Wednesday, December 30, 2009

3 Idiots [2009] - அறிவுக்கண்களை குருடாக்கும் இந்தியக் கல்விமுறை..


தான் ஒரு சமூக பொறுப்புடைய நடிகன் என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கும் ஆமீர்கானுக்கு வணக்கம் சொல்லி இந்த படத்தை பற்றி பேச துவங்கலாம்.
.
Chetan Bhagat-ன் Five Point Someone படித்திருக்கீர்களா? அந்த புத்தகத்தின் மூலக்கதை மேல் அல்லது ஒரு வரி கதை மீது, கதை செய்து, திரைக்கதை செய்யப்பட்டிருக்கும் படம்.

Monday, December 28, 2009

தமிழ் படம் - தமிழின் Spoof - பாடல்கள் பார்வை...


கடந்த கிறிஸ்மஸ் நாளில் தமிழ் படத்தின் பாடல்கள் வெளியாகி இருக்கின்றன. பாடல்களை பற்றிய ஒரு பார்வை.

இயக்கம் - C.S.அமுதன்
இசை - கண்ணன்
ஒளிப்பதிவு - நிரவ்ஷா
தயாரிப்பு - தயாநிதி அழகிரி

Thursday, December 24, 2009

தமிழ் படம் trailer HD - தமிழ் சினிமாவின் முதல் Spoof..

என்ன கொடும சார் இது. ஒரு குடும்பம் எடுக்கற படங்கள, இன்னொரு குடும்பம் கலாய்க்குது.. :)

தமிழ் திரைப்படங்களில் வெகுநாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த படம் இதோ வருகிறது.. பொங்கலுக்கு இந்த படத்தை பார்த்த பின்புதான், ஆயிரத்தில் ஒருவன், கோவா, மற்ற படங்களெல்லாம்..



அனைவருக்கும் Merry Christmas, Happy New Year, Happy Holidays..

விடுமுறை நாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.. :)


24.12.2009

Tuesday, December 22, 2009

ஆயிரத்தில் ஒருவன் - HQ - Trailer

பொங்கலுக்கு உண்மையாவே படம் வந்துரும் போலேயே.. :)




22.12.2009

Friday, December 18, 2009

(500) Days of Summer [2009] - நினைவுகளில் வாழும் நிகழ்வுகளின் துணுக்குகள்..



IMDB Rating : 8.1/10 :: Top 250: #217
.

ஒரு அழகான Romantic-Comedy-Feel Good (But Its Definitely Not a LOVE STORY) திரைப்படம் பார்க்கவேண்டுமா? இதோ உங்களுக்காக.
.
வெகுநாட்களுக்கு பிறகு (சமீப காலமாக காதல் படங்களை தவிர்த்து வருவதால்) ஒரு அழகான சிறகு வருடுவது போன்ற திரைப்படம்.
.
உண்மையான காதல் என்று ஒன்று இருப்பதாக நம்பும் இளைஞன். உண்மையான காதல் என்று எதுவும் இல்லையென்று நம்பும் இளைஞி. இவர்களுக்கிடையேயான 500 நாட்கள். ஆனால் ஒரு டைரியை முன்பின்னாக புரட்டி படிக்கும்படியான, முன்பின்னாக நகரும் நாட்களில் கதைசொல்லும் அல்லது கதைத்துணுக்கை சொல்லும் Non Linear Narration உத்தியில், மிகுந்த அழகான பாடல்கள், பின்னணி இசை மற்றும் ஓவியம் மாதிரியான திரைக்கதை.

Saturday, December 5, 2009

ரேணிகுண்டா - திரைவிமர்சனம்


இந்த வருடத்தின் சிறந்த படமொன்று இதோ வந்திருக்கிறது. கடந்த வருடத்தின் சுப்ரமணியபுரம் போல. ஒரு city of god போல. (அதுக்காக அந்த படங்களை தொட்டோ தழுவியோ இந்த படம் எடுக்கப்படவில்லை)
.
தன் பெற்றோரை கொன்ற ரவுடி ஒருத்தனை கொல்ல முயன்று 15 நாள் காவலில் ஜெயிலுக்கு செல்கிறான் 19 வயது இளைஞன் ஜானி. போலீஸ்காரர்களின் அடிகளிடமிருந்து ஜானி காப்பாற்றும், நான்கு இளம் வயது கொலை குற்றவாளிகளிடம் நட்பாகி, ஜெயிலிருந்து தப்பித்து அந்த ரவுடியை பழிவாங்கிவிட்டு, மும்பை செல்லும் வழியில் ரேணிகுண்டாவில் இறங்க நேர்ந்து, பின்பான அவர்களின் கதை தான் ரேணிகுண்டா.
.

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..