
சத்யம் சினிமாஸ் தயாரித்து வந்திருக்கும் படம்
திரு திரு துறு துறு.. இளைஞர்களை மட்டுமில்லாமல், சிரிக்க தெரிந்த எல்லாரையும் குறிவைத்து படம் எடுத்திருக்கிறார்கள்.
.
இவ்ளோ Leight Weighted படம் பார்த்து ரொம்ப நாளாச்சு. கடைசியா தமிழ்ல அப்படி பார்த்த படம்
பொய் சொல்ல போறோம். குட்டி குட்டியா ஜாலியா மென்மையா ஒரு படம் இந்த
திரு திரு துறு துறு.. ரெட் ஒன் கேமராவில் டிஜிட்டல் ஒளிப்பதிவில் வந்திருக்கும் படம்.
.
டிஸ்கி : இசையை கேட்க மட்டும்தான் எனக்கு தெரியும். இந்த பதிவு இசை விமர்சனம் அல்ல. கேட்ட பாடல்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு பகிர்வு. இசை அறிமுகம்.
உன்னை போல் ஒருவன்

உன்னை போல் ஒருவனின் பாடல்களை கேட்டிருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்து போயிற்று. இதற்கு முன்பும் ஸ்ருதியை சினிமா நிகழ்ச்சி படங்களிலும் அல்லது லக் பட போஸ்டர்களிலும் பார்த்திருந்த போதும், அவ்வளவாக பிடிக்காமல் இருந்த ஸ்ருதி, இப்போது உன்னை போல் ஒருவனின் பாடல்கள் மற்றும் ப்ரோமோ பாடலுக்கு பின்பு, பித்து பிடிக்கும் அளவுக்கு எனக்கு பிடித்திருக்கிறது.

ரொம்ப நாள் கழித்து ஷங்கரின்
'S' பிக்ச்சரிலிருந்து வெளிவந்திருக்கும் படம்தான் 'ஈரம்'. 'யாவரும் நலம்' படத்திற்கு பின் மீண்டும் ஒரு திரில்லர்.
.
'சிந்து மேனன்' இறப்பதிலிருந்து கதை தொடங்குகிறது. தற்கொலை. இந்த சம்பவத்தை விசாரிக்க வரும் அசிஸ்டென்ட் கமிஷனர் 'ஆதி'. சிந்துவின் முன்னாள் காதலன். எனவே கொஞ்சம் மெனக்கெட்டு விசாரிக்கிறார்.
IMDB Rating : 7.7/10
.
இந்த உலகத்தின் மொத்த உயிரினமும் அழிந்து போனாலும், உயிர் தொடரவேண்டும்.
.
நேற்று (9-9-09) வெளியான இந்த Animation திரைப்படத்தை இன்று பார்த்துவிட்டேன். 2005-ல் இந்த இயக்குனர் (Shane Acker) எடுத்திருந்த 9 என்ற குறும்படத்தை தழுவி, இப்போது 2009-ல் முழு நீள படமாக எடுத்திருக்கிறார்.
.