Saturday, January 30, 2010

கோவா [2010] - திரைவிமர்சனம்



வெங்கட் பிரபு மற்றும் அவரின் டீமை அடிச்சிக்க முடியாது போல, யூத்துக்களின் பல்சை மிகச்சரியாக புரிந்துவைத்துக்கொண்டு சொல்லி சொல்லி அடிக்கிறார்கள். தியேட்டரில் இளைஞர்களின் கூட்டம் மற்றும் ஆரவாரம். actually, படத்தின் கதை என்னவென்றால், அட... வெங்கட் பிரபு படத்தில் கதையை எப்படிங்க எதிர்பார்க்கறீங்க. வழக்கம் போல் ஒருவரி கதையும், அதை சுற்றிய நகைச்சுவை காட்சிகளும் தான் படம்.
.

கிராமத்து இளைஞர்கள் மூன்று பேர் (ஜெய், பிரேம்ஜி, வைபவ்), ஊரின் சட்டதிட்டங்களுக்குள் வாழ பிடிக்காமல்,ஊரை விட்டு வெளியேறி, கோவா சென்று அங்கு நடக்கும் நிகழ்வுகள்தான் திரைப்படம். படத்தின் disclaimer-லேயே அலப்பரையை ஆரம்பித்துவிடுகிறார்கள். டைட்டில் கார்டு பின்னணியில் வருகின்ற பாட்டு (ஏழேழு தலைமுறைக்கும்), ராமராஜன் காலத்தில் கிராமத்து படங்களில் வரும் பாடலை போல் வந்து அசத்துகிறது. பின்பு துடுக்கான இளைஞர்கள், பஞ்சாயத்து, நாட்டாமை (விஜயக்குமார், சந்திரசேகர், சண்முகநாதன், கோவில் பூசாரி, ஊர்மக்கள், செம்பு, ஆலமரம்:))), கோவில் திருவிழா என்று துவங்கி, நகர்கிறது. நிறைய காட்சிகள், அந்த பழைய கிராமத்து படங்களை கலாய்த்து தள்ளுகின்றன.
.
பின்பு கோவா. படத்தின் ஸ்டைல் மாறுகிறது. இந்த நண்பர்கள் கோவாவில் வசிக்கும் அரவிந்த், சம்பத். இவர்கள் இருவரும் ஓரின சேர்க்கையாளர்கள். தமிழ் படத்தின் ஓரின சேர்க்கை நண்பர்களோடு நகரும் முதல் தமிழ் படம் என்று நினைக்கிறேன். இதற்காக வெங்கட் பிரபுவை நிச்சயம் பாராட்டலாம். மேலும் அரவிந்தையும், சம்பத்தையும் இந்த கதாபாத்திரங்களில் நடித்ததற்கு. தமிழ் சினிமாவை பொறுத்தவரை, மிகுந்த துணிச்சல் தேவைப்படும் செயல் இது. இந்த நண்பர்களோடு பியா, ஒரு வெளிநாட்டு பெண், சினேகா, மற்றும் மூன்று முன்னணி நடிகர்/நடிகை படத்தில் வருகிறார்கள். அது சஸ்பென்ஸ்.
.
முதல் பாதி ஒரு ஜாலி ட்ரீட் என்றால், இரண்டாம் பாதி டபுள் ட்ரீட். பிரேம்ஜியின், வேட்டைக்காரன் ஸ்டைல் சண்டைக்காட்சி தியேட்டரே அதகளப் படுத்துகிறது. மேலும் பிரேம்ஜியின் பஞ்ச் வசனங்கள், ஜெய்யின் ஓட்டை ஆங்கிலம், வைபவின் காதல்கள் (தனன்னா தனன்னா [நிச்சயம், இனிமேல் எல்லாருடைய message tone, ring tone இதுவாகத்தான் இருக்கும்]) எல்லாமே அசத்தல். பியாவும் அந்த வெளிநாட்டு பெண்ணும் மிக அழகு. இதையெல்லாம் விட, ஒரு தசாவதார கதாப்பாத்திரம் ஒன்று இருக்கிறது. படத்தின் அத்தனை முக்கிய காட்சிகளிலும் அவர் (பெயர் தெரியவில்லை) வந்து அசத்துகிறார். கிராமத்து வாத்தியார், லாரி டிரைவர், போலீஸ்காரர், விமானி என பற்பல பாத்திரங்கள். எந்தெந்த காட்சிகளிலெல்லாம் அவர் வருவார் என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு இருக்கிறார்.
.
குறிப்பாக பாடல்களை பற்றி சொல்லவேண்டும். 'ஏழேழு தலைமுறைக்கும்' பாடல் பற்றி முதலிலேயே சொல்லிவிட்டேன். 'இதுவரை சொல்லாத' பாடல் மிக மிக இனிமை. 'வாலிபா வா வா' என்ற பாடல் அட்டகாசம். அதிலும் பிரேம்ஜி அட்டகாசத்தின் உச்சக்கட்டம்.
.
சக்தி சரவணின் ஒளிப்பதிவும் அசத்தல், கிராமம் மற்றும் நகரம், இவ்விரு இடங்களின் இரண்டு விதமான ஒளிப்பதிவு. மேலும் இசையை பொறுத்தவரை, யுவன் கொஞ்சம் சறுக்கி இருக்கிறார் என்றுதான் சொல்ல தோன்றுகிறது (இளைய இசைஞானியாம்). வெங்கட் - யுவன் கூட்டணியில் பாடல்கள் இன்னும் சிறப்பாக வந்திருக்க வேண்டும். இயக்கத்தை பொறுத்தவரை வெங்கட், அவரின் ட்ரேட் மார்க்கை தொடர்கிறார்.
.
கோவா - ஆரம்ப டைட்டில் கார்டு முதல், இறுதி டைட்டில் கார்டு வரை, வெங்கட் பிரபு குழுவின் holiday கேளிக்கை.
.


மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
30.01.2010

5 comments:

Anonymous said...

Aaaaaavvvv!

Anonymous said...

WORST MOVIE OF 2010

Saravana Kumar MSK said...

@Anonymous : இதெல்லாம் ஓவர் பாஸ். படம் நல்லாத்தான் இருக்கு. உங்களுக்கு பிடிக்காததின் காரணங்கள் என்னவோ??

annamalai said...

Me too like that movie very much. YEVALO KASTAPPATTU PADAM YEDUTHALUM KURAI SOLLA AAL NERYA PER IRUKAANGA PA! AANA NEENGA UNMAIYA SOLLIRUKEENGA. MR.SARAVANAKUMAR

ரகுநாதன் said...

நல்ல விமர்சனம். படத்த பாத்துற வேண்டியதுதான்.

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..