
IMDB Rating : 8.7/10 :: Top 250: #43
.
இந்த திரைப்படம் வெளியாகி மூன்று வாரங்கள் ஆகின்றன. உலகெங்கும் பெரும் வெற்றி. எங்கும் இத்திரைப்படம் பற்றிய பேச்சு, என்னை பார்க்க தூண்டிற்று. பார்த்தேன்.
.
மனிதனாக பிறந்ததற்காக வெட்கி தலைகுனிகிறேன். சமீபத்திய நிகழ்வுகளை நாம் அறிந்ததே. லண்டனின் சேனல்-4ல் வெளியான ஈழம் வீடியோ, இந்த district 9, எனக்கு மனிதர்களின் மீது வெறுப்பை அதிகரிக்கிறது. கொடூரமும் வன்முறையும் மனிதனின் நாடி, நரம்பு, ரத்தம், மூளை என எல்லாவற்றிலும் பாய்ந்தோடுகிறது.
.
வரலாறு முழுக்க ஏதோ ஒரு சமூகம்/இனம் இன்னொரு சமூகத்தை/இனத்தை கங்கணம் கட்டி அழிப்பது, (இத்தனைக்கும் இரண்டு சமூக/இனத்தவரும் மனிதர்களே). இன்னொரு மனிதனை மனிதனாய் கருதாத குணம். சொந்த மொழி மக்கள் இங்கு அகதியாய் வருகையில், அவர்களை அன்போடு நடத்தாத குணமுடைய இந்த மனிதனா, இந்த பூமிக்கு அகதியாய் வாழ வழியின்றி வரும் வேற்று கிரக உயிர்களை நல்லபடியாக நடத்திடுவான்??
.
இதுவரை வந்த பெரும்பாலான ஏலியன் பட கதை இதுதான். ஏலியன்கள் பூமியை அழிக்க வருவர். அமெரிக்கர்கள் அந்த ஏலியன்களை அழித்து பூமியை காப்பாற்றுவர். ஆனால் District 9 வித்தியாசமானது.
.
இப்படத்தின் கதை இதுதான். South Africa-வின் Johannesburg-வில் வந்து சேரும் repair ஆன ஏலியன் mothership-ல் இருக்கும் மில்லியன் கணக்கான ஏலியன்களுக்கு அங்கேயே குடியிருப்புக்களை ஏற்படுத்தி கொடுக்கிறது MNU அமைப்பு. அந்த குடியிருப்புகளின் பெயர் District 9. காலம் செல்ல செல்ல அந்த இடமே குப்பைகள் நிறைந்து ஒரு சேரி பிரதேசமாகிறது. அந்த ஏலியன்கள் தங்கள் ஆயுதங்களை அங்கிருக்கும் ரவுடிகளுக்கும் அதிகாரங்களுக்கும் உணவிற்காக விற்கும் அவல நிலை. அவர்களின் கனவெல்லாம் எப்படியாவது தங்கள் சொந்த கிரகத்துக்கு செல்ல வேண்டுமென்பதுதான். பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் இந்த ஏலியன்களை அப்புறப்படுத்த வேண்டுமென மக்களின் இருபதாண்டு குரல் வலுக்க, அந்த 1.8 மில்லியன் ஏலியன்களை இன்னொருமொரு இடத்துக்கு (District 10) மாற்ற முயற்சிக்கிறது MNU. இந்த செயல் திட்டத்தை நிர்வகிக்கும் நாயகன், சின்ன அசம்பாவிததிற்கு பின்பு ஏலியனாக மாற துவங்க, ஏற்கனவே இந்த ஏலியன்களை வைத்து பரிசோதனைகூட பரிசோதனைகளை செய்து கொண்டிருக்கும் இந்த அமைப்பு, நாயகனையும் பரிசோதனை செய்து கொடுமைபடுத்த, நாயகன் தப்பித்தானா, ஏலியன் ஆனானா, ஏலியன்கள் தங்கள் சொந்த கிரகத்திற்கு திரும்பினரா என்பதை திரையில் காண்க. படத்தின் இறுதி காட்சி மிகவும் நெகிழ்ச்சியானது.
.
ஏலியன்களின் ஆயுதங்களை ஏலியன்களால் மட்டுமே இயக்க முடியுமென்பதால், அவர்களின் உயிரிய மாதிரிகளை ஆராய்ச்சி என்ற பெயரில் MNU அமைப்பும், ஏலியன்களை தின்றால் ஏலியன் சக்தி வருமென்று அவர்களை அடித்து உண்ணும் நைஜீரிய ரவுடிகளும்.. அப்பப்பா.. மனிதன் குரூரமானவன். மேலும் நாயகன், ஏலியனாக மாறுவதும், இன்ன பிற சில காட்சிகளும், இதயம் பலகீனமானவர்கள் தவிர்க்கவும்.
.
திரைப்படத்தின் மிக முக்கிய சிறப்பம்சமே Making தான். திரைப்படம் முழுதும் documentry ஸ்டைல், அழுக்கு டோன். news சேனல்களின் பரபரப்பான கேமரா, செய்தி தொகுப்புகள், 'தலை'களின் பேட்டிகள், மற்றும் கண்காணிப்பு கேமராக்களால் படம்பிடிக்கப்பட்ட ரகசிய விடீயோக்கள், இவையெல்லாம் சேர்ந்த; NGO, Discovery, History சேனல்களில் ஒரு தொகுப்பு விடீயோவை பார்க்கும் அனுபவம் இந்த திரைப்படம். எனவே இந்த திரைப்படம் Sci-Fi படமாக அல்லாமல், ஒரு ரியலிஸ்டிக் கதை போல் ஆகிவிடுகிறது. இது Action, Sci-Fi படமல்ல. உணர்வுகளாலான ஒரு திரைப்படம்.
.
இந்த திரைப்படத்தின் இயக்குனர், ஒரு புது இயக்குனராம். நம்ப முடியவில்லை.
Director, Art Director, Cinematographer - Built this Great District 9
.
படத்தில் நுண்ணரசியல்கள் இருப்பதாக எனக்குப்படுகிறது. நல்ல, ஸ்டைலான, சக்தி மிக்க ஏலியன்கள் அமெரிக்காவிற்கும், சக்தி இல்லாத, நோய்வாய்ப்பட்ட, உணர்விற்காக குப்பையை கிண்டும் ஏலியன்கள் ஏன் ஆப்ரிக்காவிற்கு வருகிறார்கள் என்கிற கேள்வி கூட ஒரு நிறவெறி அரசியாலக எனக்குப்படுகிறது. மேலும் நைஜீரிய கருப்பு ரவுடிகள் இந்த ஏலியன்களை உண்பது கூட நிறவெறி அரசியாலக எனக்குப்படுகிறது.
.
ஆகவே மனிதன் கொடூரமானவன்.
Dsitrict 9 - Dont Miss it..
.
IMDB LINK
My Rating : *****
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
31.08.2009
சுய பின் குறிப்பு : சென்னையில் இல்லாமலிருப்பதால் முன்பு போல் நிறைய எழுத முடியவில்லை. முடிந்தவரை எழுத முயற்சிக்கிறேன். தொடர் ஆதரவுக்கு நன்றி.



