
பக்கத்தில இருக்கிற படத்த பார்த்தீங்களா. பரபரப்பான மாற்று சினிமாவாம். என் வாழ்வில் முதல் முறையாக, படத்தின் அக்கப்போர் தாங்காமல் எழுந்து வெளியே வர எழுந்துவிட்ட படம். என் நண்பன் என்னும் கொலைகாரப்பாவி, "மச்சி, நம்ம உடம்பு எவ்ளோ தாங்குதுன்னு நமக்கு ஒரு கணக்கு தெரியவேண்டாமா, அதனால் முழுசா அடிவாங்கிடுவோம்" என்று சொன்னதால், மீதிப்படத்தையும் பார்த்து தொலைத்தேன். கொய்யால, படமாடா எடுக்கறீங்க!! அநியாயமா முன்னூறு ரூபா போச்சே..
.
இந்த நந்தா, பிதாமகன், காதல், பருத்திவீரன், சுப்ரமணியபுரம், நாடோடிகள், ரேணிகுண்டா படங்களை பார்த்துவிட்ட நம்ம நந்தா பெரியசாமிக்கு (இந்த படத்தின் இயக்குனர், "ஒரு கல்லூரியின் கதை" திரைப்படம் இவரின் முதல் திரைப்படம்), ஒரு மாற்று திரைப்படத்தை எடுத்து, தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர் போல் ஆகிவிட துடித்து, அதே போல் ஒரு திரைப்படம் எடுக்க, எவ்வளவு தூரம் செயற்கையாய் ஒரு படம் எடுக்க முடியுமோ அப்படியொரு படத்தை எடுத்திருக்கிறார்.
.
நேட்டிவிட்டியோடு படம் பண்ணுவது எப்படி - Dummies Guide:
மதுரையில் கதை நடக்க வேண்டும், எல்லாரும் புதுமுகங்கள், மதுரை வட்டார மொழி பேச வேண்டும், பழைய நல்ல தமிழ் பாடல்களை பின்னணியில் ஆங்காங்கே உலவ விடுவது, யதார்த்தமான சண்டைக்காட்சிகள், கொலைகள், வன்முறை, துரத்தல்கள், கொஞ்சம் சாதி பிரச்சனை, ஒரு மெசேஜ், எல்லாரும் கடைசியில் செத்துவிடுவது, இப்படி கலவையாய் படம் எடுத்து, பெரிய இயக்குனர் ஆகிவிடலாம்.
.
(ரேணிகுண்டா படத்தை முடிந்தவரை உல்டா). இப்படத்தில் நான்கு புதுமுகங்கள், இருளர் சாதி பையன்கள். இயக்குனர் சசிக்குமார் குரலில் அறிமுகம் செயதுவைக்கிறார்கள். City of God படம் போன்று உணவு பொருள் லாரியை மடக்குவது, Ameros Perros படம் போன்று ஒரு நாய் சண்டை, ஒரு குத்துப்பாட்டு, ஒரு கொலை, ஒரு ஒருதலைக்காதல், பின்பு ஆதிக்க சாதி மக்களின் அடக்குமுறைக்கு பின்பு சென்னைக்கு வருவது (ஸ்ஸப்பா..ஏண்டா தமிழ்ப்படம் பார்த்தும் நீங்க எல்லாம் திருந்தலையா!!), இங்கு கடத்தப்படும் ஷம்முவை காப்பாற்றுவது, ஷம்முக்குகாக பணம் திருடுவது, துப்பாக்கியால் கொலைகள் செய்வது.. பின்பு எல்லோரும் சாவது. முடியலங்க.
.
படத்தில் பொன்வண்ணன் தவிர எல்லாருக்கும் டப்பிங் குரல். நாலைந்து குரல்களை வைத்தே மதுரை மொழி, சென்னை மொழி பேசி கொடும பண்றாங்க. படம் முழுக்க எல்லாரும் கத்தறாங்க. காது கிழிஞ்சி ரத்தம் வடியுது. படத்தில் எல்லாமே செயற்கை. கொஞ்சம் கூட யதார்த்தமும் இல்லை, சினிமா மொழியும் இல்லை. இப்படத்திற்கு இசையமைத்தவர்(குரு கல்யாண்), படமெடுத்தவர் (நந்தா பெரியசாமி) கையில் கிடைத்தால் இந்த படத்தை அவர்களை பத்து முறை தொடர்ச்சியாய் பார்க்கவைப்பேன். அதுவும் அந்த "மாத்தி யோசி, மச்சி மாத்தி யோசி" என்று தொடர்ச்சியாய் வரும் அந்த தீம் சாங், நமீதாவின் இந்திர விழா படத்தில் வரும் "ஏமாந்த கோழி" பாடல் போன்றது. ஸ்ஸப்பாஆஆஆ..
