
படத்தை பெரிதாக்கி பார்க்கவும்.
.
இப்படத்தின் ட்ரைலரை பார்க்கும்போது என்னமாதிரி இத்திரைப்படத்தை எதிர்பார்த்தேனோ, அவ்வாறே மிகச்சரியாக செய்திருக்கிறார்கள். சிரித்து சிரித்து வயிறு புண்ணாகுகிறது. மிக கச்சிதமான Spoof. நேற்றே இத்திரைப்படத்தை காண விழைந்தேன், ஆனால் தியேட்டரில் அப்படியொரு கூட்டம், நேற்று டிக்கெட்டே கிடைக்கவில்லை. ஹவுஸ்புல். என்பதனால் இன்று காலைதான் காணமுடிந்தது.
.
சினிமாப்பட்டி கிராமத்தில் பிறக்கும் ஆண் குழந்தைகள், சென்னைக்கு வந்து, மாஸ் ஹீரோவாகி அலைப்பறை செய்வதால், கிராமத்தில் இனி பிறக்கும் ஆண் குழந்தைகளை கள்ளிப்பால் (P.R.S கள்ளிப்பால், சுத்தமானது, சுகாதாரமானது) ஊற்றி கொல்லும் பழக்கத்தை மேற்கொள்ளும் நேரத்தில் தளபதி, தலைவன், வைஸ் கேப்டன், அகில உலக சூப்பர் ஸ்டார் "சிவா" பிறக்கிறான். பத்தே வயதில் பெரியவனாகி அநியாயங்களை தட்டிகேட்கிறான். அவன் செய்யும் அட்டகாச அழிச்சாட்டிய அலைப்பறை தான் இத்திரைப்படம்.
.
ஒப்பனிங் துதி பாடலில், திரையில் ஒரு வரி வருகிறது. "இப்பாடலை பாடியது உங்கள் சிவா". பின்பு அந்த வரி இவ்வாறு முழுமையடைகிறது "இப்பாடலை பாடியது உங்கள் சிவா, என்று போடுமாறு அவர் கேட்டுக்கொண்டார்". இனி கற்பனை செய்துகொள்ளுங்கள் எவ்வளவு அட்டகாசங்கள் படத்தில் இருக்குமென்று. நாயகன், தூள், ரன், தளபதி, சிட்டிசன், போக்கிரி, சிவாஜி, கந்தசாமி, சிம்பு, ராமராஜன், என படங்கள், நடிகர்கள், திரைப்படங்கள் என ஒன்றையும் விடவில்லை. பிரித்து மேய்ந்திருக்கிறார்கள்.
.
மிர்ச்சி சிவா, மிக சிறப்பாக செய்திருக்கிறார். வசன உச்சரிப்பும், உடல் மொழியும் இந்த படத்திற்கு சரியாக பொருந்துகிறது. மற்றும் அத்தனை நடிகர்களும் நன்று. தங்கள் பெரிய குடும்பத்தின், இரண்டு குடும்பங்கள் எடுக்கும் திரைப்படத்தை இன்னொரு குடும்பத்தின் திரைப்படம் கேலி செய்கிறது. தயாநிதி அழகிரிக்கு பாராட்டுக்கள். இயக்குனர் அமுதனுக்கும், ஒளிப்பதிவு இயக்குனர் நிரவ்ஷாவுக்கும் பாராட்டுக்கள்.
.
படத்தின் ஒரே குறை, ரொம்பவே சிரிக்கவைப்பது. சிரித்து சிரித்து சிரிப்பே அலுக்கிறது. கொஞ்சம் ஓவர் டோஸ் ஆயிடுச்சோ என்று தோன்றியது. இந்த படம் நிச்சயம் சென்னையில் வெற்றி பெரும் என்பதில் சந்தேகமில்லை. இத்திரைப்படத்தின் வெற்றி இன்னும் சில Spoof வர வழிவகுக்கும் என்று தோன்றுகிறது. தமிழ்சினிமா தன் பழைய புளித்து போன பாதையை மாற்றுமா??!!!
.
கோவா, தமிழ்ப்படம் இரண்டு படங்களும் சிரித்து கொண்டாட உத்திரவாதம். இந்த வருடத்தின் ஆரம்பமே நன்றாக இருப்பதாக தோன்றுகிறது. (ஆயிரத்தில் ஒருவன், நாணயம், கோவா, தமிழ்ப்படம் என்று..)
.
தமிழ்ப்படம் - தியேட்டரில் பாருங்கள். சிரித்து மகிழுங்கள். கூட்டத்தோடு சிரிக்கும் போது, சிரிப்பின் எல்லைகள் இன்னும் விரிவடையும்.
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
31.01.2010




17 comments:
//கோவா//
சிரிக்கிற நேரத்தைவிட நெளிகிற நேரம்தான் அதிகம்
@அத்திரி : எனக்கொன்றும் அப்படியில்ல பாஸ். நீங்க அமெரிக்க teen-comedy திரைப்படங்களை பாருங்கள். இதெல்லாம் ஒண்ணுமே இல்லை என்பீர்கள். கோவா போன்ற சுற்றுலா தளத்தில் (இந்தியாவின் மற்ற சுற்றுலா தளங்களை விட, கோவா வித்தியாசமானது) எல்லாமே இருக்கும். மேலும் வெங்கட் பிரபு இளைஞர்களைத்தான் குறிவைத்துதான் படமெடுக்கிறார். :)
தமிழ் படத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு போகுமா? போகாதா அதச் சொல்லுங்க பாஸ்
//மேலும் வெங்கட் பிரபு இளைஞர்களைத்தான் குறிவைத்துதான் படமெடுக்கிறார்.//
அதாவது நீங்க இளைஞர் ,ஆனா அத்திரி இளைஞர் இல்லை-ன்னு சொல்லுறீங்க.
