Sunday, February 28, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா - திரைவிமர்சனம்


இதமான குளிர் காலையில் கடற்கரையில் அமர்ந்து உதிக்கப்போகும் சூரியனுக்காக வானம் பார்ப்பது போன்றதொரு உணர்வை தரக்கூடியது நல்ல இசையுடன் கூடிய அழகான காதல் செறிந்த திரைப்படங்கள். இப்படமும் கிட்டத்தட்ட அதே போன்றதொரு உணர்வை தந்தது. காதல் ஒரு மாயம்; "நான் ஏன் ஜெஸ்ஸியை லவ் பண்ணினேன்" என்று இத்திரைப்படம் முழுதும் வரும் கேள்வி காதலின் மாயத்தை பருகத்தருகிறது.
.
கார்த்திக் - ஜெஸ்ஸி; திரைப்படத்தின் கதை சென்னை போன்றதொரு நகரத்தின் வழக்கமான காதல் கதைதான். காட்சிகள் கூட ரொம்ப புதுமையாக இருக்காது. (ஒருவேளை உலகத்தில் இருக்கும் அனைவரும் காதலுக்கு ஒரே ஒரு சூத்திரம் மட்டுமே பயன்படுத்துகிறோம் போல). படம் முழுதும் விரவி பரவும் இசையும் அழகான ஒளிப்பதிவும் வசனங்களும் கார்த்திக் - ஜெஸ்ஸியின் காதலை படம் முழுதும் நிரப்புகிறது.

.
வீட்டு ஓனரின் பெண் ஜெஸ்ஸி (த்ரிஷா) (மலையாளி; கிறிஸ்டியன்; Program Analyst (Polaris)) - அவ்வீட்டில் குடியிருக்கும் தமிழ் குடும்பத்தின் பையன் கார்த்திக் (சிம்பு; சாரி சாரி; யங் சூப்பர் ஸ்டார் சிம்பு) (தமிழன்; இந்து; Mech Engineering Graduate; Assistant Director to K.S.Ravikumar; ஜெஸ்ஸியை விட ஒரு வயசு சின்னப்பையன்). முதல் பார்வையிலே கார்த்திக்கு பற்றி கொள்கிறது காதல். பின்பு ஜெஸ்ஸியை துரத்தி துரத்தி காதலித்து ஜெஸ்ஸியின் காதலை அடைந்தாலும், சமூக அடையாளங்களுக்கு பயந்து காதலை நிராகரிக்கும் ஜெஸ்ஸி. இவர்கள் காதல் என்னவானது. ஒன்று சேர்ந்தார்களா என்பது மீதிக்கதை.
.
கௌதமின் மின்னலே, காக்க காக்க எனக்கு பிடித்த படங்கள். ஆனால் வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துசரம், வாரணம் ஆயிரம் என்னை கடுமையாய் வெறுப்பேற்றியது. என்பதனாலேயே இப்படத்திற்கு செல்வது பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் A.R.ரஹ்மானின் இசை; த்ரிஷா; சிம்புவுக்காக இப்படத்துக்கு செல்லலாம் என்று சென்று பார்த்தேன். எனக்கு திரைப்படத்தினுள் ஒரு திரைப்படம் போன்ற concept திரைப்படங்கள் மிகவும் பிடிப்பதுண்டு. இப்படத்தில் கௌதம் அதை கொஞ்சம் அணுகியிருக்கிறார். இதே திரைப்படத்தை தெலுங்கில் நாக சைத்தன்யா, சமந்தா வைத்து படமாக்கி இருக்கும் கௌதம், அவர்களை இங்கு தமிழில் பயன்படுத்தி இருப்பது புத்திசாலித்தனம். அதே போல காட்சிகள் மற்றும் காட்சிகள் சார்ந்த அழகுணர்ச்சியில் மீண்டும் கௌதம் நிரூபித்திருக்கிறார். சிம்பு, ஒகேவாக செய்திருந்தார். திரிஷா அழகு பதுமை. (இருந்தாலும் சர்வம் படத்தில் இன்னும் அழகாக இருந்தார்). இருவரும் OK.
.
நல்ல வேளையாக இப்படத்திற்கு ஹாரிஸ் இசை அமைக்கவில்லை. அமைத்திருந்தால் இப்படத்தின் பின்னணி இசை பற்றி இப்போது நினைக்கவே பயமாய் இருக்கிறது. ஆனால் ரஹ்மானோ இப்படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் ரஹ்மான். பாடல்கள் அத்தனையும் அருமை. காட்சிபடுத்துதலிலும் ஓரளவு நன்றாக செய்திருக்கிறார் கௌதம். ஆனால் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்பது என் எண்ணம். மேலும் மனோஜின் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது. ஆண்டனியின் படத்தொகுப்பு வழக்கம் போல.
.
வேறேதும் படத்தில் நுண்ணரசியல்கள் இருந்தால் அதை சுகுணாதிவாகர் எழுதும் போது படித்து தெரிந்துகொள்ளலாம். மொத்தத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா ரசிக்கும் படி இருந்தது. கலக்கீட்டீங்க ரஹ்மான். ரொம்ப நாள் ஆச்சு. இப்படி உங்கள் இசை முழுமையாய் உணர்வாய் பரவிக்கிடந்த ஒரு தமிழ்படம் பார்த்து. நன்றி கௌதம்.
.
விண்ணைத்தாண்டி வருவாயா - காதலும் இசையும் மட்டுமே வாழ்வை அழகாக்குகிறது.
.
மேலும் மேலும் உருகி உருகி உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்
.


மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
28.02.2010

16 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

விண்ணைத்தாண்டி வருவாயா - காதலும் இசையும் மட்டுமே வாழ்வை அழகாக்குகிறது.
/////

உன்மைதான்

விமர்சனம் அருமை.........

அக்பர் said...

விமர்சனம் அருமை பாஸ்.

அக்பர் said...
This comment has been removed by the author.
அக்பர் said...

விமர்சனம் அருமை பாஸ்.

தர்ஷன் said...

அருமையான விமர்சனம்
நீண்ட நாட்களுக்குப் பின் என்னை ஒரு படம் தூங்க விடாமல் செய்திருக்கிறது

pappu said...

அந்த பாடல் வரிகளிலேயே சோலிய முடிச்சிடுறீங்க...

Cable Sankar said...

இன்னும்.. இன்னும் எனக்கு விண்ணைத்தாண்டி வருவாயா ஹேங் ஓவர் போகவில்லை..

Saravana Kumar MSK said...

@உலவு.காம் : நன்றிங்க.

@அக்பர் : நன்றிங்க.

@தர்ஷன் : நன்றிங்க. அவ்ளோ நல்லாவா படம் இருக்கு? ஆனால் நினைவுகளை தூண்டிவிடுகிறது என்பதனால் இந்த கிளர்ச்சி என்று நினைக்கிறேன். :)

@pappu : நன்றிங்க. :)

@Cable Sankar : நன்றி தலைவரே.

முரளிகுமார் பத்மநாபன் said...

ம்ம் //காதலும் இசையும் மட்டுமே வாழ்வை அழகாக்குகிறது//

சத்திய வார்த்தைகள், எனக்கு ரொம்பவே பிடித்த்ரிஉக்கிறது படம்

ஜாக்கி சேகர் said...

இந்த படம் தப்பிச்சிடுச்சி... உண்மைதான்..

மயில்ராவணன் said...

உங்க விமர்சனம் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டியுள்ளது.இன்னும் பார்க்கல...இங்க ரிலீசாயிருக்கு(chrompet rakesh!!!).பார்க்கணும்.

King Viswa said...

தல,

மீ தி பேக்கு. படத்தை பத்தி எல்லாருமே சிறப்ப எழுதி இருக்காங்க.

ஒருவேள சிம்பு திருந்திட்டாரோ?

King Viswa said...

பதிவோட Titleலே ஆயிரம் கதை சொல்லுதே????????????

தல இன் லவ்?

Saravana Kumar MSK said...

@முரளிகுமார் பத்மநாபன் : நன்றிங்க.

@ஜாக்கி சேகர் : அப்படியா. நன்றிங்க்னா.

@மயில்ராவணன் : நன்றிங்க. படம் பாருங்க.

@King Viswa : வாங்க தல. திடீர்ன்னு வரீங்க. அப்பறம் காணாம போயிடறீங்க.
நடிகன் இயக்குனர்களால் உருவாக்கபடுபவன் தானே. மேலும் எல்லாம் ரஹ்மான் மேஜிக்.
லவ்விக்கிட்டு இருந்தா ஏன் பதிவெல்லாம் எழுதணும், லவ்விகிட்டே இருப்பேனே.. :)) நன்றி

எழிழன் said...

வார வாரம் வெளியிடப்படும் படங்களின் படவரிசைகளைப் பார்வையிட
http://tamiltop10ssss.blogspot.com/

ஆதிமூலகிருஷ்ணன் said...

குட். ரசனை.

நாந்தான் கிளைமாக்ஸ் கட் செய்யப்பட்ட தியேட்டரில் படம் பார்த்து கடுப்பாகி.. என்னன்னவோ நடந்துபோச்சு பாஸ்.. விடுங்க.!

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..