Sunday, April 4, 2010

பையா - திரைவிமர்சனம்


நம் தமிழ்ப்பட ஹீரோ, மிக அலட்சியமான cool guy.. குழந்தைகளுக்கு குச்சிமிட்டாய் வாங்கி கொடுப்பார்.. நண்பர்களோடு பியர் குடித்து நட்போடு இருப்பார்.. காமெடி செய்வார். ஹீரோயினை கண்டதும் லவ்வுவார். பாட்டு பாடுவார். கலர் கலர் டிரஸ்ஸோடு வெளிநாட்டிலும்/மழையில் சில்லென்று நனைந்தபடியும் டூயட்டுவார். விவேகமானவர். எந்த பிரச்சனையையும் அதிபுத்திசாலிதனமாக சமாளிப்பார். உலகம் முழுதும் அவருக்கு பாதைகளும் திசைகளும் தெரியும் (ஒரு google maps மாதிரி). அவருக்கு எல்லாம் தெரியும். அவரின் மொபைல் எப்போதும் வேலை செய்யும். கூடவே சுற்றும் ஹீரோயின் பசியை, கண்ணைப்பார்த்தே அறிந்து கொள்வார். ஹீரோயினுக்காக எந்தனை பேரை வேண்டுமானாலும் அடிப்பார். ஆயிரம் முறை இரும்பு பைப்பினால் அடிவாங்கினாலும் பின்பு இரண்டாயிரம் பேர்களை அடிக்கும் உடல் பலம் கொண்ட மிகப்பெரும் ஆண்மகன். அவர் பெயர்தான் சிவா. அட நான் நம்ம "அகில உலக சூப்பர் ஸ்டார்" சிவாவை சொல்லல. இந்த பையா பட ஹீரோ சிவாவ சொல்றேன். :)

.
சரி இந்த படம் யாருக்காக. பொழுது போக்க மட்டும் படம் பார்க்க விரும்புகிறவர்களுக்கு. தியேட்டரில் அழவோ/ நெகிழவோ விரும்பாதவர்களுக்கு. கோடை விடுமுறையில் குடும்பத்தோடு குழந்தைகளோடு படம் பார்க்க விரும்புகிறவர்களுக்கு. தோழியுடனோ/காதலியுடனோ படம் பார்க்க விரும்புகிறவர்களுக்கு. முக்கியமாக முதல் பத்தியில் குறிப்பிட்டவைகளை, லாஜிக்குகளை, தமிழ் சினிமாவின் எதிர்காலங்களை கண்டுக்கொள்ளாதவர்களுக்கு. நிச்சயம் இந்த படம் பிடிக்கும். ஏனென்றால் இது ஒரு பர பரவென ஓடும் கலர்புல்லான Action packed, romantic road trip படம்.
.
ஓகே படம் பத்தி பேசுவோம். தமிழில் கொஞ்சம் வித்தியாசமா ஒரு roadtrip கதை. வேலையில்லாத பட்டதாரி ஹீரோ கார்த்தி, தமன்னாவை பார்த்ததும் காதல் கொள்கிறார். ஏதேச்சையாக தமன்னாவுடன் பெங்களூருவிலிருந்து மும்பை வரை கார் பயணம். தமன்னாவுக்கு, அவருடைய தெலுங்கு சித்தி மற்றும் அவர் அடியாட்களால் பிரச்சனை. கார்த்திக்கு, ஹிந்தி தாதா மிலிந்த் உடன் முன் விரோதம். இதையெல்லாம் எப்படி நம்ம ஹீரோ சமாளிக்கிறார் என்பது தான் இந்த பரபர சினிமா.
.
கார்த்திக்கு இந்த படத்தில் ஜீன்ஸ், பனியன், பட்டன் போடாத சட்டை (நம்ம கமர்சியல் ஹீரோக்களின் uniform ஆச்சே) கொடுத்துட்டாங்க. கார்த்தி செமையா சண்ட போடுறார். பருத்திவீரன் ஆயிரத்தில் ஒருவன் சாயல்கள் பேச்சிலும் உடலிலும் கொஞ்சம் ஒட்டிக்கிட்டே இருக்கு. தமன்னா (அட, இந்த படத்துக்கு முண்டி அடிச்சி போறதே தமன்னாவுக்கு தானே) வண்ணங்கள் கொட்டிக்கிடக்கும் வண்ணத்துப்பூச்சி (ஓவரா வழியுதோ, தொடச்சிக்கறேன்..). ரெண்டுபேரையும் படம் முழுதும் பார்த்தாலும் ரொம்ப போரடிக்கவில்லை என்பதே உண்மை. நண்டு ஜெகன் இந்த படத்தில் கொஞ்சம் வந்தாலும் கலக்குகிறார். அவரின் கெட்டப் சூப்பர்.
.
ஒளிப்பதிவாளர் மதி. இந்த மாதிரியான roadtrip படங்களில் காருக்கு உள்ளே, வெளியே, முன்னால், பின்னால், சைடில், மேலிருந்து என எல்லா திசைகளிலிருந்தும் கேமரா பயணிக்கவேண்டும். பயணித்திருக்கிறது. இசை, யுவன். பாடல்கள் பெரிய ஹிட். ஆனால் படத்தில் அந்த அளவுக்கு காட்சிப்படுத்தபடவில்லை என்பதே உண்மை. ரொம்ப எதிர்பார்த்திருந்தேன். ஏமாற்றமாகிவிட்டது, "என் காதல் சொல்ல" பாட்டை தவிர்த்து. சண்டைக்காட்சிகள், தமிழ் சினிமாவின் அக்மார்க் சண்டைக்காட்சிகள். லிங்கு சாமி, ரன், சண்டக்கோழி சாயல்களோடு இயக்கி இருக்கிறார். இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்.
.
என்னை பொறுத்தவரை, பையா - அட போய்யா.. என்று சொல்லலாமென்று நினைத்தேன்.. ஆனால் இப்படி சொல்லலாம் என்று முடிவை மாற்றி கொண்டேன்