.
என்னால முடியலங்க. இந்த வருடம் ஆரம்பித்து, ஆயிரத்தில் ஒருவன், நாணயம், கோவா, தமிழ்ப்படம், விண்ணைத்தாண்டி வருவாயா, அவள் பெயர் தமிழரசி என்ற ஆறு திரைப்படங்களும் எனக்கு பெரிய அளவில் மொக்கை தராமல் இருந்த வேளையில் நானாக சென்று மொக்கை வாங்கிக்கொண்டேன். "நமீதாவின் அழகான பொண்ணுதான்" படத்திற்கே சென்றிருக்கலாம். ம்ம். விதி வலியது.
கைப்புள்ள, பீ கேர்புல் (நான் என்னைய சொன்னேன்).
.
மாத்தி யோசி - தியேட்டர் பக்கமே போயிடாதீங்க ப்ளீஸ்.
.
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
13.03.2010




28 comments:
என்ன கொடுமை சார் இது?
நீங்களே இப்படி சொல்லிட்டா எப்படி? பல மொக்கை படங்களை பார்த்து பொறுமையாக இருக்கும் நீங்களே இப்படி சொன்ன எப்படி?
//"நமீதாவின் அழகான பொண்ணுதான்" படத்திற்கே சென்றிருக்கலாம்.//
அவ்வளவு மோசமா தல?
//அநியாயமா முன்னூறு ரூபா போச்சே..//
அவ்வளவு காஸ்ட்லியான தவறையா செய்தீர்கள்?
@King Viswa: முடியல அண்ணே. இன்னைக்கு ராத்திரி தூக்கம் வருமான்னு இப்பவே பயமா இருக்கு. நான் இன்னும் ஒரு LIC கூட எடுக்கலையே.
\\//"நமீதாவின் அழகான பொண்ணுதான்" படத்திற்கே சென்றிருக்கலாம்.//
அவ்வளவு மோசமா தல?\\
நமீதாவின் படத்திற்கு சென்றிருந்தால் கொடுத்த காசுக்கு நமீதாவை பார்த்துவிட்டு வரலாமே. நட்டம் கிடையாதே.
சொக்கா. சொக்கா. முன்னூறு ரூபா போச்சே.. :(((
ச்சே... இதுவும் நட்டுக்குச்சா... நீங்க இவ்வளவு கேவலமா ஒரு படத்த பத்தி எழுதி நான் வாசிச்சதில்லை... வழக்கம்போல இந்தப் படத்தையும் ரொம்ப எதிர்பார்த்தேன்...எனிவே, ரொம்ப நன்றி நண்பா. எனக்கு ஒரு 300ரூ தப்பிச்சது...|:-)
@Baby ஆனந்தன்: ஒரு படம் எடுக்க எவ்வளவு தூரம் உழைப்பு வேண்டும் என்பது எனக்கு தெரியும். குறிப்பாக தமிழ் படங்களை பொறுத்தவரை, கொஞ்சம் நன்றாக இருந்தாலே, அந்த படத்தை பற்றி நல்லவிதமாகவே எழுதுவேன், சில நல்ல படங்கள், எதிர்காலத்தில் மிக நல்ல படங்கள் வர காரணமாக இருந்துவிடும் என்ற நம்பிக்கையில். ஆனால் formula அடிப்படையில் நேட்டிவிட்டி படம் செய்ய முயல்வதை காண்கையில் கவலையாய் இருக்கிறது. :(
சரவணா, நானும் பார்த்தேன். வெளியில சொல்ல கூட பயமா இருக்கு.
@butterfly Surya : இப்போதான் உ.த விமர்சனம் படிச்சேன். நீங்க எல்லாரும் சென்று பார்த்தீங்கலாமே. விடுங்க பாஸ். விதி வலியது. இன்று இரவு தூங்கி நாளைக்கு காலையில் எழுந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்.. :)
நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன்.. என்னையும் ஒரு பாவி இந்த படத்துக்கு அழைத்திருந்தான்... :))))
இன்னாபா. யாரும் தமிழ்மணம் தமிளிஷ் ஓட்டே போட மாட்டேங்குறீங்க.. இந்த பதிவுக்கு நீங்க ஓட்டு போட்டே ஆகணும். இல்லையென்றால் இன்னும் சிலர் இந்த படத்தை பார்த்து தொலைக்க கூடும். அவர்களை காப்பாற்றும் கடமை நமக்கிருக்கிறது..