@SUREஷ் (பழனியிலிருந்து) : ஹி ஹி ஹி.. எங்கள் சூறாவளி சிவா நிச்சயம் அதை செய்திடுவார். :) நன்றி.
@ஜோ/Joe : பாஸ், அத்திரி அண்ணன் வயசு எனக்கு தெரியாதே.. :) நன்றி.
Saravana Kumar MSK said...
@அத்திரி : எனக்கொன்றும் அப்படியில்ல பாஸ். நீங்க அமெரிக்க teen-comedy திரைப்படங்களை பாருங்கள்.
நீங்கள் கூறியுள்ள படங்களை (teen-comedy)மட்டும் பாருங்கள் வேஸ்டா இங்கே வந்து பீட்டர் விடவேண்டாம்
ஒரு விஷயம் உண்மை இதே படத்தை வேறு யாரும் அரசியல் பின்புலம் இல்லாத ஒருவர் தயாரிது இருந்தால் படத்தை அப்பவே டப்பாவுக்கு அனுப்பி இருப்பார்கள் வாழ்க அழகிரி குழுமம்
உண்மை தான் அரும்பவுர்.
ஆனால் சினிமாப்பட்டி கிராமத்தில தப்பு பன்ரவங்களுக்கு தண்டனையா சிம்பு ஒடெ படம் எ பார்க்க வைக்கிறது தான் இந்த படத்தோட highlight :p
இந்த வருசம் நீங்க எல்லாப் படத்தையும் சூப்பர்ன்னுதான் சொல்லியிருக்கீங்க. இதுவரை.. ஆ.ஓ மட்டும்தான்.. திருட்டு டிவிடியில்.. இண்ட்ரவல் வரைக்கும் பார்க்க முடிஞ்சது. அதனாலயா என்னன்னு தெரியலை..!! ஆனா அதுக்கு மேல தாக்குபிடிக்க முடியலை.
எல்லா படத்துக்கும் டிவிடி வரட்டும். பார்த்துடுறேன்! :)
ஆனா... இந்தப் படத்தை... நீங்க ட்ரெய்லர் போட்டதிலிருந்து எதிர்பார்த்துகிட்டு இருக்கேன். :(
இதுக்கும் திருட்டு டிவிடிதானா???
ஐயோ.... எங்களை மாதிரி NRI மக்களோட கஷ்டத்தை தட்டிக்கேட்க இங்க யாருமே இல்லையா???? :( :( :(
சரி தான் நண்பா; நானும் பார்த்து விமர்சனமும் எழுதினேன்.. ரசிக்க பல காட்சிகள்; அது பற்றி சொல்லி விட்டால் பின் மற்றவர்கள் முழுமையாய் ரசிக்க முடியாது; பார்த்தவர்கள் பேசி கொள்ளும் போது scenes சொல்லி சிரிக்கலாம்
இந்தப்படத்த பாக்க இன்னும் டிக்கெட் கெடைக்கல பாஸு . . :-( பார்த்தே தீரணும்னு நெனைச்சிகினு இருக்கேன் . . :-)
//நீங்க அமெரிக்க teen-comedy திரைப்படங்களை பாருங்கள். இதெல்லாம் ஒண்ணுமே இல்லை என்பீர்கள்.//
அன்னே நாமா வாழ்ரது தமிழ்நாட்டுல!! அமெரிக்காவுல இல்ல !!!
@muthu : சரிங்ணா. நன்றி. :)
@arumbavur : நிச்சயமாக. நன்றி.
@Nilaksan : படம் முழுக்க highlight தான். :) நன்றி.
@ஹாலிவுட் பாலா : ஏனென்றால் கடந்த வருடம் (2009) வந்த படங்கள் அப்படி தல. கொடுமை படுத்திட்டாங்க. அதனால் தான் இந்த படங்கலெள்ளாம் நன்றாக இருப்ப்தாக தோன்ருகிறது.
அப்பறம் இக்கரைக்கு அக்கரை பச்சை. :) நன்றி.
@மோகன் குமார் : ஆமாம். ஆமாம். நன்றிங்க. :)
@கருந்தேள் கண்ணாயிரம் : படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஒடுகிறது போல. பார்த்து விடுங்கள். நன்றி.
@SUBBU : ஆனால் கோவா-வில் கிராமத்து கதையாவா எடுக்க முடியும். கோவா-வில் என்னவோ அதைதான் எடுக்க முடியும். நன்றி.
//@SUBBU : ஆனால் கோவா-வில் கிராமத்து கதையாவா எடுக்க முடியும். கோவா-வில் என்னவோ அதைதான் எடுக்க முடியும். நன்றி//
அப்ப சரின்னே, அடுத்து “நியூயார்க்”-னு பேர் வச்சி, சும்மா அமெரிக்கா Teen-age படம் மாதிரி அடிச்சி தூக்க சொல்லுங்க :((
@SUBBU : நியூயார்க்கில் நடக்கும் ஒரு கதையில், வயலில் நம் கதாநாயகன் விவசாயம் செய்வதாக படம் எடுத்தால் நல்லா இருக்குமா..!!
நன்றி..
indha padam chennai mattum alla thamilagam, phuduvai, all south india doing well.
நல்லா சொல்லிருக்கீங்க சரவணன்...
நேத்து பார்த்தேன்... இதுவரை எந்த படத்திற்கும் இப்படி தொடர்ந்து படம் நெடுகிலும் சிரித்ததாய் நினைவில்லை.
சுனாமியின் பினாமி சிவாவின் விசிறியாக மாறியாச்சு. மனுசன் சிரிக்காமலயே என்னாமா கட்டைய குடுக்கிறாரு.
Post a Comment