மொத்தத்தில், பையா - கோடை விடுமுறைக்காக..
.



மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
04.04.2010

10 comments:

Saravana Kumar MSK said...

படம் பார்த்த பின்பு, என் நண்பன் சொன்ன ஒன்று..
"ஒரு வேளை, விஜய் இந்த படத்தில் நடித்திருந்தால், இந்த படம் விஜய்க்கு மிக பெரும் ஹிட்டாகி இருந்திருக்கும். ஆனால் அவர் இந்த அளவு கூட இறங்கி வரமாட்டார்.."

navin said...

oru velai indha padathail thalabathiyai ninaithuparthen padam ayyo.....

SUREஷ் (பழனியிலிருந்து) said...

தமிழ் ப் படத்தின் ரீமேக் என்று சொல்லுங்கள்

ஆதிமூலகிருஷ்ணன் said...

நம்ம கமர்சியல் ஹீரோக்களின் uniform ஆச்சே//

ஹிஹி.. நல்ல விமர்சனம்.!

MANO said...

விமர்சனம் சிறப்பு

மனோ

பிரவீன் said...

பீமா தந்த தோல்வியை சரி கட்ட, லிங்கு மிகவும் கஷ்டப்பட்டு கலக்கிய ஒரு மசாலா கலவை. அவ்வளவே. தினமும் தயிர் சாதம், புளி சாதம், சாம்பார் சாப்பிடும் போது காரமா ஹைதராபாத் பிரியாணி பொட்டலத்தை பிரித்து வைத்து சாப்பிடற மாதிரியான ஒரு படம்.
http://www.cpraveen.com/suvadugal/paiyya-tamil-movie-review/

வடலிக்கூத்தன் said...

பாவம் பையன்... இவன் பயமறியாதவன். ஆயிரத்தில் ஒருவனாகவே போகப்போகிறான். தொலையாமல் இருந்தால் சரி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

nalla vimarisanam

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

mani said...

தம்பி வெட்டோத்தி சுந்தரம்

சுமார் பத்து வருடங்களுக்கு முன் குமரி மாவட்டத்தின் தமிழக கேரள எல்லையோரம் வாழ்ந்தவர்களின் உண்மை கதை

அஞ்சலியின் கண்கள் படமுழுக்க காதல் பயன் படுத்தப்பட்டிருக்கிறது

படத்தின் இயக்குனர் V.C.வடிவுடையான்.முதன் முதலாக கரண்-சரவணன் கூட்டணி

http://www.vettothi.com/

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..