@♠ யெஸ்.பாலபாரதி ♠ : நீங்க அதிர்ஷ்டசாலி. வேறென்ன சொல்ல, தல. :)
\\மாத்தி யோசி - தியேட்டர் பக்கமே போயிடாதீங்க ப்ளீஸ்.//
உங்கள் கருத்தை இவ்வளவு ஆணித்தனமாக சொல்லியதுகாவது கண்டிப்பா பார்க்கமாட்டேன் பாஸ். உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். :(
@~~Romeo~~ : நன்றிங்க்னா. உங்களின் உடல் நலத்தையும் மன நலத்தையும் கருத்தில் கொண்டு இப்படத்தை தவிர்க்கவும்.
விதி வலியது. ;-)
Better luck next time!
IIIIIIII
JOLLYYY - NAAN CHENNAILA ILLIYAE......
@Joe: நெக்ஸ்ட்டு நமீதாவே சரணம் என்று செல்லலாமா அல்லது சுனைனாவே சரணம் எனலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். :)
@ஸ்ரீநி: என்சாய் மாடி. :)
பாவம். பச்சப்புள்ளயைப்போட்டு இந்தப் பாடு படுத்தியிருக்கானுவளே.. நாசமாப்போறவனுங்க.!!
என்னாது முந்நூறு ரூபாயா? என்ன கொடும சாரே இது !! கண்டிப்ப இத ரிஜக்ட் பண்ணியாச்சி . . உங்க உள்ளம் ஆற, அடுத்த பேரரசு படம் வருது.. அத பாருங்க . . :-)
MSK - படத்தோட trailerலே இதை சொன்ன மாதிரி இருந்தது..ரொம்ப நன்றி எங்களுக்காக உங்க உயிரை பணயம் வெச்சி இந்த மாதிரியான படங்களுக்கு போயி எங்க உயிரை காப்பாற்றியதற்கு..
ரொம்ப பாவம்ப்பா!
மச்சான் இதுக்குத்தான் நான் ராஜலீலை படத்துக்கு போகலாம்னு சொன்னேன்!
- தினதந்தி விளம்பரம்
;-) சூப்பர் விமர்சனம் தோழர்
படம் பார்த்து விமர்த்து எங்களை காப்பாற்றியதற்காக அக்கொண்ட் நம்பர் கொடுங்க நாங்க பணம் போட்டரோம். ஆனா பல மொக்கைகளைப் பார்த்து வந்தால் கண்டிப்பாக எச்சரிக்கை செயது காப்பாற்றவும்.
@ஆதிமூலகிருஷ்ணன் : க்க்க்ங்ண்ணே.. உங்களுக்கு தெரியுது.. அவனுங்களுக்கு தெரியலையே. நன்றி.
@கருந்தேள் கண்ணாயிரம்: பேரரசு படம் இந்த படத்துக்கு தேவலாம் என்றே நினைக்கிறேன். அதுக்காக பேரரசு படத்த எல்லாம் பார்க்கமுடியாது. செத்துடுவான் சரவணன். :) நன்றி.
@சந்தோஷ் = Santhosh: இது என் கடமைங்க. :) நன்றி.
@அன்புடன் அருணா : நான் ரொம்ப ரொம்ப பாவம் அக்கா. :( நன்றி.
@அதிஷா : ராஜலீலை படத்துக்கு போயிருக்கலாம். என் தப்புதான் தல.
@ஜகதீஸ்வரன் : கண்டிப்பா செய்யறேன் தல. :)
Stills பார்த்து எந்த படத்தையும் எடை போட கூடாதுணு இந்த விமர்சனம் தெளிவா சொல்லுது நண்பரே.
உங்களால என் Purse ல பணம் தப்பிசுச்சு.
எதையும் தாங்கும் இதயமே உனக்கா இந்த கதி..,
தல,
இனிமே நாம ஒரு ஒப்பந்தம் செய்துக் கொள்வோம். நீங்க மொக்க படமா பார்த்தது எங்களை எச்சரிப்பீன்கலாம், நாங்க உங்களுக்கு நஷ்ட ஈடு கொடுப்பமாம், எப்படி பிளான்?
தல,
அந்த விமர்சனத்தை கொஞ்சம் முன்னாடியே போடக்கூடாதா? நானும் பார்த்துட்டேன்.
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்
கிரிக்கெட் கேப்டன் தோனி ஆரம்பித்து வைக்கும் நடிகர் விஜயகாந்த்தின் கேப்டன் டிவி
இது ஒளிப்பதிவு இயக்குனர் விஜயார்ம்ஸ்ட்ராங் படம்,அவரும் பதிவர் தான்,ஒளிப்பதிவு எப்படி?தேறுமா?இல்ல,படம் போல தானா?
Post a Comment