் நன்றிங்க. :)

mythoughtsintamil said...

நாளைக்கு இந்த படத்துக்கு தான் போகணும்-னு இருந்தேன்... ஆனா ‘மாஞ்சா வேலு’ ஒ.கே-னு சொல்றாங்க... அப்புறம் கார்த்திக் இருக்குறதுனால அதுக்கு போலாம்0னு இருக்கேன்... :) :)

விமர்சனத்துக்கு நன்றிங்க.. :) :)

ROBOT said...

//எளிமையாக சிரிக்கவைக்கும் முயற்சி//

ரிபீட்டு ....

உண்மையிலேயே குடும்பதோடு செல்ல உகந்த படம்.
நன்றி
ரோபோ .

ஹாலிவுட் பாலா said...

//(Catch Me If You Can படத்தில் வருவது போல அனிமேட்டட்///

ரொம்ப ஓவரா... இங்கிலீஜு பார்க்கறீங்க. நம்மூரில்... ‘பாட்டி சொல்லை தட்டாதே’ படத்துலயே இதையெல்லாம் செஞ்சிட்டாங்க.

Saravana Kumar MSK said...

@mythoughtsintamil : பார்த்துவிட்டு வந்து சொல்லுங்க. நன்றி.

@ROBOT : நன்றிங்க.

@ஹாலிவுட் பாலா : வாங்க பாஸ்.
//ரொம்ப ஓவரா... இங்கிலீஜு பார்க்கறீங்க. நம்மூரில்... ‘பாட்டி சொல்லை தட்டாதே’ படத்துலயே இதையெல்லாம் செஞ்சிட்டாங்க.//
இதை நீங்க sarcastic-க்கா சொன்னதா எடுத்துக்கலாமா?? ஏன்னா, எல்லா பாண்டியராஜன் படங்களிலும் இப்படிதானே இருக்கும்..!!!
:)
நன்றி

வெடிகுண்டு வெங்கட் said...

பாஸ்,

ரொம்ப தேங்க்ஸ். யாராவது விமர்சனம் போடுவாங்க என்று காத்திருந்தேன். படமும் நல்லா ஓடுதுன்னு ரிபோர்ட் வேற. ஆகையால், பார்க்கலாம் ஒரு கை.

வெடிகுண்டு வெங்கட் said...

ஒரு சின்ன ரிக்வெஸ்ட்: அப்படியே நம்ம தலைவரோட "பெண் சிங்கம்" எப்படி இருக்குன்னு பார்த்துட்டு சொன்ன தேவலாம்.

butterfly Surya said...

பார்க்கணும்..

இராமசாமி கண்ணண் said...

நல்லா எழுதீருக்கீங்க.

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..